169. சில புகைப்படங்கள்

மறுபடியும்...

சிலர் இது என்ன கோயில் என்பது போலக் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்காக: இது தஞ்சாவூரில் உள்ள இராஜ இராஜேச்சுரம் என்று அழைக்கப்படும் தஞ்சைப் பெரிய கோயில்.

இறைவன்: பெரிய நாயகி (எ) பிரஹன்நாயகி உடனுறை பெருவுடையார் (எ) பிரகதீஸ்வரர்



1. நடராஜர் சந்நிதிக்கு அருகிலிருந்து. நந்தி மண்டபம் foregroundஇல்.



2. நாட்டிய அரங்கேற்றத்துகென்று இருக்கிற மேடையிலிருந்து - பிரசாதக் கடைப் பக்கத்தில் என்று சொன்னால் சிலருக்குத் தெரிந்திருக்கலாம்.



3. ஆஞ்சநேய சுவாமி சந்நிதியிலிருந்து - பிக்காஸாவில் நிறைய பிஸ்கோத்துவேலை செய்து கலரே மாறிவிட்டது.



4. நுழைந்தவுடன் இடதுபுறத்தில் இருக்கிற இராகு சந்நிதி அருகிலிருந்து (a)


5. கால்நடை மருத்துவமனை அருகிலிருந்து (b)



6. மேம்பாலத்திலிருந்து (c)




----------------
(a) இவ்வளவு பெரிய கோயிலில் நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால் பிரம்மாண்ட இராகு பகவான் மட்டும் உண்டு, இரண்டாவது கோபுரத்தைத் தாண்டிய உடனே அக்கோபுரத்திலேயே பெருவுடையாரைப் பார்த்தபடி இருக்கிறார் இராகு. இராஜ இராஜனுக்கு சதய நட்சத்திரம் என்பதால் அதன் அதிபதியான இராகுவை மட்டும் ஸ்தாபிதம் செய்திருக்கிறான் என்று ஐதீகம்.

(b) இவ்வழி வெளியூர்க்காரர்களுக்குத் தெரியவாய்ப்பில்லை. சிவகங்கை பூங்கா நுழைவுவாயிலின் வழிவே நுழைந்தால், இடதுபுறம் செல்லும் சாலை ஏ.எஸ்.ஐ ஆபீஸ் தாண்டி நேரே இரண்டாவது கோபுரத்தின் அருகில் சென்று முடியும். இங்கே வண்டிகள் கூட்டமிருக்காது. செருப்பை காரிலேயே விட்டுவிட்டு செல்லலாம். பார்க்கிங் டோக்கனும் கிடையாது. :))

(c) இந்த viewவை மறைத்துத்தான் ராட்சத விளம்பரப் பலகைகள் வைக்கப்போய் சமீபத்தில் சர்ச்சையானது. பலகைக்கான எலும்புக்கூடுகள் இன்னும் மிச்சமிருக்கிறது.

24 Comments:

  1. இலவசக்கொத்தனார் said...

    அருமையான படங்கள். ஒரு வரியில் ஒரு சிறிய வர்ணனை தரலாமே.


  2. குமரன் (Kumaran) said...

    இராமநாதன். இதுவரை இரவு நேர பெரிய கோவிலைப் பார்த்தது இல்லை என்று எண்ணுகிறேன். நன்றிகள்.


  3. G.Ragavan said...

    தஞ்சைப் பெரிய கோயில் புகைப்படங்கள் மிக அருமை. இரவின் இருளில் ஒளியின் நடுவில் மிக அழகு! மிக அழகு!


  4. பரணீ said...

    நல்ல இரவுக்காட்சிகள், இது எந்த இடம் ?


  5. BadNewsIndia said...

    ஆஹா!
    அந்த பக்கம் திரும்ப போனீங்கன்னா, நிலாவும், நட்சத்திரமும் தெரியர மாதிரி ட்ரை பண்ணுங்க. (with slow shutter speeds)


  6. Kannabiran, Ravi Shankar (KRS) said...

    மலைகள் இல்லாத் தஞ்சையில் ஒரு மேரு மலை!!

    பிரமிட்களையே பாத்துக் கொண்டிருந்த என் அலுவலக ஐரிஷ் நண்பர் ஒருவரிடம் தஞ்சைப் பெரிய கோவிலைச் சென்ற மாதம் காண்பித்தேன். மனிதர் டிசம்பரில் vacationக்குத் தஞ்சை செல்கிறார்!!

    ASI அனுமதி பெற்று, தஞ்சை விமானத்தை உள்ளிருந்து பாத்திருக்கீங்களா? Concentric Circles அது இது எல்லாம் கெட்டுது போங்க! கொள்ளை அழகு! கொள்ளை போகாமால் காத்தால் சரி !!


  7. கைப்புள்ள said...

    வாவ்!!!

    அருமையான படங்கள்.


  8. வெற்றி said...

    இராமநாதன்,
    படங்கள் அருமை. ஒவ்வொரு படத்தின் கீழும் அப்படத்தைப் பற்றிய சிறு விபரங்களை எழுதினால் , இப்படத்தில் உள்ள ஆலயங்களைத் தெரியாதவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்.

    பி.கு:-உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின் இப்படங்களைத் தரைவிறக்கம் செய்யலாமா?


  9. Anand V said...

    மிக அருமை


  10. rv said...

    கொத்ஸு,
    பெரிய கோவிலுக்கு வர்ணனை நான் தர்றதாவது? சரி முயற்சி செய்யுறேன்.


  11. rv said...

    குமரன்,
    இரவுநேரத்துலயும் பகல்நேரத்துலயும் இருக்கிறது ஒரே பெரிய கோயில் தான். அதுல சந்தேகமே வேணாம். :)


  12. rv said...

    ஜிரா,
    மிக்க நன்றி.


  13. rv said...

    பரணீ,
    பதிவுலேயே சேர்த்துட்டேன். தஞ்சாவூர் பெரிய கோயிலேதான்.


  14. rv said...

    bad news india,
    நம்ம ஊர்லயே கோயில் இருந்தா யாராச்சும் அடிக்கடி போவாங்களா? பழநில இருக்கறவங்களக் கேளுங்க. மலையேறி பலவருஷமாச்சும்பாங்க. அதே கதை தான் இங்கேயும்.

    நேத்திக்கு வானம் ஒவரா இருட்டிகிட்டு இருந்துச்சு. அதுனாலதான் விண்மீன்கள் விழலை. அடுத்த முறை முயற்சி செய்யறேன். நன்றி.

    -
    ஆமா, பேரு ஏன் இப்படி வச்சுருக்கீங்க? தப்பா நினச்சுக்காதீங்க.


  15. rv said...

    கே.ஆர்.எஸ்,
    தக்ஷிண மேருன்னே தான் பேரு உண்டே.

    கோயில் உள்ளதானே? போட்டோவே போட்டேன். அப்புறம் போடவேணாம்னு சிலர் கேட்டுக்கவே எடுத்திட்டேன். இங்க பாருங்க.

    http://valaippadhivu.blogspot.com/2005/08/2.html


  16. rv said...

    கைப்புள்ள,
    நன்னி. நலமா? என்ன ரொம்ப சத்தத்தையே காணோம்?

    வாவ்னு சொல்றதுகூட அவ்வ்வ்வ்வ்வ்னுதான் என் காதுல விழுது. :)


  17. rv said...

    வெற்றி,
    எழுதிவிட்டேன்.

    //உங்களுக்கு ஆட்சேபனை இல்லையெனின் இப்படங்களைத் தரைவிறக்கம் செய்யலாமா?
    //
    தாராளமாக.


  18. rv said...

    ஆனந்த்,
    நன்னி.

    "எ நண்டு"ங்கற மாதிரி இருக்கு புது handle. :))


  19. நன்மனம் said...

    அருமையான ஒளிபதிவு.


  20. நாகை சிவா said...

    ராம்ஸ்,
    தஞ்சை பெரிய கோவிலை உள் வந்து ரசித்தை விட வெளியில் இருந்து ரசித்தது தான் அதிகம்.
    மீண்டும் ஒரும் முறை ரசிக்க வைத்து வீட்டீர்கள்
    நன்றி


  21. ILA (a) இளா said...

    மின்னல் ஒரு கோடி
    எந்தன் உயிர் தேடி வந்ததே!
    ஓஓ
    லட்சம் பல லட்சம் பூக்கள்
    ஒன்றாக பூத்ததே!

    அந்த பாட்டுல பி.சி பண்ணினதை சுலுவா முடிச்சுட்டீங்க. அருமை! அருமையிலும் அருமை


  22. rv said...

    நன்மனம்,
    நன்றி


  23. rv said...

    நாகை சிவா,
    கொஞ்சமாய் உள்ளேயிருந்தும் ரசிங்க.

    இதோ அதே சுட்டி
    http://valaippadhivu.blogspot.com/2005/08/2.html

    நன்றி


  24. rv said...

    விவசாயி,
    நான் என்ன கலைஞரா இல்ல அம்மாவா? இப்படியெல்லாம் மூஞ்சிக்கு நேரா புகழறீங்க. வெட்கமா இருக்கு.

    வஞ்சத்துல இருக்காதுன்னு தெரியும். அதுனால ரொம்ப நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்