கார்த்திகை மாதம் திங்கட்கிழமைகளில் விரதமிருந்து சிவபெருமானுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானது. விரதமிருப்பதும் தீபம் ஏற்றுவதும் பலருக்கு நடப்பதில்லையென்றாலும் கோபுரத்தையாவது தரிசிக்கலாமே.
இதோ சில கோபுரங்கள்:
1. தில்லை நடராஜர் திருக்கோயில்
2. தஞ்சை பிரகதீஸ்வரர் திருக்கோயில்
3. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில்
4. மங்களாம்பிகா சமேத ஆதி கும்பேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்.
கும்பகோணம் என்ற பெயர் வரக்காரணமான ஈசன். பிரளய காலத்தின் போது மண் குடத்தில் அமிர்தம் மகாமேருவில் இருந்து உருண்டு வர, அதை வேட ரூபம் கொண்டு அம்பெய்தி உடைத்தார் பரமேஸ்வரன். அந்த உடைந்த குடம் தங்கிய இடமே குடந்தை ஆனது. வழிந்த அமிர்தமே மகாமக குளமானது என்று ஐதீகம். இங்கேயுள்ள சிவலிங்கத்தின் மேல் மண் குடத்தின் கலசம் சாய்ந்தாற்போல் கோணலாக இருப்பதால் கும்பகோணம் என்ற பெயர் பெற்றது.
5. திருச்சேறை ஞானாம்பிகை சமேத செந்நெறியப்பர் (சாரபரமேஸ்வரர்) ஸ்வாமி திருக்கோயில்
திருச்சேறை சாரபரமேஸ்வரர் மற்றும் ரிண விமோசன லிங்கேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சாரநாதஸ்வாமியும் கால பைரவரும். இத்தலம் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் நாச்சியார்கோயிலுக்கு அப்பால் உள்ளது. ஓரே ஊரில் சாரநாதப் பெருமாளும், சாரநாதஸ்வாமியும் எதிரெதிர் கோயில்களில் உள்ளனர்.
கடன் தொல்லை நிவர்த்திக்கென தற்போது மிகவும் பிரபலமடைந்து வருகின்றது இந்த சிவன் கோயில். நாங்கள் தேடிய வரையில் மார்க்கண்டேயரின் பிறவிக்கடனை நிவர்த்தி செய்த சிவலிங்கம் என்று மட்டுமே தலவரலாற்று புத்தகத்தில் இருந்தது. ஆயினும் நமக்கு பிறவிக்கடனை பற்றி தற்போது என்ன கவலை? கவலையெல்லாம் வங்கிகளில் இருக்கும் கடனைப் பற்றிதானே. அதற்கு பதினோரு திங்கட்கிழமைகள் அர்ச்சனை செய்து இச்சிவனை வழிபட்டால் நிவர்த்தியாகும் என்று நம்பப்படுகிறது. நேரில் வர இயலாதவர்கள் "செயல் அலுவலர், அ/மி சாரபரமேஸ்வரர் திருக்கோயில், திருச்சேறை - 612605, கும்பகோணம் தாலுக்கா" என்ற விலாசத்திற்கு ரூ. 165 மணியார்டர் அனுப்பினால் அர்ச்சனை செய்து பதினோரு வாரங்களுக்கு பிரசாதம் அனுப்பப்படும் என்று எழுதிவைத்துள்ளார்கள். தொலைபேசி: 0435-2468001
இங்குள்ள காலபைரவருக்கு என்ன விசேஷமென்றால் தமிழ்நாட்டில் திருநாவுக்கரசரால் தேவாரப்பதிகம் பாடப்பெற்ற ஒரே பைரவர் இவர்.
6. கண்ணபிரான் ரவிசங்கருக்காக சாரநாயகி சமேத சாரநாதப் பெருமாள் கோயில், திருச்சேறை
19 Comments:
கோபுர தரிசனம் பெறச் செய்தமைக்கு நன்றி!
இந்த மாதிரி கேமிராவும் கையுமா ஒவ்வொரு கோயிலா ஏறி இறங்கத் தொடங்கிட்டீரே. என்ன மேட்டர்?
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!
கார்த்திகை சோமவாரத்தில் இக்கோபுரங்களைக் காட்டியமைக்கு மிக்க நன்றி!
மிக்க நன்றி.
கோபுரங்கள் தரிசனம் அருமை.
கோபுர தரிசனம்
பாபவி மோசனம்!
அதிலும் திருவானைக்கா, பசுமைக் கோபுரம்! நன்றி மருத்துவரே!
//மண் குடத்தில் அமிர்தம் ....
அந்த உடைந்த குடம் தங்கிய இடமே குடந்தை//
இந்த மண் குடத்தைச் செய்ய, மண் எடுத்த தலம் திருச்சேறை! பெருமாள் இந்தத் தலத்து மண்ணே பிரளயம் தாங்கும் வல்லமை பெற்றது எனப் பிரம்மாவுக்கு அறிவுறுத்தினார்!
அதனால் மகாமகத்தின் போது திருச்சேறையிலும் விழா!
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்!
கார்த்திகை சோமவாரத்தில் இக்கோபுரங்களைக் காட்டியமைக்கு மிக்க நன்றி!
சிபி,
நன்றி.
கொத்ஸு,
மேட்டரென்ன பெரிசு.. பதிவு போட சரக்கில்லை. அதான் கோபுர தரிசனம் சீரீஸை தொடர்ந்துகிட்டேஏஏஏஏ இருக்கேன்.
எஸ்.கே, அகில் பூங்குன்றன்
நன்றி.
மிக்க நன்றி கே.ஆர்.எஸ்,
உங்களுக்காக சாரநாதப் பெருமாள் கோயில் கோபுரத்தையும் சேர்த்துவிட்டேன்.
தகவல்களுக்கு நன்றி.
நன்றி குமரன்.
தனிமடல் கிடைச்சதா?
அன்புடன் அக்கா
சார் ஒரு சிறு திருத்தம்....திருவானைக்காவல் அம்மன் திருநாமம் அகிலாண்டேஸ்வரி...அபிராமி என்பது திருக்கடையூர் மற்றும் திண்டுக்கல்.
மதுரையம்பதி,
அபிராமி என்பது தவறு. அகிலாண்டேச்வரியே தான்!
இத்தனைக்கும் பதிவை எழுதுகையில் செம்மங்குடி பாடக்கேட்டுக்கொண்டிருந்தேன். இருந்தும் தவறுதலாக இட்டுவிட்டேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி. திருத்திவிட்டேன்.
சிறப்பு இராமநாதன். கார்த்திகை மாதத்தில் அறுபடை வீடுகளின் கோபுரங்களையும் போடுங்களேன்.
திருவானைக்காவலில் அன்னையைக் கண்டேன் கண்டேன் கண்டு கொண்டேயிருந்தேன். இமைக்க முடியவில்லை. இமை இயங்க முடியவில்லை. அத்தனை ஈர்ப்பு. காணக் கண்கொள்ளாக் காட்சி. இன்றும் நினைக்க நினைக்க இனிமை.
அறுபடையும் கைவசம் இருப்பதாக தெரியவில்லை ஜிரா. அடுத்த வாரம் திருவாவினன்குடி போகலாம் என்று இருக்கிறேன். முடிந்தால் அதை எடுத்துப் போடலாம்.
அகிலாண்டேஸ்வரியை விட அவளின் தாடங்கத்தைப் பார்க்க ரொம்பவே கூட்டம் வருகிறது இப்பல்லாம். ஏதோ ஒரு புத்தகத்தில் காஞ்சி மகாப்பெரியவாளின் anecdote ஒன்று வெளியானதன் பயன். அம்பாளின் தாடங்கத்தையே ஒரு பதினைந்து நிமிடம் பார்த்து தியானம் செய்யவேண்டுமென்று.
நானும் போனேன். என்ன போன வேளையில் தாடங்கம் சாத்த மாட்டார்களாம். காலை 8 முதல் 12 வரை அப்புறம் மாலை ஐந்து முதல். என் அதிர்ஷ்டம் நான் போனது மதியம் மூன்றரைக்கு. :((
விரைவில் தாடங்க தரிசனம் கிடைக்க வழிசெய்கிறாளா என்று பார்க்கவேண்டும்.
நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே.
நான் செய்த கோடிப் பாவத்தினை இந்த கோபுர தரிசனம் மூலம் நீங்கச் செய்தமைக்கு நன்றிகள்!
Post a Comment