238. பீட்டரின் கோர்ட்டில்... - 1

ஊர்பொறுக்கி பலநாளாகிவிட்டபடியால் எங்காவது ஒரு குட்டி பிக்னிக் போவோமென்று நினைத்திருந்த நேரத்தில் பீட்டரின் கோர்ட்டிலிருந்து சம்மன்ஸ் வந்திருப்பதாக நண்பர் சொன்னார். என்ன கோர்ட், எதுக்கு சம்மன் அப்படினு ஒரு பக்கம் இருந்தாலும், போகாமல் இருக்கமுடியாது என்ற காரணத்தால் ஞாயிறன்று கிளம்பினோம்.

சபர்பன் ரயிலில் 40 நிமிடப் பயணம். அங்கே எல்லாமே டூரிஸ்ட் ரேட்டில் இருக்கும் என்று கேள்விப்பட்டிருந்த படியால், இங்கேயே மூட்டை முடிச்சு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் (அதாவது ரொட்டி, சீஸ், சாலட் இன்னபிற) கட்டிக்கொண்டு சென்றோம்.

ஊரின் பெயர் Peterhof. டச்சு மொழியில் பீட்டரின் கோர்ட் (court) என்று அர்த்தம். ரஷ்யாவின் வெர்ஸாய் என்றும் அழைக்கப்படும் ஊர் இது. சுமார் நூற்றைம்பது நீரூற்றுகளும் (fountains) நான்கு தொடரூற்றுகளும் (Cascades) என அமர்க்களப்படுத்தும் இவ்வூரின் அரண்மனைகள் 'தண்ணி வச்சு காட்டும் வித்தைக்கு' நிகராக வேறொன்றை பூலோகத்தில் காணவியலாது என்று பில்டப் நிறையவே கொடுத்திருந்தார்கள்.

ரயில் நிலையத்தில் இறங்கினால் பேருந்துகள் அனைத்திலும் fountains என்று அடைமொழியில் எழுதிவைத்திருக்கிறார்கள். பத்துநிமிடத்தில் ராட்சத வாயிற்கதவுகளின் அருகில் எங்களை இறக்கிவிட்டார்கள். கடலை, சிப்ஸ், பாப்கார்ன் அதோடு வெகுநாளைக்குப் பிறகு பஞ்சுமிட்டாயும் (அநியாயம் என்னவென்றால் ஒரு மிட்டாய் 1 யூரோ! எனக்கு நம்மூர் எக்ஸிபிஷனும் பீச்சும் நினைவுக்கு வந்து தொலைத்தது) என தயாராய் வைத்திருந்த வஸ்துக்களோடு அரண்மனை காம்ப்ளெக்ஸினுள் நுழைந்தவுடன் வாயைப்பிளந்தபடி எடுத்த படம் இது...


Midway Fountainஇது முதலில் வரவேற்கும் Midway fountain

அரண்மனைக்கட்டிடம் வரையிலான இத்தோட்டத்திற்கு Upper Gardens என்று பெயர். இதைச்சுற்றி ஒரு ரவுண்ட் வந்தபடியே அரண்மனையை நோக்கி நடக்கத்தொடங்கினோம். அடுத்து வந்தது 92 மீட்டர் நீளமும் 33 மீட்டர் அகலமும் கொண்ட பிரம்மாண்டமான Neptune Fountain.

Neptune FountainNeptune Fountain நடுவில்.. வேற யாரு? Neptune தான்...

ஜெர்மன் முறைப்படி அமைக்கப்படிருக்கும் இந்த நீரூற்று ஜெர்மனியால் இரண்டாம் உலகப்போரின் போது திருடப்பட்டு பின்னர் முக்கால்வாசி மீட்கப்பட்டு - என பீட்டர்ஸ்பர்கின் வரலாற்றுச்சின்னங்கள் அனைத்திற்குமான common வரலாறு இதற்கும் உண்டு.

நெப்ட்யூனைத்தாண்டினால் வந்தது Oak Fountain.
Oak Fountain
இந்த அப்பர் தோட்டம் ஜுஜுபி என்பது போலவும் அரண்மனைக்கு பின்னாலிருக்கும் லோயர் தோட்டம் தான் சுந்தரமானது என்றும் கூகிளாண்டவர் சூடமடித்து சத்தியம் செய்திருந்ததால் அதனை நோக்கி நடக்கத்தொடங்கினோம்.

எல்லாருக்கும் ஏற்படும் வலமா இடமா பிரச்சனையில் அதன் அரசியல்களை விலக்கி - அப்போதைக்கு அரண்மனைக்கு வலது பக்கமே செல்வது என்று ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

திரும்பிய திசை அப்படியொன்றும் மோசமானதில்லை என்று ஆறுதலளிப்பது போல வரவேற்றது Fountain of the Square Pool.

Fountain of the Square Poolsஇதைத்தாண்டினால் வலதுசாரி என்பது எப்போதுமே கரடுமுரடானதல்ல என்பதாக அரசியல் பேசும் பாதை
The Righteous Path!

கீழெயுள்ள படத்தில் அரண்மனைக்கு மேலே இருப்பது Upper Gardens-ம் நாம் இதுவரை பார்த்த நீரூற்றுகளும். கீழே இருப்பது தான் Lower Gardens. அதைப்பற்றி அடுத்த பகுதியில்...

A View from the Top
பிகு: கடைசி படம் மட்டும் வலையில் சுட்டது

(தொடரும்)

23 Comments:

 1. வல்லிசிம்ஹன் said...

  அத்தனை நீருற்றுகளையும் பார்த்து விட்டேன்.

  இதுதான் பதிவுலகை மாற்றப் போகும் பதிவா அபிஅப்பா:))

  ஆனாலும் ஏகத்துக்குப் பிரம்மாண்டமாக இருக்கிறதே இந்த அரண்மனை. நன்றி.


 2. மணியன் said...

  சொற்களில் உள்ள பிரமிப்பு படங்களில் வரவில்லை, சுட்டதைத்தவிர :)

  கீழ் தோட்ட படங்கள் நிரைவேற்றும் என அடுத்த பகுதியை எதிர்நோக்கி....


 3. Anonymous said...

  //posted by இராமநாதன் at இரவு 14:22//
  14.22 பகலிலே தானே வரும்..பதிவுல நிறைய தண்ணி இருக்கே..அதோட effectஆ இருக்குமோ! ஆனாலும் பீட்டரோட கச்சேரி super தான்


 4. Boston Bala said...

  வாவ்!


 5. கோவி.கண்ணன் said...

  இராம்ஸ்,
  படங்கள் துள்ளியமாக அருமையாக இருக்கிறது.


 6. சின்னப் பையன் said...

  படங்கள் அனைத்தும் சூப்பர்...


 7. rv said...

  வல்லியம்மா,
  இன்னும் மெயின் பிக்சரே ஸ்டார்ட் ஆவலை. வெயிட்டவும்.

  நன்னி!

  அப்புறம் அபி அப்பா புரியிறா மாதிரி இது நன்னீரூற்றுனு சொல்லலாமா? :P


 8. rv said...

  மணியன்,
  ஆமாம்.. காமிராவில் முழுதாக கொண்டு வரச்செய்த முயற்சிகூட தோல்விதான். ஏன்னா அவ்வளவு ரம்மியமா இருந்துச்சு...

  அடுத்த பதிவுல பாத்துட்டு சொல்லுங்க.

  நன்றி.


 9. rv said...

  வாருங்கள் மாணவரே,
  மதியம் 2 ஆயிருந்தால் என்ன.. இரவு 2 ஆகியிருந்தால் என்ன. இந்நேரமும் பொன்நேரமும்னு வோடாஃபோன் சொல்றாப் போல அனுபவிக்கணும். ஆராயக்கூடாது.

  நன்னி.


 10. rv said...

  பாபா, கோவி, ச்சின்னப்பையன்,
  நன்னி!


 11. தருமி said...

  அப்ப .. நீங்க இன்னும் அங்கதான் இருக்கீகளா?


 12. Anonymous said...

  அற்புதம்.
  அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.....

  -அரசு


 13. Sridhar V said...

  கலக்கல் படங்கள். முழுவதும் படிக்க ஆவல்.

  //இதைத்தாண்டினால் வலதுசாரி என்பது எப்போதுமே கரடுமுரடானதல்ல என்பதாக அரசியல் பேசும் பாதை//

  அப்படிங்கறீங்க? எப்பப்பல்லாம் கரடுமுரடானது என்று கேட்க ஆவல். நீங்க பதில் சொன்னா கண்டிப்பாக எனக்கெல்லாம் புரியாது என்பதால் சாய்ஸில் விட்டுவிடுகிறேன் :-))


 14. rv said...

  பெரீய்யப்பா,
  ஆமா.. இப்போதைக்கு... :)


 15. இலவசக்கொத்தனார் said...

  இதுவும் தண்ணிப் பதிவு என்றாலும், பார்க்க மட்டுமே செய்ததால் பதிவு நன்றாகப் புரிந்தது!!


 16. rv said...

  அரசு,
  நன்னி!


 17. rv said...

  ஸ்ரீதர்,
  //பதில் சொன்னா கண்டிப்பாக எனக்கெல்லாம் புரியாது என்பதால் சாய்ஸில் விட்டுவிடுகிறேன//
  வர வர நீர் எழுதறதுதான் எங்களுக்கெல்லாம் பிரியவே மாட்டேங்குது...


 18. rv said...

  கொத்ஸு,
  தண்ணிப்பதிவுன்னாலே உம்மள மாதிரி வறண்டு போய் கிடக்கறவுங்களுக்கெல்லாமே புகையுதே.. அது ஏன் ஏன் ஏன்?


 19. Geetha Sambasivam said...

  எங்கே போச்சு என்னோட கமெண்டு??? பதிவு தான் தொடரலைனா, கமெண்டையும் போடலை??? என்ன ஆச்சு என்னோட கமெண்டு/ க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்


 20. Geetha Sambasivam said...

  படங்களும், சரி, பதிவும் இது தான் கொஞ்சம் படிக்கிறாப்பல இருந்தது. நல்ல கமெண்ட் போட்டேன்! இருட்டடிப்பு செய்திருக்கீங்களே? :P


 21. Anonymous said...

  உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்


 22. கோவை விஜய் said...

  மைசூர் பிருந்தாவன் (கண்ணம் பாடி டேம்)அணைக்கட்டில் உள்ள நீரூற்றுகளை பார்த்தே அதிசியக்கும் கண்களுக்கு

  இந்த பிரமாண்டம் அதுவும் அசத்தும் படங்களுடன்.
  அற்புதம்
  அதிசயம்
  ஆனந்தம்.

  தி.விஜய்
  http://pugaippezhai.blogspot.com/


 23. anantha-krishnan said...

  புகைப்படங்களெல்லாம் பிரமாதம் :))
  பிளாக் லோகத்தில் நீண்டநாள் கழித்து பிரவேசிக்கும் நான்
  நம்ம ஏரியா பக்கம் வருமாறு அன்புடன் அழைக்கிறேன்
  www.jega-pethal.blogspot.com


 

வார்ப்புரு | தமிழாக்கம்