173. How Big is Your P*nis?

இதைப் படித்தவுடன்:

1) பொதுவில் கேட்க்கக்கூடாத கேள்வியைக் கேட்கிறான் நாகரிகமற்றவன். இந்தப்பதிவை தொடர்ந்து படித்துத்தொலைப்பதா? வேண்டாமா?

2) ஏதாவது Kinsey/Freud வகையறா உளவியல் ப்ளாக்கிற்கு வந்துவிட்டோமா?

3) ஏதாவது பம்ப், மூலிகைக் களிம்பு விற்கிற தளமாக இருக்குமோ?

4) இருப்பதைவிட பெரிய எண்ணாக சொன்னால்தான் என்ன? இல்லை உண்மையான பதிலைச் சொல்லித்தான் பார்ப்போமா?

என்றெல்லாம் கிடுகிடுவென்று மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருக்குமே. அதற்கெல்லாம் ஒரு sudden brake போட்டுவிட்டு பதிவின் விஷயத்திற்கு வருகிறேன்.

1) அது எவ்வளவு 'நளினமாக' இருக்கிறதோ அவ்வளவு மதிப்பு அதிகம். சமூகத்தில் மற்ற ஆண்களிடத்தில் கண்டிப்பாக உண்டு. பல ஆண்கள் தங்களுக்கு அவ்வாறு வாய்த்திருக்ககூடாதா என்று தினம்தினம் ஏங்குவார்கள். ஆனால் இவ்விஷயத்தில் பெண்கள் 'எக்ஸ்ட்ரா'வாக மதிப்பார்களா என்பது காலங்காலமாக நடத்தப்பட்டு வரும் பட்டிமன்றத்தலைப்பு. அதனால் அதை விட்டுவிடுவோம்.

2) பெரும்பாலான ஆண்கள் பலதடவை பொதுவில் expose செய்கிறார்கள். பெண்களைக் கவர மட்டுமில்லாமல் தேவையற்ற போட்டிகளை சமாளிக்கவும்.

3) பொழுதுபோகாமல், கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்க முடியாமல், அதனுடன் விளையாடுவோர் சதவிகிதம் பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்கள் மிக அதிகம். இரண்டு மூன்று மடங்கு அதிகம் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது. பெண்கள் வெளியிலேயே காட்ட மாட்டனர். தேவைப்பட்டாலேயொழிய.

4) தேவையே இல்லாமல் அமுக்கிப்பார்ப்பது, வேலை செய்கிறதா என்று அடிக்கடி எடுத்துப்பார்த்து சோதனை செய்வது..

சரி வேண்டாம் ரொம்ப மஞ்சப்பத்திரிகை வாடை வீசுவது போல இருப்பதால் இப்போது நிஜமாகவே விஷயத்திற்கு வருகிறேன். நீண்ட நாட்களுக்கு முன் இதை ஒரு தளத்தில் படித்துவிட்டு மறந்துபோயிருந்தேன். இப்போது ஏனோ நினைவுக்கு வந்தது.

ஆராய்ச்சியின் படி மேற்கூறிய சகலமும் செய்வதில் ஆண்களே முதலிடம் செல்போன் விஷயத்தில். இனிமேல் பொது இடங்களில் சுற்றுமுற்றும் கொஞ்சம் கூர்ந்து கவனித்து பாருங்கள். ஒருவர் போன் மணியடித்தால் அனைவரும் எடுத்துச் பார்த்துக்கொள்வது. அதிலும் அவரதை விட நம்முடையது விலையுயர்ந்த மாடலாக இருந்தால் அப்போதுதான் நினைவுக்கு வந்தது போல எஸ். எம். எஸ் அடிக்கத் தொடங்குவது.

எடுத்து எடுத்து பாட்டரி சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது. இல்லையென்றால் குருட்டாம்போக்காக சில நம்பர்களை அமுக்கி டயல் செய்து பிஸியாக இருப்பதாக காட்டிக்கொள்வது.

ஓட்டல்களைப் போன்ற இடங்களில் தேவையேயில்லாமல் டேபிளில் எடுத்து வைத்திருப்பது. அதை சுற்றி சுற்றி விளையாடுவது. இடுப்பில் சொருகிக்கொள்வது. எடுப்பது.

இப்படி எத்தனை காரியங்கள் செய்ய முடிகிறது செல்போன்களைக் கொண்டு ஆண்களால். முக்கால்வாசி நேரம் அதில் அழைப்பே வராது. அழைக்கவும் ஆளிருக்க மாட்டனர். பெரும்பாலோர் செல் போன் வாங்குவதில், பொதுவில் அம்மாடலை எடுத்தால் எத்தனை பேரிடம் இருக்கும், எடுத்தால் என்ன மரியாதை கிடைக்கும் என்பதெல்லாம் பார்த்துதான் விலையுயர்ந்த மாடல்களை வாங்குகின்றனர். வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உளவியல் ரீதியாகவாவது.

பெண்கள் பெரும்பாலும் ஹாண்ட் பாக்கினுள்ளேயே வைத்திருப்பர். தேவைப்பட்டாலேயொழிய அதைவைத்து பொதுவில் விளையாட்டு காட்ட மாட்டார்கள்.

அதுவும் ஒவ்வொரு முறையும் வேட்டையாடு விளையாடு ரிங்டோனாக 'பார்த்த முதல் நாளாய்' கேட்டுக்கேட்டு எனக்கு அலுத்துவிட்டது. சன் ம்யூஸிக் நிறுத்தினாலும் இவர்கள் நிறுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

ஆக மொத்தம், பெரும்பாலான ஆண்கள் செல் போன் வாங்குவதே தங்கள் ஆண்மையின் பிரதிபலிப்பின் வடிவாகக் கொண்டு பெண்களைக் கவரத்தான் என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன. தான் வசதி வாய்ந்தவன் என்று காட்ட அல்லவாம். மாறாக தான் எந்நேரத்திலும் தொடர்பு கொள்ளப்படவேண்டிய/கூடிய ஒரு பொறுப்புள்ள, powerful முக்கியஸ்தன் என்பதைச் சுட்டத்தானாம்.

சுட்டி இங்கே.

ஏன் 'அதனுடன்' சம்பந்தப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சந்தேகமாகவா இருக்கிறது??? பார்க்க இங்கே. இருபக்க நியாயங்களும் இருக்கின்றன இங்கே.

---------------------------------
பதிவின் தலைப்பிலுள்ள கேள்விக்கு வந்துட்டோமா?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?

உங்களுடையது எப்படி?


(அய்யா சாமி, செல்போன் மாடலச் சொன்னேன்பா. அதப்பத்தி மட்டும் சொல்லுங்க. என் பதிவ புகழ்பெற்ற 'டாக்டர் பிரகாஷ்' பதிவா ஆக்கிடாதீங்க!! அவரே வேற வெளியில வர்றாராம். :)))

39 Comments:

 1. ramachandranusha(உஷா) said...

  பதிவு போட்ட பத்து நிமிடத்தில் தேன்கூடு டாப் டென்னில் முதல் இடத்தில் வந்துவிடும். இல்லை
  அஞ்சே நிமிஷத்திலா ;-))))))))))))))))


 2. பரணீ said...

  :-))))


 3. குமரன் (Kumaran) said...

  டாக்டர் பிரகாஷ் வாழ்க வாழ்க! :-))))


 4. வஜ்ரா said...

  பதிவை முழு நீஈஈஈஈஈஈஈழத்துக்கும் படிச்சதுக்கப்புறம் அது செல்போனைப் பற்றியது என்று தெரிந்தது.

  ஆனால் கேள்வி மட்டும் பெரிச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சா கேட்டுட்டீங்க...


 5. பினாத்தல் சுரேஷ் said...

  யோவ்!


 6. ENNAR said...

  இப்பதிவு நல்லாவே இல்லை


 7. முத்துகுமரன் said...

  //'டாக்டர் பிரகாஷ்' //

  டாக்டர் ராம்ஸ்... ரைமிங்கா இருக்கே :-)


 8. கோவி.கண்ணன் [GK] said...

  என்ன கொடுமை மிஸ்டர் ராமனாதன் என்று சொல்லவந்தேன் !

  வெல்டன் !
  :))))


 9. Sridhar V said...

  //இதைப் படித்தவுடன்:
  ...............

  என்றெல்லாம் கிடுகிடுவென்று மனதில் எண்ணங்கள் ஓட ஆரம்பித்திருக்குமே. அதற்கெல்லாம் ஒரு sudden brake போட்டுவிட்டு பதிவின் விஷயத்திற்கு வருகிறேன்.
  //

  தலைப்பைப் பார்த்தவுடன் மஞ்சள் பத்திரிகைதான் ஞாபகம் வந்தது. (yellow journalism means sensationalization அப்படினும் சொல்வாங்க). சரி நம்ம டாக்டர் என்ன சொல்ல வர்றீங்க அப்படினு பார்க்கலாம்னு வந்தா... பழைய மேட்டர்தான் :-)). நல்லா சுவையா சொல்லியிருக்கீங்க நன்றி!

  இந்த பதிவுக்கு இந்த video பொருத்தம்னு நினைக்கிறேன். பாருங்களேன் :-))))


 10. நாமக்கல் சிபி said...

  கட்டெறும்பாய் மாறி விட்டீரா?

  :(


 11. rv said...

  உஷா அக்கா,
  வந்துச்சா இல்லியா? அதப் பாத்துச் சொல்லவாவது சொல்லிருக்காமில்லியா?


 12. rv said...

  பரணீ,
  முதல் ஆளா வந்துட்டு கேள்விக்கு பதில் சொல்லாம சிரிச்சு மழுப்பலாம்னு ஐடியாவா? இது நாட் நைஸ் - சொல்லிட்டேன். :))


 13. rv said...

  குமரன்,
  அதுக்குள்ள பேர் மாத்தி கோஷமே போட்டாச்சா? உருப்பட்டா மாதிரிதான். இருங்க இருங்க. உங்கள ஹீரோவா போட்டு படம் எடுக்கறேன் சீக்கிரம்! :P


 14. rv said...

  வஜ்ரா,
  கேள்விய பெரிய்ய்ய்ய்ய்ய்சா கேட்டுட்டேன். ஆமா. அதுக்குண்டான பதில நீங்க சுருக்கமா கூட சொல்லலியே.. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? :)))


 15. rv said...

  பெனாத்தலார்,
  யோவ் ??? இதுதான் இந்த விஷயத்துல உங்க பதில்னு தமிழ் வலையுலகம் எடுத்துக்கலாமா? :P


 16. rv said...

  என்னார்,
  சாரிங்க. சும்மா ஒரு ப்ளோல எழுதிட்டேன். கண்டுக்காதீங்க.


 17. rv said...

  முத்துக்குமரன்,
  ரைமிங்கா இருக்குன்னு சொல்லியாச்சு.

  அடுத்து என்ன? பதிவும் எழுத்தும் அப்படியே இருக்கு. இல்ல வேணும். அதுதானே?

  ரசிகர்களால தமிழ்சினிமா கெட்டுச்சா? இல்ல சினிமானால ரசிகர்கள் கெட்டாங்களான்னு இங்கேயே சோதிச்சு பாத்துடலாம் போலிருக்கே. :))))))))))


 18. rv said...

  கோவி. கண்ணன்,
  கடைசியா - பெரிசா //என்ன கொடுமை மிஸ்டர் ராமனாதன் என்று சொல்லவந்தேன் !//
  னு சொல்றீங்களா? இல்ல சின்னதா
  //வெல்டன் !//னு சொல்றீங்களா?


 19. rv said...

  கோவி. கண்ணன்,
  ஸ்மைலி விட்டுப்போச்சு. ரொம்ப ரிஸ்கியான விஷயமாச்சே இந்த சிரிப்பான். நிறைய போட்டுக்கறேன்.

  :))))))))))))))))))))))))))))

  ஓக்கே???


 20. Santhosh said...

  :)) ராம்ஸ் என்னமோ போங்க..


 21. Santhosh said...

  Doctor sir ethavathu medical related thing potu irupinganu patha eppadi panitingale (sorry for the english)


 22. வஜ்ரா said...

  //
  கேள்விய பெரிய்ய்ய்ய்ய்ய்சா கேட்டுட்டேன். ஆமா. அதுக்குண்டான பதில நீங்க சுருக்கமா கூட சொல்லலியே.. அது ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? :)))
  //

  நான் சொன்னத விட explict ஆ பதில் சொல்ல முடியாது சார்....

  சுருக்கம் நீளம்ன்னு நீங்க தான் சும்மா வாயக்கிழர்ரீங்க...

  அது போகட்டும்...
  அது ஏங்க இந்த feminist ங்க...ஆண்களின் உருப்பைப் பற்றியும் செல்போனையும் முடிச்சு போட்டு பசங்கள மட்டம் தட்டுறாங்க ?

  அதைப்பார்த்து போறாமையா... ?


 23. கால்கரி சிவா said...

  டாக்டர்..டாக்டர்...


 24. Sridhar V said...

  ஹலோ,

  மேலப் போட்டிருக்கிற video link-ஐ யாராவது பார்த்தீங்களா... எப்பவோ பார்த்தத இந்தப் பதிவுக்கு தோதா தேடிப் பிடிச்சு (15 நிமிஷம் தேடினேங்க) போட்டிருக்கேன்... யாருமே கண்டுக்கலையோ???

  சரி... சரி... பின்னூட்ட வாழ்க்கையில இதெல்லாம் சகஜம்ப்பா...


 25. Boston Bala said...

  E - T a m i l : ஈ - தமிழ்: "0.004' வாமன வித்தியாசம்

  இந்தப் பதிவு வயது வந்தோர்களுக்கு மட்டுமே ஏற்றது." ;-)


 26. G.Ragavan said...

  மூளை ஒரு புள்ளியில தொடங்கி...எங்கெங்கேயோ சுத்தீட்டு வேறொரு புள்ளீல வந்து நின்னது. :-)

  எனக்குத் தெரிஞ்ச ஒருத்தருக்கு இந்தப் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய பொருட்களா வாங்குற பிடித்தம் இருக்கு. பைக்கு, ஜீப்பு...அது இதுன்னு...இனிமே அவரோட மூஞ்சியக் கூடப் பார்க்க முடியாதே!!!!!!!!!!!!


 27. rv said...

  அடடா ஸ்ரீதர் வெங்கட்,
  டென்ஷ்ன் ஆவாதீங்க. அந்த சூப்பர் வீடியோவ நீங்க சுட்டி கொடுத்தோன்னயே பாத்துட்டேன்.

  அதுக்கு ஏன் பின்ன பதில் போடலேன்னு யோசிக்கிறீங்களா? ஹி ஹி. பி.கல பாலபாடமே இன்னும் கத்துக்கல போலிருக்கு. போலி டோண்டுவும் மறுமொழி மட்டுறுத்தலும்னுட்டு ஒரு பதிவு 'இலவசம்' இலவசக்கொத்தனார் வலைப்பூல இருக்கும். படிச்சுப் பாருங்க. அதுக்குள்ள பதில் போட்டுடறேன். ஒகே?


 28. இராம்/Raam said...

  ஹி ஹி


 29. Amar said...

  ஓன்னியுமே புரியலையே....செல்போனை பத்தி மட்டும் தானே பேசறீங்க? பெரிய பசங்க பேசுறப்ப இதுக்கு தான் தலையை விடக்கூடாதுன்னு சொல்றது...சின்ன பசங்க பேசுற விஷயம் பத்தி பதிவு போட்டவுடனே சொல்லுங்க ராமநாதன்.


 30. rv said...

  ஆவி அண்ணாச்சி,
  காட்ட மறைக்க இருப்பது பின்னூட்டங்கள காட்ட மறைக்க. ஒங்கள மாதிரி நேரா கேள்வி கேக்காம எத்தன பேரு என்னன்னு நினச்சுட்டு போனாங்களோ? :)


 31. rv said...

  சிபி,
  நாம கழுதையாயிருந்தாத்தானே தேயறதப் பத்தியெல்லாம் கவலைப்படணும். அப்பப்போ நமக்குள்ள கவிஜ அப்புறம் இந்த மாதிரி பதிவெல்லாம் பீறி(இங்கே 'ரி' போட்டால் நான் பொறுப்பல்ல)ட்டு வரும். லூசுல விடணும்.


 32. rv said...

  சந்தோஷ்,
  மெடிக்கலா எதுனாச்சும் சொல்ற அளவுக்கு சரக்கிருந்தா சொல்லியிருக்க மாட்டேனா? இதெல்லாம் கேட்டு வேற மானத்த வாங்கணுமா?


 33. rv said...

  வஜ்ரா,
  நீங்க கேட்ட கேள்வி வழக்கமா கேக்கப்படறதுதான்.

  இல்லாதவங்க வயித்தெரிச்சல்னுட்டு. ஆனா feminist எங்க வந்தாங்க?


 34. rv said...

  சிவா,
  என்ன வசூல்ராஜா டாக்டர் டாக்டரா? இல்ல காதல் வைரஸ் ஹெல்லோ டாக்டர் டாக்டரா? எதுல ஹெல்ப் தேவைப்படுது? :))


 35. rv said...

  பாபா,
  சுட்டி பார்த்தேன். :)


 36. rv said...

  ஜிரா,
  மூஞ்சியக்கூட பார்க்கமுடியாம என்னென்னவோ நினைவுக்கு வருமா? இதுக்கெல்லாம் நான் பொறுப்பில்லைனு நான் டிஸ்கி போட்டுக்கறேன். :P


 37. rv said...

  ராம்,
  ஹி ஹிக்கு நன்றி. வேற எதுவுமே நான் சொல்லலையப்பா.. சரியா?


 38. rv said...

  சமுத்ரா,
  //புரியலையே....செல்போனை பத்தி மட்டும் தானே பேசறீங்க?//
  //சின்ன பசங்க பேசுற விஷயம் பத்தி பதிவு போட்டவுடனே சொல்லுங்க//


  அட இதப்பாருய்யா... நம்மகிட்டயேவா?

  சின்னப்பையன் அப்படி இப்படின்னு சொல்லி நீங்களே கமிட் ஆகிக்காதீங்க சமுத்ரா! ;)


 39. Unknown said...

  செல்போன் பற்றி தங்கள் பதிவு உண்மைதான்.வரும் காலத்தில் அது என்ன என்ன இன்னும் மாய்மாலங்கள் செய்ய்து அசத்தபோவதோ யாருக்கும் தெரியும்.செல் இல்லாருக்கு இவ் வுலகு இல்லை-nellai kanna -27-01-2008


 

வார்ப்புரு | தமிழாக்கம்