156. ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா?

கொஞ்ச நாளா பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இடஒதுக்கீடு பத்தி விவாதங்கள் நடந்துகிட்டு வருது. ஆனா, நடுவுல என் கண்ல பட்டது ரிஸர்வேஷன் டாக்டர்கள்லாம் என்னமோ எமனோட ஏஜெண்ட்கள் மாதிரி அவங்ககிட்ட போகவே சில மக்களெல்லாம் உயிருக்கே பயப்படறாங்க.

சேரும்போது என்னமோ மெரிட்ல வந்தவங்கள்லாம் 300 எடுத்துட்டு வந்தா மாதிரியும், மிச்சவங்கள்லாம் 35 எடுத்துட்டு வந்தா மாதிரியும் நினச்சுகிட்டு இருக்கிறதால வர காழ்ப்புணர்ச்சியிது. உண்மை நிலவரம் என்னான்னா, OC, BC, MBC, SC, STனு வரிசைக்கிரமப்படி 294 - 275 வரைக்கும் தான் இலவச சீட்டே. இது அக்ரெகெட் இல்லியா? 274ங்க்றது 91.4%. எந்த ஊர்ல சாமி 91.4 வாங்கினவங்க மக்கானாங்க? அவன விட அதிகமா மார்க் வாங்கின ஆளுங்கள நான் குறைச்சு சொல்லல. தனிமனிதன்னு பார்த்தா இன்னும் அதிகமான மதிப்பெண் வாங்கின மாணவனுக்கு கிடைக்காம போனது துரதிருஷ்டம் தான். ஆனா, இந்த இடஒதுக்கீடு நம் நாட்டுக்கு அவசியமானது. இதுனால இந்த 6% வித்தியாசத்துல உங்க உயிரே ஊசலாடுத்துன்னு ஒப்பாரி வைக்கிறது நியாயமா?

இதுவெறும் சேர்க்கை நிலவரம் தானே. 91 வாங்கின பையன் நூறு வாங்க மாட்டானா? பன்னிரண்டாம் கிளாஸ் மார்க் வச்சுதான் டாக்டரோட தரத்தை முடிவு பண்ணுவீங்களா? அப்ப அப்புறம் நாலரை வருஷம் உயிரக் குடுத்து படிச்சு, ஒண்ணரை வருஷம் இண்டெர்னா குப்பக்கொட்டினது இதெல்லாம் எந்த தெய்வத்துக்கு ப்ரீத்தி?

மிச்ச கல்லூரிகள விட மருத்துவக் கல்லூரிகளில் பெயிலாகும் கோஷ்டி அதிகம் தான். அது பன்னிரண்டாம் கிளாஸ்ல இவ்வளவு மார்க் எடுத்துட்டு வந்த பசங்கதானே. படிப்போட தன்மை காரணமா இப்படி நடக்கிறது வழக்கம்தான். இது ஒண்ணும் இன்னிக்கு நேத்திக்கா நடக்கறதில்லை. பலவருஷமா நடந்து வரதுதான். உங்க ஊர்ல உங்களுக்கு நல்லா தெரிஞ்ச இந்தியாலேயே படிச்ச பெரிய டாக்டரப் போய் கேட்டுப் பாருங்க. எவ்வளவு வருஷம் படிச்சாங்க, இல்ல அவங்க அளவுக்கே பெரிய ஆளா இருக்கிற ப்ரண்ட்ஸ் எவ்வளவு ஸ்ட்ராங்கா படிச்சிருக்காங்கன்னு கத கதயா சொல்லுவாங்க.

அஞ்சரை வருஷம் படிச்சு முடிச்சு வர்றவங்க எல்லாம் ஜொல்லிக்கறதில்லை. இதுல ரிஸர்வேஷன்ல வந்தவங்க, ஓப்பன்ல வந்தவங்க இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. தொழிலும் தெரிஞ்சு, கொஞ்சம் அதிர்ஷடமும் இருந்தா எல்லாரும் முன்னுக்கு வருவாங்க. இதுல யார் நல்லா வராங்கன்னு முடிவெடுக்குறது அந்த டாக்டர்கிட்ட போற பேஷண்ட்ஸ் மட்டுமே. அவர் கொடுக்கிற ரிஸல்ட்ஸ் தான் மக்களுக்கு நம்பிக்கை வரதுக்கு ஒரே காரணம். மத்தபடி அவர் பன்னிரண்டாம் வகுப்புல பிஸிக்ஸ்லயும், கெமிஸ்ட்ரிலேயும் 100 வாங்காம 91 தான் வாங்கினார்னு யாரும் கவலைப்படப்போறதில்லை. பிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி என்ன, மருத்துவப் பாடங்கள்ல கூட அவர் என்ன வாங்கினார்னு உங்களுக்குத் தெரியப்போறதில்லை. அது அவசியமும் இல்ல. வைத்தியம் ஒழுங்கா பாக்கறார், மக்களுக்கு நம்பிக்கை இருக்குன்னா அது ஒண்ணே போதும்.

நீ 2000ல ரிஸர்வேஷன்ல வந்தவன், மருத்துவன்னு பல்கலைக்கழகமே சான்றிதழ் கொடுத்திருந்தாலும் என் உயிருக்கு உன்னால உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னு சொல்வீங்களா? consistent-ஆ negligenceனு எந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது புகார்கள் வந்திருக்கா என்ன? அந்த மாதிரி எதுனாச்சும் ஸ்டாடிஸ்டிக்ஸ் முதக்காரியம் கிடைக்குதா?

இன்னொரு விஷயம் எனக்கு புரியவேயில்ல. ரிஸர்வேஷன்ல வந்த ஆளுன்னு எப்படிங்கய்யா முடிவு செய்வீங்க? டாக்டர் நேம் போர்ட பாத்துமட்டுமா?

இந்த கேவலமான வரியை எழுத வேண்டாம்னு தான் பார்த்தேன். ஆனா, எப்படிக் கண்டுபிடிப்பாங்கன்னு சத்தியமா தெரியவேயில்ல அதான் கேட்டுட்டேன். கோச்சுக்காதீங்க.


---
முக்கியக்குறிப்பு: இட ஒதுக்கீட்டினால் தரம் குறைந்து நம் நாட்டின் அசுர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றெல்லாம் மாக்ரோ படம் பார்த்தாலும், என் எண்ணத்தில், முன்னேறப்போவதென்னவோ வாஸ்தவம் தான். என்ன அப்படி அவசரம்? பாதி ஜனங்களை 'முன்னேற்ற ஏர்பஸ்'ஸில் ஏற்றிக்கொள்ளக்கூட முடியாமல்? மெதுவாகத்தான் போவோமே. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சொல்லி அறுபது சதவிகித கிராமங்களைக் கற்காலத்திலேயே விட்டுவிட்டு நாம் (ஓரளவு நன்றாய் வாழும் மக்கள்) மட்டும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நிகராவதில் பயனேதுமில்லை என்பது என் கருத்து.

இட ஒதுக்கீட்டை ஆதரிச்சாலும் அதை அமல்படுத்தும் முறையில் குறிப்பாக creamy layer, அதோடு கூடவே கீழ ஒட்டியிருக்கிற லேயர் பத்தியெல்லாம் எனக்கு தீவிர மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனா, இடஓதுக்கீட்டில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்ய வழிசொல்லாமல், இடஒதுக்கீட்டையே தப்பு சொல்வது அநியாயம்.

அதப்பத்தி நான் எழுதறத விட, ஏற்கனவே பத்ரி மற்றும் இன்னும் சிலபேர் நல்லாவே எழுதிட்டாங்க. அங்க பின்னூட்டங்களிலும் நிறைய விஷயங்கள் சொல்லிருக்காங்க. அங்க பாத்துக்கங்க. என்னவோ இதப் பத்தி மட்டும் எழுதணும்னு தோணிச்சு. அதான்.

94 Comments:

 1. ரவி said...

  நல்லா சொன்னீங்க...


 2. வஜ்ரா said...

  ராமநாதன்,

  Rervation ல வந்தவர்கள் எமனோட ஏஜண்டா? என்றெல்லாம் ஏன் கேட்கிறீர்கள்? அவர்கள் உண்மையான திறமைசாலிகள் என்றால், Reservation எதற்க்கு? 91 வான்கினவன் 100 வாங்கமாட்டானா? நிச்சயம் வாங்குவான், 100 வாங்கினவர்களை துரத்திவிட்டு வாங்குவது தான் தவறு!!

  உங்கள் தந்தையோ, தாயோ, உற்றார் உறவினரோ? ஒரு Heart attack, Brain stroke என்று வந்தால்...என்ன எதிர்பார்பீர்கள்? நல்ல திறமையான டாக்டர்! உண்மைதானே?

  அந்த திறமையை Compromise செய்துகொண்டு படித்து வெளி வருபவர்களிடம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்...
  Social improvement க்கு Reservation தீர்வு அல்ல என்று knowledge commission கூடக் கூறுகிறது. மொத்தத்தில் தற்பொழுது நடந்து வரும் இந்த கோட்டா கூத்துக்கள் தேவைக்கு அல்ல, பேராசைக்குத்தான்.

  நன்றி
  வஜ்ரா ஷங்கர்.


 3. நன்மனம் said...

  வந்தேன், படித்தேன்....

  என்னவோ இத சொல்லனம்னு தோணிச்சு.

  :-)

  எப்பா சும்மா வெலாட்டுக்கு...

  மனசுல இருந்தத கொட்டிட்டீங்க, நல்லது.


 4. rv said...

  செந்தழல் ரவி,
  நன்றிங்க.


 5. rv said...
  This comment has been removed by a blog administrator.

 6. rv said...

  சங்கர்,
  //Reservation எதற்க்கு? //
  இந்தக் கேள்வி பலமுறை கேட்கப்பட்டு பதிலும் கொடுத்தாகிவிட்டதுதான்னாலும்... இரண்டாயிரம் ஆண்டு அப்படி இப்படியெல்லாம் ஜல்லியடிக்க வரல நான். சொல்றது என்னன்னா, படிப்பு வாசனையே இல்லாத ஏழைக் குடும்பத்துல படிச்சு வரவங்களுக்கு உதவ தான். moreover, நீங்க 91 வாங்கினவன நூறு வாங்கிட்டு உள்ள வான்னு சொல்றீங்க. நான் சொல்றேன், இன்னிக்கு 91 எடுத்துட்டு இவன் வந்தான் நாளைக்கு அவன் மகன் நூறு எடுத்துட்டு ஓப்பன்ல வருவான். அவ்வளவுதான். ஆனா அப்பனுக்கே சீட் கிடையாது, எதுனாச்சும் செஞ்சு பொழச்சுக்கோடா நீன்னு சொல்லி விரட்டியாச்சுன்னா அப்புறம்.... மருத்துவம், பொறியியல் மட்டும் தான் தொழிலா வேற தொழிலே இல்லையான்னு கேட்டீங்கன்னா, அதே கேள்விய நானும் திருப்பிதான் கேக்கணும்.

  ரிசர்வேஷங்கறது நிரந்தரத் தீர்வுன்னு யார் சொன்னாலும் அது அநியாயம் தான். தற்காலிகமான சலுகை தான் கண்டிப்பா. இந்தச் சலுகை அரசியலாக்கப்பட்டதாலேயே பல குளறுபடிகள் இன்னபிற. நம்ம நாட்டுல எதுல தான் குளறுபடி இல்ல சொல்லுங்க. ஏர்போர்ட் விரிவாக்கத்திலேர்ந்து தேர்தல் நடத்தறவரைக்கும், ரோடு போடறதிலேர்ந்து தண்ணி சப்ளை வரைக்கும் எல்லாத்துலையும் தான் இருக்கு. இதுல ஓட்டைகளை எப்படி அடைச்சிட்டு உருப்படற வழியப் பாப்போமோ அதே போல அப்ரோச் தான் இடஓதுக்கீடு விஷயத்துலயும் இருக்கறது நியாயம். இல்லையா?

  ஆனா கீழ்சொன்னத என்னால ஒத்துக்கவே முடியாதுங்க.
  //உங்கள் தந்தையோ, தாயோ, உற்றார் உறவினரோ? ஒரு Heart attack, Brain stroke என்று வந்தால்...என்ன எதிர்பார்பீர்கள்? நல்ல திறமையான டாக்டர்! உண்மைதானே?

  அந்த திறமையை Compromise செய்துகொண்டு படித்து வெளி வருபவர்களிடம் எப்படி அதை எதிர்பார்க்க முடியும்...//
  விரிவா பதிவுலேயே சொல்லிருக்கேனே. பன்னிரண்டாம் க்ளாஸ் மார்க் வச்சு தான் மருத்துவரோட தராதரத்த நிர்ணயிக்க முடியும்னா இனிமே எல்லா டாக்டரும் அவங்க ஆபீஸ்ல மெடிக்கல் சான்றிதழுக்கு பதில ஸ்கூல் சான்றிதழ் மாட்டிக்கணுமா? தரம் குறைகிறதுன்னு சொல்றதிலேயே நியாயம் கிடையாதுங்கறதுதான் என் கருத்தே. அதோடு கூட, படித்து வெளி வருபவர்கள்னு சொல்லிருக்கீங்க. இதுக்கு மேல வேற என்ன தகுதி வேணும்? படிச்சுட்டுதானே வெளியே வராங்க. டிகிரி வாங்கறாங்க. கல்வித்திட்டத்துல குறைன்னா பல்கலைக்கழகத்த கேளுங்க. பல்கலைக்கழகத்தோட requirements ஐ பூர்த்தி செஞ்சுட்டு வர மாணவர்கள ஏன் தப்பு சொல்றீங்க?

  நம் மாநில ஸ்டேட் போர்ட்டின் 'மதிப்பெண் வழங்கும் திறன்' மீது இருக்கும் நம்பிக்கை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிமுறைகளின்படி பட்டம் தரும் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேல் இல்லாமல் போனது ஏனோ?


 7. Anonymous said...

  வாழ்த்துக்கள் ராமநாதன்...


  பேசாமல்.. அம்மக்களுக்கு எந்த சலுகைகளும் கொடுக்க வேண்டாம். அப்படியே இவர்கள் அங்கேயும் அவர்கள் இங்கேயும் மாறிக்கொள்ளாட்டும்(பதவி,பவுசு பணம் உட்பட) எல்லாத்தையும் மாற்றிக்கொண்டு.. சில ஆண்டுகள்.. குறைந்தது 20வருடங்கள் வாழ்ந்து வரட்டும்.. அதன் பின் யார் ஒதுக்கீடு கேட்க்கிறார்கள் என்று பார்ப்போம்...
  அவர்களை குறை சொல்லி பயனில்லை நண்பரே...
  அது சேர்ந்துவிட்ட/வாழ்ந்து விட்ட வாழ்கின்ற வாழ்வின் அகந்தை.. அப்படி சொல்ல வைக்கிறது.

  ---
  ஒரு வரியை மட்டும் நீக்கியிருக்கிறேன், தமியன். - இராமநாதன்


 8. சுந்தரவடிவேல் said...

  மிகவும் தேவையான பதிவு. நன்றி


 9. Unknown said...

  இதைப்பற்றிய உங்களது பதிவை தான் (மருத்துவரானதால்)எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன் இராமநாதன். லேட்டா வந்தாலும்,.............

  ஒரு +.


 10. லக்கிலுக் said...

  அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள் ராமநாதன்....

  அமெரிக்காவின் செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் ஆன கண்டலீசா ரைஸ் கூட இடஒதுக்கீட்டால் பயனடைந்து முன்னுக்கு வந்தவர் தானாம்....

  சில ஜென்மங்களுக்கு தான் எவ்வளவு சொன்னாலும் புரியமாட்டேங்குதே?


 11. ஜூலியன் said...

  To be honest with you., this is a very surprising post from you and first time in my bloglife I am forced to agree with you in an issue.


 12. Unknown said...

  //அறுபது சதவிகித கிராமங்களைக் கற்காலத்திலேயே விட்டுவிட்டு நாம் (ஓரளவு நன்றாய் வாழும் மக்கள்) மட்டும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நிகராவதில் பயனேதுமில்லை என்பது என் கருத்து.//

  //இடஓதுக்கீட்டில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்ய வழிசொல்லாமல், இடஒதுக்கீட்டையே தப்பு சொல்வது அநியாயம்.
  //

  மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள்.


 13. வஜ்ரா said...

  //
  பன்னிரண்டாம் க்ளாஸ் மார்க் வச்சு தான் மருத்துவரோட தராதரத்த நிர்ணயிக்க முடியும்னா இனிமே எல்லா டாக்டரும் அவங்க ஆபீஸ்ல மெடிக்கல் சான்றிதழுக்கு பதில ஸ்கூல் சான்றிதழ் மாட்டிக்கணுமா? தரம் குறைகிறதுன்னு சொல்றதிலேயே நியாயம் கிடையாதுங்கறதுதான் என் கருத்தே. அதோடு கூட, படித்து வெளி வருபவர்கள்னு சொல்லிருக்கீங்க. இதுக்கு மேல வேற என்ன தகுதி வேணும்? படிச்சுட்டுதானே வெளியே வராங்க. டிகிரி வாங்கறாங்க. கல்வித்திட்டத்துல குறைன்னா பல்கலைக்கழகத்த கேளுங்க. பல்கலைக்கழகத்தோட requirements ஐ பூர்த்தி செஞ்சுட்டு வர மாணவர்கள ஏன் தப்பு சொல்றீங்க?
  //

  இராமநாதன்,

  எனக்குத் தெரிந்த எத்தனையோ நல்ல டாக்டர்கள் இட ஒதுக்கீட்டில் இடம் பிடித்து இன்று மதுரையிலேயே சிறந்த டாக்டர்களாக இருக்கிறார்கள். (நாங்க மதுரகாரைங்க!!) அந்த பாயிண்டை நான் மறுக்கவில்லை. திறமையிருந்தும் டாக்டர் சீட் கிடைக்காமல் போகிறவர்கள் எத்தனை பேர். அதில் 90.99 எடுத்து 91 எடுத்திருந்தால் டாக்டர் சீட் கிடைத்திருக்கும் என்று improvement எழுதியர்கள் ஏராளம். அதில் OBC/SC/ST யும் அடக்கம். இது இன்றய நிலை.

  நாளை, இந்த இடஒதுக்கீடு வந்தால், OBC இருப்பவர்கள், 90 வாங்கினாலும் சரி, 85 வங்கினாலும் சரி சீட் கிடைக்கும். ஓபனில் வருபவன் 99 வைத்துக் கொண்டு பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி படிப்பான்...இது நியாயமா? இதனால் Reservation எதிர்ப்பவர்களெல்லாம் ஒரு புறம், Reservation ஆதரிப்பவர்கள் ஒருபுறம் என்று மாணவர்ச்சமுதாயம் பிளவுபட்டு சீரழியும். இவன் முன்னேற்றத்தை அவன் தடுப்பான், அவன் முன்னேற்றத்தை இவன் தடுப்பான்...கடைசியில் யாருமே முன்னேரமாட்டார்கள்.

  இதற்குத் தீர்வு,

  நமது தமிழ்நாட்டில் எஞினியரிங் கல்லூரிகள் போல் மெடிகல் காலேஜுகளும் இருக்கவேண்டும். (அதாவது சீட்டுகள் அதிகம் இருக்கவேண்டும்). அப்போது தான் நிரய டாக்டர்கள் உருவாக முடியும். திரமையுள்ளவர்கள் டாக்டர்கள் ஆக வாய்ப்புகள் அதிகரிக்கப் படவேண்டும். Knowledge comissionல் உள்ள சாம் பித்ரோதா கூட இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.

  அப்புரம் இந்த Reservation எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக Phase out செய்யவேண்டும், அதை இதுவரை யாரும் செய்யவில்லை. இனி செய்யவும் மாட்டார்கள். பிறகு எப்படி நாடு முன்னேறும்?

  இட ஒருக்கீடு தான் ஒரே தீர்வு என்று குதித்துக் கொண்டு இருக்கும் மனித வழ சீரழிவுத்துரை அமைச்சர் அர்ஜுன் சிங் கும் அவருக்கு ஜால்ரா அடிக்கும் கோஷ்டியும் இதையெல்லாம் யோசிக்கவேண்டும்.
  இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக இருக்கும் கம்யூனிஸ்டுகள் கூட யோசிக்க ஆரம்பித்துவிட்டார்கள்...!!

  வஜ்ரா ஷங்கர்.


 14. முத்துகுமரன் said...

  மனமார்ந்த வாழ்த்துகள் ராமநாதன்...

  சரியான நேரத்தில் வந்திருக்கும் மிகத் தேவையான பதிவு... சம்பந்தபட்ட துறையினரிடமிருந்து பதில் வருகையில்தான் அது இன்னும் அர்த்தமுள்ளதாகிறது.

  //பன்னிரண்டாம் க்ளாஸ் மார்க் வச்சு தான் மருத்துவரோட தராதரத்த நிர்ணயிக்க முடியும்னா இனிமே எல்லா டாக்டரும் அவங்க ஆபீஸ்ல மெடிக்கல் சான்றிதழுக்கு பதில ஸ்கூல் சான்றிதழ் மாட்டிக்கணுமா?//

  அது!.

  ஏன் பனிரெண்டாம் வகுப்போடு மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடுமா என்ன? எல்லோரையும் போல்தான் இடஒதுக்கீட்டில் வருபவனும் தேறிவருகிறான்.இதை தெளிவாக எடுத்து கூறியமைக்கு நன்றி.

  அப்படி இருக்க அவன் தரம் குறைவாக இருக்கிறது என்பது பார்ப்பவர் கண்களில் இருக்கும் பார்வையின்(அதாவது புத்தியின் தரத்தைப் ) தெளிவைப்பொறுத்தது.

  //நம் மாநில ஸ்டேட் போர்ட்டின் 'மதிப்பெண் வழங்கும் திறன்' மீது இருக்கும் நம்பிக்கை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிமுறைகளின்படி பட்டம் தரும் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேல் இல்லாமல் போனது ஏனோ?//

  தரநிர்ணய உரிமைச் சிகாமணிகள் பதிலளித்தால் நன்றாக இருக்கும்


 15. rv said...

  நன்மனம்,
  நன்றி


 16. rv said...

  தமியன்,
  உங்க பின்னூட்டத்துல ஓரே ஒரு வரி மட்டும் முன்னாடியே சொன்னா மாதிரி நீக்கியிருக்கேன். மன்னிக்கவும்.

  நன்றி


 17. rv said...

  சுந்தரவடிவேல், துபாய்வாசி, லக்கிலுக்,
  நன்றி

  துபாய்வாசி,
  + குத்துக்கு ஸ்பெஷல் நன்றி. :))


 18. rv said...

  ரோஸ்மேரி,
  நன்றி.

  ஆனா, ஒரு curiosityல கேக்கறேன். இதான் முத தடவை என் பதிவுல் உங்களப் பாக்கறேன். இதுக்கு முன்னாடி வேற எங்கேயாவது நாம ஒத்துப்போகாம விவாதம் செஞ்சுருக்கோமா என்ன?? :))


 19. rv said...

  கல்வெட்டு,
  நன்றி


 20. இரா. செல்வராசு (R.Selvaraj) said...

  இராமனாதன், வெறும் உணர்ச்சிகளின்படி இல்லாமல் விவரங்களின் அடிப்படையில் தெளிவான பதிவு. நன்று.


 21. நற்கீரன் said...

  உங்கட பதிவுகளில் வலதுசார் பார்வைகள் இருந்ததாகத்தான் ஞாபகம். இந்த பதிவு சற்று எதிர்பார்க்காததுதான். நிதர்சனமானது. இட ஒதுக்கீடு மேலேயிருப்பவர்களை கீழே இழுக்காமல் கீழே இருப்பவர்களை மேலே உந்த வழி செய்ய வேண்டும். பார்க்கலாம்.


 22. மணியன் said...

  நல்ல பதிவு. ஒரு OC முன்னாபாய்(வசூல்ராஜா) டாக்டரிடம் போவதைவிட படித்து வெளிவந்த ரிசர்வேஷன் டாக்டரிடம் தான் போவேன் :)
  எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்றால் ..:(


 23. கூத்தாடி said...

  நல்லப் பதிவு இராமராதன்..
  கீரிம் லேயர் பற்றி யோசிக்க வேண்டியது தான் ..ஆனால் இட ஒதுக்கேக் கூடாது என் ஆட்டம் போடுபவர்கள் டாக்டர் ஆனாலும் கிராமத்துக்குப் போய் சேவை செய்பவர்கள் எத்த்னைப் பேர் இருக்கிறார்கள் ..

  //நம் மாநில ஸ்டேட் போர்ட்டின் 'மதிப்பெண் வழங்கும் திறன்' மீது இருக்கும் நம்பிக்கை மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியாவின் விதிமுறைகளின்படி பட்டம் தரும் மாநில மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மேல் இல்லாமல் போனது ஏனோ?
  //
  சரியானக் கேள்வி ...யோசித்துப்பாருங்க..பின்னூட்டம் விடாவ்வ்ர்கள் யாரும் பதில் சொல்லவில்லை..


  //அறுபது சதவிகித கிராமங்களைக் கற்காலத்திலேயே விட்டுவிட்டு நாம் (ஓரளவு நன்றாய் வாழும் மக்கள்) மட்டும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நிகராவதில் பயனேதுமில்லை என்பது என் கருத்து.
  //
  உண்மை..ஆனால் யாருக்கும் உறைக்காது


 24. Sundar Padmanaban said...

  ராமநாதன்,

  நல்ல பதிவு. பாராட்டுகள்.

  //காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சொல்லி அறுபது சதவிகித கிராமங்களைக் கற்காலத்திலேயே விட்டுவிட்டு //

  60% மா? மிச்சம்? வயித்தெரி்ச்சல கெளப்பாதீங்க.

  ஓட்டப்பந்தயத்துல ஓட முடியாதவனுக்கு ஊக்கம் அளிக்கறத விட்டு முன்னாடி ஓடறவனை கையப்பிடிச்சு இழுக்கறதுல எனக்கு உடன்பாடு இல்லை. இதனால தேசம் என்ற அளவில் பின்தங்குதல்தான் நிகழும். முன்னேறுபவர் முன் செல்லட்டும். பின்தங்கியிருப்பவர்களைத் தோளில் தாங்கியாவது முன்னேற்ற வேண்டும். "அவனால ஓட முடியல. அதனால நீ ஓடக்கூடாது" என்பது அழிச்சாட்டியம். அக்கிரமம்.

  இட ஒதுக்கீடு என்பது கட்டாயம் தேவை. அதே சமயத்தில் தகுதியானவர்களுக்கு இடம் மறுக்கப்படக் கூடாத வகையில் இடங்களைக் (கல்விச் சாலைகளைக்) கணிசமாக அதிகரிப்பதும் வேண்டும். இல்லையென்றால் 95 க்கு இடம் இல்லை. 89 க்கு இருக்கிறது என்பது 89-ஐ கடைத்தேற்ற என்று சொல்வதைவிட 95-ஐப் பழிவாங்கவே என்றுதான் சொல்ல முடியும்.

  ஆனால் உள்ளே வந்து, படித்து, "தேறி" வெளியில் வருபவர்களை, "எப்படி உள்ள வந்திருப்பான்?" என்ற நோக்கில் அணுகுவது கேவலமான அணுகுமுறை. சதிலீலாவதியில் அரவிந்த் "டே. நீ டாக்டரா? சொல்லவேயில்லையே?" என்பதற்குக் கமல் சொல்லுவாரே "டாக்டர்னு நெத்தில எழுதி ஒட்டிக்கிட்டா அலைய முடியும்?" என்று. அதுமாதிரி டாக்டர் பெயர்ப்பலகைகளில் பள்ளி, கல்லூரி தேர்ச்சி விகிதங்களை ஒட்ட வேண்டும் என்று கேட்பார்களோ என்னவோ? என்னவோ பள்ளியில் முதல்மதிப்பெண்ணில் தேறியவன் தொடர்ந்து 100% லேயே இருப்பது போலவும், பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெற்றவன், தொடர்ந்து அப்படியே இருப்பான் என்பது போலவும் கற்பனை செய்து கொள்கிறார்கள். ஒதுக்கீட்டுச் சலுகை உள்ளே வருவதற்கே, "தேறி" வெளியே போவதற்கல்ல என்ற அடிப்படை உண்மையைப் பூசி மெழுகிக் கொண்டிருக்கிறார்கள்.

  பதிவுக்கு நன்றி.


 25. rv said...

  சங்கர்,
  நீங்கள் சொல்லும் கருத்தை நானும் ஒத்துக்கொள்கிறேன். அதுவே தான் சுந்தரும் சொல்லியிருக்கிறார். ஆனால், அதிகப்படியான educational infrastructure எல்லாம் கட்டி முடிப்பதற்கு தேவைப்படும் காலம் பற்றியும் சிந்தித்தாக வேண்டும். அதுவரையில் இது கண்டிப்பாக தேவையே.

  இது நிரந்தரத் தீர்வு இல்லை என்பதை நான் முன்னரே ஒப்புக்கொண்டுவிட்டேன். ஆனால், அரசாங்கம் இன்னும் காலேஜ் கட்டட்டும், கிராமங்கள் எங்கிலும் competetent பள்ளிகள் நிறுவட்டும் என்றெல்லாம் சொல்வது மிக எளிது. செயல்படுத்துவது எப்போது என்பதுதான் கேள்வி. அப்படி நாம் வளரும் வரையில் இது Stop Gap மாதிரி. கண்டிப்பாக அதற்காகவேனும் வரவேற்கப்படவேண்டியது என்பது என் கருத்து.

  இந்தியா சீனாவைப் போலல்லாமல் ஒரு Knowledge based economy என்கிற வாதமும் நியாயமானதாகப் படவில்லை. மேலும் இந்தியாவின் பொருளாதாரம் 7-8% வளர்ந்து வரும் வேளை இது. இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு இப்படியே sustain பண்ண முடியும் என்றெல்லாம் யோசிக்கவும் வேண்டியிருக்கிறது. இந்த பூம் டைமில் வாய்ப்பே இதுவரையில் கிடைக்காத மற்றவரை மட்டும் பி.எஸ்.ஸி கெமிஸ்ட்ரி படி (not that theres anything wrong with B.Sc Chem) என்று சொல்வது கொஞ்சமும் நியாயமாக படவில்லை. இது சரியான வாதமா என்று தெரியவில்லை. பிபிஸியின் எமர்ஜிங் ஜையண்ட்ஸ் வாரத்தின் பாதிப்பாக கூட இருக்கலாம். :))

  ஆனால், நான் கேட்ட கேள்வி இதுவல்ல. தரம் குறைந்துவிடும் என்பது இடஒதுக்கீட்டிற்கு எதிராக பரவலாக வைக்கப்படும் குற்றச்சாட்டு. அதில் எனக்கு நம்பிக்கையில்லாததாலேயே தரம் எங்கே குறைகிறது என்று கேட்டிருந்தேன். அதற்கு உங்கள் பதிலைச் சொல்லவில்லையே.


 26. rv said...

  முத்துகுமரன்,
  நன்றி.

  பன்னிரண்டாம் வகுப்பில் வாங்கும் மதிப்பெண்களின் மதிப்பு காலேஜில் சேர்ந்தவுடன் செல்லாக்காசாகிப் போகிறது என்பது எல்லாருக்கும் தெரிந்துதான் இருக்கிறது. பொறியியல் துறையில் campus interview இல் கூட ப்ளஸ்+2 மதிப்பெண்கள் பற்றியெல்லாம் கேட்பதேயில்லை என்பது தான் என் எண்ணம், :))


 27. rv said...

  செல்வராஜ்,
  நன்றி


 28. rv said...

  நற்கீரன்,
  //இட ஒதுக்கீடு மேலேயிருப்பவர்களை கீழே இழுக்காமல் கீழே இருப்பவர்களை மேலே உந்த வழி செய்ய வேண்டும்.//
  நன்றி. இதுவே தான் என் கருத்தும். இந்த கீழே இழுப்பது என்பது big pictureஇல் மிகக் குறுகிய காலத்துக்குத்தான். அதுகூட நம் infrastructureஇன் பிரச்சனைதானே ஒழிய, இடஒதுக்கீட்டின் பிரச்சனையில்லை என்பது என் கருத்து.

  நன்றி


 29. rv said...

  மணியன்,
  நீங்க சொல்றது ரிவர்ஸ் discrimination. அதுலேயும் எனக்கு உடன்பாடு கிடையாது. நீங்க தமாஷுக்குத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். :))


 30. rv said...

  கூத்தாடி,
  க்ரீம் லேயர் மற்றும் ஒட்டிகிட்டிருக்கற லேயர்கள் பற்றி கூடிய சீக்கிரம் அரசு தீர்க்கமான முடிவெடுக்கணும். இத ஒழுங்கா செயல்படுத்தினாலே போதுமென்று நினைக்கிறேன். சில மாநிலங்களில் ஏற்கனவே அமலில் இருக்குன்னு பத்ரி அவரோட பதிவுல சொல்லிருக்காரு.

  //ஆனால் இட ஒதுக்கேக் கூடாது என் ஆட்டம் போடுபவர்கள் டாக்டர் ஆனாலும் கிராமத்துக்குப் போய் சேவை செய்பவர்கள் எத்த்னைப் பேர் இருக்கிறார்கள் ..//
  இதில் மாறுபடுகிறேன் கூத்தாடி. கிராமங்களுக்கு சேவை செய்வது என்பது தனியொருவரின் விருப்பம். இடஒதுக்கீட்டில் வந்தவர்களும் கிராமத்திற்கா திரும்பச் செல்கிறார்கள்? முன்னேற்றம் எங்கிருக்கிறதோ அங்கே தான் மக்கள் செல்வார்கள். அது இப்போது நகரங்களில் தான் பெரும்பாலும் இருக்கிறது. கிராமத்தை விட்டு அவர்கள் குடிபெயர்வதை தடுக்கவோ, அல்லது இடஒதுக்கீட்டில் படித்துவந்தால் கிராமத்தில் இத்தனை நாள் பணியாற்ற வேண்டுமென்றோ conditional ஆக கெடுபிடி செய்யச்சொல்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. அப்படிச் செய்வதானால், அரசு கல்லூரிகளில் படிக்கும் எல்லோரையுமல்லவா சொல்ல வேண்டும்?


 31. வஜ்ரா said...

  தரம் குறைகிறது என்பதற்கு நான் வைக்கும் காரணம்,

  இன்றய சூளலில் பார்த்தால் தரம் எங்கே குறைகிறது என்று தான் தோன்றும்...

  சில காலம் கழித்து என்ன நடக்கும் என்று யோசிக்கவேண்டும், (சில காலம் கழித்துத்தான் Reservation இல்லாமல் செய்துவிடுவோமே..என்று circular logic வைக்கக் கூடாது!! :) )

  யாருக்கு கிடைக்கிறதோ இல்லையோ, நான் எனது சாதிக்காரனுடன் போட்டி போட்டால் போதும் (அவன் 80 வாங்கினா இவர் 81 வாங்கினால் போதும்) எனக்கு medical seat உறுதி என்கிற எண்ணத்தை அது விதைக்கும். இதனால் motivation இல்லாமல் போகும். ஐந்தாடுகளில் முடித்து வெளிவரவேண்டிய டாக்டர்கள் 6, 7 ஆண்டுகள் அரியர் வைத்துப் பாஸ் மார்க் வாங்குவது அல்லது முடிக்காமல் கூடப் போவது நடக்கத்தான் செய்கிறது.

  (மொத்தத்தில் போட்டி குறையும் போது உழைப்பும் குறையும்...அப்போது திறமை வளருமா?!!)

  50 ஆண்டுகால reservation ல் எத்தனை பேர் முன்னேரியிருக்கிறார்கள் என்றும் பார்க்கவேண்டும். அது அரசாங்கம் சரியாக கடைபிடிக்கவில்லை என்று logic அடிப்பார்கள்...பரவாஇல்லை, அமுல் படுத்தியவரை எத்தகய முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்ற அடிப்படை Cencus இருக்கிறதா?! என்றால் அதுவும் இல்லை! எந்த லாஜிக்கில் இட ஒதுக்கீடு தான் இவர்கள் முன்னேற்றத்திற்கு வழி என்று வாதிடுகிறார்கள் என்று எனக்கு சுத்தமாக விளங்கவில்லை.

  இன்னொன்று, இதனால் OBC க்கும் ஓப்பன் கெடகிரி மாணவர்களுக்கும் எக்கச்செக்க சண்டைகள் வரும், நிகழ்ந்தும் கொண்டிருக்கிறது,
  இது நாட்டின் வளர்ச்சிக்கு வழியா? இதனால் யாருக்கென்ன லாபம்...இந்தியா சீரழியவேண்டும் அப்போது தான் Revolution செய்யமுடியும் என்று எண்ணத்தில் திரியும் அடிப்படைவாத மார்க்ஸ்வாத மாவோயிஸ்டுகள், பிரிவினைவாதிகள் இவர்களுக்கு நாமாக "இந்தாங்க டா...வெச்சுக்குங்க..".என்று எடுத்து அவர்கள் கையில் திணிப்பது போல் உள்ளது.

  இவ்வளவு பேசும் அர்ஜுன் சிங் ஆஸ்பத்திரிக்குச் சென்றால், எனக்கு ஒரு தலித் டாக்டர் தான் வைத்தியம் பார்க்கவேண்டும்! அல்லது தேர்தல் போது ஹெலிகாப்டரில் பரக்கும் போது "எனக்கு ஒரு முஸ்லீம் பைலட் தான் வேண்டும்" என்று கூறுவார்களா? அப்போது மட்டும் அவர்களுக்கு Best of the Best வேண்டும்...! அவரது குழந்தைகள் எங்கே அனுப்புகிறார் அர்ஜுன் சிங்?


  வஜ்ரா ஷங்கர்.


 32. மணியன் said...

  //ீங்க சொல்றது ரிவர்ஸ் discrimination. அதுலேயும் எனக்கு உடன்பாடு கிடையாது. நீங்க தமாஷுக்குத்தான் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். :))//

  அட இப்படியும் அர்த்தம் செய்து கொள்ளலாமோ ? நீங்க தவறா புரிந்துகொள்ளாதிருந்தது நன்றி. நான் தமாஷாகத்தான் காப்பி அடித்தும் இன்னொருவரை வைத்து தேர்வு எழுதும் முன்னாபாய் இந்திபடத்தை (தமிழில் வசூல்ராஜா) வைத்து இப்படி வரும் வைத்தியர்களை நம்ப முடியுமா எனக் கேட்டேன்.


 33. ஜூலியன் said...

  வாதம் செய்திருந்தால் மட்டுமா அப்படியாகத் தோன்றும்/ நற்கீரன் சார் சொன்ன அதே காரணமேதான் என்னை எண்ண வைத்தது


 34. கால்கரி சிவா said...

  இராமநாதன்,

  ஒரு செடிவைத்தால் அதனுடைய வேருக்கு போதிய போஷாக்கு அளித்து ஊன்ற வேண்டும். வேர் நன்றாக இருந்தால் தான் பூக்கள் அருமையாக இருக்கும்.

  வேரைக் கவனிக்காமல் பூக்களை நலிய விட்டு நன்றாக மலர்ந்த பூக்களை எறிவது எந்த வகையில் நியாயம்.

  12வது வரை பிற்பட்ட/தாழ்த்தபட்டக் குழந்தைகளை ஒரு விசேஷ கவனமெடுத்து பாடங்களை கற்பித்தால் அவர்களும் பிராமண குழந்தைகள் அளவிற்கு அறிவை நிச்சயம் பெறுவார்கள்.

  அதற்க்கு நல்லாசிரியர்கள் வேண்டும். நல்ல தொடக்க கல்வி வேண்டும்.

  அதையெல்லாம் செய்யாமல் ரிசர்வேஷனை மட்டும் பேசிக் கொண்டு இருந்தால் மைனாரிட்டி ஒட்டுக்களை பெற்று காங்கிரஸ் என்ற கான்ஸர் தான் இந்தியாவில் வளரும்.


 35. பொன்ஸ்~~Poorna said...

  //இவ்வளவு பேசும் அர்ஜுன் சிங் ஆஸ்பத்திரிக்குச் சென்றால், எனக்கு ஒரு தலித் டாக்டர் தான் வைத்தியம் பார்க்கவேண்டும்! அல்லது தேர்தல் போது ஹெலிகாப்டரில் பரக்கும் போது "எனக்கு ஒரு முஸ்லீம் பைலட் தான் வேண்டும்" என்று கூறுவார்களா?//
  படித்து வெளியே வந்த மருத்துவர்களிடையே அப்படி எல்லாம் வித்தியாசம் பார்க்காம இருக்கணும்னு தானே இங்க சொல்லிகிட்டிருக்காங்க!! சங்கர், நீங்க திருப்பித் திருப்பி கேட்ட கேள்வியே கேட்பது போல் (முதல் முதலா இந்தப் பதிவைப் பார்க்கும் எனக்கே) தோன்றுகிறது.

  நான் பொறியியல் சீட்டுக்காக கவுன்சிலிங் போனபோது தான் முதன்முறையாக இட ஒதுக்கீட்டை நேரடியாகச் சந்தித்தேன். பார்த்துக் கொண்டே இருக்கும் போது, நமக்கு வேண்டிய கல்லூரியில், வேண்டிய துறையில் 50 சீட் இருக்கும் என்று நம்பி உள்ளே வரும் போது, எல்லா பிரிவினருக்கும் கொடுத்தது போக மிச்சம் இருப்பது 15 சீட் தான் எனும்போது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.. ஆனால், கல்லூரி முடித்து வெளியே வரும்போது அதையெல்லாம் யாரும் பார்ப்பதில்லை.. வாங்கிய மதிப்பெண்ணுக்கு முதல் வேலை.. முதல் வேலை செய்யும் விதம் பார்த்து, பதவி உயர்வு, அடுத்த வேலை.. அவ்வளவு தாங்க..

  முதல் முதல்ல டாக்டர் கிட்ட போகும்போது, நல்ல டாக்டரான்னு யோசனையா இருக்கும்.. போய் உங்களுக்கு ஒத்து வந்து விட்டால், அப்புறம் என்ன?!! அவர் என்ன மாதிரி படிச்சு வெளிவந்திருந்தா என்ன?


 36. Santhosh said...

  இட ஒதுக்கீடு என்பது படிப்பு வரை என்று இருந்தால் ஒத்துக்கொள்ளலாம் ஆனால் அது வேலை என்று வரும்பொழுது தான் ஒத்துக்கொள்ள முடியாது. இது எந்த வகையில் நியாயம் என்றும் தெரியவில்லை.அதும் இதற்கு மேல் ஒரு தலைமுறையினருக்கு மட்டும் ஒதுக்கீடு என்று வந்தால் இன்னும் வரவேற்கத்தக்கது(தந்தை ஒதுக்கீடு மூலம் நன்மை பெற்று இருந்தால் அதற்கு பிறகு அவரது குழந்தைகளுக்கு கிடையாது)


 37. சன்னாசி said...

  மிகத் தெளிவான, அவசியமான பதிவு - நன்றி; நீங்கள் சொல்வதுடன் முழுதாக ஒத்துப்போகிறேன்.


 38. Radha Sriram said...

  ராமனாதன் நல்லா எழுதி இருக்கீஙக. இன்தியாவ பொருத்த வரைக்கும் levels of civilization இருப்பத நாம பாக்கரோம். அதை மாத்த நாம என்ன செய்யலாம்னு யோசிப்பது தப்பே இல்ல.

  "இன்னொரு விஷயம் எனக்கு புரியவேயில்ல. ரிஸர்வேஷன்ல வந்த ஆளுன்னு எப்படிங்கய்யா முடிவு செய்வீங்க? டாக்டர் நேம் போர்ட பாத்துமட்டுமா?"

  நீஙக சொல்லி இருக்கற மாரி is ther anything more vulgar than this???

  Radha


 39. குமரன் (Kumaran) said...

  இராமநாதன். இந்தப் பதிவை என்றோ எதிர்பார்த்தேன் நான். ஒருமுறை நாம் தனிமடல்களில் பேசிக் கொண்டிருக்கும் போது இதனைத் தொட்டுச் சென்றீர்கள். மேலோட்டமாய் அப்போது நீங்கள் சொல்லும் போதே நியாயமாகப்பட்டது. இந்தப் பதிவில் நன்றாக விளக்கமாக எழுதிவிட்டீர்கள். நன்றி.

  உங்களிடமிருந்து இந்தப் பதிவு வந்தது வியப்பு என்று சிலர் கருதியிருக்கிறார்கள். அதைப் பார்த்து எனக்கு சிரிப்பு தான் வந்தது. எல்லாம் முத்திரை குத்துவதால் வரும் வினை. யாருமே இங்கு 100% கருப்பாகவோ (இல்லை வலச்சாரியாகவோ) இல்லை 100% வெளுப்பாகவோ (இல்லை இடச்சாரியாகவோ) இல்லை; 90% மேற்பட்டவர்கள் இடைநிலையில் தான் இருக்கிறார்கள். நெருங்கிய நண்பர்களே பல கருத்துகளில் வேறுபடும் போது முகம் பார்க்காமல் பழகும் இந்த இணையத்தில் எல்லோரையும் முத்திரை குத்தி அவன் அப்படித் தான் என்று சொல்லுவதே இப்படி அவர்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக ஒரு கருத்து வந்து விழும் போது வியப்பை அளிக்கிறது. சரி. பதிவிற்குத் தொடர்பில்லாமல் பேசுகிறேன். அதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.


 40. அருண்மொழி said...

  ஷங்கர்,

  //இன்னொன்று, இதனால் OBC க்கும் ஓப்பன் கெடகிரி மாணவர்களுக்கும் எக்கச்செக்க சண்டைகள் வரும், நிகழ்ந்தும் கொண்டிருக்கிறது,
  இது நாட்டின் வளர்ச்சிக்கு வழியா? இதனால் யாருக்கென்ன லாபம்...//

  இதற்கு யார் காரணம். ஓப்பன் கேட்டகிரி என்று பொதுவாக சொல்லாதீர்கள். Forward Castes என்று வெளிப்படையாக பேசுவோம். தயவு செய்து அவர்கள் வீசும் சொற்களை பாருங்கள். செய்யும் போராட்டங்களை பாருங்கள். தெரு கூட்டுவதும், பழம் விற்பதும் என்று தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோரை கேலி செய்கின்றனர். OBC கூட்டம் திரண்டு வந்தால் போராடும் கூட்டத்தின் நிலைமை என்ன ஆகும் என்று சற்று யோசியுங்கள்.

  யார் நாடே பற்றி எறியப் போகின்றது என்று சொல்வது. 1000 பேருக்கு இடம் இல்லை என்றால் நாடு பற்றி எறியுமா?.
  Second Partition என்று கூப்பாடு வேறு. சரி அதையும் பார்த்துவிடுவோம்.

  //இவ்வளவு பேசும் அர்ஜுன் சிங் ஆஸ்பத்திரிக்குச் சென்றால், எனக்கு ஒரு தலித் டாக்டர் தான் வைத்தியம் பார்க்கவேண்டும்! அல்லது தேர்தல் போது ஹெலிகாப்டரில் பரக்கும் போது "எனக்கு ஒரு முஸ்லீம் பைலட் தான் வேண்டும்" என்று கூறுவார்களா?//

  ராமநாதன் தெளிவாக விளக்கியுள்ளார். புரியவில்லை என்றால் திருப்பி திருப்பி படியுங்கள். இதே சொத்தை வாதத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம்.

  ஆமாம் இதில் முஸ்லிம் எங்கே வந்தார்கள். அவர்களை இழுக்காவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராது போல் இருக்கிறது.

  போய் நாட்டை எப்படி இரண்டாக பிரிப்பது என்பது போன்ற உருப்படியான யோசனை செய்யுங்கள்.


 41. நெருப்பு சிவா said...

  இங்கே மூன்று முறை பின்னூட்டமிட்டுள்ள சங்கரின் பின்னூட்டனங்களை வரிசையாக அடுக்கினாலே, அவற்றில் ஒழிந்து கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்டோருக்கு எதிரான 'ஆடு புலி ஆட்டத்தை' கண்டு கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பொறுமையாக தக்க காரணங்களை இட ஒதுக்கீடு ஆதரவு நண்பர்கள் விளக்கியதும், பழையதை கிடப்பில் போட்டுவிட்டு, புதிதாக ஏதாவது ஒன்றை முன்னால் வந்தால் கடி பின்னால் வந்தால் உதை என்ற விதமாக எடுத்துக் கொண்டு அதிலேயும் சம்பந்தமில்லாத சிலரை சாமர்த்தியமாக உள்குத்து மூலமாக இழுப்பது, பன்னூறு காலமாக வர்க்கபேதம் மூலம் பலனடைந்தவர்களில் குறிப்பிட்ட சிலர் இன்னும் அதை எவ்வாறு தக்க வைத்து கொள்ளலாம் என்பதில் நியாதர்மங்களுக்கு அப்பாற்பட்டு செய்து வரும் நுண்ணிய வாத சித்து வேலைகளுக்கு அம்சமான எடுத்து காட்டாக அமைந்திருக்கிறது. வெளியிலே தரமான சிந்தனைகளை போன்று பூசு வேலை செய்து விட்டு, உள்ளே நசுக்கு எந்திரங்களை மறைத்து வைக்கும் மேலாதக்கத்தின் கோரமுகம் அழகாக இங்கு வெளிப்படுத்திட்டிருப்பதை தமிழன்பர்கள் உணரும் விதமாக, இதற்கு முன்னரே உடைபட்டு போன ரவி ஸ்ரீனிவாஸ் போல நண்பர்கள் இதனை கட்டுடைப்பதில் ஆவல் பெற வேண்டும்.


 42. Amar said...

  இராமநாதன்,

  கால்காரி சிவா அவர்களின் கருத்து தான் எனது கருத்தும்.

  இங்கே வேர்களை யாரும் கண்டுகொள்வதில்லை....

  இட-ஒதுக்கீடு விஷயங்களில் அரசியல் கலப்பது என்பது ஏற்றுகொள்ளமுடியாத விஷயம்.

  ஆனால் இட-ஒத்துகீடு பிரச்சனையில்லை என்றால் அரசியல் எதிர்காலம் இல்லை என்ற நிலையில் சில நாய்குட்டி தலைவர்கள் இருக்கிறார்களே.

  இது எத்தனை கேடுகளை விளைவிக்கும்! இதை தவிர்த்தல் வேண்டும்.


 43. வஜ்ரா said...

  //
  இதற்கு யார் காரணம். ஓப்பன் கேட்டகிரி என்று பொதுவாக சொல்லாதீர்கள். Forward Castes என்று வெளிப்படையாக பேசுவோம்.
  //

  ஓப்பன் கேட்டகிரி என்றால் FC தானா... உண்மை தெரியாமல் பேசுகிறீர்கள். அதர் ஸ்டேட் BC கூட ஓப்பன் கேட்டகிரி தான். நிறய OBC க்களில், அதர் ஸ்டேட் FC கூட இருக்கிறார்கள்..

  //
  இதே சொத்தை வாதத்தை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டாம்.
  //

  ஆம், நான் சொத்தை வாதத்தை வைக்கிறேன்...

  //
  போய் நாட்டை எப்படி இரண்டாக பிரிப்பது என்பது போன்ற உருப்படியான யோசனை செய்யுங்கள்.
  //

  இது என்னது, விதண்டாவாதமா?!! அப்பழுக்கற்ற அக்மார்க் முத்திரை குத்தும் வாதம்.

  இதை விடுத்து மேல் மாடி சமாச்சாரத்தை பயன்படுத்தி சீட்டு வாங்கப் பாருங்கள், துண்டு போட்டு இடம் பிடிக்க நினைக்காதீர்கள்.

  //
  ராமநாதன் தெளிவாக விளக்கியுள்ளார்.
  //
  அவர் தெளிவாகத்தான் விளக்கியுள்ளார், உண்மை தான்...

  "மொத்தத்தில் போட்டி குறையும் போது உழைப்பும் குறையும்...அப்போது திறமை வளருமா?!!" என்று கேட்டால் பதிலைக் காணோம்!!

  வஜ்ரா ஷங்கர்.


 44. rv said...

  சங்கர்,
  //நான் எனது சாதிக்காரனுடன் போட்டி போட்டால் போதும் (அவன் 80 வாங்கினா இவர் 81 வாங்கினால் போதும்) எனக்கு medical seat உறுதி என்கிற எண்ணத்தை அது விதைக்கும். //
  இந்தியாவின் ஜனத்தொகைக் கூடக்கூட போட்டி அதிகமாகத்தான் போகிறதே ஒழிய குறையப்போவதில்லை. மிக எளிய உதாரணமாக மருத்துவத்துறைக்கான தேர்வுத்தகுதியையே எடுத்துக்கொள்ளுங்களேன். 98-இல் BCக்கு இருந்த cut off 290 சொச்சம். உங்கள் வாதப்படி அது இன்று 2006-இல் 288 ஆக குறைந்திருக்க வேண்டும். ஆனால் உண்மையில் இன்று 292 சொச்சம் என்று ஏறிதான் இருக்கிறது. சரியான அளவு தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக ஏறியிருக்கிறது என்று தெரியும்.

  இந்த புதிய கொள்கை வந்தாலும், முன்னர் சொன்னபடி ஜனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க கட்டாயம் போட்டி அதிகமாகத்தான் செய்யும். குறைய வாய்ப்பே இல்லை. மேலும் ஜாதிக்கு ஜாதி இடஒதுக்கீடு இல்லை. அதனால் ஒத்த சாதிக்காரர்கள் மட்டும் என்னவோ தங்களுக்குள்ளேயே போட்டி போட்டுக்கொண்டால் போதுமென்று யாருமே நினைக்க மாட்டார்கள்.

  அதுவும் தவிர, எனக்குத் தெரிந்த வரையில் யாரும் 290 எடுத்தால் போதும், எனக்கு சீட் நிச்சயமென்று நினைத்து பரிட்சைகளை எதிர்கொள்வதில்லை.

  மற்றபடி சமுதாயங்களுக்குள் சண்டை வந்தாலும் வராவிட்டாலும், கோர்ட் கோர்ட்டாய் ஸ்டே வாங்கினாலும் பெரிய அளவில் பிரிவினை எல்லாம் வருமென்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.

  அர்ஜுன் சிங் யாரிடம் மருத்துவம் பார்க்க செல்லவேண்டும் என்று சொல்ல நமக்கு உரிமை இல்லை. தவறாக எண்ணவேண்டாம். தலித் டாக்டரிடம் செல்வாரா என்கிற கேள்வியே அர்த்தமற்றது. மேல்சாதி டாக்டர்களெல்லாம் பை டிபால்ட் திறமையானவர்கள் என்று white wash செய்வது போலுள்ளது உங்கள் கேள்வி. கொஞ்சம் ஆவேசப்பட்டு எழுதியிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நான் பதிவிலும் பின்னூட்டத்திலும் சொன்ன மாதிரி திறமையான டாக்டரா என்றுதான் எல்லாரும் பார்ப்பார்களே ஒழிய, சாதியை வைத்தில்லை.

  மேலும், பின்னூட்டங்களினால் உங்கள் மனது புண்பட்டுருக்குமாயின் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். எல்லா பின்னூட்டங்களையும் எடிட் செய்ய நேரம் போதவில்லை. விரைவில் செய்கிறேன்.


 45. rv said...

  மணியன்,
  முன்னாபாய் டாக்டர்கள் எல்லா பிரிவிலும் இருக்கிறார்கள்.

  தவறாக நினைக்கவேயில்லை. இருந்தாலும் உங்களிடமிருந்தே clarification வாங்கிவிட்டால் நல்லது என்று பட்டதால் தான் எழுதினேன்.

  நன்றி


 46. rv said...

  கால்கரி சிவா,
  //ஒரு செடிவைத்தால் அதனுடைய வேருக்கு போதிய போஷாக்கு அளித்து ஊன்ற வேண்டும். வேர் நன்றாக இருந்தால் தான் பூக்கள் அருமையாக இருக்கும்.//

  நீங்கள் ஒரு செடி என்கிறீர்கள். நான் ஒரு நந்தவனம் என்கிறேன். ஒரு பகுதியில் மட்டும் மலர்ந்த பூக்கள் இருக்க மற்றொரு பகுதியில் செடிகள் வாடினால், அவற்றுக்கு போதிய கவனிப்பு தரவேண்டியது தோட்டக்காரனான அரசின் கடமை.

  நீங்கள் மீண்டும் infrastructure development பற்றி கூறுகிறீர்கள். நான் இதற்கு முன்னரே சங்கரின் பின்னூட்டத்திற்கு பதிலளித்துவிட்டேன்.

  இடஒதுக்கீடு என்பது தற்காலிகமாக, அப்படியொரு idealistic environment வரும்வரை, பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பது என் எண்ணம்.


 47. rv said...

  சுந்தர்,
  //அதே சமயத்தில் தகுதியானவர்களுக்கு இடம் மறுக்கப்படக் கூடாத வகையில் இடங்களைக் (கல்விச் சாலைகளைக்) கணிசமாக அதிகரிப்பதும் வேண்டும//

  நன்றி. இது சங்கரும், சிவாவும் வைத்த கருத்துதான். என்னுடையதும் அதுதான்.

  பழிவாங்கப்படுதல் என்றெல்லாம் emotional ஆக அணுகுவதால் தான் இவ்வளவு குழப்படிகள் என்று நினைக்கிறேன். ஒரு சாரார் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஓரளவிற்கு ஒப்புக்கொண்டாலும், ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றம் என்று பார்க்கையில் ஒரு சாராரின் நலம் இரண்டாமிடத்திற்கு வந்துவிடும்.


 48. rv said...

  சங்கர்,
  // அமுல் படுத்தியவரை எத்தகய முன்னேற்றம் அடைந்திருக்கிறது என்ற அடிப்படை Cencus இருக்கிறதா?! //
  இதை விட்டுவிட்டேன். அடித்தட்டிலிருக்கும் மக்களுக்கு எப்படி உதவுகின்றது என்பதை சுற்றிப் பார்த்தாலே தெரியும். தனிப்பட்ட சப்ஜெக்டிவ் உதாரணங்கள் கொடுப்பதில் பிரயோஜனமில்லை என்பதால் விட்டுவிடுகிறேன்.


 49. அருண்மொழி said...

  //இதை விடுத்து மேல் மாடி சமாச்சாரத்தை பயன்படுத்தி சீட்டு வாங்கப் பாருங்கள், துண்டு போட்டு இடம் பிடிக்க நினைக்காதீர்கள்.//

  அது பாருங்கண்ணா, பஸ்ல துண்டு போட்டு சீட் பிடிக்கிறோம், ரயில்ல துண்டு போட்டு சீட் பிடிக்கிறோம். அதுனால ஆட்டமேடிக்கா இந்த பழக்கம் வந்துடுது. எங்களுக்கு துண்டு போட்டு இடம் பிடித்துதான் பழக்கம். தொட்டில் பழக்கத்தை விட முடியுமா?

  //"மொத்தத்தில் போட்டி குறையும் போது உழைப்பும் குறையும்...அப்போது திறமை வளருமா?!!" என்று கேட்டால் பதிலைக் காணோம்!!//

  நீங்கள் சொல்வதை பார்த்தால் +2வில் மதிப்பெண் குறைந்து கொண்டே வருமே. எனக்கு தெரிந்தவரை அப்படி நடப்பதாக தோன்றவில்லை. ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

  எனக்கு தெரிந்தவர் எல்லோரும் துண்டு போட்டு இடம் பிடிக்கலாம் என்பதால் படிக்காமல் இருப்பதில்லை. முடிந்த வரை முயற்சிதான் எடுக்கின்றனர். (ஒருவேளை என் மேல் மாடி காலியாக இருப்பதால் எனக்கு அப்படி தோன்றுகிறதோ என்னவோ).


 50. rv said...

  பொன்ஸ்,
  // படித்து வெளியே வந்த மருத்துவர்களிடையே அப்படி எல்லாம் வித்தியாசம் பார்க்காம இருக்கணும்னு தானே இங்க சொல்லிகிட்டிருக்காங்க!! //
  அதுவே தான். வித்தியாசம் ஒரே ஒரு அடிப்படையில் தான் பார்க்க முடியும். வெளியே வந்த பின் அவர்கள் வெளிக்காட்டும் திறமையில். அதைவிட்டுவிட்டு பள்ளிக்கூடத்தில் காட்டிய திறமையெல்லாம் கதைக்குதவாது.

  //கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது.. //
  இதுவும் உண்மைதான். வீட்டிலேயே கிடந்து, பதினேழு பதினெட்டு வயதில் கஷ்டப்பட்டு படித்தோம், கிடைக்கவில்லையே என்ற ஆதங்கமே நம் கண்முன் நிற்கும். அந்தக்கோபம் இடஒதுக்கீட்டின் மீது பாய்வது இயற்கையே. ஆனால் அந்த வயதைத் தாண்டி வந்து இந்தியாவை சுயமாகப் பார்த்தால் நியாயங்கள் புரியும் என்று நினைக்கிறேன். எனக்கு அப்படித்தான் புரிந்தது.


 51. rv said...

  சந்தோஷ்,
  வேலை வாய்ப்பு விஷயத்தில் இன்னமும் குழப்பநிலைதான் எனக்கும். ஆனால், வேரைக் கவனி என்று பலரும் சொல்லும் வேர் 'கல்வி' ஒன்றுதான். அதைத்தான் அரசு செய்கிறது. அதில் தவறே இல்லை.

  நன்றி.

  சன்னாசி,
  நன்றி


 52. rv said...

  இராதா ஸ்ரீராம்,
  //அதை மாத்த நாம என்ன செய்யலாம்னு யோசிப்பது தப்பே இல்ல.//
  தப்பா ரைட்டால்லாம் பாக்கறதெல்லாம் அநியாயம். மாத்த வேண்டியது நம் கடமையென்ற அளவிற்கு ஆகிவிட்டது.

  // is ther anything more vulgar than this??/
  ஆமாம். இதைவிட வல்கராக துவேஷிக்க முடியுமா என்று தெரியவில்லை.


 53. அருண்மொழி said...

  Samudra,

  //ஆனால் இட-ஒத்துகீடு பிரச்சனையில்லை என்றால் அரசியல் எதிர்காலம் இல்லை என்ற நிலையில் சில நாய்குட்டி தலைவர்கள் இருக்கிறார்களே.//

  Unfortunately அது "சில நாய்குட்டி தலைவர்கள்" அல்ல பல "நாய்குட்டி தலைவர்கள்".

  இட ஒதுக்கீட்டிற்கான சட்ட திருத்தம் பாராளமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட போது அனைத்து கட்சியினரும் ஆதரித்தனர்.

  ஏன் இப்போது கூட அரசாங்கத்தின் நிலையை ஆதரிப்பதாக முக்கிய எதிர்க்கட்சியான பா.ஜ.க சொல்லியிருக்கிறது.


 54. rv said...

  குமரன்,
  :))

  நான் என்னை slightly leftist-liberal என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன். என் பதிவுகள் வேறு மாதிரி தெரிகிறதோ என்னவோ. ;)

  நன்றி


 55. rv said...

  அருண்மொழி,
  நன்றி.

  தவறாக நினைத்துக்கொள்ளாதீர்கள். பின்னூட்டமிடும் எல்லாரையுமே கேட்டுக்கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் எதிர்கருத்து வைப்போரை தாக்க வேண்டாமே. அதுவும் பெயரைக் குறிப்பிட்டு. அதுவெறும் சண்டையாகத்தான் போய்முடியும்.

  மீண்டும் தவறாக நினைக்காதீர்கள். நன்றி.


 56. வஜ்ரா said...

  //
  மற்றபடி சமுதாயங்களுக்குள் சண்டை வந்தாலும் வராவிட்டாலும், கோர்ட் கோர்ட்டாய் ஸ்டே வாங்கினாலும் பெரிய அளவில் பிரிவினை எல்லாம் வருமென்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடிவதில்லை.
  //

  உண்மைதான்...பெரிய பெரிய பிரிவினைக்குச் சின்னச் சின்னக் காரணங்கள் தான் பின்னால் இருக்கும். சரித்திரம் நமக்கு இதை கற்றுக் கொடுக்கிறது. இதனால் தான் பிரிவினை வரும் என்று நான் சொல்லவில்லை. இதெல்லாம் பிரிவினை வந்தால் பெரிய விஷயமாகிவிடும். கேரளத்தைப் பாருங்கள், ஒவ்வொறு முறையும் இப்படி நாயர், எழவா பிரச்சனை உருவாக்கி, மொத்தத்தில் கேரளத்தில் பள்ளி, கல்லூரிகள் என்று அனைத்தும் மைனாரிட்டி கையில் தான். இன்றும் நாயர் எழவாச் சண்டை தீராச்சண்டையாக, Pavlovian fashion ல் எடுத்தால் சண்டை தானாக உருவாகும் நிலை, இதைத்தான் தேசிய அளவில் செய்ய நினைக்கிறார்கள். (மைனாரிட்டி என்றவுடன் கொடி பிடிக்க வரும் அறிவாள் சுத்தி கோஷ்டியிடம் நான் பேசுவதாக இல்லை).

  இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசிடம் (வோட்டு வங்கி உருவாக்குவதை விட) உருப்படியான எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை, அதனால் தான் இதை நான் எதிர்க்கிறேன். நான் ஜாதிவெறியன் அல்ல என்பதை தெளிவுபடக்கூறிக் கொள்கிறேன். நெருப்பு சிவா கவனிக்க.

  //
  இடஒதுக்கீடு என்பது தற்காலிகமாக, அப்படியொரு idealistic environment வரும்வரை, பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பது என் எண்ணம்.
  //

  இந்த idealistic environment என்றால் என்ன? இட ஒதுக்கீட்டினால் அது எப்படி வரும்?

  idealistic environment ல் ஜாதியை யாரும் கேட்கமாட்டார்கள் என்று நம்புகிறேன்.

  இந்த இட ஒதுக்கீட்டினால் ஒவ்வொறு படியிலும் ஜாதிச் சான்றிதழ் வேண்டும். இதனால் Idealistic environement எப்படி வரும்?


 57. rv said...

  சமுத்ரா,
  நீங்கள் குறிப்பிடும் வேரை வளர்க்க ஒரே வழி கல்வி தான். கல்வியொன்றினால் மட்டுமே சமன்பாட்டை உருவாக்க முடியும்.

  பணத்தினாலோ, பதிவியினாலோ ஒரு சமூகத்தையே முன்னுக்கு கொண்டு வருவது முடியாத காரியம்.

  மேலும், இன்னொன்றும் சொல்ல வேண்டுமென்று நினைக்கிறேன். இடஒதுக்கீட்டை அமல்படுத்தும்போது ஒருவித patronizing attitude உடன் 'பரவால்ல.. வச்சுக்க போ' என்று அளிப்பது அகம்பாவமே. சம்பந்தப்பட்டவர்களை மேலும் அவமானப்படுத்துவது ஒன்றுதான் அப்படிப்பட்ட அணுகுமுறையோடு தரப்படும் சலுகைகளின் பயனாய் இருக்கும்.

  ஒரு ஓட்டப்பந்தயத்தை எடுத்துக்கொண்டாலும், centerக்கு பக்கத்தில் இருப்பவர் குறைந்த தூரமும், peripheryஇல் இருப்பவர் சற்றே அதிக தூரமும் ஓட வேண்டியிருக்கிறது. அதனாலேயே starting positons மாறுபடுகிறது. அப்படிப்பார்க்கையில் இங்கும் அடித்தட்டு மக்களுக்கு வாழ்க்கையில் ஓட கொடுக்கப்படும் உரிமையே இது.

  இதில் நானும் நீயும் சம இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமாகாது. சொல்லப் போனால் உண்மையில், அப்படிக்கேட்டு நடைமுறைப்படுத்தினால் அது level playing field என்றே கூற முடியாது.

  மற்றபடி அரசியல் கலப்பதில் எனக்கும் இஷ்டமில்லை. ஆனால், இப்படி அரசியல் கலப்பதற்கும் கல்வி இல்லாததுதான் காரணமென்று நினைக்கத் தோன்றுகிறது.


 58. பினாத்தல் சுரேஷ் said...

  ராமனாதன்,

  அருமையான பதிவு. உதாரணங்களும் அருமை. குறிப்பாக:

  //நானும் நீயும் சம இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்பது நியாயமாகாது. சொல்லப் போனால் உண்மையில், அப்படிக்கேட்டு நடைமுறைப்படுத்தினால் அது level playing field என்றே கூற முடியாது.//

  மேலே வைத்திருங்கள்


 59. Radha Sriram said...

  இராதா ஸ்ரீராம்,
  //அதை மாத்த நாம என்ன செய்யலாம்னு யோசிப்பது தப்பே இல்ல.//
  தப்பா ரைட்டால்லாம் பாக்கறதெல்லாம் அநியாயம். மாத்த வேண்டியது நம் கடமையென்ற அளவிற்கு ஆகிவிட்டது.
  Ramanathan.i did'nt mean it that way. I wanted to say that the reservation(to what extent??i have my own thoughts on that which i cannot elaborate right now!) was quite essential...(could i detect a little patronising tone in yr reply....i hope not.....)

  Radha


 60. தருமி said...

  நான் எழுதறத விட, ஏற்கனவே பத்ரி மற்றும் இன்னும் சிலபேர் நல்லாவே எழுதிட்டாங்க"// நீங்களும் ரொம்பவே நல்லா எழுதியிருக்கீங்க. ரொம்பவே நல்லா இருக்கு.

  ஆனா ஒண்ணு, தூங்கிறது மாதிரி கண்ணை மூடிக்கிட்டவங்களை எழுப்பலாமேன்னு ஒரேயடியா மெனக்கெட்டு நீங்களும்தான் என்னென்னவோ சொல்லிப் பார்க்கிறீங்க. அவங்க இந்த 'ஜென்மத்தில' கண்ணைத் திறக்கப் போறதில்லை.


 61. arulselvan said...

  ராமனாதன்,
  தெளிவாக சரியான பார்வையில் எழுதியிருக்கிறீர்கள். நமது நாட்டில் மருத்துவர்/மக்கள் விகிதம் குறைவாக இருக்கும் போது, அதிக இடங்களை ஏற்படுத்தவும், எல்லா மக்களையும் பிரதிநிதிப்படுத்தவும் அரசு செய்யும் அனைத்து முயற்சிகளுக்கும் அனைவரும் ஆதரவு தரவேண்டும்.
  நன்றி.
  அருள்


 62. துளசி கோபால் said...

  ராம்ஸ்,

  நல்ல பதிவு. நிறைய யோசிக்க வச்சிருக்கு. இன்னும் யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.


 63. rv said...

  சங்கர்,
  //இந்த இட ஒதுக்கீடு விஷயத்தில் அரசிடம் (வோட்டு வங்கி உருவாக்குவதை விட) உருப்படியான எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை, அதனால் தான் இதை நான் எதிர்க்கிறேன்.//
  இவ்விஷயம் அரசியலாக்கப்பட்டு வோட்டுக்கான ஒன்றான தோன்றுவது ஓரளவு உண்மைதான்.

  அது இடஒதுக்கீட்டின் பிரச்சனையில்லை. பெருவாரியான மக்களிடம் அடிப்படை கல்வியறிவு வளர வளர அரசியல் கண்டிப்பாக பின்னுக்குத் தள்ளப்படும்.

  //இந்த idealistic environment என்றால் என்ன? இட ஒதுக்கீட்டினால் அது எப்படி வரும்? //
  என்ன சங்கர், நான் குறிப்பிட்ட ஐடியலிஸ்டிக் சூழல் என்பது சற்றே misleading ஆக இருக்கிறதோ? ideal என்று வேண்டுமானால் மாற்றிக்கொள்கிறேன்.

  இதற்கும் முன்னரே பதில் சொல்லிவிட்டேன். கல்வி என்னும் ஒன்றைத்தவிர வேறெந்த சலுகையாலும் ஐடியல் சூழலை உருவாக்க முடியாது.

  அங்கே ஜாதிச் சான்றிதழ் தேவைப்படுமா படாதா என்பது என்னால் predict பண்ண முடியவில்லை. கண்டிப்பாக போட்டி அதிகரிக்க அதிகரிக்க, க்ரீமி லேயர் தவிர்க்கப்பட்டால், ஒவ்வொரு லேயரும் க்ரீமி லேயர் கேட்டகரிக்கு தானாகவே தள்ளப்படுவார்கள். அவர்களுக்கும் ஓப்பன் கோட்டா ஒன்றுதான் வழியென்றாகிவிடும்.

  இதில் நான் க்ரீமி லேயர் என்பது பொருளாதார அடிப்படையில் அல்ல. ஒரு குடும்பத்தின் கல்வியறிவை வைத்து மட்டுமே.

  வேறு எந்த தீர்வும் கண்ணில் தெரியாத வரைக்கும், வேலை செய்கிற ஒரு திட்டத்தை எதற்கு கிடப்பில் போடவேண்டும்? க்ளிஷேவாக சொன்னால் "Why change horses in mid stream?"


 64. rv said...

  பெனாத்தலார்,
  நன்னி!

  மேலே வச்சுக்கவா?? :))) ஓகே ஒகே


 65. rv said...

  இராதா,

  //(could i detect a little patronising tone in yr reply....i hope not.....)//
  கண்டிப்பா அப்படியொரு ஆட்டிட்டுயுட் இல்லீங்க. தவறா பட்டுருந்தா மன்னிச்சுக்குங்க.


 66. rv said...

  பெரீய்ப்பா,
  நன்றி.


 67. இலவசக்கொத்தனார் said...

  கொஞ்ச நாள் ஆச்சு இந்தப்பக்கம் வந்து. என்ன 100 அடிச்சு ரொம்ப நாள் ஆச்சின்னு இப்படி ஒரு பதிவா? பேஷ். பேஷ். ரொம்ப நன்னாயிருக்கு.


 68. rv said...

  அருள்செல்வன், துளசியக்கா,
  நன்றி


 69. விட்டுது சிகப்பு said...

  //நீங்கள் ஒரு செடி என்கிறீர்கள். நான் ஒரு நந்தவனம் என்கிறேன். ஒரு பகுதியில் மட்டும் மலர்ந்த பூக்கள் இருக்க மற்றொரு பகுதியில் செடிகள் வாடினால், அவற்றுக்கு போதிய கவனிப்பு தரவேண்டியது தோட்டக்காரனான அரசின் கடமை.//

  அப்பொழுதும் பூக்காத பகுதிகளில் உள்ள செடிகளின் வேருக்குத்தான் உரம் வேண்டுமே தவிர, பூக்கும் செடிகளில் உள்ள பூக்களைப் பறித்து சாக்கடையில் போடுவது என்ன மடத்தனம். ஆனால் பூக்காத செடிகள் அதிகம் இருப்பதாலும், அவைகளைப் பராமரிக்க என வரும் பணத்தைச் சுரண்டவும், பூக்கும் பூக்கள் ஊமையாய் இருப்பதாலும் இந்த எளிதான பாதையை இந்த அரசு தோட்டக்காரன் செய்கிறான்.


 70. விட்டுது சிகப்பு said...

  //ஆனால், வேரைக் கவனி என்று பலரும் சொல்லும் வேர் 'கல்வி' ஒன்றுதான். அதைத்தான் அரசு செய்கிறது. அதில் தவறே இல்லை.//

  ஆமாங்கண்ணா, அதான் ஏழைக் குழந்தைகளை ஹோட்டலில் டேபிள் துடைக்க விட்டுட்டு. நல்ல வசதி படைத்த மாடி வீட்டுக் குழந்தைகளை மருத்துவம் படிக்க அனுப்புது.

  ஆமாங்கண்ணா, அதான் மருத்துவ படிப்பு வேருங்கண்ணா. ஆனா பன்னிரெண்டாம் வகுப்பு வரை உயர்கல்விங்கண்ணா. நல்லாயிருங்கண்ணா.


 71. விட்டுது சிகப்பு said...

  //(மைனாரிட்டி என்றவுடன் கொடி பிடிக்க வரும் அறிவாள் சுத்தி கோஷ்டியிடம் நான் பேசுவதாக இல்லை).//

  ஏன்ணா இப்படி சொல்லிட்டீங்க. அதையும் செஞ்சா நீங்களும் 'நானும் ஒரு ராஸ்கல்' அப்படின்னு பதிவெல்லாம் போடலாம். அதுக்கு சப்போர்ட்டா இந்த் தமிழ்மணமே வருமேண்ணா. நல்ல சான்ஸை இப்படி வேஸ்ட் பண்ணறீங்களேண்ணா.


 72. ரங்கா - Ranga said...

  இராமநாதன்,

  அருமையான பதிவு. மருத்துவக் கல்லூரியில் நன்கு படித்திருந்தும் ஒழுங்காக வைத்தியம் பார்க்காமல் அரைகுறை மருத்துவராக இருந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். மருத்துவக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கொஞ்சம் அப்படி இப்படி என்று இருந்தாலும், உயர்ந்த குணங்களுடன் சிறந்த மருத்துவராக இருந்தவர்களையும் பார்த்திருக்கிறேன். கோட்டா மூலம் வந்தவர்கள் தரம் குறைந்தவர்கள் என்பது தவறான கருத்து. இதில் வாதத்திற்கு இடமில்லை. கோட்டா பெறுவதற்கு ஜாதி/மதம் (இரண்டுமே மனிதர்களால் உருவாக்கப்பட்டவை) மட்டுமே காரணமாகக் காட்டப்படுவது தான் கொஞ்சம் உதைக்கிறது. மற்றவர்களின் சங்கடம் தீர்க்கும் மன நிலை, பொருளாதார நிலை போன்றவைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இட ஒதுக்கீடு செய்தால் நன்றாக இருக்கும். ஓட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் அரசியல் நிலைமை இருக்கும் வரை இது சாத்தியமா என்று தெரியவில்லை.

  ரங்கா.


 73. குலவுசனப்பிரியன் said...

  திரு இராமநாதன்,

  மிக அருமையான பதிவு. என்போன்ற சாமானியர்கள் 6 பேர் (உடன் படிதவர்கள் மட்டும்) இன்று இடஒதுக்கீட்டின் மூலமே, சிறு படிப்பானாலும் (டிப்ளொமா) இடம் கிடைக்கப்பெற்றதால், முன்னேறவேண்டும் என்ற உந்துதலில் நன்குபடித்து, வேலை கற்று, ஒவ்வொருவரும் இந்தியாவில் சிறந்த கணினி நிறுவனத்தில் உயரதிகாரி, சென்னையில் தனி நிறுவனம், கலிஃப்போர்னியாவில் சொந்த நிறுவனம், இன்டெலில் பொறியாளர், ஐபிஎம்மில் மேலதிகாரி, கன்ஸல்டன்ட் என்று நல்ல நிலையில் இருக்கிறோம். எனவே இட ஒதுக்கீட்டால் தரம் குறையும் என்ற வாதம் அர்த்தமற்றது என்பதை உணர்வேன். இதைப்பற்றிய என்னுடைய பதிவு இன்னமும் துவக்க நிலையிலேயே இருக்கும்போதுதான் உங்கள் சிறந்த பதிவைப்பார்த்தேன். மேற்கல்விபற்றி அனுபவமில்லாமல் என்னால் உங்களைவிட சரியாக இந்த இட ஒதுக்கீடைப்பற்றி எழுத முடியாது. எனவே இங்கே பின்னூட்டமிடுவதன் மூலம் என் எண்ணத்தை பதிவு செய்கிறேன்.

  நன்றி,

  குலவுசனப்பிரியன்


 74. rv said...

  கொத்ஸ்,
  பதிவப் பாத்து கருத்து சொல்லாம உம்ம ரெகார்ட் மேட்டரே குறின்னு இருக்கீரே.. வாழ்க!


 75. rv said...

  விட்டுது சிகப்பு,
  பூக்கும் செடிகளைத் தூக்கி குப்பையில் போடுவதாய்த் தோன்றுவது வாஸ்தவம் தான். ஆனால், இந்த விஷயத்தை திருப்பி திருப்பி விளக்கி எனக்கு போரடிச்சுடுச்சு. பின்னூட்டங்களைக் கொஞ்சம் பாத்துக்கோங்களேன். நன்றி.

  //அதான் மருத்துவ படிப்பு வேருங்கண்ணா. ஆனா பன்னிரெண்டாம் வகுப்பு வரை உயர்கல்விங்கண்ணா.//
  இந்த மாதிரி ஓட்டைகளை மட்டுமே வைத்து இடஒதுக்கீட்டையே வேண்டாம் என்று சொல்வதுதான் நியாயம் இல்லை என்று சொல்கிறேன்.

  இடஒதுக்கீடு வேண்டுமா வேண்டாமா என்ற அர்த்தமற்ற விதண்டாவாதத்தில் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காமல், இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, 'க்ரீமி லேயர்' இதை எக்ஸ்பளாய்ட் செய்வதை தடுப்பது என்பது பற்றி சிந்தித்தால் எல்லாருக்குமே நலம்.


 76. rv said...

  ரங்கா,
  நன்றி.

  அதுவேதான் என் கருத்தும். இத்தனை மதிப்பெண் வாங்கி பாஸ் பண்ணினோம் என்பதெல்லாம் கதைக்குதவாது. இதில் ரிஸர்வேஷனில் வந்தவர்களென்ன, ஓப்பனில் வந்தவர்களென்ன? ஒரு வித்தியாசம் கூட கிடையாது.

  மேலும் நீங்கள் சொன்ன தகுதிகளும் மிகவும் அவசியம்.

  வோட்டு அரசியல் .... ஹூம்..


 77. rv said...

  குலவுசனப்பிரியன்,
  மிக்க நன்றி.


 78. Cost Demon said...

  மிகவும் நல்ல பதிவு...


 79. rv said...

  இராம்ஸ்,
  நன்றி.


 80. தருமி said...

  //நீங்கள் ஒரு செடி என்கிறீர்கள். நான் ஒரு நந்தவனம் என்கிறேன். ஒரு பகுதியில் மட்டும் மலர்ந்த பூக்கள் இருக்க மற்றொரு பகுதியில் செடிகள் வாடினால், அவற்றுக்கு போதிய கவனிப்பு தரவேண்டியது தோட்டக்காரனான அரசின் கடமை.//


  simply superb...
  மீண்டும் பெரீயப்பா


 81. Thamizhan said...

  நல்ல பதிவு.பொறுமையான பதில்கள்.இட ஒதுக்கீடு 10 மதிப்பெண் பெற்றவர்கட்காக இல்லை.நல்ல தகுதியு்ந்திறமையும் உள்ள பிற்படுத்தப் பட்டவர்கட்குத்தான்.
  தலைவர் காமராசர் கேட்டார்.எந்த தாழ்த்தப்பட்ட டாக்டர் ஊசிபோட்டு எவன் இறந்துவிட்டான்,எந்த தாழ்த்தப்ப்ட்ட எஞ்சினீயர் கட்டின பாலம் உடைந்து விட்டது?சும்மா திறமையென்றெல்லாம் ஏமாற்றாதீர்கள்.உங்கள் திற்மை பற்றியும் உங்களுக்குச் சொல்லிக்கொடுத்தவன் திறமை பற்றியும் என்க்குத்தெரியும் என்றார் கோபமாக.
  பணம் வரும் போகும்.சமுதாய,கல்வி நிலைதான் அளவு கோளாக இருக்க முடியும்.
  இட ஒதுக்கீடு போகவேண்டுமா?சிறந்த வழி.இந்திய அரசியல் சட்டத்திலே "தீண்டாமை குற்றம்" என்றிருப்பதை மாற்றி "சாதி குற்றம்" என்று சாதியை ஒழிப்போம்.


 82. rv said...

  பெரீய்யப்பா,
  மிக்க நன்றி. இப்போ திடீரெனத் தோண்டி இப்பதிவில் பின்னூட்டமிட்டதில் குத்து எதுனாச்சும் உண்டா? :(


 83. rv said...

  தமிழன்,
  தரம் தாழ்ந்துவிட்டதற்கான அறிகுறிகளே தென்படாதபோது எதற்கு வீணாய் ஹைப்போதெடிக்கல் தரவீழ்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படவேண்டுமென்று புரியவில்லை. prejudice தவிர வேறு காரணங்கள் இல்லையென்றே நினைக்கிறேன். காமராஜர் சொன்னது முற்றிலும் சரி.

  மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு.


 84. Anonymous said...

  Well, this is just another poor attempt to justify selfish interests by BCs & OBCs. Please do not site any examples abot Dalits; Nobody disagrees that they and service castes like barbers, washermen, etc., require reservation. The problem is with the reservation for BCs/OBCs and its misuse.

  First of all, no forward castes ever stopped OBC/BCs from studying. One can not speak just looking at two hundred years of British rule and say Brahmins had monopolised everything and now it is our turn to monopolise. In a globalised world, it may not matter any more.

  The reality is that the tamil forward castes (brahmins, saiva vellalars and Nagarathars) have moved much forward inspite of no reservations. Two thousand years of hatred could not keep jews down; the socially advantaged groups in any society will always move ahead of others. The prudent thing would be to learn from them, grow along and make the society better so that everybody gets a fair chance.

  Great benefits and changes have happened in societies not by hatred but by achievements. Is it possible for anyone to list 10 BCs/OBCs who are pioneers/trusted ones in Medical field in Tamil nadu today, leave alone the world? You will not find them. This is inspite of 30 years of 50% plus reservations.

  Give me a break; you are all jealous and i am worried about the number of people who still seem to carry an inferiority complex that they were not allowed to study for 1000 years. If they did not allow you, what were your forefathers doing? brahmins were not the kings and zamindars; we forget that the English education was the only monopoly brahmins had and they made use of it. We have had tamil poets from all castes earlier and society had tamil based education in all spheres. So it is better we stop blaming others for our ills and see what we can do now.

  Today it might be brahmins, saiva pillais and mudaliars at the receiving end; tomorow it could be the turn of you. but by then we might have run out of any reasoning capacity within tamil nadu and you might end up like victims of Polpot regime with no chance of any reasoning.


 85. Doctor Bruno said...

  Something about AIIMS

  The Results of "ALL INDIA ENTRANCE EXAMINATION FOR ADMISSION TO MD/MS/PG DIPLOMA AND MDS COURSES - 2006" conducted by AIIMS has been released at http://www.aiims.ac.in/aiims/events/result/MDMS06-RSL.pdf

  This is a part of the notification

  The following is the list of candidates who have qualified for MD/MS/PG Diploma and MDS courses for admission to various Medical/Dental Colleges/Institutions in India against 50% open merit seats on the basis of All India Entrance Examination held on Sunday, the 8th January, 2006. The list is roll number-wise and the position in order of merit is given in parenthesis against each roll number. The list is subject to verification of eligibility criteria & original documents as given in the Prospectus. The Institute is not responsible for any printing error. The allocation of subject and Medical College will be done by the Directorate General of Health Services as per counselling schedule given at the bottom. Individual intimation in this respect is being sent separately. Result is displayed on the notice board of Examination Section, AIIMS, New Delhi and will be available on web sites www.aiims.ac.in and www.aiims.edu


  I can understand that the list is subject to verification and also that the individual call letters are being sent seperately. What I am at loss to comprehend is the following line given in the result notification "The Institute is not responsible for any printing error." If the results are published in a news paper, then we can understand that the institute is not responsible for printing errors. But how can an authority conducting examination shun out from their responsibility of maintaining reliability and validity of a result published in their notice board

  Can't the AIIMS people follow a simple procedure of verifying the result AFTER it has been printed. After all they are dealing with careers of doctors (each of them going to treat thousands of patients) and save innumerable patients.

  Can a student say that he is not responsible for errors in his paper. Can an artist say that he is not responsible for the mixed up colours of his work. Of course mistakes can creep in. But is it not the duty of the authorities to check for mistakes and correct them. Does the AIIMS notification mean that we have bear with the mistakes. If they are not competent enough to check the validity of something they publish, what is the fun in conducting an exam. Why can't they give the responsibility of conducting the exam to some one else

  Who then is responsible for the missing questions in few question papers and missing ranks ? Who is going to bell the cat ??


 86. Doctor Bruno said...

  http://timesofindia.indiatimes.com/articleshow/1543278.cms

  Striking AIIMS docs live in a glass house by Akshaya Mukul
  [ Tuesday, May 23, 2006 01:55:32 amTIMES NEWS NETWORK ]

  NEW DELHI: The main grouse of AIIMS students - at the forefront of the stir against 27% reservation for OBCs - is that merit is being sacrificed at the altar of votebank politics. But they forget two things: 25% reservation that AIIMS graduates get in PG admission and the Supreme Court judgment of 2001 that declares the earlier system of 33% reservation for them bad in law.

  In fact, the SC, while stating that 33% institutional reservation is "unconstitutional", agreed with the findings of the Delhi High Court, which had earlier set aside the reservation.

  The HC had found that "AIIMS students, who had secured as low as 14% or 19% or 22% in the (all-India) entrance examination got admission to PG courses while SC or ST candidates could not secure admission in their 15% or 7% quota in PG courses, in spite of having obtained marks far higher than the in-house candidates of the institute." HC had analysed admission data over five years.

  The apex court also agreed with the HC that the "figure of 33% reservation for in-house candidates was statistically so arrived at as to secure 100% reservation for AIIMS students. There were about 40 AIIMS candidates. The PG seats being 120, 33% thereof worked out to be 40." That meant all 40 AIIMS graduates were assured of PG seats.

  Merit here was clearly being sacrificed, the study showed. For instance, in the January 1996 session, an AIIMS student with 46.167% marks - lowest for an AIIMS student that year - got PG admission.

  However, an SC student with the same grades was admitted but denied coveted course such as obstetrics and gynaecology. The SC student got shunted to community while AIIMS students easily won berths in prestigious disciplines.

  Twelve AIIMS candidates were selected even though they got less marks than the SC candidate who secured 60.33% marks. Similarly, 16 AIIMS students got admission to PG courses even though they got less marks than another ST student who got 62.16%.

  Basing itself on this study, SC said, "Institutional reservation is not supported by the Constitution or constitutional principles." "A certain degree of preference for students of the same institution intended to prosecute further studies therein is permissible on grounds of convenience, suitability and familiarity with an educational environment," it added.

  Preferences, the court said, had to be "reasonable and not excessive...Minimum standards cannot be so diluted as to become practically non-existent." In the similar vein, SC said, "It cannot be forgotten that the medical graduates of AIIMS are not 'sons of soil'. They are drawn from all over the country."

  The court reasoned that these students had "no moorings in Delhi. They are neither backward nor weaker sections of society. Their achieving an all-India merit and entry in the premier institution of national importance should not bring in a brooding sense of complacence in them".

  Extending the damning logic, the court said in preserving quotas for its own students, "the zeal for preserving excellence is lost. The students lose craving for learning."


 87. Doctor Bruno said...

  The ugly side of few perverted minds in Delhi

  For nearly two weeks few filth in the capital were shouting that Merit is going to be compromised due to reservations. All the while, we had been giving clearcut evidence as to show that Merit will be NO WAY affected due to reservations and that reservations are going to uplift the society as a whole.

  Now the cat is out of the bag.

  As per Rediff a guy called Armaan says
  http://rediff.com/news/2006/may/25spec1.htm

  //“ We prefer reservation for people who deserve it. It's not that we don't have a conscience. We do care for the poor, those who really need help. We should have reservation on the basis of economy.”//
  அப்பிடி போடு

  So, at last as we have been telling all these days, these depraved guys never bothered about Merit. Merit was just an excuse for Apartheid. I would like to know the reaction of all those who were crying in the name of Merit (including two self-centered caste-centered nepotistic chaps who resigned from the knowledge commission in the name of merit) as to the new shift in demand by the Doctors that they are ready for Quota based on Economy, but not for quota based on Caste.

  For those who do not know the difference, let me explain

  Now if seats are reserved on the basis of caste, let us assume that a Student from FC will get the seat if he scores 297 out of 300 where as a student from SC will get the seat even if he scores 291 out of 300 (these are the cut off values from MBBS Admission in Tamil Nadu in 2005)

  So far the apartheid guys were shouting loud that merit will be affected. There were even remarks from few of those “intelligent” chaps that a guy who scored 292 (SC guy who has got seat) is less talented (or less meritorious – let me repeat the word play) than the forward caste guy who scored 296 (and there fore cannot get the seat as the OC cut off is 297)

  But now they WANT QUOTA ON ECONOMY. So they have no problem when a poor guy with mark 292 gets the seat while a rich guy with mark 296 does not get the seat. And strangely, in this case, (according to these doctors and also a person called Narayana moorthy, for whom I had great regard, until he too advised economy based quota) the merit is not affected when quota is based on economy.

  Now I am not able to understand this……

  If the earlier claim that merit is going to be affected by reservation based on caste is true, then merit is going to be affected if the quota is based on economy or for that matter any other reason like the state of domicile (Delhi – 100 percent reservation for Delhi Undergraduates) , Religion (eg Andhra Pradesh) , college graduated (eg JIPMER)

  So a person whose primary aim is preservation of merit should NOT ALLOW ANY QUOTA.

  But See the Delhi Doctors.

  They have gone on Mass CL today. They do not want a SC student getting 292 marks get MBBS. But they were silent when Private colleges were started that made any person, even those who passed 12th after 3 attempts get MBBS. What were they doing when the private colleges were opened? They did not even give a sign of protest. Do those AIIMS guys think that we all are fools to believe that they are crusading for merit at present? What were they doing for those sponsored seats and NRI quotas

  They have no problem when some one gets MBBS from Private College even though he gets 50 marks in 12th. They never fought. It was Tamil Nadu students who had always fought against the private medical colleges

  They have no problem of a student getting low marks in PG entrance in AIIMS, but getting MD Gen just because he studied MBBS there. At that juncture they never represented to PM or President

  And as per the latest statement, they have no problem if a poor guy who gets 292 marks become a doctor while a rich guy who gets 296 has to watch

  BUT THEY ARE WORRIED when a SC Guy (or a OBC Guy) who takes 292 marks get admission instead of a Forward Community guy who gets 296.

  SO in effect, all these hullabaloo over the past two weeks were not against reservations. It is in fact against the students from the reserved community.

  They were not fighting for merit as they were claiming (we already knew that merit is a mask) They fight to maintain apartheid

  And see this report in Economic times by Urmi Goswamy from Delhi

  (as per http://thoughtsintamil.blogspot.com/2006/05/blog-post_23.html) that sums up the issue

  // PRIVATE schools and parents worried about their children studying along side children belonging to weaker sections can breathe easy. The government proposes to let them off the reservation hook. The model Right to Education Bill proposes that private schools that receive no funds from the government will not be required to take children from weaker sections. The Model Bill will form the basis of states' legislation to enable the fundamental right of education.//

  SO there are guys in Delhi who cannot breathe easy when a student from weaker society studies along with his children. Their main worry seems to be the community of the student who studies along with them and not the marks of the students who studies in the college. God Save India !!!


 88. Doctor Bruno said...

  //இவ்வளவு பேசும் அர்ஜுன் சிங் ஆஸ்பத்திரிக்குச் சென்றால், எனக்கு ஒரு தலித் டாக்டர் தான் வைத்தியம் பார்க்கவேண்டும்! //

  Please forgive me if I irritate some one.....

  Plus 2 தேர்வில் 50 சதவிகிதம் மதிப்பென் கூட பெற முடியாதவர்கள் தனியார் கல்லூரிகளில் படித்து doctor ஆகிறார்கள்.... அவர்கள் மேல் இல்லாத வெறுப்பு 96% மதிப்பெண் எடுத்த தலித் மாணவன் மேல் வருவது ஏன்

  Why forwarded Mails and SMS talks about Dalit Doctors and Muslim Pilots and NOT Private College Doctors and Ex Service Men Quota Pilots ?????


 89. Osai Chella said...

  Went through all the comments. Some foolish arguements from the parasites are really vulgar... say vajras SC doctor etc. These foolish arguements says about their petty mind. Welcome doctor Bruno, my long time online friend and the one who supplied me a lot of arguements and data in our effort in the blog http://reservationfaqs.blogspot.com .


 90. doondu said...
  This comment has been removed by a blog administrator.

 91. Anonymous said...
  This comment has been removed by a blog administrator.

 92. rv said...

  அடடா...

  திரும்ப மாடு ஓட்டியே ஆகணுமா?


 93. Anonymous said...

  Only today I saw this blog, very good arguments.


 94. சாலிசம்பர் said...

  //ஒரு சாரார் பாதிக்கப்படுகின்றனர் என்பதை ஓரளவிற்கு ஒப்புக்கொண்டாலும், ஒட்டுமொத்த நாட்டின் முன்னேற்றம் என்று பார்க்கையில் ஒரு சாராரின் நலம் இரண்டாமிடத்திற்கு வந்துவிடும்.//

  சிறிதே திறந்த மனமும்,நேர்மையும் கொண்ட எந்த ஒரு மனிதனாலும் இதைப் புரிந்து கொள்ள முடியும்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்