184. பச்சைக்கிளி முத்துச்சரம்!


கவுதம் மேனன் இயக்கத்தில் மேக்கப்பில்லாத சரத், ஆண்ட்ரியா, மிலிந்த் சோமன் மற்றும் ஜோதிகா நடிக்க ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வந்திருக்கும் படம் 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. படத்திற்கான பப்ளிசிடி பயங்கரமாய் இருக்க படம் ரிலீஸான ரெண்டாவது நாளில் டிக்கட் கிடைக்குமா என்று அச்சத்துடன் சென்றால் சரத் ரசிகர்களைக் கூடக்காணோம். டிக்கட் எளிதாகக்கிடைக்க பால்கனியில் முன் சீட்டில் காலை நீட்டியவாறு சொகுசாய் இடம்பிடித்தோம் நானும் என் கஸினும்.



படம் ஆரம்பிக்குமுன்னர் வரும் வழக்கமான விக்கோவை காணோம். அதற்கு பதில் சச்சின் அவசர அவசரமாக வந்து ரேனால்ட்ஸ் வாங்கச் சொன்னார். அதற்கு Qube சினிமா வும் DTS ஒலிக்குமான விஷ் விஷ்கள். அதற்கும் விசிலடிக்கும் ரசிகர்களைக் கண்டு நோவதா என்பதற்குள் சார்மினார் பாக்ரவுண்டில் ஒரு சிறுவன் ஓடிவர கறுப்பு சாண்ட்ரோவிலிருந்து இறங்கும் சரத் பையனுக்கு ஊசி போட்டுவிட்டு அம்மாவைத் அழைத்துக்கொண்டு வருவோம் வா என்று சொல்ல, டைட்டில்கள்.

கதைச்சுருக்கம்: சரத் ஒரு மருந்துக்கம்பெனியில் ரெப். ஆண்ட்ரியா ஹோம் மேக்கர். அவர்களுக்கு அழகான பையன். க்யூட்டாய் டைட் க்ளோசப்பில் மூன்று பேரும் கட்டிக்கொண்டபடி சிரித்து பாட்டு பாடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பூகம்பமாக மகனுக்கு type-I நீரிழிவு நோய் என்று தெரியவருகிறது. மகனின் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கவேண்டி மூன்று வேளையும் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளவேண்டிய சூழ்நிலை. அப்பாவும் அம்மாவும் நொறுங்கிப்போகிறார்கள். அவர்களுக்குள் இருந்த சந்தோஷம், spark காணாமல் போகிறது. இதற்கு நடுவில் சரத் வழக்கமாய் பயணிக்கும் சபர்பன் ரயிலில் அதிரடி அழகு இராட்சசியாய் நுழைகிறார் ஜோதிகா.stolen looks மற்றும் இன்னபிற ரத்ன சுருக்க சம்பாஷணைகளுக்குப் பிறது சரத்தை பிடித்திருப்பதாக குண்டைத் தூக்கிப்போடுகிறார் ஜோதிகா. குழப்பத்தின் உச்சத்தில் இருக்கும் சரத், மனைவி சில விஷயங்களில் ஒத்துழைக்காமல் வேறு போக சபலப்பட்டு, ஜோதிகா ரூம் போட ஈ.சி.ஆர் ரோட்டிலுள்ள ரிசார்டுக்கு அழைக்க, போகிறார். அங்கு நடக்கும் விஷயத்தால் சரத் வாழ்க்கையில் அடிக்கும் புயலை எப்படி சமாளிக்கிறார் என்பதே பச்சைக்கிளி முத்துச்சரம்.

கவனம் தேவை: plot details maybe revealed.
படத்தின் தூண் என்றால் சரத். அடிதடி ஹீரோவுக்கான எந்த லாஜிக் அபத்தமும் இல்லாமல் மிட்-லைப் க்ரைஸிஸில் இருக்கும் ஒரு சாதாரண நடுத்தர வயது ஹீரோவாக: மனைவியிடமும் குழந்தையிடமும் காட்டும் அன்பிலாகட்டும்: ஜோ மீது ஏற்படும் ஈர்ப்பை தன்னாலேயே ஜீரணிக்க முடியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிப்பதிலாகட்டும்:முட்டாள்தனமாக மாட்டிக்கொள்வதிலாகட்டும்: பிரச்சனைகளை சமாளிக்கத் தெரியாமல் கலங்குவதாகட்டும்: அசட்டுத் துணிச்சலாகட்டும்: அதன் பயனாய் குடும்பத்திற்கே ஆபத்து வருவதைக் கண்டு நொறுங்கிப்போய் பின்னர் பொங்குவது என எல்லா பரிமாணங்களிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் சரத். சரத், தைரியமாக இதுபோன்ற படங்களில் நடியுங்கள். 'சமுத்திரம், ஐயா'விலேயே நடிக்க நன்றாக வருமென்று காட்டினீர்கள். இதில் முத்திரையே பதித்தாகிவிட்டது. நடுவில் வந்த பஞ்ச் டயலாக், அடிதடி குப்பைகளை விட்டுத்தள்ளுங்கள்.

சரத்தின் மனைவியாய் வரும் ஆண்ட்ரியா அழகாக இருக்கிறார். பெரும்பாலும் சராசரி குடும்பத்தலைவி என்ன செய்வாரோ, சொல்வாரோ அதையே செய்கிறார். சரத் தன் பிரச்சனையைச் சொல்லி அழும்போது ஆறுதலாய் பேசுபவர் திடுதிப்பென்று சொல்லாமல் கொள்ளாமல் வீட்டைவிட்டு ஓடுவதெல்லாம் ஓவர். அதுவும் நோய்வாய்ப்பட்ட குழந்தைக்காக கருவையே கலைக்க முன்வருபவர் சரத்தின் வாக்குமூலத்திற்கு பிறகு குழந்தையையும் விட்டுச்செல்வது அபத்தம்.

ஜோதிகா: சுட்டுவிரலை நீட்டி நீட்டி, முழியை உருட்டி உருட்டி, தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டினால் ஜோவின் நடிப்பு அகராதியில் முற்றிற்று வந்துவிடும்: இதற்கு மேல் நடிப்பு என்று இவரிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை. கடைசி காட்சிகளில் சந்திரமுகி - II. "I want to make love to you" என்று இப்படத்தில் சரத்திடம் சொல்கிறார். மிலிந்திடமும் இன்னொரு ராமச்சந்திரனிடமும் சொன்னதாகக்கூட நினைவு. இது காக்க காக்கவிலிருந்து சொல்லிவரும் டயலாக் என்பதால் அப்போதிலிருந்தே ஒரே ஸ்க்ரிப்டையே படித்துக்கொண்டிருக்கிறாரோ என்று எனக்கொரு சந்தேகம். அழகான ராட்சசியாய் இல்லாமல் படத்தில் பார்க்க கொஞ்சம் வயசானவராய்த் தெரிகிறார். காமிராக்காரரும் மேக்கப்மேனும் சதி செய்திருக்கிறார்கள்.

மிலிந்த் சோமன்: முன்னாள் சூப்பர் மாடல். மிரட்டுகிறார். குரல் (கவுதம் மேனன்) ஒரு மாதிரி இருக்கிறது. ஆனால் நிறைய காக்க காக்க ஜீவா சாயல். இது டைரக்டரின் தவறு. நடிகருடையதல்ல என்று நினைக்கிறேன்.

காமிரா: அரவிந்த் கிருஷ்ணா: காமிராவில் வித்தியாசப்படுத்திக்காட்ட வேண்டும் என்ற ஆவல் தெரிகிறது. முன்பாதியில் வரும் ரயில் காட்சிகள், சரத் குடும்ப காட்சிகள் போன்றவை முழுமையாய் அழகாய் இருக்கின்றன.

இசை: மின்னலே, காக்க காக்க தகடு வைத்திருந்தீர்களானால் புதிதாய் ஒன்றுமில்லை. வழக்கமான புரியாத பாஷையில் பிளிறல்கள், ஒரே மாதிரியான ஹை பிட்ச் ஆண் குரல் என்று போரடித்துத் தள்ளுகிறார் ஹாரிஸ். தீம் கூட வேட்டையாடு விளையாடுவை நினைவுபடுத்துகிறது.

கவுதம் மேனன்: பல இடங்களில் வசனங்கள் நெருடுகிறது. அவற்றின் contentஐ நான் குறை சொல்லவில்லை. ஆனால் revolutionary என்ற போர்வையில் அச்சுபிச்சுத்தனமாய் இருக்கிறது. த்ரில்லரை நன்றாகவே கொண்டு சென்றிருக்கிறார். பாதியிலேயே கதையை கெஸ் செய்ய முடிவது என் கோணங்கி புத்தியினால் கூட இருக்கலாம். முந்தைய படங்களை ரொம்பவே நியாபகப்படுத்தும் காட்சிகளையும், வசனங்களையும், லொக்கேஷன்களையும் தவிர்த்திருக்கலாம்.

பல இடங்களில் வில்லன்/ஜோவின் செயல்பாடுகள் நம்பமுடியாதவையாக இருக்கின்றன. அதற்கும் மேல் திடிரென சரத் hulk ஆக மாறுவதும் நம்பமுடியவில்லை.....ஜோவுடனான obsessionஐ விட வேண்டும். வேட்டையாடு விளையாடுவை பார்க்க இது நல்ல படமே தான்.

மொத்தத்தில்: ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம். சரத்துக்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

---------------------------------------


இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
மொத்த ப்ராஸஸ் பத்து நிமிடம் ஆகும். ஒரு மெயில் ஐடி தேவைப்படும். பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். நன்றி
Please Click on the Link below to start the voting process.


(கொத்ஸின் ஆசைக்காக)
திமுக, அதிமுக என்று மாறி மாறி எந்தக்கட்சியிலிருக்கிறோம் என்றே தெரியாத குழப்பத்தில் இருந்த சரத்தை மேலும் குழப்பி, ஏமாந்த சமயத்தில் எனக்காக வோட்டு கேட்டு உங்களைக் கும்பிட்டபடி பிரச்சாரம் செய்ய போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.













எல்லோரையும் ஆசையுடன் வோட்டு போட அழைக்கும் முண்டக்கண்ணழகி (நன்றி: வெளிகண்டநாதர்) ஜோவுக்காகவாவது எனக்கே இண்டிப்ளாக்கீஸில் போடுங்கள். செவ்வாய் கடைசி!








ரஜினியையும் எனக்காக பிரச்சாரம் செய்யக் கூப்பிடப்போனேன்!!!


அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.



படங்கள் உதவி: ஜோதிகா, சரத்


---------------------------------------------------------
பெனாத்தலாரின் கடைசி கட்ட அதிரடி பிரச்சார பதிவு:
ரீமேக் திரைப்படங்கள் (1) - பராசக்தி

38 Comments:

  1. நாகை சிவா said...

    //மொத்தத்தில்: ஒரு தடவை நிச்சயம் பார்க்கலாம். சரத்துக்காகவாது கண்டிப்பாக பார்க்க வேண்டும்.//

    சொல்லிட்டல தலைவா, ஒரு தபா பாத்தா போச்சு... இந்த படத்தின் தலைப்பை கேட்டவுடனே இந்த படம் பாக்கனும் என்று நினைத்து இருந்தேன். இப்ப நீயும் கூவிட்ட, அப்புறம் என்ன....


  2. நாகை சிவா said...

    //இண்டிப்ளாக்கீஸில் எனக்கு வோட்டளித்துவிட்டீர்களா?
    மொத்த ப்ராஸஸ் பத்து நிமிடம் ஆகும். ஒரு மெயில் ஐடி தேவைப்படும். பதில் தெரியாத கேள்விகளுக்கு no answer என்று தெரிவு செய்யலாம். Please Click on the Link below to start the voting process. http://poll.indibloggies.org/index.php?sid=1//

    போட்டாச்சு. போட்டாச்சு....... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்


  3. rv said...

    ஆரது? அம்ம புலியாரா? எப்படி இருக்கீக ராசா?

    படம் பாரும் கண்டிப்பா.. ஊருபக்கம் தான் இன்னும் உறுமிகிட்டிகிருக்கீரா?


  4. வெளிகண்ட நாதர் said...

    //சுட்டுவிரலை நீட்டி நீட்டி, முழியை உருட்டி உருட்டி, தலை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் ஆட்டினால் ஜோவின் நடிப்பு அகராதியில் முற்றிற்று வந்துவிடும்: இதற்கு மேல் நடிப்பு என்று இவரிடம் எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்பதால் ஒன்றும் சொல்வதற்கில்லை.//பரவாயில்லை, கனகச்சிதமா சொல்லிட்டீங்க! அவ்வளவு தான் ஜோன்னு, ஆனா முண்டைகன்னி முழி தானே ப்ளஸ்!


  5. பினாத்தல் சுரேஷ் said...

    ஜுவனைல் டயபடீஸ் பத்திக்கதையா! நான் ஒரு ப்ளாட் வச்சுருந்தேன்.. திருடிட்டாரா கௌதம்!

    இதுக்கு எதாவது கேஸ் போட முடியுமா? இல்லை வேட்டையாடு விளையாடு சீஸன்லே திட்டனது போல திட்டி மட்டும் விட்டுறலாமா?

    ஆலோசனை கொடுங்க டாக்டர்!


  6. Chinna Ammini said...

    கவலயே படாதீங்க!! காசா பணமா! வோட்டுதான போட்டுருவோம். வெற்றி பெற வாழ்த்துக்கள்!


  7. rv said...

    புலியார்,
    வோட்டுக்கு நன்றி. தேடிப்பிடிச்சு போடறதுக்குள்ள கண்ணக்கட்டிடுச்சா?

    புலிகள் ஆதரவு எனக்குத்தான்னு நான் அறிக்கை விட்டா என் அரசியல் எதிர்காலம் எப்படியிருக்கும்னு சொல்லமுடியுமா??


  8. rv said...

    வெளிகண்டநாதரே,
    //அவ்வளவு தான் ஜோன்னு, ஆனா முண்டைகன்னி முழி தானே ப்ளஸ்!//
    ப்ளஸ்ஸா??? 8)


  9. rv said...

    பெனாத்தலார்,
    //இதுக்கு எதாவது கேஸ் போட முடியுமா? இல்லை வேட்டையாடு விளையாடு சீஸன்லே திட்டனது போல திட்டி மட்டும் விட்டுறலாமா?//

    சும்மானாச்சுக்கும் விட்டா எப்படி?

    'derailed' பாருங்க கொஞ்சம். முன்னாடி வந்த நாவல்/படத்தோட தழுவல். ஆனா கிரெடிட்ஸ்ல போடலை. அப்புறமா எப்படி திட்டறதுன்னு டிஸைட் பண்ணலாம். :))


  10. இலவசக்கொத்தனார் said...

    வோட்டு கேட்க நடிகர்களை கூட்டிக்கிட்டு வரதை பாத்து இருக்கேன். அங்க இருந்த சரத் அப்புறம் அங்க இருந்து இங்க போனாரு, இப்போ இங்க இருந்து உம்ம பக்கம் வந்தாச்சா! பாவமாத்தான் இருக்கு அவர் நிலமை. ஆமா அப்படியே அவங்க தங்கமணி சீரியல் பத்தி எதனா எழுதி அவங்களையும் பிரச்சாரத்துக்கு கூட்டிக்க வேண்டியதுதானே. :))


  11. G.Ragavan said...

    சொல்லீட்டீங்கள்ள......பாத்துட்டாப் போச்சு! பாத்துட்டு ஒரு பதிவும் போட்டுட்டாப் போச்சு.


  12. கதிர் said...

    நல்ல அலசல். நீங்க என்னதான் சொன்னாலும் படத்தை பார்த்துவிடுவோம்.

    கதையின் அடிநாதம் பாக்யராஜ் ஸ்டைல்ல இருக்கற மாதிரி இருக்குதே! :))


  13. Geetha Sambasivam said...

    வோட்டெல்லாம் போட்டுட்டு வந்தாச்சு, உங்களோட மத்தப் பதிவுகள் எதுவும் திறக்கலை, இது மட்டும் எப்படித் திறந்ததுன்னு புரியலையே? சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன? :D


  14. மணியன் said...

    நீங்க சொல்லிட்டீங்க, நாங்க பார்த்திருவோம்.
    தேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தான் ஆள் இல்லைபோல :(
    வெற்றிபெற வாழ்த்துக்கள் !


  15. பத்மா அர்விந்த் said...

    இவ்வளவு கஷ்டப்பட்டு நடிகர்களை அழைத்து வந்து வோட்டு கேட்ட்டதுக்காகவே வோட்டு போடலாம். அப்புறம் சுரேஷ் வேற பிளாஷ் போட்டு பயமுறுத்த ஆரம்பிச்சா நீங்கதான் பொறுப்பு சரியா?


  16. Siva Sivalingam said...

    Pachai Kili Muthucharam
    .... Based on....

    Derailed (2005)

    Advertising executive Charles Schine is just another Chicago commuter who regularly catches the 8:43 A.M. train to work. But the one day he misses his train and meets Lucinda Harris, his life is changed forever. Lucinda is charming, beautiful and seductive. Despite the fact that each are married with children, their attraction to one another is magnetic. Lunch dates quickly become cocktails after work, and before long, Charles and Lucinda's infatuation leads them to a hotel room. Their seemingly perfect affair goes terribly awry when LaRoche, a brutal stranger, breaks into their room and holds them at gunpoint. This once illicit liaison turns into a nightmare more dangerous and violent than either could have ever imagined. Charles' life soon becomes filled with deception, blackmail, violence and crime. Unable to confide in his wife or speak to the police, Charles finds himself trapped in a world he doesn't recognize, with no trace of the life he once knew.

    Production Status: Released

    Genres: Drama and Thriller

    Running Time: 1 hr. 50 min.

    Release Date: November 11th, 2005 (wide)

    MPAA Rating: R for strong disturbing violence, language and some sexuality.

    Production Co.: Patalex V Productions, di Bonaventura Pictures, Inc.

    Studios: The Weinstein Company , Miramax Films

    U.S. Box Office: $36,020,063

    Filming Locations: London, England
    Chicago, Illinois, USA
    Joliet Correctional Center, Chicago, Illinois, USA

    Produced in: United States


  17. rv said...

    சின்ன அம்மிணி,
    ரொம்ப ரொம்ப நன்றி.

    //காசா பணமா"//னு கேட்டுருக்கறதுக்கு பின்னாடி எதுனாச்சையும் Captain Subtext அ வச்சு மொழிபெயர்க்கணுமா? :))


  18. rv said...

    கொத்ஸூ,
    உம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப்புல சுப்ரீம் ஸ்டார் ஆஜராகிருக்காரு பாருங்க.

    அவரோட தங்கமணியையா? வேணாம் சாமி. 'அப்புறம் நான் எங்க பிரச்சாரத்துக்கு போனேன். வேடிக்கை பார்க்க போன இடத்துல வணக்கம் போடச் சொல்லிட்டாங்கன்னு பேட்டி கொடுப்பாங்க அப்பாலிக்கா'.


  19. rv said...

    வாங்க ஜிரா,
    கண்டிப்பா பாருங்க.

    சரத்துக்காக கண்டிப்பா. அதுபோலவே அவர் சொன்னாப்போல எனக்கே வோட்டும் போடணும். சரியா?

    படம் பாத்துட்டு ஜோவோட மாஸ்டர்பீஸ்னு எல்லாரும் பில்டப் கொடுக்கறத பத்தின உங்க அபிப்பிராயத்தையும் எழுதுங்க. சந்திரமுகிலையே பில்டப் தாங்கலை. இப்போ கைமீறிப்போயிடுச்சு.


  20. rv said...

    தம்பி,
    அடிநாதம் ஆங்கிலப்படமான/ நாவலான "Derailed". டைட்டிலில் க்ரெடிட் போட்ட மாதிரி தெரியவில்லை.


  21. rv said...

    கீதா,
    வோட்டு அளித்தமைக்கு நன்றி!

    //உங்களோட மத்தப் பதிவுகள் எதுவும் திறக்கலை, இது மட்டும் எப்படித் திறந்ததுன்னு புரியலையே? சினிமா பத்தின பதிவுன்னா மட்டும் திறக்குமா என்ன?//
    என்ன சொல்றீங்கன்னு புரியலையே... வலைப்பூ வேலை செய்யலியா?


  22. rv said...

    மணியன்,
    நன்றிங்க.

    //தேர்தல் செம சூடு, வாக்களிக்கத்தான் ஆள் இல்லைபோல//
    நீங்க வேற. கடைசி நேரத்துல அனானிகள் முன்னேற்ற கழகம் அவங்களோட தலைகளுக்காக, அதிரடியா களத்துல இறங்கி பூத் காப்சர் செஞ்சுருவாங்களோன்னு பயத்துல இருக்கேன்.


  23. rv said...

    தேன் துளி,
    பெனாத்தலாரோட ப்ளாஷோடல்லாம் நம்மால போட்டி போட முடியாதுங்க.

    இன்னும் போடக்காணோம். அநேகமா இன்னிக்கு ஒரு சூப்பர் உப்புமா பதிவோட கடைசி கட்ட பிரச்சாரத்த தொடங்குவார் பாருங்க. :))


  24. rv said...

    சிவ சிவலிங்கம்,
    ஆமா, நம்ம ஊருக்கு ஏத்த மாதிரி ஜாங்கிரி புழிஞ்சுருக்காரு கௌதம்.

    imdb தகவலுக்கு நன்றிங்க. தேர்தல்ல வோட்டு போட்டீங்களா?


  25. இலவசக்கொத்தனார் said...

    //கொத்ஸூ,
    உம்ம பேரச் சொன்னதும் என்னா மாதிரியான கெட்டப்புல சுப்ரீம் ஸ்டார் ஆஜராகிருக்காரு பாருங்க.//

    அப்படிப் போடுங்க அருவாளை! இந்த போட்டோவை முதலில் போடாமல் கடைசியில் போட்ட உம்மைக் கண்டிக்கிறோம் அப்படின்னு நாடார் பேரவை (அதுதானே இல்லை வேற எதாவதா? தப்பா இருந்தா சரியான பேரவை பேரு போட்டு படிச்சுக்குங்க) போஸ்டர் அடிச்சு உம்ம வீட்டு சுவத்தில் ஒட்டப் போகுது பாருங்க!!


  26. இலவசக்கொத்தனார் said...

    //அவரோட தங்கமணியையா? வேணாம் சாமி. 'அப்புறம் நான் எங்க பிரச்சாரத்துக்கு போனேன். வேடிக்கை பார்க்க போன இடத்துல வணக்கம் போடச் சொல்லிட்டாங்கன்னு பேட்டி கொடுப்பாங்க அப்பாலிக்கா'.//

    அதெல்லாம் தோத்தாதான். நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல மாட்டாங்க! :)


  27. இலவசக்கொத்தனார் said...

    //அவருடைய ரியாக்ஷனை அப்படியே படம் பிடித்தாகிவிட்டது.//

    ஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்லிட்டுப் போனதாக எதிர்தரப்பு எழுதிடப் போறாங்க!


  28. ramachandranusha(உஷா) said...

    ராமநாதா! இது ஆனாலும் அநியாயம். போட்ட பதிவு சினிமா விமர்சனம்ன்னு லட்சணம். இதுல ஒவ்வொரு பின்னுட்டத்துக்கும் பதில்
    சொல்லரேன்னு சொல்லிட்டு, ஓட்டு போடுங்க போடுங்கன்னா ஓவரா இல்லே????
    உன்னை யாரு இவ்வளவு லேட்டா வரச் சொன்னது? பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))))))


  29. rv said...

    கொத்ஸூ,
    அவர் எந்தப்பேரவைல இருக்காருன்னு அவருக்கே தெரியாமத்தான் இங்க வந்து வோட்டு கேக்குறாரு. அவரப்போயி. பாவம்..


  30. இலவசக்கொத்தனார் said...

    //பந்திக்கு முந்தியவருக்கு எப்போதோ போட்டாச்சே ;-))))))//

    இப்போ என்ன இன்னொரு ஈமெயில் ஐடியா இல்லை? வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆபர் வேற தந்து இருக்கேனே!!


  31. rv said...

    //நீர்தான் கெலிக்கப் போறீரே. அதனால அதெல்லாம் சொல்ல மாட்டாங்க! :)//

    எங்க.. எனக்கெதிரா கழுகாரே களமிறங்கிட்டாரு. இனிமே அ.மு.க அழிச்சாட்டியம் செஞ்சுடுவாங்க.

    பெனாத்தலார் தான் ஏதோ பாகிஸ்தானிய சதி செய்யுறாருன்னு எனக்கொரு பட்சி சொல்லுது.

    இது உண்மையான்னு கண்டுபிடிச்சு தீர்ப்பு சொல்ல விசாரணை கமிஷன் அமைக்க கோரி நாளை வரை விடாது பி.க செய்து தமிழ்மண வைரஸ் பட்டம் பெற முயற்சி செய்து நியாயம் கேக்கப்போறேன்.


  32. இலவசக்கொத்தனார் said...

    என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாதிரி உம்மைப் பத்தி கிசுகிசு எல்லாம் வர வைக்கறீங்க. கழுகாரு எவ்வளவு கமிஷன்?


  33. rv said...

    கொத்ஸூ,
    //ஒழுங்கா போடுமய்யா. உமக்கு ரஜினி பைபை சொல்லிட்டுப் போனதாக எதிர்தரப்பு எழுதிடப் போறாங்க!//

    தலைவரு பாபாஜி கன்ஸல்ட் செய்ய இமயமலைக்கு போயிருக்கார். எலெக்ஷன் முடிஞ்சு வந்து ஒரு குட்டிக்கதை சொல்லி எனக்கு ஆதரவு தெரிவிச்சு பேட்டி கொடுப்பார்.


  34. rv said...

    உஷாக்கா,
    இது என்ன அநியாயமா இருக்கு? எலெக்ஷன்ல ஒவ்வொருத்தரும் ரெண்டு வோட்டு கூட போடாம போனா அப்புறம் ஜனநாயகம் தழைக்குமா?

    அதென்ன பந்திக்கு முந்தியவரு? பாயாசம் ஆச்சுன்னாலும் தயிர் சாதம் கிடாரங்காவாவது போடலாமில்ல?


  35. rv said...

    கொத்ஸு,
    // வெணுமின்னா ஒரு ஜிமெயில் ஐடி இலவசமுன்னு ஆபர் வேற தந்து இருக்கேனே!!//

    ஆகா.. கட்சித்தொண்டன்னா இப்படித்தான இருக்கணும்.. :))


  36. Santhosh said...

    மருத்துவரய்யா,
    கலக்கிப்புட்டிங்க போங்க.


  37. rv said...

    //என்னய்யா சினிமா ரிலீஸ் நேரத்துல காதல் கிசுகிசு மாதிரி உம்மைப் பத்தி கிசுகிசு எல்லாம் வர வைக்கறீங்க. கழுகாரு எவ்வளவு கமிஷன்?//

    ஹி ஹி.. ரேட்டெல்லாம் பப்ளிக்குல டிஸ்கஸ் பண்ணக்கூடாதுய்யா..

    இப்பத்தானே நம்ம பதிவையும் நாலு பேரு மதிச்சு வந்து பாக்கறாங்க. இல்லாங்காட்டி மெயிலனுப்பியில்ல ஆள் திரட்ட வேண்டியிருக்கு. :((


  38. rv said...

    சந்தோஷ்,
    நன்றிங்க.

    ஆனா வோட்டு போட்டீங்களா இல்லியான்னு சொன்னா என் கலக்கம் நிக்கும். :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்