வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்
மயில்குயில் ஆச்சுதடி - அக்கச்சி
மயில்குயில் ஆச்சுதடி
துள்ளலை விட்டுத் தொடங்கினேன் மன்றாடும்
வள்ளலைக் கண்டேனடி - அக்கச்சி
வள்ளலைக் கண்டேனடி
சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்
சோதியைக் கண்டேனடி - அக்கச்சி
சோதியைக் கண்டேனடி
பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேனடி - அக்கச்சி
ஐயரைக் கண்டேனடி
-அருட்காட்சி: திருவருட்பா: இராமலிங்க அடிகளார்
இப்பாடலை எம்.எஸ் பாடி இங்கே கேட்கலாம்.
---
டிஸ்கி: இப்பாடலை இங்கே இட்டதற்கும் வேறெந்த தற்போதைய நிகழ்வுகளுக்கும் சம்பந்தம் இல்லை. அதோடு பாடலில் வரும் கதாபாத்திரங்களான மயில், குயில், ஐயர், சோதி, வள்ளல் யாவும் ஆசிரியரின் கற்பனையே. அதனால் எக்குத்தப்பாக முடிச்சுப்போட்டு பார்த்துக்கொண்டால் நான் பொறுப்பல்ல.
183. மயில் குயில் ஆச்சுதடி
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
நீங்களுமா இராமநாதன்?
எல்லாருமா சேர்ந்து நோண்டு நோண்டுன்னு நோண்டி நொங்கெடுத்தா என்னாதான் செய்வார் பாவம்??
அப்ப அந்த 'அக்கச்சி' நான் இல்லையா?
அனானி,
நான் மட்டும் விதிவிலக்கா இருக்க முடியுமா??
all in good humor.
மீண்டும் ஒரு மொக்கைப் பதிவு தந்த அண்ணன் இராமநாதன் வாழ்க.
(ஆமா, பாட்டு கேட்கறதுக்கும் ஒரு வழி பண்ணியிருக்கலாமில்ல!)
அக்கா,
நீங்களே அக்கச்சியா இருக்க ஆசப்பட்டா நான் வேணாம்னா சொல்லப்போறேன். பட், இந்த மேட்டர்ல இருந்தே ஆகனுமா னு நல்லா யோசிச்சுக்கோங்க. :)))
வாய்யா கொத்ஸூ,
மியா மியானு சுத்திகினு இருந்துட்டு இப்போதான் வழி தெரிஞ்சுச்சா??
இவ்வளவு கருத்தாழமா தத்துவார்த்தமா போட்டுருக்கேன். அதப் போய் மொக்கைனு நாக்குல நரம்பில்லாம பேசுதீரு?
பாட்டு கேக்கணுமே? MIO சுட்டி கொடுக்கறதில நான் எக்ஸ்பர்ட் இல்ல. இருந்தாலும் கொடுத்திருக்கேனே! :P
ஆமா, இந்த பாட்டு எழுதுனது அந்த செந்தில் கவுண்டர் நடிச்ச படத்துக்குத்தானே?
அதாம்பா, கவுண்டர் தங்கச்சிக்கு பெயிண்ட் அடிச்சி செந்திலுக்கு கட்டி வெச்சுருவாரு, அடுத்த நாள் அந்த பொண்ணு குளிச்ச பின்னாடி கருப்பா வந்து நிக்கும். செந்தில் கூட படா அப்ஸெட் ஆவாரு.
அப்போ ஒரு கட்டிங் இறக்கிட்டுப் பாடற மாதிரிதானே சீன்? ஆனா படத்துல ஏம்பா வரலை?
வள்ளலாரின் மிக அருமையான பாடல் இது. தமிழ் விரும்பிகள் அனைவரும் விரும்பும் பாடல் இது என்பதில் ஐயமில்லை. எனக்கும் இந்தப் பாடலும் அது சொல்லும் கருத்தும் மிகவும் பிடிக்கும்.
இந்த மயில் குயில் ஆச்சுதடி என்ற சொற்றொடர் மிகப் பொருள் வாய்ந்தது. விரித்துச் சொன்னால்...சொல்லிக் கொண்டே போகலாம்.
நான் சரியான பொருள்ளதான் பின்னூட்டம் சொல்லியிருக்கேன். இதை எப்படி எடுத்துக்கிட்டாலும் சரியாத்தான் வரும். :-)
//இந்த பாட்டு எழுதுனது அந்த செந்தில் கவுண்டர் நடிச்ச படத்துக்குத்தானே? //
யோவ் ஆனாலும் உன் இளக்கிய அறிவு புள்ளரிக்குதுய்யா! உனக்கு எப்படி இன்னும் கலைமாமாமணி குடுக்காம வுட்டு வச்சுருக்காங்க??
வாங்க ஜிரா,
ஒரு கை குறையுது.. :P
//எனக்கும் இந்தப் பாடலும் அது சொல்லும் கருத்தும் மிகவும் பிடிக்கும்.//
எனக்குந்தான். அதான் பதிவாவே போட்டுட்டேனே..
சுருக்கமாவது மயில் குயிலுக்கெல்லாம் அர்த்தம் சொன்னாக்க பலருக்கும் பயனுள்ளதா இருக்குமுல்ல? குமரன் கூட ஒருதடவை சரியாப்புரியலைன்னு சொல்லிகிட்டிருந்தாரு.
அப்புறம் வேற என்னென்ன அர்த்தம்னும் கண்டுபிடிச்சு சொன்னீங்கன்னா புரிஞ்சுப்போம். :)
//உனக்கு எப்படி இன்னும் கலைமாமாமணி குடுக்காம வுட்டு வச்சுருக்காங்க??//
ஆமா அது ஒண்ணுதான் குறைச்சல். இம்புட்டு பெரிய பட்டம் எல்லாம் குடுத்தா பசங்களுக்குப் படிக்கத் தெரியாது. அவனவன் எழுத்துக்கூட்டிப் படிக்கிறேன் பேர்வழின்னு கடலை-மாமா-மணி அப்படின்னு படிக்கப் போறாங்க.
//அப்புறம் வேற என்னென்ன அர்த்தம்னும் கண்டுபிடிச்சு சொன்னீங்கன்னா புரிஞ்சுப்போம். :)//
எனக்குத் தெரிஞ்சதை சொல்லியாச்சி. இனி ஜிரா அவர் லெவலில் சொன்னாத்தான் உண்டு.
//இந்த மேட்டர்ல இருந்தே ஆகனுமா னு நல்லா யோசிச்சுக்கோங்க. :)))//
ஆஆஆஆஆஆஆ................ எதோ மேட்டர் இருக்கா?
அக்கா உள்குத்து & வெளிக்குத்துகள் எதுவும் தெரியாத ஸீதா& சாதாப்பா.:-)
நானும் நம்ம சொல்லின் செல்வரைக் கேட்டுக்கறேன், 'மயிலையும் குயிலையும்
கொஞ்சம் விவரமாச் சொல்லுங்க'ன்னு.
ஆனா 'சரியான' பொருளா இருக்கணும், ஆமா:-)
அனானி,
கலப்புத்திருமணத்தப் பத்தி நான் ஒருவார்த்தை கூட சொல்லவேயில்லியே. ஏன் என்னப் புடிச்சு திட்டுறீங்க? தப்பான அட்ரஸுக்கு வந்துட்டீங்க போலிருக்கு.
எதுக்கு இதுக்கு ஒரு ரிப்ளைன்னு பதறவேணாம். பி.கனு வந்துட்டா அப்புறம் எல்லாத்துக்கும் தானே! :))
ஆமா, அது என்ன மஞ்ச இஞ்சிக்கொத்துன்னு வச்சுருக்கீங்க?
கொத்ஸு,
//அவனவன் எழுத்துக்கூட்டிப் படிக்கிறேன் பேர்வழின்னு கடலை-மாமா-மணி அப்படின்னு படிக்கப் போறாங்க.//
ஆனாலும் ஓவராத்தான் போய்கிட்டிருக்கீரு.
பை தி வே, யாரு அப்படி படிப்பாங்கன்னு கொஞ்சம் விளக்கமா சொன்னா புரிஞ்சுப்பேன், அறிஞ்சுப்பேன், தெளிஞ்சுப்பேன்.
//எனக்குத் தெரிஞ்சதை சொல்லியாச்சி. இனி ஜிரா அவர் லெவலில் சொன்னாத்தான் உண்டு.//
சாதுவா திரியிற அவரையே மானரோஷமில்லாக் கோழைன்னு பட்டம் கொடுத்து கேவலப்படுத்துறாங்க. அவர இன்னும் வம்புக்கு இழுக்கலாம்னு ஏன்யா கிளம்புறீரு?
ஜிரா, "மயில் குயில் ஆச்சுதடி" இதற்கு அர்த்தம் சொன்னால் நன்றாக இருக்கும்.
பாடகர் உன்னி கிருஷ்ணன் பாடியதை கேட்க இங்கே
எல்லாரும் மயில் குயில் ஆறதப் பத்திக் கேக்குறதால முழுப்பாட்டுக்கும் பொருள் சொல்லாம அந்த ஒரு வரிக்கு மட்டும் சொல்றேன்.
மயிலு மயிலு மயிலம்மான்னு ஏன் சொல்றாங்க? ஜிஜ்ஜிலுஜிலுஜிலுன்னு பாக்க இருக்குறதாலதான. நல்லா மினுமினுன்னு இருக்கும். அது நடக்குற நடையப் பாத்தா அதுதான் பெரிய இது மாதிரி இருக்கும். கண்டுக்காம விட்டுருந்தா காணாமப் போயிருக்கும். ஏன்னா அதோட கொரல் அப்படி. கத்துனாக் கேக்க முடியாது. கேக்குறவனெல்லாம் என்னடா கத்தல் இது....கொடுமையா இருக்கேன்னு சொல்வாங்க. ஒடனே மயிலு ஜில்லுன்னு தோகையை விரிச்சு என்னைப் பார் என்னழகைப் பார்னு படம் காட்டும். ஆனா படம் காட்டிக்கிட்டே இருக்க முடியுமா? திடீர்னு பாத்தா குரல் இனிமையாகி கேக்குறவங்கள்ளாம் என்னடா மயில் இப்பிடிக் கத்துதேன்னு பாத்தா....மயில்தான் குயில். குயில்தான் மயில். ஆனா இப்ப அது ஜிஜ்ஜிலுஜிலுஜிலுன்னு இல்லை. குட்டியாக் கருப்பா அசிங்கமா இருக்குது. ஆனா கொரல் மட்டும் வெல்லம். அப்பத்தான் எல்லாரும் தெரிஞ்சிக்கிட்டாங்களாம்....இதுதான் மயில் குயிலான கதை. :-)
இப்பயாவது எல்லாருக்கும் புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன். இன்னும் புரியனும்னா இனியது கேட்கின்லதான் போடனும்.
ஜிரா, இதைப்பற்றி கூக்ளாரய்ச்சி செய்ததில் எனக்கு மாட்டியது
-----------------------------------
மயில் குயில் ஆவதின் தத்துவ விளக்கத்தை, ஔவை பாடும் 'சண்முகத்
தூலத்தையும்', 'சட்கோணம் ஏதுக்கடி' என்ற குதம்பைச் சித்தர் பாடலையும்
சுட்டி எழுதிய நாளன்றே தாங்கள் கேட்டிருப்பது பொருத்தமே.
இங்கே மயில் என்பது விந்து என்ற ஒளியைக் குறிப்பது; குயில் நாதமெனும் ஒலி.
ஒலியும் ஒளியுமே சிவசக்தி ஐக்கியத்தில் ஆறு அத்துவாக்களாய் விரிந்து அண்டங்களாகி
நிற்பன. சட்கோணத்தின் ஆறு பக்கங்கள் சுட்டுவதும் அவற்றையே. ஆறுமுகம் ஆன
பொருளது. ஒடுங்குகையில் ஒளியெனும் பொருளுலகம், ஒலியில் அடங்கும்.
மீண்டும் ஒலியிலிருந்தே அனைத்தும் தோன்றும். 'வேதத்தொலி கொண்டு',
'எம் இறை நல்வீணை வாசிக்குமே' போன்ற திருமுறைக் குறிப்புகளால் இதை
உணரலாம். 'சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்' என்று திருமூலர் சுட்டுவது
போல் சாதாக்கியத் தத்துவத்திலிருந்து, அகர உகர மகரமான முத்தமிழே
வேத ஒலிகளாய் விரிந்து பெருகும். 'நாதம் எழுந்தெழுந்தோடி வந்துறையும்
திருக்கூத்து' என்பார் மணிவாசகர்.
இந்த அண்ட நிகழ்வைப் பிண்டத்தில், தஹராகாசத்தில் (வள்ளல் பெருமான்
தஹரவித்யையைப் போதித்தவர்) - சிற்றம்பலத்தில் காண்கையில் - அகவானத்தில்
ஆடும் மயில், குயிலாகி ஒடுங்கும். அக்கச்சி என்று குண்டலினி மஹாசக்தியைப்
பாடுகிறார்; பொதுவாய்ச் சித்தர்கள், வாலைப்பெண், கண்ணம்மா,
குதம்பாய், ஞானப்பெண்ணே என்று பாடுவது போல.
-----------------------------------
மேலும் இதைப்பற்றி ஆராய்ச்சிகள்ச் செய்து தங்களின் பதிவிலோ அல்லது தனிப்பதிவாக போடலாம்.
வள்ளலார் பாடல்கள் தத்துவப் புதையல்கள்
அக்கா,
//எதுவும் தெரியாத ஸீதா& சாதாப்பா.//
அப்படியா????? :))))
இன்றைய நிலவரப்படி இப்பத்தான் 'சரியான' பொருளுக்கே வந்திருக்கு.
நியுஸ் forecast மாதிரி பதிவு போட்ட என்ன நினச்சு எனக்கே ஷாக்காக்கீது.
கால்கரி,
உன்னியோட சுட்டிக்கு நன்றி.
இந்தப்பாட்ட பேமஸ் ஆக்கின எம்.எஸ்ஸோட சுட்டி பதிவுல இருக்கே. வேலை செய்யலியா?
ஜிரா,
ஒண்ணு இருந்தா இன்னொண்ணு டிபெக்டிவா இருக்கும்னு சொல்றீங்களா? :)
சும்மா..
beauty lies in the eyes of the beholderனும் சொல்லலாமோ?
கால்காரி சிவா, மயில் குயில் ஆவதற்கு நான் இங்கிட்ட விளக்கம் தத்துவார்த்தமான விளக்கமல்ல. பதிவுக்கான விளக்கம். மயில் குயில் ஆவதைப் பெரிய மெய்ஞானநூல்களில் காணலாம். அதைப் பற்றி விரிவாக எழுத வேண்டும். இந்த நாதவிந்து தத்துவம்தான் சைவசித்தாந்தத்தின் மூலம். அதுதான் நாத விந்து கலாதீ நமோ நம. ஒளியும் ஒலியும் காட்டும் முருகன் என்று இனியதில் ஏற்கனவே ஒரு பதிவு எழுதினேன். மறுபடியும் இதைப்பற்றியும் எழுத வேண்டும் என்று நினைக்கிறேன்.
கால்கரி சிவா,
எல்லாரும் 'என்னோட தேடல், சமூகத்தோட தேடல்'னு எல்லாம் கெத்தா சொல்லிகிட்டு திரியறது இந்த கூகிள் தேடல் தானா?
அதையும் கூகிளாரையே தேடிச் சொல்லவும்! :))
jokes apart, ரொம்ப நன்றிங்க உங்க விரிவான பின்னூட்டத்துக்கு.
ஜிரா,
நன்றி.
Post a Comment