152. குலுக்குநடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை

தமிழகத்தின் முன்னாள் கனவுக்கன்னி, லட்சோப லட்சம் தமிழ் இளைஞர்களின் காதல் இளவரசி, இன்றைய குலுக்ஸ் ஜில்பாஸ்ரீயை பமகவிற்கு, சீ, தமிழ் கலைச்சேவைக்கென்றே பெற்றெடுத்த தெய்வத்தாய் ஜலஜாஸ்ரீ இன்று பமகவிற்கு ஆதரவாய் வெளியிட்டுள்ள அறிக்கையாவது.




மே 4, 2006
ஸ்விஸ்ஸாபுரம், செயிண்ட் மாரிட்ஸ்

வணக்கம் தமிழர்களே! என் இளைஞர்களே! எனக்கு கோவில் கட்டி கும்பிட்ட நான் உங்களை என்றும் மறவேன். சிறிதுகாலம் கலைச்சேவையிலிருந்து விடைபெற்றுக்கொண்டு, இங்கு வந்து எனது ஆன்மிக குருவான சுவாமி குஜிலியானந்தாவிற்கு தொண்டுகள் செய்துவருகிறேன். தமிழகத்தேர்தல் நெருங்குகையில், தமிழகத்தில் என் வாரமலர் செண்டர் ஸ்ப்ரெட்டை கட் செய்து பீரொவின் உள்பக்கத்தில் மறைவாய் ஒட்டி கற்பூரம் காட்டி நாள்தோறும் வழிபடும் என் ரசிகர்களுக்கு இத்தேர்தல் சமயத்தில் சில விஷயங்கள் சொல்லவேண்டும் என்று நினைத்ததன் விளைவே இது.

ஒரு டாக்டராகி சூடான் சென்று மருத்துவத்தொண்டு புரியும் வாய்ப்புகளும், துபாய் சென்று கலைச்சேவை ஆற்றும் சந்தர்ப்பங்களும், கம்பூட்டர் படித்து ஆஸ்திரேலியா செல்ல ஸ்கோப்புகளும் இருந்திருந்தாலும், தமிழ்த்திரைப்படவுலகை மலையாள திரைப்பட உலக அளவிற்கு தரமானதாக்கவேண்டும் என்று கோடிக்கணக்கில் உங்களிடமிருந்து அன்று வந்த அன்புக்கட்டளைகளினால், ஐந்தாம் க்ளாஸ் பெயிலாகிவிட்டு, நான் கலைச்சேவையில் தற்செயலாக, ஆக்ஸிடெண்டலாக, தொபுக்கடீரென குதித்தேன். வெள்ளித்திரையில் மட்டுமன்றி வண்ணத்திரையிலும் நானே செண்டரில் இருந்தேன் உங்கள் பேராதரவோடு. தமிழகமெங்கும் எனக்கு தேவாலயங்கள் எழுப்பி கும்பாபிஷேகம் செய்து எனக்கு உங்கள் நன்றிக்கடனை தெரிவித்தீர்கள்.

இன்று தினமும் எனக்கு வரும் லட்சக்கணக்கான கலாரசிகர்களின் கோரிக்கை ஒன்றுதான். கலைச்சேவையில் வெற்றித்தடம் பதித்த தாயே, நீ (நான் தான்) மக்கட்சேவையை வெற்றிடமாய் விட்டது ஏனோ என்று இரத்தத்தில் எழுதிய கடிதங்கள் அனுப்புகின்றனர் என் ரசிகர்கள். என் நெஞ்சக்கூடு வருத்தத்தில் பொங்கியது. அதனால் நம்மெல்லாருக்கும் குருவான சுவாமிஜியிடம் இதைப் பற்றி அனுமதியும் அறிவுரையும் கேட்டிருந்தேன். அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்!

தமிழக ரசிகர்களே! உங்களிடம் ஒன்று கேட்பேன். ஊசி போட சான்ஸ் கிடைத்தும் உங்களுக்காக பாசிவிற்பவளாய் ஆட்டம்போடும் என் மகள் ஜில்பாஸ்ரீக்கு நீங்கள் செய்யும் நன்றிக்கடன் என்ன? உரல் எழுத வாய்ப்புகள் கிடைத்தும் உங்களுக்காக உரலிடித்து ஆடிய எனக்கு நீங்கள் செய்யும் கைம்மாறு என்ன? எங்கள் வாழ்க்கைகளையே உங்களுக்காக அர்ப்பணித்துக்கொண்டோம். இப்போது வெறும் ஆட்சியைத்தானே கேட்கிறோம். எங்கள் கட்சி பமக விற்கு ஓட்டு போட்டு ஆட்சியில் அமர்த்துங்கள். வண்ணத்திரையில் நடுவில் வந்த நாங்கள் தினமூடியின் முதல் பக்கத்தில் வருவோம். வந்து உங்கள் மனதின் கலைப்பசியைத் தீர்ப்போம் என்று வாக்குறுதி அளிக்கிறேன்.

ஓம் குரு குஜிலியாய நமஹ!

---
நடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை முற்றிற்று.

20 Comments:

  1. நன்மனம் said...

    //...நான் கலைச்சேவையில் தற்செயலாக, ஆக்ஸிடெண்டலாக, தொபுக்கடீரென குதித்தேன்...//

    அன்னிக்கு வந்து மாட்னவங்கதான் டாக்டர் கிட்ட. டாக்டரு மெரட்டியே இந்த அரி(றி)க்கை என்பதை எடுத்துக்காட்ட வேறு சான்று வேண்டுமோ.


  2. Maraboor J Chandrasekaran said...

    நல்ல நகைச்சுவை பதிவு!! சில சீரியஸ் மேட்டரையும் தொட்டுட்டீங்க, டாக்டர். [அட, பமக இல்ல்லைய்யா, இதேழுதுனதே ஒரு டாக்டர் தான் ;-) ]

    //....இதைப் பற்றி அனுமதியும் அறிவுரையும் கேட்டிருந்தேன். அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்! //

    ஆமாமாம், தாயார்தான் ஆக்கிடுவாங்க! எழுத்துப்பிழை இல்ல, இது நிஜம்; லேட்டஸ்ட் சாமியாருங்கள நம்பமுடியல சாமியோவ்!


  3. rv said...

    நன்மனம்,
    ஜலஜாஸ்ரீய நான் நேர்ல பார்த்ததுகூட கிடையாது.. ஹி ஹி.. வாரமலர்ல நமக்கு ரொம்ப நெருக்கமானவங்க அவங்க. நான் போய் அவங்கள மிரட்டினேன்னு அநியாயமா குற்றம் சாட்டறீங்களே!


  4. ஜொள்ளுப்பாண்டி said...

    டாக்டர் எத்தினி நாளைக்குத்தான் தனியாவே அறிக்கைய விட்டுகிட்டு இருப்பீங்க? எனக்கொரு சந்தேகம் தனியாவே கட்சிப்பணி ஆத்தரீங்களே பயமாவே இல்லையா? இன்னும் ஒன்னும் கெட்டுப்போயிடலே ! பேசாம எங்க சங்கத்துக்கு வந்து ஜோதியிலே ஐக்கியமாய்டுங்க ! என்ன? சொல்றத சொல்லிபிட்டேன். என்ன பதவி வேணும்? இன்னும் என்ன தயக்கம்? வ.வா சங்கத்திலே அங்கம் வகிக்க வருக வருக என அழைக்கிறேன் !!!


  5. நாமக்கல் சிபி said...

    ப.ம.க வை ஆதரித்துப் பேசிய குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ கூட்டத்தில் பொதுமக்கள் அழுகின தக்களி பழங்களை வீசினர்.

    வீடியோ காட்சி


  6. வெளிகண்ட நாதர் said...

    குலுக்கு நடிகை ஜலஜாஸ்ரீ அறிக்கை தமாஷ் தான் போங்க! என்ன நம்ம வூட்டு பக்கம் ஆளையே காணோம்!


  7. நாமக்கல் சிபி said...

    //என்ன நம்ம வூட்டு பக்கம் ஆளையே காணோம்//

    பாவம் அவங்களே பொதுமக்கள் தக்காளி வீசிட்டாங்கன்னு வெறுத்துப் போய் இருக்காங்க! அவங்க எப்படி வீட்டுப் பக்கம் தலை காட்டுறது.

    நீங்க வாங்க வெளிகண்டரே! நம்ம சங்கப் பணி எவ்வளவோ இருக்கு!


  8. rv said...

    மரபூர் ஜெ.சி,
    நன்றி.

    அது எழுத்துப்பிழை தாங்க. சத்தியமா... ;)


  9. rv said...

    ஜொள்ளுப்பாண்டி,
    எங்க தல வந்துட்டாருல்ல.. இனி பாருமய்யா கூத்த.

    டாக்டர்னு ஆங்கிலத்துல சொன்னா கேஸ் போடுவேன். மருத்துவர் சின்ன ஐயா மால்விரும்பி தான் நம்ம தமிழ்பேர். இனிமே அப்படித்தான் கூப்பிடணும். சொல்லிட்டேன். இல்லேன்னா தார் டின் எடுத்துகிட்டு எங்க தொண்டருங்க நாயுடு ஹால் பக்கம் வந்துடுவாங்க. :)


  10. rv said...

    சிபி,
    எங்க கட்சியில இருந்துகிட்டே எதிரிக்கட்சிகிட்ட பொட்டி வாங்கிட்டு ஜலஜாஸ்ரீக்கு எதிரா நீங்களும் கூட்டத்துல ஊடுருவின வ.வா.ச ல இருக்கற 5 குண்டர்களும் தக்காளி வீசுனீங்கன்னு எங்களுக்கும் தெரியும். தக்காளி வீசுனத சொன்ன நீங்க, அதக் கண்டு வெகுண்டெழுந்த ஜலஜாஸ்ரீயின் ரசிகர்களும், பொதுமக்களும் உங்க கூட்டத்துக்கு போட்ட தர்ம அடியையும், செருப்பு மாலையும் பத்தி சொல்லாம சென்சார் பண்ணது ஏனோ?


  11. நாமக்கல் சிபி said...

    ஐயா மருத்துவரே!

    அந்த வீடியோ காட்சியை முதலில் ஒளிபரப்பியதே உங்கள் குடும்ப ஊடகமான ப. டி.வி தான்!


  12. பெருசு said...

    வாழ்வா சாவா

    அப்படிங்கறத வட மொழில எழுதிவச்சி படிச்சா
    வ.வா.சா அப்படின்னுதான் படிப்பா ஜலஜாஸ்ரீ.

    போட்ட செருப்பு மாலைல சரியான சைஸ் செருப்பா போட்டிருந்தால்
    நாமக்கல்லிருந்து நடந்தே வந்த கண் கண்ணாடி அழகன் சிபியார் எள் அளவும், எள்ளின் மூக்களவும், மூக்கின் குறுக்களவும் சிறிதும் மறுப்பு கூற விழைய மாட்டார் என்பதை
    ரெண்டெ கால் இஞ்சு ஆணித்தரமாக கூறிக்கொள்கிறேன்.


  13. நாமக்கல் சிபி said...

    //வாழ்வா சாவா //

    உங்க கட்சியோட நிலைமை இப்படி ஆய்டுச்சா! அடடா! அதை வேற ஜலஜாஷ்ரீ கிட்ட குடுத்து படிக்க சொன்னா எப்படிங்க!


  14. rv said...

    வெளிகண்ட நாதர்,
    நன்றி.

    தனிமடல் பாருங்க.


  15. Karthik Jayanth said...

    //அவரும் அவருக்கே உரிய அன்போடு வருகின்ற தேர்தலுக்காக என்னை முற்றிலும் தாயாராக்கியிருக்கிறார்!


    உங்கள் கட்சியில் களை எடுக்க வேண்டுமே !!! .. கட்சியின் நிலமை தெளிவாக தெரிகிறது அய்யா.. டாக்டர் என்ன இது ? சொற் குற்றமா ? இல்ல பொருள் குற்றமா ? இல்லை உண்மை நிலையா ?

    வெள்ளை அறிக்கை வேண்டுவது ப.ம.க தொண்டர்கள். தரவில்லை என்றால் ஆகிவிடுவார்கள் குண்டர்கள்


  16. rv said...
    This comment has been removed by a blog administrator.

  17. rv said...

    சிபி,
    எங்க கட்சிக்காரங்க மேல குண்டர்கள் தக்காளி வீசினாலும் நேர்மையாக, நாணயமாக, கண்ணியமாக, ஒழுக்கமாக, நடுநிலைமையுடன் செய்திகளை வழங்கும் ஒரே ஊடகம் எங்களுடையதுதான் என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்னி!

    உங்கள் தலிவர் தக்காளி மற்றும் இன்னவென்றே பொதுவில் சொல்லமுடியாத வஸ்துக்களினால் அடிவாங்குகிற சுமார் நூறு கிளிப்புகள் கொண்ட பிரத்தியேக டிவிடி எங்கள் வசம் உள்ளது. அனுப்பி வைக்கிறேன், நீங்கள் நடுநிலைமைவியாதியென்றால் உங்கள் ஊடகம் (அதுக்குத்தான் காசில்லையே, ஆரமிச்ச இலவச தளத்தில்) வெளியிட உங்களுக்கு தெகிரியமும் மஞ்சா சோறும் இருக்கிறதா என்று கேட்கும் தமிழர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?


  18. rv said...

    பெரு(சு),

    ஜலஜாஸ்ரீ மேட்டர் கிடக்கட்டும். அது என்னய்யா, நீங்க அவங்க கட்சியில இருக்கறதே அந்தக் கட்சியில இருக்கற அஞ்சுபேருக்குமே தெரியல. நீர் என்னடான்னா மீட்டீங் போட்டேன், பிரியாணி கொடுத்தேன்னு அளந்துவிடுறீரு?

    எதாவது ம.வ.வா.ச, ல.வ.வா.சன்னு புது கட்சி தொடங்கிருக்கீரா?

    ஆனா, வ.வா.ச மேட்டர் கரெக்டா தான் தெரிஞ்சு வச்சுருக்கீரு. நிதிநிலைமை அப்படி, அதான் செருப்பு மாலை போட்டாலும் முகங்கோணாம சிரிச்சுகிட்டே வீட்டுக்கு அள்ளிகிட்டு போயிடுறாங்க போல வ.வா.ச ஐவர்! :))


  19. rv said...

    அண்ணா சிபியண்ணா,
    ////வாழ்வா சாவா //

    உங்க கட்சியோட நிலைமை இப்படி ஆய்டுச்சா! அடடா! அதை வேற ஜலஜாஷ்ரீ கிட்ட குடுத்து படிக்க சொன்னா எப்படிங்க!//

    உங்க காலக்காட்டுங்கண்ணா... எப்படியா இப்படி? பாவம் ஏதோ ஒரு அறியாப்புள்ளை பெருல உக்காந்துகிட்டு போயும் போயும் உம்ம கட்சிதொண்டு செய்யறேன்னு சொல்லிகிட்டுருக்கு. அத ஏன் வேணாமுங்கறீங்க? ஐவருடன் அறுவரானோம்னா 4ரூவா 45 பைசாவ எப்படி பிரிச்சுக்கறதுன்னு சண்டை வருமேன்னுட்டா..


    பெரு(சு)
    இனியும் இப்படி அவமானப்படபோறீங்களா? எங்க பக்கம் வாங்க. மதிப்பும் மரியாதையும் அளிக்கத் தெரிந்த ஒரே கட்சி எங்களுதுதான். தென் அமெரிக்க கண்டத்துக்கே உங்கள கொ.ப.சே வா நியமிக்க எங்கள் அன்புத்தலைவர் காத்திகிட்டுருக்கார். அப்படியே, ஸ்வீடனுக்கும் நீங்க தான் பிரதமர். இனி என்ன தயக்கம்? வாங்க நம்ம பக்கம்.


  20. டிபிஆர்.ஜோசப் said...

    எங்கள் கட்சி பமக விற்கு //

    பமக. இதன் விரிவாக்கம் சொல்லுங்களேன்.. ஏன்னா ஓட்டுப்போட போகும்போது வசதியா இருக்கும்ல?

    1990க்கு அப்புறம் இந்த தேர்தல்லதான் ஓட்டு போடற வாய்ப்பு கிடைச்சிருக்கு.. இந்த நேரத்துல போயி கன்ஃப்யூஸ் பண்ணாம இருங்க ப்ளீஸ்:-(


 

வார்ப்புரு | தமிழாக்கம்