ஏய், யாருப்பா குறுக்க..!

(என் கற்பனைக் கதை)

காலம்பர பத்து மணி இருக்கும். எம் பொண்டாட்டிகிட்ட எவ்வளவோ சொன்னேன், அவ கேக்கலியே!

"அடியே நேத்துலேந்து கொஞ்சம் ஒடம்பு செரியில்ல. அதனால நான் இன்னிக்கு லீவு. நீயே போய் காய்கறி வாங்கிட்டு வாம்மா..ப்ளிஸ்!".
"சும்மா எங்கிட்டியே கதவிடாதீங்க. ராத்திரி கண்ணு முழிச்சு 'F.TV' பாத்துகிட்டிருந்துட்டு, இப்போ டபாய்க்கிறிங்களா. ஆபிஸ் போனாபோகுது, எங்கூட மார்கெட்டுக்கு வந்தேயாகனும். நெறயா சாமான் வாங்கனும், அதயெல்லாம் யாரு தூக்கறது. ஒழுங்கா 10 நிமிஷத்துல கிளம்புங்க, புரியுதா?". நானும் வாயமூடிகிட்டு கெளம்பிட்டேன்.

பஸ் ஸ்டாண்டு பக்கம் அவனவன் ஆபிஸ் அவசரத்துல ஓடிகிட்டிருந்தான். நிக்க எடமில்ல. மார்கெட்ல அவ, ராத்திரி சமைக்க கெழங்கு, வெங்காயம்னு வாங்கி ரெண்டு பைய ரொப்பிட்டா.

"அப்புறம் என்னடி?"
"கொத்தமல்லி, பூண்டு, இஞ்சியும் வாங்கிட்டா நீங்க வீட்டுக்கு போலாம்."
"அப்ப நீ?"
"தெரு மொனையில 'அமுதம் கட்-பீஸ்' இருக்குல்ல. அங்க நாலு 'பிட்'டு துணி வாங்கனும். வேனுன்னா நீங்களும் வாங்க."
"ஆள விடுதாயே, நீ சொன்னத வாங்கிட்டு நா கெளம்பறேன்."

நமக்கோ தலவலி. சீக்கிரம் வீட்டுக்கு போனாபோதுங்கற அவசரத்துல அவ சொன்னதெல்லாம் வாங்க அந்த பக்கமா போனேன். அங்கதான் கொசுரு கடைங்க இருக்கு. கொஞ்சதூரம் தள்ளி ஒரே கூட்டம். எதாவது புதுக்கடயா இருக்கும். முன்னாடி போய் எட்டிபாத்தேன். "மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர..." அப்டின்னு ஒரு பாட்ட அலர விட்டுட்டு பத்து பேரு ஆடிகிட்டு இருந்தாங்க. கொளுத்துர வெய்யில்ல மர கழன்டிருச்சு போல-னு அவங்கள தாண்ட அடி எடுத்துவெச்சேன். ஒருத்தன் குறுக்கவந்து,

"யோவ்..ஒனக்கு தனியாச்சொல்லனுமா! பாத்தா தெரியல? ஷுட்டிங் நடக்குதுயா. இந்த பக்கம் போக முடியாது."
"அந்த பக்கம் இருக்குர கடைக்கு போனுமே, எப்டியா போறது?"
"இப்டி முடியாது. பின்னாடியாப்போயி, அய்யங்கடைத்தெரு வழியா சுத்தி போகலாம்."
"தம்பி, அது பயங்கர சுத்து. கொங்சம் வழி விடேன். ஒரே ஓட்டமா ஓடிடறேன்."
"அதில்லயா, டைரக்டர் எப்போ 'ஷாட்' சொல்வார்-னு தெரியாது. சீனுக்கு குறுக்க ஓடினா எப்படி?". சொல்லிவாய் மூடல, அந்த பயலக்காணோம்.

ஒரு வழியா, பதினொண்னே முக்காலுக்கு வழிவிட்டானுங்க. வீட்டுக்கு போய் கட்டில்ல விழுந்ததுதான் தெரியும்.

(3 மாதங்களுக்கு பின், ஒரு சனிக்கிழமை)
"அப்பா ! விஜய் நடிச்ச 'மதுர' படம் வந்திருக்கு பா. நம்ம ஊர்ல எடுத்த படமாம். இன்னிக்கு சாய்ந்தரம் போலாமா?"
"டிக்கெட் கிடைக்குமா? கிடைச்சா போலாம்."
"என் ஃப்ரெண்ட்-கிட்ட சொல்லிட்டேன். அவன் நேரா தியேட்டருக்கு வரச்சொல்லிட்டான்."

படம் ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷத்துல எங்கேயோ கேட்ட பாட்டு "மச்சான் பேரு மதுர, நீ நின்னு பாரு எதிர...". பரவாயில்ல, விஜய் நல்லா ஆடுறார்.அந்த ஆட்டத்த பாக்கவிடாம அதென்ன, ஒவ்வொரு சீன் ஆரம்பத்துலயும் நாலு பசங்க, கோழி, ஆடு மாடு, தள்ளுவண்டிக்காரன் இப்டி யாராவது குறுக்க ஓடுறாங்க. டைரக்டர் கவனிக்காம இருந்துட்டாரு போல.

"அய்யோ அப்பா, அவங்கள்ளாம் துணை-நடிகங்கபா. அவுங்க அப்டி இப்டி ஓடும்போது, நிஜமாவே விஜய் மார்கெட்ல மக்களுக்கு நடுவுல ஆடுற மாதிரி 'நேச்சுரலா' இருக்கில்ல?"

அடப்பாவீங்களா! நான் குறுக்கபோகக்கூடாதுனு சொல்லிட்டு நீங்களே ஆள் வெச்சு இங்கயும் அங்கயும் ஓடவிட்டிருக்கீங்களே. இவுங்களால பாதிநேரம் விஜய் ஆடுறதே தெரியல. படம் எடுக்குறாங்களாம் படம்.

எங்க போயி முட்டிக்கறது?

16 Comments:

  1. rv said...

    சொல்லவிட்டது. இதுவும் நண்பரோட பதிவுதான். :)


  2. ENNAR said...

    யாருமே கேட்பதில்லையே மனைவியும் சரி மக்களும் சரி தொண்டனும் சரி தலைவனும் சரி இந்த கம்ப்யூட்டரே சில நேரங்களில் கேட்க்க மாட்டேங்குது.


  3. G.Ragavan said...

    நல்லாருக்கு இராமநாதன். நாங்கூட படத்துல நீங்களும் வர்ரீங்கன்னு சொல்வாங்களோன்னு நெனச்சேன். ஆனா வேற மாதிரி வந்துருச்சு. நல்லாருக்கு.

    அதுசரி...முதல் பின்னூட்டம் புரியலையே....இது உங்க நண்பரோட அனுபவமா!


  4. வெளிகண்ட நாதர் said...

    கதைன்னு இல்ல இராமநாதன், நிஜத்திலயும் எனக்கு இப்படிதான், கூடவே பையை தூக்கிட்டு அலையறது, கொடுமை, இதை நான் டெல்லியில அனுபவிச்சிருக்கேன். காரு கீரு வச்சிருந்தாலும், அந்த தரை கடைங்கள் கூட்ட நீளத்தில வாங்கிட்டு, தூக்கிட்டு வரதுக்குள்ள தாவு தீர்ந்திடும். இங்கே மாதிரி தள்ளுவண்டி எதுவும் இல்ல பார்த்தீங்களா!


  5. Unknown said...

    அந்த மாதிரி குறுக்கும் நெடுக்கும் போறவங்க கூட கொஞ்சமாவது 'பார்க்கறா' மாதிரி இருக்க வேண்டாமா?

    உங்க மாதிரி இந்த கற்பனைக் கதாபாத்திரம் 'அவ்வளோ' அழகு இல்லைங்களோ?

    ;)


  6. rv said...

    என்னார்,
    ரொம்ப நொந்துபோயிருக்கீங்க போலிருக்கு. :)


  7. rv said...

    ஜிரா,
    //அதுசரி...முதல் பின்னூட்டம் புரியலையே....இது உங்க நண்பரோட அனுபவமா!
    #//
    அனுபவம் இல்லீங்க. அதான் கற்பனைக் கதைன்னு டாப்லேயே போட்டுருக்கே!


  8. rv said...

    வெளிகண்ட நாதர்,
    தள்ளுவண்டியும் கார் வரைக்கும் தானே விடுவாங்க. இந்தக் கதைல வர்ற சந்துக்குள்ளேலாம் காரென்ன, சைக்கிள் போறதே கஷ்டம்.


  9. rv said...

    //கொஞ்சமாவது 'பார்க்கறா' மாதிரி இருக்க வேண்டாமா?
    //
    துபாய்வாசி,
    இது கொஞ்சம் டூ மச்! நம்ம நிஜமே இவ்ளோ அழகுன்னா, கற்பனைல ப்ராட் பிட்டாட்டம் வர மாட்டோம்?


  10. குமரன் (Kumaran) said...

    நல்ல கதை இராமநாதன். அதென்ன இது உங்கள் நண்பரின் பதிவுன்னு பதிவு போடறப்பவே சொல்ல மாட்டீங்களா? தனியா முதல் பின்னூட்டமா போட்டா சீக்கிரமே 'மறுமொழியப்பட்ட' பட்டியலில் வரும்ன்னா? :-)


  11. குமரன் (Kumaran) said...

    ஆமாம். நண்பனின் பதிவா? எந்த நண்பன்னு தெளிவா சொல்லிடுங்க. பிரச்சனையாகப் போகுது. :-)


  12. குமரன் (Kumaran) said...

    வாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.


  13. rv said...

    குமரன்,
    நன்றி
    பின்னூட்ட வளர்ப்பு கலைன்னு பெரிய லெக்சர் கொடுத்து, அத நீங்க அப்பட்ட காப்பி அடிச்செல்லாம் முடிஞ்சப்புறம் சீதைக்கு இராமன்னு ஒண்ணு சொல்வாங்களே. அந்த மாதிரியில்ல கேக்கறீங்க.


  14. rv said...

    செல்வன்,
    டூ லிட்டில் டூ லேட். வேற என்னத்த சொல்றது.

    பமகவின் படை பலமும், ஆன்மிக சூப்பின் ரசிகர்களும், கொத்தனாரின் கடிதமும் சேர்ந்து மொத்தமா உங்களுக்கு அல்வா கொடுத்திருச்சு.


  15. rv said...

    அய்யா குமரா,
    குமரன்னு அழகான பேர வச்சுகிட்டு ஏன்யா அங்கதம் பண்றீரு?


  16. rv said...

    நன்றி அறிவிப்பு பதிவு போட்டு தமிழ்மண வைரஸ் ஆகாமல் கண்ணியத்துடன் வீடு தேடி வந்து நன்றி நவிலும் ஆன்மிகச் செம்மல் வாழ்க.

    இப்படிக்கு,
    கொ.ப.செ (ஐரோப்பா)
    ப.ம.க


 

வார்ப்புரு | தமிழாக்கம்