திரும்பும் முன் கவனி!

வித்தியாசமான மனிதர்களையும், நிகழ்வுகளையும், கதைகளையும் காண அதிகம் அலையத்தேவையில்லை. நம் வீடுகளிலேயே இவைகள் நாளுக்கு நாள் புதுபூஜைகள் போடப்பட்டு வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கின்றன. சில விஷயங்கள் ஏன் நடக்கின்றன என்று நாம் புரிந்துகொள்வதற்குள்ளாகவே மற்றொரு விந்தை நிகழும்.

நான் ஏதும் மனநல நிபுணர் இல்லை. ஆனாலும், எனக்கு புரியாத ஒரு மனநிலைக்கு RH Syndrome என்று பெயர் வைத்துள்ளேன். அதென்ன, RH Syndrome? அதாவது, Return Home Syndrome-ஐ தான் அப்படி சுருக்கியுள்ளேன். இதை எப்போது காணலாம்?

நீங்கள் உங்கள் குடும்பத்துடன் வெளியூர் எங்காவது சுற்றுலா, பண்டிகைகள், திருமணங்கள் இப்படி எதற்காவது செல்கிறீர்கள். போகும்போது ஏகப்பட்ட சந்தோஷம் அனைவர் முகத்திலும். வழிநெடுக பாடல்களைக் கேட்டுக்கொண்டும், ஒரே வீட்டில் இருந்தும், ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசக் கிடைக்காத விஷ்யங்களையெல்லாம் பேசிக்கொண்டும் போகிறீர்கள். சென்ற இடத்திலும் அதே மகிழ்ச்சி அனைவரிடமும். இப்படிப்பட்ட நாட்கள் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும்.

மறக்கமுடியாத அனுபவங்களுடன் சுற்றுலா முடிந்து வீடு திரும்புகிறீர்கள். பாதி தூரம் வந்திருப்பீர்கள். அப்போதுதான் நான் சொல்லும் RH Syndrome தொற்றிக்கொள்ளும். பயணத்தின் களைப்பில் அவரவர் அமைதியாக வரும்போது இந்த மனநிலை உள்ளே புகும். ஏதோ ஒரு Depression மனதில் புகுந்துவிடும். என்ன காரணமோ தெரியாது, அதுவரை ஜாலியாக உலக விஷ்யங்களைப் பேசிவந்தவர் மத்தியில் முக்கியமான குடும்ப பிரச்சனைகள் தலைகொடுக்கும். இது முக்கியமாக நடுத்தர வயதானவர்களிடம் காணலாம். அடுத்த நாள் செய்யவேண்டிய வேலை, பால் பாக்கி, electricity bill, தண்ணி மோட்டார் பிரச்சனை போன்றவை அலசப்படும். சாதாரணமாக இருந்துவந்த சிரிப்பு காணாமல்போகும். முகங்கள் இருகும். பாடல்கள் நிறுத்தப்படும்.

பயணம் முடிந்து வீட்டிற்குள் நுழைந்த அடுத்த நிமிடம், அவரவர் வேலைக்கு சென்றுவிடுவார்கள். தாய்மார்கள் சமையல் அறையில் அடுத்த நாள் சமையலுக்கு ஆயத்தமாகிவிட, பிள்ளைகள் தொலைக்காட்சியோ, கம்பியுட்டரையோ தொடக்கிவிடுவார்கள். அதற்கு வழக்கம்போல் அர்ச்சனையும் பெறுவார்கள்.

என்னதான் ஆச்சோ? சந்தோஷமாக இருந்தவர்கள் ஏன் இப்படி சிடுசிடுவென ஆனார்கள் என்பதுதான் புரியாத புதிர். இதைத்தான் நான் Return Home Syndrome என்று பெயர்கொடுத்துள்ளேன். சுற்றுலா முடிந்துவிட்டதே என்ற துக்கமா, இல்லை வீட்டுக்கு திரும்புகிறோமே என்ற பதட்டமா? நான் சொன்ன இந்த குணங்களை உங்கள் பயணங்களில் அனுபவித்தது உண்டா? உண்டென்றால், உங்கள் குடும்பம் RH+ (positive), இல்லையேல் RH- (negative). நீங்க RH பாஸிட்டிவா, நெகடிவ்வா?

இது நான் வெச்ச பேருதாங்க. நிஜமாக இதைப்பற்றி எதாவது ஆராய்ச்சி உள்ளதா என்று கூகிளைத் தேட சோம்பலாக இருக்கிறது! உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்.

-----------
குறிப்பு: புதிதாக எழுத சோம்பலாக இருப்பதால் நண்பரொருவர் (இப்போது ஆக்டிவ்வாக எழுதுவதில்லை) சில மாதங்களுக்கு முன் எழுதிய சில பதிவுகளை மறுபதிப்பு செய்கிறேன். அவர் அனுமதியோடு. பொறுத்தருள்க. நன்றி.

12 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    எங்கள் வீடு RH +ve....


  2. இலவசக்கொத்தனார் said...

    திரும்பி வரும் பொழுது, சில சமயம் நமக்கு பழக்கப் பட்ட சூழல், ஒரு விதமான நிம்மதியை தரத்தான் செய்கிறது. கண்ட இடத்தில் சாப்பாடு, தூக்கம். இதற்குப் பின் நம் வீடு போய்ச்சேரும் சுகம் தனிதான்.

    நான் RH +ve என்றுதான் தோன்றுகிறது.


  3. G.Ragavan said...

    இது எல்லாருக்கும் இருக்குன்னு நெனைக்கிறேன். வீட்டு டூர் மட்டுமல்ல. காலேஜ் டூர். ஆபீஸ் டூர். நண்பர்களோட டூர். வேற எதுவா இருந்தாலும் இது நடக்கும். தவிர்க்கவே முடியாது.


  4. மணியன் said...

    ஆம், இது எல்லோருக்கும் நேர்வதுதான். இதற்கு ஒரே மருந்து திரும்பியபின் அடுத்த நாளே பணிக்குத் திரும்பாமல் ஒருநாள் விடுப்பு மீதம் உள்ளபோதே திரும்பி அனைவருடனும் நிகழ்ந்தவைகளை மீள்நினைவு கொள்வதுதான்.

    முக்கியமாக கல்யாணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திரும்பினால் பங்கேற்ற உறவினரைப் பற்றி பேசிக்கொண்டு இருந்தால் RH+, RH-ஆக ஆகிவிடும்.

    சிறிய அளவில் விடுப்பிலிருந்து பணிக்குத் திரும்பும் போதும் அலுவகத்தில் நடப்பது தான்.


  5. G.Ragavan said...

    மணியன். சரியாகச் சொன்னீர்கள். ஒருமுறை சுற்றுலா சென்று திரும்புகையில் ஒரு நண்பன் அடுத்து உடனே அலுவலகம் செல்ல வேண்டும். கடைசி நாள் சுற்றுலாவின் தெரியாத்தனமாக அலுவலகத்திலிருந்து அவனுக்கு ஏதோ ஃபோன் கால். அவ்வளவுதான். ஊர் வந்து சேரும் வரை அவன் மிகவும் விசித்திரமாக இருந்தான். வந்து அவனுடன் ஒழுங்காகப் பேசக் கொள்ள ஒரு வாரத்துக்கு மேல் ஆனது.

    ஒரு சுற்றுலா என்று செல்லும் பொழுது அடுத்து ஒருநாள் ஓய்வாக வைத்துக் கொள்வது நல்ல பலனைத் தரும்.


  6. rv said...

    நன்றி குமரன்,
    நீங்களும் RH+ வா? ஒண்ணுக்குள்ள ஒண்ணாயிட்டோம். :)


  7. rv said...

    கொத்தனாரே,
    முதல்ல சொன்ன வரில RH-ve மாதிரி இருக்கு.


  8. rv said...

    ஜிரா,
    back to reality தான் டிப்ரெஷன் உண்டாக்குதோ?


  9. rv said...

    மணியன்,
    நீங்கள் சொல்வது சரிதான். ஒரு நாள் விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். ஆனால், இன்னொரு நாள் விடுப்பு எடுக்க வாய்ப்பிருந்தால் அதையும் வெளியூரிலேயே சுற்றிவிடுவேன். ஹி ஹி.


  10. rv said...

    நன்றி ஜிரா


  11. இலவசக்கொத்தனார் said...

    மன்னிச்சுக்குங்க. +ve, -ve கன்பியூஸ் ஆயிட்டேன். நமக்கு பாஸிடிவ் எண்ணங்கள்தானே. அதுனாலதான் குழப்பம்! :)


  12. rv said...

    குழப்பத்தை தீர்த்ததுக்கு நன்றி கொத்தனாரே


 

வார்ப்புரு | தமிழாக்கம்