நண்பன் அவர்களுக்கு....

சில வாரங்களுக்கு முன்னர் நண்பனின் அமெரிக்க எதிர்ப்பு பதிவில் பின்னூட்டமிட்டுவிட்டு பின்னர் விரிவாக எழுதுவதாய் சொல்லி மறந்துவிட்டேன். நேற்றைக்கு யாரோ ஒரு அநாதிநாதர் தனிமடலில் , பதில் போட 'மறந்து' விட்டதா என்று கேட்டிருந்தார். மறந்துபோனது என் தவறுதான். ஆனால் ஏதும் விசேஷமான காரணங்களுக்காக மறக்கவில்லை. தமிழ்மணத்தில் நடந்த சில கூத்துகள், அப்புறம் சொந்த விஷயங்களாலும், புதுப்பதிவொன்று ஆரம்பித்து அதில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டதாலும் மட்டுமே. அதன் காரணமாகவே, பழைய நண்பரொருவரின் பதிவுகளை என் வலைப்பூவிலும் பதித்து வருகிறேன்.

சரி, கேள்விக்கு வருவோம். ஏன் முஸ்லீம்கள் மட்டுமே எப்போதும் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப் பட்டிருந்தார்.

//இல்லையா பின்னே? நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை. அல்லது குறைந்தபட்சம் தமிழ்கத்தில் எப்படி செய்திகள் வெளி வருகின்றன என அறிய இயலாத சூழ்நிலையாகக் கூட இருக்கலாம். அதனால் உங்களுக்கு இந்தப் பிரச்சினையின் முழுவீச்சும் புரியவில்லை போலிருக்கிறது. ஏன் என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்க இயலும். ஒன்று - முஸ்லிம்களிடையே ஒரு பதட்டத்தை உண்டாக்க வேண்டும். அவர்களின் நம்பகத் தன்மையை குலைக்க வேண்டும். அவர்களுக்கு ஆதரவு தர முனையும் அல்லது அவர்களை ஓட்டு வங்கியாக நினைக்கும் அரசியல் கட்சிகளை தள்ளி வைப்பது. என்றுமே இஸ்லாமியர்கள் தங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிந்து கொண்ட இந்துத்வா அமைப்புகள் இஸ்லாமிய ஓட்டு வங்கியைத் தனிமைப் படுத்தி விட்டால், தங்களுக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. மற்ற கட்சிகளுக்கும் அதனால் நன்மை அடையாது என்ற அரசியல் ஒரு முக்கியமான காரியம். இந்துத்வா வாதிகள் போடும் கணக்கு - முஸ்லிம் ஓட்டு வங்கி ஒட்டுமொத்தமாக தங்களுக்கு எதிராக இயங்கினால், மொத்தமாக ஒரு 150 இடங்கள் வரையிலாவது தங்களால் வெற்றி பெறவே முடியாது - அதனால், இந்த ஓட்டு வங்கியைத் தனிமைப்படுத்துவது அவசியம் என்ற கணக்கு தான். அரசியல் ரீதியாக அவர்களுக்கு ஆதாயம் கிட்ட வேண்டுமென்றால் இந்த முஸ்லிம் ஓட்டு வங்கியை அரவணைத்து இயங்க நினைக்கும் அரசியல் கட்சிகளை - அரசியல் வாதிகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவது - அந்த அரசியல் வாதிகளின் தேசபற்றை கேள்விக்குரியதாக்குவது - இதெல்லாம் தான் நோக்கம். இதை ஒரு பலமுனை பிரச்சார உத்தியாக அது செய்து வருகிறது. அவற்றில் ஒன்று தான் ஊடகங்கள் மூலம் செய்திகளைத் திரித்து எழுதுவது.
//

அதற்கு விடை சொல்லுமுன்னர், நண்பனே சரியாக என் உலக அறிவைக் குறித்து அவதானித்திருந்தபடி நமக்கு கம்மிதான். மேலும் தமிழ்நாட்டில் பல வருடங்களாய் இருக்கக் கூடிய பாக்கியமும் இல்லை. ரெண்டுமே சரி. ஆனால், பிரபலமான இந்திய, குறிப்பாக தமிழ்ப் பத்திரிகைகளையும் இணையத்திலாவது ஓரளவிற்காவது வாசித்துவிடுவது வழக்கம். அவ்வகையில் நான் புரிந்து கொண்ட வரையில், தமிழ்நாட்டில் முஸ்லீம்களை மட்டுமே குறிவைத்து பிரச்சனைகள் கிளப்பபடுகின்றன என்பது என்னளவில் ஏற்புடையதாக இல்லை. சர்ச்சைக் கிடைத்தால் எந்த மதத்தினரையும் விடுவதில்லை. சதுர்வேதி, சங்கராச்சாரியார் போன்ற 'இந்து' விவகாரங்களுக்கு தமிழ் பத்திரிகைகள் கையாண்ட டேப்ளாய்ட் பல்ப் பிக்ஷன் கவரேஜும் இன்னும் மறக்க வில்லை. மெயின்ஸ்ட்ரீம் பத்திரிகைகளை பற்றியே பேச்சு. ஆர்.எஸ்.எஸ், திராவிட மற்றும் இதர மத சம்பந்தமுள்ளவற்றை கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை.

இப்படி சாதாரணமாக இந்தியர் (தமிழர்) ஒருவரென்ற வகையில் என் கண்ணில் படவில்லை. அது நான் போட்டிருக்கும் கண்ணாடியா என்று தெரியவில்லை. அதனாலேயே நண்பன் அளவிற்கு அம்மாதிரி இருந்து, அதனுள் இருப்பதாய் சொல்லும் உள்/வெளி/ஆழக் குத்துகள் என் முதுகில் விழவில்லை. மேலும் பா.ஜ.க-விற்கு ஓட்டுப்போடும் இந்துக்கள் எல்லாம் இந்துவெறியர்கள் என்று சொல்லப்படும் காலத்தில், முஸ்லீம் வோட்டு வங்கி கைப்பற்ற சூழ்ச்சி என்றெல்லாம் அலட்டிக்கொள்ளவேண்டாம். பா.ஜ.க செய்தது என்ன, மு.லீ செய்தது என்ன என்ற கேள்வி அவசியமற்றது. சமயச்சார்புடையதா இல்லையா என்பதுமட்டும் தான் பார்க்கப் பட வேண்டும். தமக்குள்ளேயே தம்மதத்தை சரியாக புரிந்து கொள்ளாத சில நரிகளால் ஒட்டுமொத்த மதத்திற்கும் கெட்ட பெயர் வருகிறது என்று நிதந்தோறும் வருத்தப்படுவோர்க்கு, அதேபோல இந்துமதத்தை புரியாத சில குள்ளநரிகளால் பா.ஜ.கவிற்கு கேடு வருகிறதென்பதை புரிந்து கொள்ள, எடுத்துச் சொல்ல வேண்டுமென்பதில்லை. தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தேவரும், வடமாவட்டங்களில் வன்னியரும் என்று எல்லா கட்சிகளுக்கும் ஒரு அடிப்படை வட்டம் இருக்கும். அதுபோலவே பதினைந்து சதவிகிதமான முஸ்லீம்களின் ஆதரவைப் பெற்ற கட்சிக்கே பிரதமராய் அமர்வது எளிதாய் இருக்கும். இதுவும் அடிப்படை அரசியல். ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி போன்ற fringe அமைப்புகள் ஒரேயடியாக எல்லா ஊடகங்களையும் கையில் எடுத்துக்கொண்டு வாள் சுழற்றுகிறார்கள் என்பது நம்புவதற்கு கடினமாய் இருக்கிறது. இதனாலேயே இவ்வளவு economic மற்றும் political clout உடைய சமூகத்தைப் பற்றி அவதூறோ எதுவோ கிளப்புவதற்கு தேசியக் கட்சிகள் என்ன, கார்த்திக்கின் கட்சி கூட ஆழ்ந்து விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் முன்வராது. அதே நிலையே பத்திரிகைகளுக்கும்.

உடனேயே அடுத்த கேள்வி வரும். ஏன் சில முஸ்லீம்கள் கேடுகெட்டு தீவிரவாதத்தில் ஈடுபடும் போது மட்டும் மதப்பெயரும் அவமதிப்பிற்கு உள்ளாகிறது? இந்துத் தீவிரவாதியென்றோ கிறித்துவத் தீவிரவாதிகளென்றோ குறிக்கப்படாமல் முஸ்லீம்கள் மட்டுமே இவ்வாறு இழிவுபடுத்தப்படுகின்றனர்?

// என்னைப் பொருத்தவரை ஸ்ரீலஙகாவில் நடக்கும் பிரச்சனைக்கு இந்து/புத்தம் என்று வர்ணம் புகுத்தாமல் தமிழே முதன்மைப்படுத்தப்படுகிறது. //

இலங்கையில் மதம் முன்னிறுத்தப்பட வேண்டிய அவசியமேயில்லை. அங்கு முன்னிறுத்தப்படுவது இனம் தானே தவிர, மதம் அல்ல. தமிழர்களை யாரும் தீவிரவாதி என்று குறிப்பிடுவதில்லை. இலங்கை அரசு கூட தங்கள் ஊடகங்களில் போராளிகள் என்று தான் கூறுகின்றனரே தவிர, தீவிரவாதிகள் என்றல்ல. ஆனால், ஆரம்பகாலங்களில், தமிழ் போராளிகளைத் தமிழக ஊடகங்களில் சில தமிழ் தீவிரவாதிகள் என்றே குறிப்பிட்டு வந்தது. இப்பொழுதும் கூட இலங்கை விடுதலை வீரர்களை போராளிகள் என்று குறிப்பிடும் ஊடகங்கள், தமிழகத்தில் நடக்கும் சில குற்றங்களை தமிழ் தீவிரவாதிகள் செய்தனர் என்றே கூறி வருகின்றன. அதாவது தங்கள் நிலைபாட்டிற்கு எதிரான கொள்கையுடையவர்களை அவர்கள் சார்ந்த இனத்துடன் சேர்த்தே குறிப்பிடுவது என சில பத்திரிக்கைகள் கொள்கை வைத்திருக்கின்றன.

// அல்-கயிதாவில் ஆரம்பித்து லாஷ்கர்-இ-தொய்பா வரைக்கும் தங்களின் மதத்தையே முன்னிருத்துருகின்றனர். அத்தகைய குழுக்களின் (ஹமாஸ் உட்பட) பெயரினில் தங்களின் மதம் சம்பந்தபட்டுள்ளதே: இஸ்லாமிஸற்க்கு எதிர்ப்பானதனொன்று. இது புரியாமலா இருக்கிறீர்கள்? //

ராமநாதன் - நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்த குழுக்கள் எல்லாம் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காகவும், பரப்புவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றா நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? அராபிய, பாரசீக, உருது பெயர்கள் இருந்தாலே அவை இஸ்லாத்தோடு சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் - அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது?

ஹமாஸ் - பாலஸ்தீன விடுதலைப் போராட்ட குழு. அவர்கள் நோக்கம் பாலஸ்தீனர்களின் தாயகத்தை விட்டு ஆக்கிரமிப்புகளை நீக்க வேண்டும் என்ற உரிமைப் போராட்டத்திற்காக ஏற்படுத்தப் பட்ட ஒரு குழு. ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடும் அமைப்பு அது. இஸ்லாத்தைக் காக்க தோற்றுவிக்கப்பட்ட இயக்கம் அல்ல அது.

அதே போல அல் கொய்தா - அமெரிக்கர்களிடம் கேட்டால் சொல்லுவார்கள் - எதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது என்று. ஆயுதங்களை எடுத்துச் சென்று ரஷ்யர்களுக்கு எதிராகப் போராடும் முஜாஹிதீன்களுக்கு கொடுப்பதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கு நவீன பயிற்சிகள் எல்லாம் கொடுத்து, பின்லேடன் தலைமையில் அனுப்பி வைத்தனர். இது இன்று உலக வரலாறு. அனைவரும் அறிவர்.

பின்னர் பின்லேடன் அமெரிகாவிற்கு எதிராக திரும்ப காரணமாக அமைந்தவை -
//
//உலக நடப்புகள் பற்றி இன்னமும் கூட கொஞ்சம் முனைந்து அறிந்து கொள்ளுங்கள்.

பாலஸ்தீனம்

ஈழம்

காஷ்மீரம்

இந்த மூன்றின் பிரச்சினைகளின் பரிமாணங்கள் வேறு வேறு.

பாலஸ்தீனம் - விரட்டியடிக்கப்பட்ட மக்களின் குரல்.

ஈழம் - பேரின வாத அரசு ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபட முனையும் குரல்.

காஷ்மீரம் - விதிகள் வழுவிய அரசுகளின் சாணக்யத்தனத்திற்கு எதிரான குரல்.

இந்த மூன்றையும் ஒரே நேர்கோட்டில் கொண்டுவந்து நிறுத்தியது தற்செயலான சிந்தனை தானா, ராமநாதன்?

உங்களுக்குத் தான் தெரியும்!!!
//
அதற்கு இலங்கையும், காஷ்மீரும், பாலஸ்தீனமும் என்று உதாரணம் சொன்னேன். அதற்கும் நீண்ட விளக்கம் அளித்திருக்கிறார். தற்செயலான சிந்தனை தானா என்று கேட்டு நான் ஏதோ துவேஷத்தோட சொன்ன மாதிரி சொல்லியிருக்கிறார். ஆனால் நான் சொல்ல வந்ததை புரிந்து கொள்ளவில்லையோ என்று எண்ணத் தோன்றும் வகையில். இலங்கையில் நடப்பதிலும் ஒருவகையில் நிலத்தின் மீதான குரல் தான். நான் புரிந்துகொண்டது தவறோ? புலிகள் தனி ஈழமோ அல்லது சுயாட்சியோ முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாக கேட்பதாக அல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன்? மேலும், அந்தச் சண்டையில் புத்த மதமும் இந்து மதமும் நேரிடையாக மோதிக்கொள்வதென்ற கோணமும் அடங்கியிருக்கிறதல்லவா? ஆனால், அவை முன்னிறுத்தப்படாமல் அவர்களின் உரிமையே நிலைநிறுத்தப்படுகிறது.

காஷ்மீர் மற்றும் பாலஸ்தீனத்திற்கு வருவோம். மேலும் விளக்கம் அளிக்குமுன் சோதனையாக ஒரு பின்னூட்டமிட்டேன். அதற்கு பொறுப்பாக பதிலளித்திருந்தார். அதையும் குறிப்பிட்டிருந்தேன்.

//
உங்களுக்கு இஸ்ரேலிய நண்பன் இருப்பதில் தவறில்லை. ஆனால், அதே சமயம் தங்களுடைய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஒருவரை அவர் உயர்வாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு.

அராபத் பற்றி இதுவரையிலும் ஒரு வார்த்தை கூட பேசப்படவே இல்லாத பொழுது திடீரென்று அவரை அமைதியின் சீடர் என்று நான் கூறினேன் என்கிறீர்கள். எப்படி?

அராபத் அமைதியின் சீடர் இல்லை தான். ஏன் அவர் அமைதியின் சீடராக இருக்க வேண்டும்? அவர் ஒரு போராளி. இஸ்ரேலியர்களை எதிர்த்துப்போர் செய்தார். இஸ்ரேலும் அவரை எதிர்த்துப் போர் செய்தது. யுத்த நெறிமுறைகளை இருவருமே சரிவர கையாளவில்லை. ஆனால், அராபத்தின் பக்கம் நியாயம் இருந்தது. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை வேட்கை இருந்தது. ஆனால், இஸ்ரேலின் பக்கம் இது எதுவும் இல்லை. ஆக்கிரமிப்பு - மேலும் மேலும் ஆக்கிரமிப்பு. உலக நாடுகள் அனைத்தும் எதிர்த்துக் குரல் கொடுத்தாலும், தங்கள் இஷ்டம் போல செயல்படும் திமிர் இருந்தது. உலக நாடுகளை இஸ்ரேல் போல அலட்சியப்படுத்திய நாடு வேறு எதுவும் இருக்காது.
//

முதலில் //ஆனால், அதே சமயம் தங்களுடைய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடும் ஒருவரை அவர் உயர்வாக பேச வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு. // அவர் உயர்வாக பேசவேண்டுமென்பதில்லை. சொல்லப்போனால் ஆக்கிரமிப்பாளர்களென்று அநியாயமாக சொல்வதாக சொல்லி தாழ்வாகவே பேசியிருக்கலாம். பாலஸ்தீனியர்களுக்கு இஸ்ரேலை திட்ட உரிமையிருக்கிறதென்றால், இஸ்ரேலியர்களுக்கும் அது உண்டு. இஸ்ரேலுக்கு உரிமையில்லையா? தனிநாடாக இருந்து அரபு நாடுகள் செய்த போர்கள், இன்றளவும் சந்திக்கும் தீவிரவாதங்களை எதிர்கொள்வதிலிருந்து உரிமை வராதா? ஜனநாயக நாடுகளில் ஒரு தவிர்க்க முடியாத பிரச்சனை உண்டு. தீவிரவாதமென்று வந்துவிட்டால், அவர்களிடம் அளவிற்கு அதிகமான வன்முறையே கையாளும். integrity க்கு இது மிகவும் அவசியமாகிப் போவதால் இது தவிர்க்க முடியாது.

//நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள்? இந்த குழுக்கள் எல்லாம் இஸ்லாத்தை நிலை நிறுத்துவதற்காகவும், பரப்புவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்றா நீங்கள் புரிந்து கொண்டீர்கள்? அராபிய, பாரசீக, உருது பெயர்கள் இருந்தாலே அவை இஸ்லாத்தோடு சம்பந்தப்பட்டது என்று நீங்கள் நினைத்தால் - அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது? //
இதையே நீங்கள் என்ன புரிந்து கொண்டீர்கள் என்று நான் கேட்க முடியும். விரட்டியடிக்கப்பட்ட மக்களின் குரலென்று கல்நெஞ்சும் உருகும் வகையில் சொன்னாலும் ஹமாஸும், அல் கொயிதாவும் செய்வதை கண்டிப்பாக நீங்கள் நியாயப்படுத்த மாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். அதனால் அதற்குள் போகாமல், இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள். இரானிய அதிபரில் ஆரம்பித்து பச்சா தீவிரவாத கூட்டத்து ஆட்களெல்லாம் பேசும் பேச்சுகளை கேட்டிருக்கீறீர்களா? பிபிசி, இண்டிபெண்டண்டில் ஆரம்பித்து ஆஸ்திரேலியன் ஏஜ் வரை உலக பத்திரிகைகள் அனைத்தும் அவர்கள் பேசும் அமைதி ததும்பும் பேச்சுகளை வேண்டுமென்றே ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து islamophobia விற்கு தீனி போடுகிறார்கள் என்கிற மாதிரி இருக்கிறது மதம் அதில் சம்பந்தப்படவில்லையென்கிற உங்கள் கருத்து. இது உண்மையா? அராபத்தின் இந்த இரட்டைவேடம் பலமுறை சந்திசிரித்திருக்கிறதே. சுட்டிகள் தேடித்தருகிறேன். இப்போது கைவசம் இல்லை.

அவ்வகை புரட்சிப்பேச்சுகளில் "அல்லா அவர்களின் பெயரால் தலையை எடுப்போம். இன்னும் குண்டு போடுவோம். இந்த jews களை கடலுக்குள் விரட்டுவோம். கையை வெட்டுவோம்"னு சொல்றதெல்லாம் மேற்கத்திய ஊடகங்களின் கற்பனை, இல்லையா? அதற்கு உடனே வரும் பதில் மூன்று வகைகளில்.

1. இஸ்ரேல் பாலஸ்தீனிய குழந்தைகளை கொன்றார்கள். கர்ப்பிணிப் பெண்களை கற்பழித்தார்கள். அவங்க மேல உங்களுக்கு பாவமே இல்லியா? இதெல்லாம் கேட்க நாதியில்லியா? சொந்த நாட்டிலேயே அகதிகளாய் திரிகிறார்களே? என்று செண்டி பிட் போடுவது ஒரு வகை. இவற்றையெல்லாம் நியாயப்படுத்தவில்லை, ஆனால் மேற்கூறிய என் கருத்துக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று புரியாமல் பலமுறை முழித்திருக்கிறேன்.

2. ரெண்டாவது வேலு நாயக்கர் ஸ்டைல். அவன நிறுத்தச் சொல்லு நான் நிறுத்தறேன்.

3. அவர்கள் அறியாமல் பேசுகிறார்கள். அவர்களை வைத்து எங்களை மதிப்பிடுவதா என்று மடக்குவது. சரி, இரானிய அதிபர் கறவர் சாதாரணப்பட்டவரா? அறியாமையால் பேசுகிற பதவியா? சரி, அவர் ஏதோ மக்கு. சொல்லிட்டாரு. கூட இருக்கறவங்கள்ல யாராவது கண்டிச்சாங்களா? எனக்குத் தெரிஞ்சு இல்ல. இந்த மாதிரி எழுச்சியா பேசுனா கும்பலோட சேர்ந்து டேபிள் தட்டறாங்க என்று நினைக்கும் வகையிலேயே மவுனம் காக்கிறார்கள். டென்மார்க்கில் ஒண்ணுனோன புரட்சி செய்த அரேபியர்கள் பத்தி செய்திகளா கொட்டுது. வலைப்பூவிலும் பின்னறாங்க. ஆனா, இந்த மாதிரி விஷயத்துல மட்டும் எல்லா பத்திரிகைகளும் புஷ்கிட்ட கையூட்டு வாங்கிகிட்டு இந்த மாதிரி கிறுக்குகளை கண்டிக்கற லட்சக்கணக்கான முஸ்லீம் பெரியவர்கள் சொல்றதப் பத்தி போட மாட்டேங்கறாங்க. இல்லியா? இரானிய அதிபர் சொன்னது கருத்துச் சுதந்திரம்னா, கார்ட்டூன் போட்டதும் கருத்துச் சுதந்திரம் தானே? இதுக்கு புரட்சி, அதுக்கு மவுனம். ஏனோ? எங்கேயோ ஒரு கோடியில் நடந்ததற்கு பாகிஸ்தானில் கொடியெரிப்பு, இந்தோனேஷியாவில் தூதரக எரிப்பு. இதுக்கெல்லாம் வலுவா மறுப்புகளும் கண்டனங்களும் வந்திருக்கிறதா. இல்லை. sorrynorwaydenmark என்று புதுத்தளம் அமைத்த சில reasonable இளைஞர்கள் எழுதியிருப்பதைப் போலப் பேசினாலே போதுமே. யாரும் ரவுண்ட் கட்டி அடிக்க மாட்டார்கள்.

இதை மட்டும் நேர்மையா செஞ்சாலே போதும். யாரும் தவறா எழுத வேண்டிய அவசியமே கிடையாது. ஏன் இப்படி செய்யறாங்க? நடுஇராத்திரி மூணு மணி வரைக்கும் தூக்கம் வராம மண்டையப் பிச்சுகிட்டாலே மட்டும் வரக்கூடிய விளக்கம். உலகெங்கும் வேகமாய் பரவிவரும் அமைதி மார்க்கமான இஸ்லாமை கண்டு பொறுக்காமல் மேற்கத்திய ஊடகங்கள் எதிர்க்கிறார்கள். அதான் எல்லா மக்களும் சேர்ந்துக்கறாங்களே. அப்படின்னா அவங்க அவதூறு campaign வெற்றி பெற வில்லைன்னு தானே அர்த்தம்? இது எப்படின்னா, சன் டிவியில தமிழ்நாடே அரசுக்கு எதிரா திரண்டு நிக்குது. டீக்கடையிலல்லாம் ஜெவ த் திட்டித் தான் பொழுது போக்கறாங்கன்னு நியுஸ் போடறா மாதிரி. அதப் போட்டுட்டு அப்புறமா தோத்துப்போனா தமிழன் சோறு திங்கறானான்னு கேள்வி கேக்கறது.

//யூதர்கள் தங்கள் ஆக்கிரமிப்புகளை விட்டு வெளியேறி, பாலஸ்தீனர்களுக்கு உரிமைகளைக் கொடுத்து விட்டால் எல்லா பிரச்னைகளுமே தீர்ந்து விடப் போகிறது. கடந்த மாதம் நடந்த GCC மாநாட்டில், அரபு நாடுகளின் அனைத்து தலைவர்களும் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர் - அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, மத்திய கிழக்கை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக அறிவிக்க. இஸ்ரேலுக்கு அழைப்பு விடப்பட்டது என்பதே - அவர்களை ஒரு நாடாக மதித்து தான். இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு வெகு தூரமில்லை என்று எண்ணத் தோன்றுகிறது. அதே போல, எகிப்துக்கும் இஸ்ரேலுக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஜோர்டான் கூட இஸ்ரேலுடன் குறிப்பிடத்தக்க - ஆனால், வெளிப்படையாக இல்லாமல் உறவு வைத்துக் கொண்டே இருக்கிறது. யூதர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் விட்டு வெளியேறி விட்டால், பிரச்சினை தீர்ந்து விடும் என்றே தோன்றுகிறது.
//
அரபு நாடுகளின் தேவை இஸ்ரேலிற்கு இருக்கிறதோ, நட்பு நாடாய் பார்த்தால் அதனிலிருந்தும் பலவிஷயங்கள் அரபு நாடுகளுக்கு பயன்படும். மேலும் பாலஸ்தீனியப் பிரச்சனையில் குட்டையை குழப்பிய ஜோர்டான், சவுதி போன்ற நாடுகளுக்கு பாலஸ்தீனியர்கள் மீது இருக்கும் அபிமானம் கொஞ்சம் வரலாற்றை புரட்டினாலே தெரியும். ஏன் அவ்வப்போது அப்பிரச்சனை கொழுந்துவிட்டெரிகிறது என்பது எளிதில் புலப்படும். இஸ்ரேல் பாலஸ்தீனியர்களின் spirit-ஐ அழித்துவிட பார்த்தால் முடியாத காரியமொன்றுமில்லை. ஆயுதமெல்லாம் வேண்டாம். மின்சாரமும், தண்ணீரும் போதும். இஸ்ரேலைப் பொருத்தவரை பாலஸ்தீனத்தில் ஹமாஸ் வந்தது மிகப் பெரும் setback. ஹமாஸ் காரர்கள் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டால், மிரட்டும் அமெரிக்காவும் மற்ற நாடுகளையும் எளிதில் சமாதானப்படுத்திவிடலாம். மேலும் ஷரோன் இல்லாத இஸ்ரேலிடமிருந்து அமைதியைப் பெறுவது முன்னரைவிட எளிதாகிவிட்டது. அதற்கு பதிலாக அரபு நாடுகளிடமிருந்து வரும் நிதியே போதுமென்று கனவும் காண்கிறது. உண்மையான நிலை என்னவென்று நான் சொல்லித்தான் தெரியவேண்டுமென்பதில்லை. இஸ்ரேலிற்கு அழைப்பு விடுப்பது நகைப்புக்குரியதொன்றாக இருக்கிறது. பாகிஸ்தானின் அணுஆயுத பிஸினஸ் வெகு ஜோராக நடந்து அரபு நாடுகளின் நிலை என்னவென்று அறியாத நிலையிலும், இரானிய அதிபர் போன்ற தெளிவான ஒருவரிடம் அத்தகைய ஆயுதங்கள் இருக்கப்பெறும் சாத்தியங்களும் இருப்பதாலும், இஸ்ரேல் நிச்சயம் ஒத்துப்போகாது என்று தெரிந்தே நடந்த நாடகமென்றே எனக்குத் தோன்றுகிறது.

எதுவாகினும், இஸ்ரேலிய பாலஸ்தீன பிரச்சனைக்கு பெரும்தலைகளே தீர்வு காணத் திணறும்போது நாமிருவரும் அதைப் பற்றிப் பேசி பயனில்லை. நீங்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னளவில் திருப்திகரமாய் பதிலெழுதியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன். விளக்கங்கள் தேவையெனில் கேட்கவும்.
கண்டிப்பாக எனக்கு தெரிந்த அளவு எழுதுகிறேன். இப்போதைக்கு இவ்வளவு தான்.

----
சில குறிப்புகள்:
1. bias இருக்கலாம். நானும் ஒத்துக்கொள்கிறேன். கண்ணாடி போட்டுக்கொண்டு தானே எல்லாரும் பார்க்கிறோம். ஆனால் இது மத துவேஷ பதிவு இல்லை என்பது படிக்கும் எல்லாருக்கும் புரிந்திருக்கும். என்னை அறிந்தவர்களுக்கு அது தெரியும். மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. சும்மா ஜாலியா வந்துட்டு, வந்த பாவத்துக்கு நாலு வசவு பாடி இது 'அது'தான் என்று நினைத்து மாத்திரம் கருத்துச்சிலம்பம் ஆடினால் கண்டிப்பாக பிரசுரம் செய்ய மாட்டேன்.

2. இப்பதிவிற்கு பலரிடமிருந்து பலவகை எதிர்க்கருத்துகளும் வரும் என்று தெரியும். அவை 1 ஆக இல்லையென்றால் கண்டிப்பாக வரவேற்கிறேன்.

3. இப்பதிவை எழுதி என் மேல் இருக்கும் பிம்பத்தையும் உடைத்துக்கொள்ளவேண்டுமா என்று நிறைய யோசித்தேன். ஆனால், நண்பனிடம் பதில் எழுதுவதாக சொல்லிவிட்டு அதைச்செய்யாவிட்டால் அவமரியாதையாக இருக்குமென்பதாலும், அநாதிநாதர் போன்றவர்கள் நான் பதில் போடாடதற்கு புது கற்பிதம் செய்ததைப் போல் எத்தனை பேர்கள் செய்திருப்பார்கள் என்பதையும் நினைத்தே இப்பதிவு.
---
நன்றி

45 Comments:

  1. rv said...
    This comment has been removed by the author.

  2. இலவசக்கொத்தனார் said...

    என்னப்பா சொல்ல வறீங்க? ஒண்ணுமே புரியலை. தலையெல்லாம் சுத்துது. ராம்ஸு, இதெல்லாம் வேணாப்பா. வழக்கம் போல எதாவது ஜாலியா எழுது. இல்லைன்னா எதாவது நண்பர்கள் கிட்ட இருந்து சுட்ட பழத்தை போடு. அதை விட்டுட்டு இவருக்கு பதில் சொல்லறேன் அவருக்கு பதில் சொல்லறேன்னு ஏன்பா போகறே? அதுக்குத்தான் ஒரு தனி கூட்டமே இருக்கே.


  3. dvetrivel said...

    இராமநாதன்,
    அவரு பதிவையும் படிக்கலை, உங்க பதிவையும் முழுசா படிக்கலை. அப்பிடியே படிச்சாலும் கருத்து சொல்ற அளவுக்கு நமக்கு பொருமை இல்லை. நல்லாருப்போம் நல்லாருப்போம்... எல்லாரும் நல்லா இருப்போம் (ஜோதிகா சொல்றாப்புல நினைச்சிக்கோங்கோ)...


  4. rv said...

    கொத்தனாரே,
    ரொம்ப முடி பிச்சிக்க வச்சுட்டேனோ.. மன்னிச்சுடுங்க. திரும்ப பழைய ஸ்டைலுலேயே அடுத்தது சுட்ட பழம் சீக்கிரம் போட்டுடறேன்.


  5. rv said...

    ஆள்தோட்டம்,
    //நல்லாருப்போம் நல்லாருப்போம்... எல்லாரும் நல்லா இருப்போம் (ஜோதிகா சொல்றாப்புல நினைச்சிக்கோங்கோ)... //

    அதே அதே..

    ஆமா, அது என்ன கொசுறு ஜோதிகா சொல்றாப்புலன்னு? அஸின் சொன்னாத்தான் நானெல்லாம் கேப்பேன். :)

    வாக்காளர் பட்டியல்ல சேர முடிஞ்சுதா? நான் முயற்சி பண்றதயே விட்டுட்டேன்.


  6. Amar said...

    ******edited******
    மதம் என்ற கன்னாடிய கழட்டுவது கடினம்.
    ****** edited******
    எதாவது பாட்டுகீட்டு எழுதுங்க இராமநாதன்.


  7. dvetrivel said...

    //ஆமா, அது என்ன கொசுறு ஜோதிகா சொல்றாப்புலன்னு? அஸின் சொன்னாத்தான் நானெல்லாம் கேப்பேன். :)//

    எனக்கு ஜோதிகா புடிக்குமுனு சொல்லலை, அது திருமலை படத்துல ஜோ, விஜயை மடக்க உபயோகிச்ச டெக்னிக்.... அதுக்கு மேல உங்க இஷ்டம், ஐஸே (ராய்) சொல்றமாதிரி கூடம் நீங்க கற்பனை பண்ணிக்கலாம்...


  8. மாயவரத்தான் said...

    //அது திருமலை படத்துல ஜோ, விஜயை மடக்க உபயோகிச்ச டெக்னிக்//

    Which திருமலை..?! :)


  9. rv said...

    சமுத்ரா,
    தனி மடலில் விளக்குகிறேன்.

    நன்றி


  10. rv said...

    ஆள்தோட்டம்,
    அந்தப் படமெல்லாம் பாத்ததில்லை. இருந்தாலும் சிச்சுவேஷன் பாத்து டயலாக் நல்லா தான் விடறீரு. அதுக்கு நன்றி.

    //ஐஸே (ராய்) சொல்றமாதிரி கூடம் நீங்க கற்பனை பண்ணிக்கலாம்//
    ஆஹா.. நினைக்கவே இவ்ளோ நல்லா இருக்கே. இதுக்கு ரொம்ப ரொம்ப நன்னி.


  11. rv said...

    மாயவரத்தாரே,
    இப்ப எதுக்குயா திருமலை, திருப்பதி பத்தியெல்லாம் பேசி பிரச்சனையை கிளப்புறீரு? திருமலை - விஜய், திருப்பதி - அஜித்.. ரெண்டு பக்கமும் அடிச்சுப்பாங்க இல்ல அப்புறம்?


  12. நண்பன் said...

    ராமநாதன்,

    நன்றி.

    சமுத்ராவிற்கு நீங்கள் தனிமடலில் பதில் சொல்கிறேன் என்பது சற்று நெருடலாக இல்லை?

    மேலும் சமுத்ரா சொல்வதை சொல்லட்டும். பின்னர் அதை ஒதுக்குவதா, இல்லை பதில் சொல்வதா என்பதை முடிவு செய்யலாமே?

    எடிட் செய்து பின்னூட்டங்கள் இடுவதாக இருந்தால் - மன்னிக்கவும் - விவாதத்தில் அர்த்தம் இல்லாமல் போய்விட கூடும். ஆகையால், எந்தவிதமான திருத்தமும் செய்வதில்லை என்றால் மட்டுமே விவாதம் செய்யலாம்.

    அப்புறம் - திருமலை - திருப்பதி விளக்கமெல்லாம் சரி தான். ஆனால், அதை நம்பாமல் என்னைத் தான் சொன்னீர்கள் என்று யாராவது கிளம்பி வந்து விடப் போகிறார்கள். பார்த்து.

    அப்புறம் - கொஞ்சம் நேரம் கொடுங்கள் - பதில் தயார் செய்வதற்கு....


  13. முத்துகுமரன் said...

    திருமலையான திருப்பதியில் இருப்பது வேறு ஒருவர் என்று அக்னிஹோத்ரம் ராமனுஜ தாத்தாச்சாரியர் சொல்லியிருந்தாரே. அதைப்பத்தியா பேசுறீங்க:-)))


  14. rv said...

    நண்பன்,
    //சமுத்ராவிற்கு நீங்கள் தனிமடலில் பதில் சொல்கிறேன் என்பது சற்று நெருடலாக இல்லை?

    //
    அதற்குரிய விளக்கம் உங்களுக்கு நான் சொன்னதிலிருந்து புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். எவர் மனதையும் புண்படுத்தும்நோக்கில், இப்பதிவிற்கு சம்பந்தமில்லாமல் வந்தால் அதை எடிட் செய்தே பிரசுரம் செய்வேன். இதன் மூலம் எதிர்க்கருத்துகளை எடிட் செய்வேன் என்று அர்த்தமில்லை. தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுத்தி பத்தோடு பதினொன்றாக போய்விடக்கூடாதென்பதற்கான முன்னெச்சரிக்கையே. அப்படி, நான் எடிட் செய்த பாகங்களும் தங்களுக்குத் தெரிய வேண்டும் என்று நினைப்பவர்கள், என்னை தனிமடலில் தொடர்பு கொண்டால், முழுப்பின்னூட்டங்களையும் அனுப்பி வைப்பேன். இதில் நான் எந்தவித தவறும் செய்வதற்கு வாய்ப்பில்லை. ஏனெனில், அனுப்பியவரிடம் Sent Items இருக்கிறது என்னிடம் Inbox இருப்பது போலவே. யாரும் யாரையும் இவ்விஷயத்தில் ஏமாற்றி பொய்கள் அள்ளி வீசப் போவதில்லை. அதற்கு சாத்தியங்களும் குறைவு. அதனாலேயே பின்னூட்டங்களை எடிட் செய்வது. இது என் தனிப்பட்ட முடிவு. மாறாக, இப்பதிவிற்கு பாதி சொந்தக்காரரான நீங்கள் எல்லா பின்னூட்டங்களையும் முழுமையாக வெளியிட்டே ஆக வேண்டுமென்றால், அதையும் செய்யத் தயாராக இருக்கின்றேன்.

    //கொஞ்சம் நேரம் கொடுங்கள் - பதில் தயார் செய்வதற்கு...//
    தாராளமாக. நீங்கள் கேட்டதற்கு பதில் சொல்ல மூன்று வாரங்களுக்கும் மேலாகியிருக்கிறதே எனக்கு, அநாதிநாதரின் பார்வையில். மேலும், சிந்திக்க வேண்டிய விஷயங்களில், அவசரப்பட்டு, உணர்ச்சிவசப்பட்டு பதில் சொல்வதிலும் பயனொன்றுமில்லை என்றும் புரிந்தே இருக்கிறேன். காத்திருப்பதில் எனக்கு பிரச்சனை ஒன்றுமில்லை.

    நன்றி


  15. rv said...

    முத்துக்குமரன்,
    இந்தப் பதிவுல நாரதர் நீங்கதானா?? :)

    அ.இரா.தா யாரென்று எனக்குத் தெரியாது. அவர் என்ன சொன்னாரென்றும் தெரியாது. Who is He, man? என்று கேட்கும் நிலையிலேயே இருக்கிறேன்.

    அன்புடன்,


  16. Karthik Jayanth said...

    ராம்ஸ் பாஸ்,

    வழக்கம் போல

    1)எதாவது ஜாலியா

    ரஷ்யாவில் ராம(ரா/ரம்) நாதன் :-)
    ராம நாதனும் ரஷ்யாவும்
    300k பின்னுடம் பெறுவது எப்படி
    ரஷ்யாவில் லவ்

    2) useful
    ரஷ்யாவில் life

    Life of Doctor in ருஷ்யா

    ஆன்மீகம்

    Russian history & Kremlin background, political system,


    அதை விட்டு நமக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை(எலக்கியவாதி) எல்லாம். சத்தியமா நல்லா இல்லபா.எதோ சொல்லனுமுன்னு தோனிச்சு.கண்டுகிறது உன்னோட இஷ்டம்பா.


  17. Santhosh said...

    ராம் சண்டைபோட்டு யாரும் மாறப்போவது இல்லை நம்ம டென்ஷன் ஆகி இரவு பகல் பாராமல் பதில் எழுதியது தான் மிச்சம். இது என்னுடைய அனுபவ பாடம். வழக்கம் போல ஜாலியா எழுதுங்களேன்.


  18. ஐயர் said...

    ********************EDITED BY Ramanathan(Blog Admin) **********************
    கீழ்க்கண்ட பின்னூட்டத்தை எழுதியது ஏதோ ஒரு போலி என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இருந்தாலும்.. காமெடி ஜாஸ்தியாக இருப்பதால்... இதை பிரசுரிக்கிறேன்.
    அன்புடன்,
    இராமநாதன்

    இனி பின்னூட்டம்.... சன்னாசி சார் இங்கே எங்கே வந்தாரென்று தெரியவில்லை...
    ******************END EDIT*******************


    சன்னாசி அவர்களுக்கு,

    அநேக நமஸ்காரங்கள். இந்த பதிவில் தலைகாட்ட வேண்டாம் என்று இருந்தேன். எப்படியோ என் பார்வையில் பட்டு என்னை காந்தம்போல இழுத்து விட்டது.

    முகமூடியாய் எழுதும் இந்த திருமலைராஜன் முன்னர் பல பெயர்களில் கண்டவரையும் காறி உமிழ்ந்து கொண்டிருந்தார். இவர் காறி உமிழ்ந்தவர்களில் மாலன் மிக முக்கியமானவர். சின்னவன் என்ற பெயரில் எழுதுவதும் இதே அறிவாளிதான்.

    மரத்தடி, ராயர் காபி க்ளப் என புலம்பிக்கொண்டிருந்த இவர் டோண்டு பார்ப்பன ஜாதியை இணையத்தில் பரப்பத் தொடங்கியதும் முகமூடி வந்து தமிழ் வலைப்பதிவுகளைக் கலக்கினார். பெரும்பாலான பார்ப்பன பதிவாளர்களுக்கு முகமூடி யார் என்பது முன்னரே தெரிந்து இருந்தது. முகமூடியும் ஒருமுறை அதனை தம் வாயால்(தட்டச்சால்) சொல்லி இருந்தது நினைவிருக்கலாம்.

    உலகத்திலேயே சுப்பிரமணியசாமியை மிகச்சிறந்த அரசியல்வாதியாக அறிவித்து பேட்டி கண்டு அதனை தமிழோவியத்தில் போட்ட அறிவிற் சிறந்தவர் இந்த முகமூடி. நண்பன் போன்ற இஸ்லாமிய பதிவாளர்களிடம் இன்றுவரை மல்லுக்கு நிற்பவர். உலகிலேயே இந்து மதம்தான் சிறந்தது மற்றெல்லாம் தாழ்ந்தது என்று சொல்லும் பிறழ்ந்த மனோபாவம் கொண்டவர் இவர். இவருக்கு ஆதரவு அளிக்கும் பினாத்தல் சுரேஷ், ஜெயஸ்ரீ, ராமச்சந்திரனுஷா, டோண்டு, மாயவரத்தான், ராமநாதன் போன்றவர்களைப் பற்றி நான் ஒன்றும் சொல்லத் தேவை இல்லை. எதற்காக ஆதரிக்கின்றனர் என்பதனை யோசிக்கவும்.

    நன்றி.


  19. rv said...

    கார்த்திக் ஜெயந்த்,
    நீங்கள் சொல்வது சரிதான். நன்றி. ஆனால், நண்பன் அவர்களுக்கு ப்ராமிஸ் பண்ணினதாலேயே இது. நாளையிலிருந்து நம்ம பதிவுகள் வழக்கம் போல தொடரும்.

    நன்றி. நன்றி.


  20. rv said...

    நன்றி சந்தோஷ்,
    கார்த்திக் ஜெயந்திற்கு சொன்னதைப் பார்க்கவும். concern-ற்கு நன்றி.


  21. rv said...

    திருப்பாச்சி,
    உம்ம பின்னூட்டத்த பதிச்சதுக்கு ஸ்பெஷல் காரணமிருக்கு அப்பா.

    'Lighter Side of Sports' கேள்விப்பட்டிருக்கீறீரா? அதேதான். நீங்க சொல்ற காமெடிய reject பண்ண மனசு வரல. :)))


  22. Karthik Jayanth said...

    //நம்ம பதிவுகள் வழக்கம் போல தொடரும்.//

    சிங்கம் ஒன்று புறபட்டதே :-)

    I would be more happy to read articles on Life / study (how to) Doctor their career prospects and general life of ppl in russia. raise and fall of russian economy. i know it wouldnt fetch more comments but would have regular readers.


  23. நண்பன் said...

    // இப்பதிவை எழுதி என் மேல் இருக்கும் பிம்பத்தையும் உடைத்துக் கொள்ள வேண்டுமா என்று நிறைய யோசித்தேன். ஆனால், நண்பனிடம் பதில் எழுதுவதாக சொல்லிவிட்டு அதைச் செய்யாவிட்டால் அவமரியாதையாக இருக்குமென்பதாலும், அநாதிநாதர் போன்றவர்கள் நான் பதில் போடாடதற்கு புது கற்பிதம் செய்ததைப் போல் எத்தனை பேர்கள் செய்திருப்பார்கள் என்பதையும் நினைத்தே இப்பதிவு. //

    நண்பனுக்கு மரியாதை கொடுக்க நினைத்ததற்கு மிக்க நன்றி.

    ஆனால், அதே சமயம் விவாதம் செய்பவர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்களா என்ன? பிம்பத்தை உடைத்துக் கொள்ள வேண்டுமா என்று எழுதி இருக்கிறீர்கள்? அதே போல, உங்கள் நண்பர்களின் அறிவுரைகளைப் படித்ததும் ஞாபகம் வருவது படித்தவர்களே விவாதத்திற்கு அஞ்சினால், பின்னர் எப்படி தான் தெளிவு கிடைப்பது?

    மேலும் உங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. இவ்வளவு தானா? ஹோலோகாஸ்ட் நடந்ததா, இல்லையா என்ற பிரச்சினை இன்றைய சூழலில் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அடுத்தவர்களை அவமரியாதை செய்து விட்டு, ஓடி ஒளிந்து கொள்ளும் போலி ஜனநாயகவாதிகளை நோக்கி வைக்கப்பட்ட கேள்வி அது. இப்பொழுது தெளிவாயிருக்கும். அதைத் தான் நான் எடுத்து மொழி பெயர்த்தேன்.

    அவ்வளவு தான்.

    எழுதுபவரின் பெயரைக் கொண்டு தான் அவருடைய பதிவுகளும் எடை போடப்படும் என்ற கொள்கை வைத்திருக்கும் சில குறுகிய எண்ணம் கொண்ட அக்கரை நண்பர்களுக்கிடையில், சமுத்ராவின் கருத்து ஒன்றும் அத்தனை மோசமானதல்ல. மேலும், நான் சொல்ல நினைத்தது - மட்டுறுத்துவதாக இருந்தால், ஒன்று முழுமையாக நீக்கி விடுங்கள் அல்லது அப்படியே பிரசுரியுங்கள். அதாவது, நீங்கள் கத்திரிக்கோலை எடுத்துக் கொண்டு வெட்ட ஆரம்பிக்காதீர்கள் என்று தான்.

    பின், உங்கள் பொது அறிவை நான் கேள்வி கேட்கவில்லை.

    உங்களுக்கு தமிழகப் பத்திரிக்கைகள் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்திருக்குமா என்று தான் கேட்டேன். ஏனென்றால் - நீங்கள் ரஷ்யாவில் இருந்து எழுதுகிறீர்கள். அங்கே இந்தப் பத்திரிக்கைகள் கிடைக்குமா என்று தான் கேட்டேன். இணையத்தில் கிடைக்கிறது என்கிறீர்கள். காசு பணத்தை விரயம் செய்து, பொய் பரப்பும் பத்திரிக்கைகளா படிக்கிறீர்கள் இணையத்தில்? ஆச்சரியம் தான். படிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கையிலே.!!!

    (அப்புறம் - நீங்கள் நிறைய பின்னூட்டம் விரும்புவீர்கள் என்பதால், குட்டி குட்டியாய், ஆனால் நிறைய பின்னூட்டங்கள் இடுகிறேன். சரியா? )


  24. நண்பன் said...

    // இரானிய அதிபரில் ஆரம்பித்து பச்சா தீவிரவாத கூட்டத்து ஆட்களெல்லாம் பேசும் பேச்சுகளை கேட்டிருக்கீறீர்களா? பிபிசி, இண்டிபெண்டண்டில் ஆரம்பித்து ஆஸ்திரேலியன் ஏஜ் வரை உலக பத்திரிகைகள் அனைத்தும் அவர்கள் பேசும் அமைதி ததும்பும் பேச்சுகளை வேண்டுமென்றே ஆங்கிலத்தில் தவறாக மொழிபெயர்த்து islamophobia விற்கு தீனி போடுகிறார்கள் என்கிற மாதிரி இருக்கிறது மதம் அதில் சம்பந்தப்படவில்லையென்கிற உங்கள் கருத்து. இது உண்மையா?//

    முதலில், ஒரு பின்லேடனோ, அல்லது ஜாவ்ரியோ ஏதாவது ஒரு உரையில் உளறிக் கொட்டினால், அதை தங்கள் வியாபாரத்திற்காக காசு கொடுத்து வாங்கி, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று திகட்ட திகட்ட செய்தி அளிக்கும் அந்த நிறுவனங்களிடம் நீங்கள் கேள்விகள் எதுவும் வைப்பதில்லை. ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா? அதற்கு என்ன சொல்கிறாய்? என்று.

    நான் உங்களிடம் கேட்கிறேன் - ஏன்?

    ஏன் உலகில் நடக்கும் போராட்டங்களுக்கெல்லாம் நான் பதில் சொல்லியே ஆகவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? இதைத் தான் - 'இதெல்லாம் தற்செயலான சிந்தனை தானா' என்று கேட்டேன்? சொல்லுங்கள் - இந்தத் தீவிரவாதி என்ன செய்கிறான், அந்தத் தீவிரவாதி என்ன செய்கிறான் என்று செய்தி சேகரிக்கும் போர்வையில் அலைவது யார்? அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? தீவிரவாதம் குறித்து நீங்கள் என்ன கருத்து கொண்டிருக்கிறீர்களோ அதையே தான் நானும் கொண்டிருக்கிறேன். இதை இதற்கு முன்னரும் நான் தெளிவாகச் சொல்லி இருக்கிறேன் - தீவிரவாதத்தை எதிர்ப்போம் - அனைத்து தீவிரவாதத்தையும் தான். ஆனால், அந்த அறைகூவலை ஏற்றுக் கொள்ள முடியாமல் விலகிக் கொண்டவர்கள் தான் இருக்கிறார்கள்.

    இன்று உலகில் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிட்டு மரணமடைபவர்களில் அதிகம் பேர் - இஸ்லாமியர்கள் தான். இராக் ஆகட்டும், ஆஃப்கானிஸ்தான் அல்லது பாக்கிஸ்தான் ஆகட்டும் - தீவிரவாதத்தை எதிர்த்து அதிக அளவில் மாண்டு போவது இஸ்லாமியர் தான். இந்தத் தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் மிதவாதிகளின் கைகளை பலவீனப்படுத்துபவர்கள் யார் தெரியுமா?

    அமெரிக்கர்களும் அவர்களைச் சார்ந்து நிற்கும் மேலை நாட்டினரும்.

    பாக்கிஸ்தானில், ஒரு விருந்து கொண்டாட்டத்தில், அல்கொய்தாவின் நம்பர் 2 ஜாவ்ரி இருக்கிறார் என்ற தப்பான உளவுத்துறையின் தகவலால் - பதினெட்டு பேர் - பெண்கள், குழந்தைகள் மரணமடைந்தனர். பாக்கிஸ்தானில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது - முஷ்ரப்பிற்கு எதிராக. அவரே நொந்து கொண்டார் - தங்களுக்குத் தெரியாமல், தவறு நிகழ்ந்து விட்டது என்று.

    மக்களின் நன் மதிப்பைப் பெறாமல், எந்த ஒரு தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கையும் வெற்றி பெறாது என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாத அமெரிக்கர்களின் வெளியுறவு கொள்கை தான் அவர்களது முதல் எதிரி.

    முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து, ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா?

    பிரச்சினையின் ஆணி வேர் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நோயின் மூலம் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நாங்கள் தாந்தோன்றித்தனமாகக் காரியங்கள் செய்வோம் ஆனால், அதற்கான பொறுப்பை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேலை நாட்டினர் சொன்னால், அது எந்த வகை தர்மம், ராமநாதன்?

    நடுநிலையாளார் என்ற போர்வைக்குள் புக முயற்சிக்காதீர்கள். சரியா, தவறா என முடிவெடுக்கத் தெரியாத, பிள்ளையையும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டி விடும் பெரிய மனிதராக இல்லாமல், (நன்றி:: அப்படிப்போடு) மனசாட்சியை பதில் சொல்ல வையுங்கள் - ஆள் தோட்ட பூபதி மாதிரி.

    மற்றவை தொடரும்....


  25. rv said...

    நண்பன்,
    விவாதம் செய்வோர்கள் எல்லாம் தீண்டத்தகாதவர்கள் என்றெல்லாம் இல்லை. சிலருக்கு விவாதங்கள் செய்வது பிடிக்கும். சிலர் ஈகோவிற்காக செய்வார்கள். சிலர் புதிதாய் கற்கலாமே என்ற ஆசையில். பொதுவாக நான் எந்தவித விவாதங்களிலும் ஈடுபடுவதில்லை. உங்கள் பதிவில் தான் முதல்முறையாக இது சம்பந்தமான என் கருத்துகளை கூறினேன். நண்பர்கள் என் மேலுள்ள அக்கறையிலும், இதுபோன்ற பெரும்பாலான விவாதங்கள் முடிவில் பதிவிற்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் வந்து திட்டி சண்டையில் முடிவது தெரிந்ததாலும் அப்படிக் கூறுகின்றனர். அவர்கள் மேல் தவறு இல்லை. ஆனால், மட்டுறுத்தல் வந்தபின் அந்த மாதிரி flamers இங்கே வர சாத்தியங்கள் குறைவு என்பதாலும் இதை எழுதினேன்.

    ஹோலோகாஸ்ட் பற்றி இப்பதிவில் சம்பந்தமில்லையென்பதாலேயே நீக்கினேன். அதற்கு ஒருவர் பதிலளிக்க மற்றவர் மறுத்தளிக்க என்று இப்படியே போகும். தமிழ்மணம் பற்றித் தாங்கள் அறியாததல்ல.

    தமிழகப் பத்திரிகைகள் என்று நீங்கள் குறிப்பிட்டதிலிருந்து நான் புரிந்து கொண்டது ஹிந்து, எக்ஸ்பிரஸ், தினமலர், தினத்தந்தி போன்ற நாளேடுகளும், விகடன், குமுதம் போன்றவையும் அவற்றைச் சார்ந்தவையும். இவைத் தவிர சில வலைத்தளங்கள் அவ்வப்போது படிப்பதுண்டு. விரயம் என்பதனைவிட, தமிழகத்தில் என்ன நடக்கிறது என்று ஓரளவிற்கேனும் புரிந்துகொள்ள உதவுகின்றன இவை. இவை தவிர வெகுஜன பத்திரிகைகள் என்று வேறெதுவும் எனக்குத் தெரிந்து இல்லை. இதில் வெகுஜன என்பதையே முக்கியமான வார்த்தையாக கொள்ள வேண்டும். influential என்பதால். இவற்றைவிட இன்னும் அதிக அளவில் பொதுமக்களை influence செய்யும் பத்திரிகைகள் இருந்தால் சுட்டி கொடுக்கவும். உதவியாய் இருக்கும்.

    பின்னூட்டங்கள் விளையாட்டுக்கு. உங்களுக்கும் விளையாட ஆசையிருந்தால் தாராளமாக விளையாடலாம். :)

    ஆனால், ஒரே பதிலாய் அளித்தால் பதிவு போன்று நீண்டு விடும். படிப்பவருக்கும் சிரமம். தனித்தனியாக கேள்விக்கு பதிலளிப்பதே நல்லது என்று நினைக்கிறேன்.

    நன்றி


  26. rv said...

    // ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா?

    அதற்கு என்ன சொல்கிறாய்? என்று.
    //


    முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏன் முஸ்லீம்கள் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டது தாங்கள். அதற்கான மறுமொழியாகவே, ஏனென்றால் மிதவாதிகள் மவுனம் காக்கிறார்கள் என்றேன். நான் மவுனம் காக்கிறார்கள் என்று சொன்னது உங்களையோ என்னையோ போன்ற மக்களை அல்ல. தலைவர்களை! அவர்களை விடுத்து, என் பக்கத்துவிட்டுக்காரரிடம் போய் பின் லாடன் குண்டு போட்டான், நீயேன் கேள்வி கேட்கவில்லை என்று கேட்கிற அளவுக்கு இன்னும் "தெளிவு" பெறவில்லை நான். :)

    //அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? //
    ஏன் திவிரவாதிகள் சொல்வதையோ அல்லது இரானிய அதிபர் உளறுவதையோ பிரசுரிக்கிறார்கள்? அவர்களுக்கு விற்பனை குறி. அவர்களைக் குற்றம் ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் இந்த குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும்? எல்லா உலக நடப்புகளையும், சுனாமி உட்பட எல்லாவற்றையும் காசு கொடுத்து வாங்கி காசு பார்ப்பதே அவர்கள் தொழில். இதில் முஸ்லீம்களிடம் மட்டும் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளமுடியாதது. புஷ்ஷின் உளறல்களை கிண்டலடிக்காத / பிரசுரிக்காத பத்திரிகைகளா? ஏன் இரானிய அதிபர் மற்றும் இன்னபிற தலைவர்கள் சொல்வதை பிரசுரிக்கிறார்கள் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. தலைவர்கள் பேசினால் தான் நியுஸ். நாம் பேசினால் வெட்டி அரட்டை. அவ்வளவு தான் வித்தியாசம். ஏன் மற்ற முஸ்லீம் தலைவர்களை கேட்கிறார்கள் என்ற கேள்வி எதற்கு? கேட்கத்தான் செய்வார்கள். ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் கூட, கருத்து சொல்ல முப்பது பேர் வருவார்கள். அல்லது வரவழைக்கப்படுவார்கள். கிரிக்கெட்டிற்கே இப்படியெனறால், "கடவுளின் பெயரால் தலையைக் கொய்வேன்" என்பது இன்னமும் சீரியஸ் மேட்டரல்லவா? அதான் தெளிவு பெற மற்ற அறிஞர்களைக் கேட்கிறார்கள். இதிலென்ன தவறு கண்டுவிட்டீர்கள்?

    பின் லாடனின் விடியோ காஸெட்டை வெளியிட வேண்டிய அவசியமென்ன என்று நீங்கள் கேட்கிறீர்கள். நான் சொல்கிறேன், பின் லாடன் மீது அபிமானம் வைத்திருக்கும் இன்னும் ஒருவராவது அவனை வெறுக்கத் தொடங்கினால் அதுவே போதும். மேலும், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வும் இதனால் எளிதில் ஏற்படுத்தமுடியும். இளைஞர்களுக்கு, வீட்டு பெரியோர்கள் மதத்தின் பெயரால் பகை வளர்ப்பதின் ஆபத்தை
    புரியவைக்கலாம். கடவுளின் பெயரால் கொடுமைகள் செய்வதென்பது எத்தனை முட்டாள்தனமானது என்றும் புரிந்துகொள்ளலாமே.

    தீவிரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர் முஸ்லீம்கள் என்பதையெல்லாம் நான் மறுக்கப்போவதில்லை. ஏனென்றால் நான் கேட்கிற கேள்விகளுக்கும் சம்பந்தமில்லை. நீங்கள் அமெரிக்க அராஜகத்தை குறித்து மிகப் பெரிய 'அவன நிறுத்தச் சொல்லு' விளக்கவுரை அளித்திருக்கிறீர்கள். அதுவும் நான் பதிவிலேயே குறிப்பிட்ட மூன்று வகை மறுப்புகளையும் சரியாகக் கலந்து.

    //பிரச்சினையின் ஆணி வேர் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நோயின் மூலம் எங்கிருக்கிறது என்ற புரிதலில்லாமல், நாங்கள் தாந்தோன்றித்தனமாகக் காரியங்கள் செய்வோம் ஆனால், அதற்கான பொறுப்பை இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேலை நாட்டினர் சொன்னால், அது எந்த வகை தர்மம், ராமநாதன்?
    //

    ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில்.

    //முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து, ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா?
    //

    இதையே நானும் கேட்டேனே என் பதிவில். போராட வைப்பது தலைவர்கள். ஒரு கார்டூனுக்கு (மற்ற மதத்தவரின் பார்வையில்) இவ்வளவு கோபப்படும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் தலைவர்கள், ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.

    அவமதிக்கவேண்டும், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் தேவையில்லாமல் எதற்கு இங்கு? இப்படி கடவுளின் பெயரால் செய்யப்படும் உளறல்களையும், செயல்களையும் ஏன் பலரும் எதிர்க்கேள்வி கேட்பதில்லை, சர்வதேச ஊடகங்கள் எதுவும் பிரசுரிப்பதில்லையா, பெரும்தலைவர்கள் இப்படி உளறிக்கொட்டுகிறார்கள், டென்மார்க்கிற்கு கிடைத்தது போல் வலுவான எதிர்ப்பு இல்லையே? இதுவே நான் கேட்டதன் சாரம். இதற்கு நீங்கள் பதிலளித்திருக்கிறீர்களா என்று நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். மேலும், நூத்திமுப்பது கோடி முஸ்லீம்களும் இவற்றை எதிர்த்து அறிக்கைவிட வேண்டும் என்று நான் சொல்லவேயில்லை. உதாரணத்திற்கு நம் நாட்டில் பிரபலமான டெல்லி ஜம்மா மஸ்ஜித் இமாம் இருக்கிறார். அவரைப் போன்ற influential தலைவர்களைப் பற்றித்தான் சொன்னேன்.

    இஸ்ரேலுக்கு உரிமையிருக்கிறது என்று நான் சொன்னதும், இஸ்ரேல் ஏன் அணு ஆயுத பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ளவில்லை என்பதும் நீங்கள் உங்கள் பதிலில் குறிப்பிட்டதானாலேயே தவிர அதை இப்பதிவோடு இணைக்க வேண்டுமென்பதற்காக இல்லை. அமெரிக்கா, இஸ்ரேல், பாலஸ்தீனம், ஈராக் என்று பேசிக்கொண்டே போனால் பேசிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

    கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ஊடகங்களில் முஸ்லீம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதைப் பற்றி. நான் அதற்கு மட்டுந்தான் உங்கள் பதிவில் பதிலளித்திருந்தேன். இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கிறேன். அவ்வளவே. ஆனால், நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அமெரிக்க அராஜகத்தை பற்றி. அது இதற்கு சம்பந்தமில்லாதது. ஆனால் வசதியாக மிதவாதிகளை அமெரிக்கா கட்டிப்போடுகிறது என்ற ஒற்றை வரியை போகிற போக்கில் தூவிவிட்டு இப்பதிவின் கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் புல் ஸ்பீடில் எட்டு போட்டு புல்லட் ஓட்டுகீறீர்கள். (நன்றி: ரோஸாவசந்த்)


  27. Amar said...

    //ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.//

    இராமநாதன்,

    Iranians are Persians not Arabians.


  28. சன்னாசி said...

    //சன்னாசி சார் இங்கே எங்கே வந்தாரென்று தெரியவில்லை...//

    ஒரே IPயிலிருந்து பல பெயர்களில் பின்னூட்டங்களை இடுவதுபோல, உலகின் பல இடங்களிலிருந்து பல IPகளிலிருந்து ஒரே பின்னூட்டத்தையும் வெவ்வேறு பெயர்களில் இடமுடியும் என்று எனக்கு அறிவியல் விளக்கப்பாடம் கொடுத்து எதையோ விளங்கவைக்க முயற்சித்தோ என்னவோ, மஞ்சமாக்கான், வெங்காயம் என்ற பெயர்களில் என் பதிவிலும் இதே பின்னூட்டம் ஒன்றுக்கு நான்கு முறையாக பல்வேறு IPகளிலிருந்து இடப்பட்டுள்ளது. ஏற்கனவே முடக்கப்பட்ட பின்னூட்டங்களில் ஏதோவொன்று இதிலும் இருப்பதால், எரிதத் தடுப்பு இந்த நாலையும் முடக்கி வைத்திருக்கிறது. எனக்குத் தெரிந்த விளக்கம் இவ்வளவுதான். சரிப்பட்டு வருகிறதா?


  29. நண்பன் said...

    // இரானிய அதிபர் சொன்னது கருத்துச் சுதந்திரம்னா, கார்ட்டூன் போட்டதும் கருத்துச் சுதந்திரம் தானே? இதுக்கு புரட்சி, அதுக்கு மவுனம். ஏனோ? எங்கேயோ ஒரு கோடியில் நடந்ததற்கு பாகிஸ்தானில் கொடியெரிப்பு, இந்தோனேஷியாவில் தூதரக எரிப்பு. இதுக்கெல்லாம் வலுவா மறுப்புகளும் கண்டனங்களும் வந்திருக்கிறதா. இல்லை.//

    //அவமதிக்கவேண்டும், கருத்துச்சுதந்திரம் என்றெல்லாம் தேவையில்லாமல் எதற்கு இங்கு?//

    ராமநாதன்,

    வாதாடும் பொழுது தான் முன்னர் என்ன சொன்னோம் என்பதை மறந்து விட்டு, அடுத்தவர் வாதத்தை நேர்மையற்றதாக்க முயலவேண்டாம்.

    கருத்து சுதந்திரம் பற்றி, நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டதனாலயே, என் பதிவிலும் குறிப்பிட்டேன். பலவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

    முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதினால் எந்த பலனும் இருக்காது. தேவையற்று பேசுபவன் அல்ல நான்.

    உங்களுடன் உரையாடுவதில் எந்த அளவுக்கு பயன் இருக்கும் என்பது சந்தேகமே.

    என்றாலும் மீதுக்கும் பதில் சொல்கிறேன்.


  30. நண்பன் said...

    // கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ஊடகங்களில் முஸ்லீம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதைப் பற்றி. நான் அதற்கு மட்டுந்தான் உங்கள் பதிவில் பதிலளித்திருந்தேன். இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கிறேன். அவ்வளவே. ஆனால், நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அமெரிக்க அராஜகத்தை பற்றி. அது இதற்கு சம்பந்தமில்லாதது. ஆனால் வசதியாக மிதவாதிகளை அமெரிக்கா கட்டிப்போடுகிறது என்ற ஒற்றை வரியை போகிற போக்கில் தூவிவிட்டு இப்பதிவின் கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் புல் ஸ்பீடில் எட்டு போட்டு புல்லட் ஓட்டுகீறீர்கள். (நன்றி: ரோஸாவசந்த்)//
    தீவிரவாதத்தைக் குறித்து பேசும் பொழுது, அமெரிக்காவைக் குறிப்பிடாமல் எந்த வாதமும் செய்ய இயலாது. உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லவருவது தானே? அமெரிக்க எதிர்ப்பைப் பற்றிப் பேசும் பொழுது, அங்கு தேவையில்லாமல், ஈழம், காஷ்மீரம், பாலஸ்தீனம் என்று முரண்பாடுகளை எல்லாம் - இழுத்துக் கொண்டு வந்து விட்டு, பின்னர் அதன் தொடர்ச்சியாக இங்கும் ஒரு பதிவு போட்டும் விட்டு, இப்பொழுது நான் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் பேசுகிறேன் - அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக்குளில்லை கதையாக வாக்குமுலம் கொடுக்கிறீர்கள். அதுவும் ரோஸா வசந்த் பெயரை எல்லாம் வைத்துக் கொண்டு. அவர் எத்தகைய நேர்மையாளார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

    எட்டு போட்டால் தான், அனுமதியே கிடைக்கும் என்ற அடிப்படையையும் கொஞ்சம் எத்ரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்து நீக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


  31. நண்பன் said...

    // கடைசியாக: முதலில் நீங்கள் குறிப்பிட்ட பிரச்சனை ஊடகங்களில் முஸ்லீம்கள் மட்டும் குறிவைக்கப்படுவதைப் பற்றி. நான் அதற்கு மட்டுந்தான் உங்கள் பதிவில் பதிலளித்திருந்தேன். இந்தப் பதிவில் இன்னும் கொஞ்சம் விளக்கமாக அளித்திருக்கிறேன். அவ்வளவே. ஆனால், நீங்கள் இப்போது பேசிக் கொண்டிருப்பது அமெரிக்க அராஜகத்தை பற்றி. அது இதற்கு சம்பந்தமில்லாதது. ஆனால் வசதியாக மிதவாதிகளை அமெரிக்கா கட்டிப்போடுகிறது என்ற ஒற்றை வரியை போகிற போக்கில் தூவிவிட்டு இப்பதிவின் கேள்விக்கு சம்பந்தமேயில்லாமல் புல் ஸ்பீடில் எட்டு போட்டு புல்லட் ஓட்டுகீறீர்கள். (நன்றி: ரோஸாவசந்த்)//
    தீவிரவாதத்தைக் குறித்து பேசும் பொழுது, அமெரிக்காவைக் குறிப்பிடாமல் எந்த வாதமும் செய்ய இயலாது. உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லவருவது தானே? அமெரிக்க எதிர்ப்பைப் பற்றிப் பேசும் பொழுது, அங்கு தேவையில்லாமல், ஈழம், காஷ்மீரம், பாலஸ்தீனம் என்று முரண்பாடுகளை எல்லாம் - இழுத்துக் கொண்டு வந்து விட்டு, பின்னர் அதன் தொடர்ச்சியாக இங்கும் ஒரு பதிவு போட்டும் விட்டு, இப்பொழுது நான் தீவிரவாதத்தைப் பற்றி மட்டும் தான் பேசுகிறேன் - அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக்குளில்லை கதையாக வாக்குமுலம் கொடுக்கிறீர்கள். அதுவும் ரோஸா வசந்த் பெயரை எல்லாம் வைத்துக் கொண்டு. அவர் எத்தகைய நேர்மையாளார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

    எட்டு போட்டால் தான், பொது இடங்களில் வண்டி ஓட்ட அனுமதியே கிடைக்கும் என்ற அடிப்படையையும் கொஞ்சம் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்து நீக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.


  32. rv said...

    // கூடவே, ஒரு முறை பிரசுரம் செய்தவற்றை எடிட் செய்து நீக்குவதையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
    //
    முதலில் தெளிவாக ஒன்று. நான் எடிட் செய்த பின்னூட்டங்கள் எது எதுவென்று என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். அவை இல்லாத இடத்தில் நான் எடிட் செய்திருந்தாலோ, இல்லை தங்களின் அபரிமிதமான வாதங்களை கண்டு நடுங்கி என் பதிவில் மாற்றங்கள் செய்திருந்தாலோ.. இவையிரண்டில் எதுவாகயிருப்பினும், ஆதாரத்துடன் குறிப்பிட்டால், நான் பொதுவில் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால், ஆதாரமில்லாத பட்சத்தில், நீங்கள் இவ்வாறு என் மீது இத்தகைய அவதூறு செய்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். I am serious coz u question my integrity. Agreed?


  33. rv said...

    //உங்கள் நோக்கமே - இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்று சொல்லவருவது தானே?//
    என் மண்டைக்குள் புகுந்து என் மூளை என்ன யோசிக்கிறது என்று 100% சரியாக சொன்ன நண்பருக்கே ஜாக்பாட்!
    என்ன கற்பனை வளம். ஒரு நிமிடம் திகைத்துப்போய்விட்டேன். இதச் சொல்லும்போது என்ன நினைத்தீர்கள். ஜால்ரா கோஷ்டி வந்து மொத்தமாக எனக்கும் மங்களம் பாடுவார்கள் என்றுதானே. இல்லையென்றால் இப்படி கேவலமாக சொல்லத் தேவைதான் என்ன? நான் பதிவில் குறிப்பிட்ட 1. இதுவந்தாலும், இதற்கு பதிலளிக்க காரணம், நீங்கள் எழுதியதால் மட்டுமே!


  34. rv said...

    //வாதாடும் பொழுது தான் முன்னர் என்ன சொன்னோம் என்பதை மறந்து விட்டு, அடுத்தவர் வாதத்தை நேர்மையற்றதாக்க முயலவேண்டாம்.

    கருத்து சுதந்திரம் பற்றி, நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்டதனாலயே, என் பதிவிலும் குறிப்பிட்டேன். பலவற்றையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
    //
    கருத்துச் சுதந்திரம் என்று நான் சொன்னதற்கும் நீங்கள் பிடித்துத் தொங்குவதற்கும் வித்தியாசம் புரியவில்லையா? அல்லது "புரியவில்லையா"? Please for one moment, go through it again, and am sure any sane mind will get what am stressing on.


  35. rv said...

    //அமெரிக்காவைப் பற்றி அல்ல என்று எங்கப்பன் குதிருக்குளில்லை கதையாக வாக்குமுலம் கொடுக்கிறீர்கள். அதுவும் ரோஸா வசந்த் பெயரை எல்லாம் வைத்துக் கொண்டு. அவர் எத்தகைய நேர்மையாளார் என்று ஏற்கனவே சொல்லிவிட்டேன்.
    //

    முதலில் ரோஸா வசந்த் பற்றி உங்களுக்கு எவ்வகையான அபிப்பிராயங்களோ. அவரைப் பற்றி நீங்கள் "உண்மையை" அறிந்து கொண்டதாலேயே நாங்களும் புரிந்துகொண்டோம் என்றில்லையே. என்னைப் பொருத்தவரை ஒரு மதிக்கத்தக்க பதிவர். அவ்வளவே.

    அமெரிக்காவிற்கும், இஸ்லாம் மேல் ஊடக வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கும் புரியும்படி எளிய தமிழில் விளக்கினால் தன்யனாவேன். தீவிரவாத வித்து, விதை என்றெல்லாம் பினாத்தாமல், நேரடியாக பேசப்படும் விஷயத்துக்கு வந்தால் நலம்.


  36. rv said...

    //எட்டு போட்டால் தான், அனுமதியே கிடைக்கும் என்ற அடிப்படையையும் கொஞ்சம் எத்ரிந்து வைத்துக் கொள்ளுங்கள்//
    என்ன சொல்கிறேன் என்று புரியாமலேயே கருத்துகள் உதிர்ப்பதற்கு மற்றுமொரு சாட்சி. எட்டு போடவேண்டும். ஆனால் எட்டு மட்டுமே அல்ல. :)))


  37. rv said...

    எதைப்பற்றி பேசுகிறோமோ அதைவிடுத்து அடுத்ததற்கு தாவி, மேலும் என்னையும் குற்றஞ்சொல்லி, நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாய் இதுவரை ஒரு நேர்மையான பதிலும் சொல்லாமல்... கிண்டல், அட்வைஸ் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

    தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நண்பனைக் கண்டால் ஓடு என்று சிலர் அறிவுறுத்தினர். அது உங்கள் வாதத்திறமையை நினைத்து என்று நம்பியிருந்தேன். இப்போது புரிகிறது ஏனென்று.


    //உங்களுடன் உரையாடுவதில் எந்த அளவுக்கு பயன் இருக்கும் என்பது சந்தேகமே//

    இதுவே எனக்கும் தோன்றுகிறது. ஏனோ தெரியவில்லை. உங்களுக்கு எப்படி சவுகரியமோ அப்படியே எனக்கும்.


  38. Muthu said...

    தனிப்பட்ட தாக்குதலை தவிர்த்து ஒரு விவாதம் ஆரோக்கியமாக நடைபெற்று கொண்டு உள்ளது என்று சந்தோசப்பட்டுக்கொண்டபோதே பிரச்சினை ஆரம்பித்துவிட்டது.

    நண்பன்,

    நான் உங்களிடம் கேட்கவேண்டும் என்று நினைத்திருந்த(உங்களுடைய ஒரு பதிவில் பின்னூட்டத்திலும் சொல்லியிருந்தேன்) கேள்விகளில் ஒன்று இது.இன்னொரு கேள்வியும் என்னிடம் உள்ளது.பிறகொரு நாள் நான் கேட்கிறேன். மற்றபடி உங்கள் இருவரின் விவாதமும் நன்றாக இருக்கிறது.

    ராமநாதன்,

    மனதில் பட்ட கேள்விகளை நியாயமாக கேட்பதற்கு நீங்கள் ஃபீல் பண்ண தேவையில்லை. நீங்களும் நன்றாக எழுதியுள்ளீர்கள்.என் மனதில் இருந்த முக்கிய கேள்வி இது.அதை நீங்கள் அழகாக கேட்டுள்ளீர்கள்.

    இருவருக்கும்:

    இந்த விவாதங்களினால் யாருக்கும் பயன் இல்லை என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் நாலு பேருக்கு விஷயம் புரியுமே....ஆகவே தேவையில்லாத மன சஞ்சலங்களை வி்ட்டுவிட்டு விவாதத்தை தொடருங்கள் நண்பர்களே.....


  39. கால்கரி சிவா said...

    திரு இராமநாதன்,

    எனக்குள் இருக்கும் ஒரே கேள்வி இதுதான்

    அமெரிக்க என்ற ஒரு நாடு அரேபிய எண்ணையை வாங்காவிட்டால் அவ் அரேபிய நாடுகளின் அட்ரஸ் இருக்குமா?

    அமெரிக்காவின் தொழில் நுட்பம் இன்றி அரேபிய நாடுகளால் எண்ணையை எடுக்கத்தான் முடியுமா?


    அமெரிக்கர்களுக்கு அரேபியர் தேவை, அரேபியர்களுக்கு அமெரிக்கர் தேவை.

    கூடி வாழ்ந்தால் கோடி ந்ன்மை


    Calgary Siva


  40. நண்பன் said...

    ராமநாதன்,

    உங்களுடைய சில வாதங்களை மேற்கோள் காட்டியும் - இது அதுவல்ல, உனக்குப் புரியவில்லை என்றெல்லாம் பேசுவது
    சரிதானா என்று யோசியுங்கள். நானாக எந்த ஒரு வரிகளையும் கற்பனை செய்து மேற்கோள் காட்டவில்லை.

    உங்களுடைய வார்த்தைகளை நீங்களே மறுப்பது உங்களுடைய விருப்பம். அது குறித்து விவாதிப்பது என் வேலையல்ல.

    // தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நண்பனைக் கண்டால் ஓடு என்று சிலர் அறிவுறுத்தினர். அது உங்கள் வாதத்திறமையை நினைத்து என்று
    நம்பியிருந்தேன். இப்போது புரிகிறது ஏனென்று. //

    அடுத்தவர் மனம் புண்படாதவாறு விவாதிக்கிறீர்கள் என்று சொல்லியவரே நீங்கள் தான்.

    இப்பொழுது முன்னுக்குப் பின் முரணாக சொல்வதும் நீங்கள் தான். உங்களுடைய வரிகளைக் கொண்டு தான் உங்களிடம் பேசுகிறேன். நானாக
    எதையும் எழுதிக் கொண்டு வரவில்லை. வாதத் திறமை என்று எதையும் நான் சொல்லவில்லை. அதைப் போல யார் வாசிக்கிறார்கள், யார்
    ஓடுகிறார்கள் என்றும் நான் எவரையும் கேள்வி கேட்டதுமில்லை. அது அவரவர் விருப்பம். நான் சொல்லவிரும்பியதை மட்டும் எப்பொழுதும்
    சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். பிறர் மனம் புண்படுமே என்பதற்காக என் கருத்துகளை நான் கூறக்கூடாது என்று எதுவும் இல்லையே.?

    //
    //முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து,
    ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா? //

    இதையே நானும் கேட்டேனே என் பதிவில். போராட வைப்பது தலைவர்கள். ஒரு கார்டூனுக்கு (மற்ற மதத்தவரின் பார்வையில்) இவ்வளவு
    கோபப்படும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் தலைவர்கள், ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று
    சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.
    //

    முதலில் - போராட வைப்பது தலைவர்கள். தவறு. இங்கு அரசியல் கட்சிகள் கிடையாது. அமைப்புகள் கிடையாது. இமாம்களுக்கு
    என்ன பேச வேண்டும் என்ற instructions உண்டு. அவர்களாக எதையும் பேசி விட முடியாது. இந்தப் போராட்டம் - வெறும் குறுஞ்செய்திகள் மூலம்,
    மின்னஞ்சல் மூலம் ஒவ்வொரு தனிநபராக தொடர்பு கொள்ளப்பட்டு செய்யப்பட்டது. வெள்ளிக் கிழமை தொழுகை முடிந்ததும், திரண்ட ஜனத்திரள்
    தான் ஊர்வலம் போனது. இது அரபு நாடுகளில். இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மட்டும் தான் அமைப்புகளால்
    இயக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் தான்.

    நிற்க, ஈரான் அதிபரை எந்த ஒரு அரபு நாட்டுத் தலைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
    இஸ்ரேல் மீது எத்தனை அவநம்பிக்கை உண்டோ, அத்தனை அவநம்பிக்கை - அல்லது அதைவிட அதிகமாக - ஈரான் மீது உண்டு. ஈரானியர்கள்
    அரபிகளா, இல்லையா என்பதிலே உங்களுக்குக் குழப்பம் இருக்கும் பொழுது, அந்த நாடுகளின் அரசியல் பின்னணியைப் பற்றிய தெளிவு உங்களிடம்
    இருக்க இயலாது. ஈரானிய அதிபரின் பேச்சிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் பேச்சையொட்டி, பத்திரிக்கைகள் வெளியிட்ட,
    ஹோலோகாஸ்ட் செய்தியை மொழி பெயர்த்து இட்ட பொழுதே, இஸ்ரேல் பற்றிய அவரது பேச்சிற்கு யாருடைய ஆதரவும் கிடையாது என்பதால்
    அவருடைய இஸ்ரேல் ஒழிப்பு பேச்சை நான் வெளியிடவில்லை. அதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், ஹோலோகாஸ்ட் உண்மையா, பொய்யா
    என விவாதிக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை.

    மேலும், முஸ்லிம்கள் ஈரானிய அதிபரின் ஆளுகைக்குட்பட்டவர்கள் இல்லை. ஆகையால், ஈரானிய அதிபர் பேசினார் - அதனால் நாங்கள் பதிலுக்குக்
    கார்ட்டூன் போட்டோம் என்று சொல்ல முடியாது. இந்த கார்ட்டூன் பிரச்சினை வந்த பின் தூதரக மட்டத்தில் புகைய ஆரம்பித்த பொழுது தான், ஈரானிய
    அதிபர் பேசினார் - அப்பொழுதும், இந்த கேலிச்சித்திரங்களைக் குறிப்பிடாமல். இரண்டாவது ஹோலோகாஸ்ட், ஒரு அம்பது வருடத்திற்கு முந்தைய நிகழ்வு -
    அதை சட்டத்தின் மூலம் விவாதிப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்? பிரிட்டீஷ் இளவரசன் தன் நண்பன் விருந்திற்கு ஒரு நாஜியைப் போல உடையணிந்து
    சென்ற பொழுது - ஒரு வருடத்திற்கு முன் - எத்தனை எதிர்ப்பு கிளம்பியது ஏன்? ஹாரிக்கு எந்த சுதந்திரமும் கிடையாதா? இதை தான் எல்லோரும் கேட்கின்றனர்.

    // ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா?
    அதற்கு என்ன சொல்கிறாய்? என்று.
    //

    முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏன் முஸ்லீம்கள் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டது தாங்கள்.
    அதற்கான மறுமொழியாகவே, ஏனென்றால் மிதவாதிகள் மவுனம் காக்கிறார்கள் என்றேன்.//

    நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் - மறுமொழியாக நீங்கள் சொல்கிறீர்கள் - ஏன் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள்? எதற்கு மறுமொழியாக?
    சொல்லுங்கள் - எதற்கு மறுமொழியாக?

    // நான் மவுனம் காக்கிறார்கள் என்று சொன்னது உங்களையோ என்னையோ போன்ற மக்களை அல்ல. தலைவர்களை!
    அவர்களை விடுத்து, என் பக்கத்துவிட்டுக்காரரிடம் போய் பின் லாடன் குண்டு போட்டான், நீயேன் கேள்வி கேட்கவில்லை
    என்று கேட்கிற அளவுக்கு இன்னும் "தெளிவு" பெறவில்லை நான். :)//

    உங்கள் புன்னகைக்கு நன்றி. ஆனால், நீங்கள் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதாவது மிதவாத தலைவர்களை. அந்த தலைவர்களை
    விடுத்து பக்கத்து வீட்டுக் காரனிடம் - அதாவது என் போன்ற சாமான்யர்களிடம் கேட்கக் கூடாது என்ற ஞானத்தைப் பெற்று விட்டீர்கள் புன்னகையுடன்.

    நான் இப்பொழுது உங்களிடம் வைக்கும் கேள்வி - மிதவாத தலைவர்கள் ஏன் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்? தீவிரவாதிகள் மிதவாத தலைவர்கள்
    தலைமையில் இயங்குகிறார்களா? இல்லையே? இந்த கேலிச்சித்திர எதிர்ப்புப் போராட்டத்தில், சில இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறது.
    அதைப் பற்றி நீங்கள் மிதவாதிகளிடம் கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு மிதவாதியும் - அதில் பங்கு பெற்றான். ஒரு
    கட்டத்தில், சிலர் அதீத உணர்ச்சி வயப்படுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டனர். அதனால் வன்முறை நிகழ்ந்தன. அது கண்டிக்கப்படத்தக்க செயல். கடும்
    கண்டனம் எழுதிருக்கிறது. இது பற்றி தனியாக விரிவாக எழுதுகிறேன். நீங்கள் கல்ஃப் நியூஸ் செய்தித் தளத்திற்கு சென்று, வாசகர் கடிதம் பக்கம்
    சென்றால், இந்த கண்டன கடிதங்களைக் காணமுடியும்.

    ஆனால், லேடன் குண்டு போட்டான் - மிதவாத தலைவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்பது எந்த விதத்தில் நியாயம், ராமநாதன்? (இதையும்
    மறுத்துவிட்டு, நீங்கள் வேறு எதையோ பிடித்து தொங்குகிறீர்கள் என்று சொல்லாதீர்கள்)

    நீங்கள் 'மதிப்பிற்குரிய பாக்கிஸ்தானிய உளவாளி' என்ற தலைப்பில், அபுமுஹை வெளியிட்ட ஒரு பதிவைப் படித்திருந்தால் நான் சொல்வதன் முழு
    அர்த்தம் புரிந்திருக்கும்.

    பின்னர் - இந்துக்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள் - சதுர்வேதி, சங்கராச்சாரியார் என்று. சதுர்வேதியை பத்திரிக்கைகள் போலி சாமியார் என்று தான்
    குறிப்பிட்டனவே தவிர, இந்து போலி சாமியார் என்று குறிப்பிடவில்லை. சங்கராச்சாரியாரை இன்றளவும் அவருடைய பல பட்டங்களையும் இணைத்து
    மரியாதையுடனே அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன. இதை நான் கேள்வி கேட்கவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் -
    அவர்கள் நிராபராதிகளே என்று நடத்தும் பத்திரிக்கைகள் ஏன் முஸ்லிம்களைப் பிடித்ததும் - தீவிர வாதி பிடிபட்டான் - என்று ஆரம்பித்து, ஊரில்
    நடக்கும் அனைத்து குற்றங்களையும் அவன் தலையிலே கட்டி, திட்டித் தீர்க்கின்றன. அவனுடைய குற்றங்களும் நிரூபிக்கப்படட்டுமே?

    பெங்களூர் சம்பவத்தில், எத்தனை பேரை கைது செய்து, மிகத் தீவிரமாக செய்திகள் போட்டு, பின்னர் அப்பாவிகள் என்று தெரிந்ததும் மௌனமாக
    விட்டு விட்டார்களே அதைத் தான் ஏன் என்று கேட்கிறேன்.? இதை நீங்கள் மறுப்பதினால் தான் சொன்னேன் - நீங்கள் முடிவு கட்டி விட்டு வாதிக்கிறீர்கள்
    என்று. அது நீங்களே சொன்னது போல கண்ணாடி அணிந்து பார்ப்பதாக இருக்கட்டும் அல்லது கண்ணே இல்லாது இருக்கட்டும் - ஆனால், அதை
    மறுப்பதன் மூலம் - நீங்களே சொன்னது போல - உங்கள் பத்திரிக்கை வாசிப்பு மிகக் குறைவு தான். அதற்காக - என் மனதினுள் புகுந்து ஆராய்ச்சி
    செய்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதினால் நீங்கள் என்ன ஆதாயம் அடைந்து விட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த சின்ன விஷயத்தைப் புரிந்து
    கொள்ள ஹிப்னாட்டிஸம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தமிழகத்தில், தினமலர் தொடங்கி பல்வேறு நாளிதழ்கள் இதை
    தினமும் செய்து வருகின்றன. இனி, ஆனந்த விகடன், ஜூவி, குமுதம் போன்றவை விட்டு விட்டு, தினசரிகளை தொடர்ந்து வாசித்து வாருங்கள் -
    நான் சொல்வது விளங்கும்.


    // ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே
    போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய
    மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக
    முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே
    கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை?
    அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //

    ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை? இது நீங்கள் எழுதியது தானே?
    இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது
    பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும், சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள்
    என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள். இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக
    இருக்கிறது.

    பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது?
    But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள்
    நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று?


  41. நண்பன் said...

    முத்து,

    நன்றி,

    உங்கள் அறிவுரைகளுக்கு.

    விவாதிப்பேன்.

    ஆனால், அதே சமயம்ம்- விவாதம் முன்னோக்கி சென்றால் தான் அழகே தவிர, தான் சொன்னவற்றை மறுத்துக் கொண்டு இருப்பது அல்ல.

    என்றாலும், அவருடைய நண்பர்கள் மிகக் கவலைப்படுகிறார்கள் - இவருக்கும் அதில் ஏதோ புரிந்து விட்டது ஏன் நண்பனுடன் விவாதிக்கக் கூடாது என்று.

    என்ன செய்வது?

    என்றாலும், அவர் கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் பதில் சொல்லிவிடுகிறேன் - தன்னையுமறியாமலே - நடுநடுவேஎ அவர் திசை தடுமாறினாலும்.


  42. நண்பன் said...

    //

    எதைப்பற்றி பேசுகிறோமோ அதைவிடுத்து அடுத்ததற்கு தாவி, மேலும் என்னையும் குற்றஞ்சொல்லி, நான் கேட்ட கேள்விகளுக்கு நேரடியாய் இதுவரை ஒரு நேர்மையான பதிலும் சொல்லாமல்... கிண்டல், அட்வைஸ் என்று ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.

    //

    ஒரு பதிலும் இல்லாமலா, இத்தனை எதிர்கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்? கிண்டல், அட்வைஸ்... முதலில் நான் கிண்டல் செய்வதில்லை யாரையும். அட்வைஸ் - நடுநிலைமை என்று சொல்லாதீர்கள் என்றேன். இது அட்வைஸ் அல்ல. விவாதத்தில் பாசாங்கு நிலை என்று ஒன்று உண்டு. அதை செய்யாதீர்கள் என்றேன். நேர்மையான பதிலும் சொல்லாமல் - ராமநாதன், நீங்கள் முடிவெடுக்க வேண்டிய விஷயம் இல்லை - நீங்கள் விவாதத்தில் எதிர் அணியில் நிற்கும் பொழுது, இது ஒரு குற்றச்சாட்டு மட்டுமே - நானும் கூட அதைச் சொல்ல முடியும்.

    பதிவுகளை நீக்காதீர்கள் என்று சொன்னேன். அதற்குக் காரணம் - நான் அனுப்பிய ஒரு பின்னூட்டம் எங்கே போயிற்று என்று தெரியவில்லை. அதை மட்டுறுத்தலில் நிறுத்தி விட்டீர்களா அல்லது திரிசங்கு சொர்க்கத்திற்குப் போய்விட்டதா என்று தெரியவில்லை. நான் எப்பொழுதும் பின்னூட்டப் பெட்டியில் நேரடியாக தட்டச்சு செய்பவன். பிரதிகள் எல்லாம் எடுத்து வைப்பது இல்லை. அதைத்தான் நான் குறிப்பிட்டேன். இப்பொழுது மீண்டும் தவறிப் போன ஒரு பின்னூட்டத்தை நினைவில் வைத்துக் கொண்டு தட்டச்சு செய்வது இயலாது. அந்த வருத்தம் உங்களுக்குப் புரியாது. :-(.


    /// அமெரிக்காவிற்கும், இஸ்லாம் மேல் ஊடக வன்முறைக்கும் என்ன சம்பந்தம் என்று எனக்கும் புரியும்படி எளிய தமிழில் விளக்கினால்
    தன்யனாவேன்.//

    இஸ்லாம் மேல் ஊடக வன்முறை என்று தமிழகத்தில் நடக்கும் வன்முறையைப் பற்றி - இந்து மதம் சங்கராச்சாரியர் என்றெல்லாம் நீங்கள்
    சொன்னதை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். அமெரிக்காவையும் ஊடகங்களையும் முடிச்சுப் போட்டுக்கொண்டது நீங்கள் தானே தவிர, நானல்ல.
    பின் ஏன் தன்யனாவேன் என்ற பதுங்குதல் எல்லாம்.

    //தன்யனாவேன்// எனக்கு இந்த மாதிரி எளிய தமிழ்லாம் தெரியாது ராமநாதன் :-)


    //ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். //


    //தீவிரவாத வித்து, விதை என்றெல்லாம் பினாத்தாமல், நேரடியாக பேசப்படும் விஷயத்துக்கு வந்தால் நலம்.//

    பினாத்துவது ? ராமநாதன் ஒருபுறம் நீங்களே எல்லாவற்றையும் ஒப்புக் கொள்வதும், சற்று நேரங்கழித்து மீண்டும் புலம்புவதும்.....

    ராமநாதன்,

    ஒவ்வொரு வரியையும் கோட் பண்ணி, அதிலுள்ள முரண்களைச்சுட்டிக்காட்ட வேண்டெமென்பது என் நோக்கமல்ல. அதனால் தான், முதல் பதிவை
    மேற்கோள் இல்லாமல் ஆரம்பித்தேன். ஏனென்றால், வாசிப்பவர்களுக்கும், எழுதுபவனுக்கும் மிக இடைஞ்சலாக இருக்கிறது என்பதனால். ஆனால்,
    நீங்கள் ஒவ்வொன்றையும் மறுக்கிறீர்கள் என்பதினால், இனி, மேற்கோள்களையும் கொடுத்து விடுகிறேன். மேலும் திருப்பிப் படியுங்கள் - அப்பொழுது
    தான் நான் சொல்ல வருவது சரியாக விளங்கும் என்கிறீர்கள்.. அதனால், சில இடங்களில், நீங்கள் சொன்னவற்றை ஊர்ஜிதம் செய்து கொள்ள விளக்கம்
    கேட்டிருக்கிறேன். நான் விவாதத்தை இன்னும் ஆரம்பிக்க வில்லை. அந்த வரிகளின் மீது. விளக்கம் மட்டும் தான் கேட்டிருக்க்கிறேன். குறிப்பாக
    வறுமையை எதிர்த்து கடவுளின் பேரால் லேடன் போராடுகிறான் என்று நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள். தமிழை நன்றாகப் புரிந்து கொண்டு தான் கேட்கிறான். அல்லது
    மறந்து போய் ஹீப்ரு மொழியில் எழுதி விட்டீர்கள் என்றால், மாற்றி எழுதுங்கள் - லேடன் வறுமை, அடக்குமுறை, இவற்றை எதிர்த்து விடுதலைப் போர்
    புரிகிறான் என்பது எனக்குப் புதுத்தகவல்.

    // ஆணிவேர் எங்கேயிருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். பாலஸ்தீனத்திலும், ஆப்கானிலும், ஈராக்கிலும் என்று சொல்லிக்கொண்டே
    போகலாம். பயனொன்றுமில்லை. அதெல்லாம் உண்மை தான். அமெரிக்கா செய்வது தவறுதான். அதை பல பெரும்பான்மை ஐரோப்பிய, ஆசிய
    மக்களும் வெகுஜன பத்திரிகைகளும் (அமெரிக்காவில் உட்பட) மிகவும் தீவிரமாக எதிர்த்துவருகின்றன். வலுவான எதிர்ப்பு இருக்கிறது. ஜனநாயக
    முறையில் அமைதியாக தெரிவிக்கப்படுகின்றது. அதை செவி மடுக்காமல் இருப்பது அமெரிக்காவின் அராஜகம். இதிலெல்லாம் மறுபேச்சே
    கிடையாது. ஆனால் கேட்டதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? ஏனென்றால் எங்குதான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை?
    அதற்கு பதிலடியாக கடவுளின் பெயரால் ஆயுதம் தூக்குவது விநோதமாகப் படுவதாலேயே முக்கியத்துவமும் கிடைக்கிறது ஊடகங்களில். //

    ராமநாதன் - இது நீங்கள் எழுதியது தானே? சந்தேகமில்லையே? பினாத்தல் இல்லையே? எங்கு தான் வறுமையும் சாவும் அடக்குமுறையும் இல்லை?
    இது நீங்கள் எழுதியது தானே? இது வரையிலும் இது எங்குமே விவாதிக்கப்படாமல், இப்பொழுது எங்கிருந்து வந்தது இது? இதைப் பற்றி
    விவாதிக்கலாமா? அல்லது நான் வேறு எதையாவது பிடித்துத் தொங்குகிறேன் :-) என்று சொல்வீர்களா? இந்தத் தீவிரவாதிகள், வறுமையினாலும்,
    சாவினாலும், அடக்குமுறையினாலும் தான் போராடுகிறார்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்? முதலில் அதை சொல்லுங்கள்.
    இது தான் உங்கள் வாதம் என்றால், உங்கள் தீவிரவாதப் பார்வை முற்றிலும் தவறானதாக இருக்கிறது.

    பிறகு மீண்டும் நாம் ஆதியிலிருந்து விவாதிக்க வேண்டும் - தீவிரவாதம் என்றால் என்னவென்று. என்ன செய்வது?

    But no comments on the poor igonorant souls:-) பின்லேடன் வறுமையை எதிர்த்து ஆயுதம் ஏந்துகிறான் என்று சொல்லிய முதல் ஆள்
    நீங்கள் தான் ராமநாதன். சொல்லுங்கள் - நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று?

    நீங்கள் சொன்னதை விளக்குங்கள். லேடன் வறுமையை எதிர்த்துத் தான் போராடுகிறான் என்றால்,அது குறித்து எனக்கு எந்த விவாதமும் இல்லை.
    மற்றவற்றிகுப் போய்ய்விடுகிறேன். ஏனென்றால், அது குறித்து எந்த ஒரு தகவலும் என்னிடத்தில் இல்லை. அல்லது மறுசிந்தனைக்குப் பின் உங்கள்
    வாதத்தையோ, விளக்கத்தையோ மாற்றி அமைக்க வேண்டுமென்றால், நல்லது, செய்யுங்கள்.


  43. நண்பன் said...

    //அப்படி சேகரித்த தகவல்களைக் குறித்து முஸ்லிம்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஏன் கேள்வி கேட்கிறீர்கள்? //


    // ஏன் திவிரவாதிகள் சொல்வதையோ அல்லது இரானிய அதிபர் உளறுவதையோ பிரசுரிக்கிறார்கள்? அவர்களுக்கு விற்பனை குறி. அவர்களைக் குற்றம்
    ஏன் சொல்ல வேண்டும்? அதுவும் இந்த குறிப்பிட்ட விஷயத்திற்காக மட்டும்? எல்லா உலக நடப்புகளையும், சுனாமி உட்பட எல்லாவற்றையும் காசு
    கொடுத்து வாங்கி காசு பார்ப்பதே அவர்கள் தொழில். இதில் முஸ்லீம்களிடம் மட்டும் அவர்கள் ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார்கள் என்பது
    ஏற்றுக்கொள்ளமுடியாதது. புஷ்ஷின் உளறல்களை கிண்டலடிக்காத / பிரசுரிக்காத பத்திரிகைகளா? ஏன் இரானிய அதிபர் மற்றும் இன்னபிற
    தலைவர்கள் சொல்வதை பிரசுரிக்கிறார்கள் என்ற கேள்விக்கே இடம் கிடையாது. தலைவர்கள் பேசினால் தான் நியுஸ். நாம் பேசினால் வெட்டி
    அரட்டை. அவ்வளவு தான் வித்தியாசம். ஏன் மற்ற முஸ்லீம் தலைவர்களை கேட்கிறார்கள் என்ற கேள்வி எதற்கு? கேட்கத்தான் செய்வார்கள்.
    ஒரு கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் கூட, கருத்து சொல்ல முப்பது பேர் வருவார்கள். அல்லது வரவழைக்கப்படுவார்கள்.
    கிரிக்கெட்டிற்கே இப்படியெனறால், "கடவுளின் பெயரால் தலையைக் கொய்வேன்" என்பது இன்னமும் சீரியஸ் மேட்டரல்லவா? அதான் தெளிவு
    பெற மற்ற அறிஞர்களைக் கேட்கிறார்கள். இதிலென்ன தவறு கண்டுவிட்டீர்கள்? //

    ஐயா,

    // தலைவர்கள் பேசினால் தான் நியுஸ். //
    // முஸ்லீம் தலைவர்களை கேட்கிறார்கள் என்ற கேள்வி எதற்கு? கேட்கத்தான் செய்வார்கள். //
    // அதான் தெளிவு பெற மற்ற அறிஞர்களைக் கேட்கிறார்கள். //

    முதலில் தலைவர்கள் என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? பல்வேறு நாடுகளில், பல்வேறு மொழி பேசுபவர்களாய், பரந்து கிடக்கும்
    இஸ்லாமியர்களுக்கு பொதுவான தலைவர் என்று ஒருவர் கிடையாது. அந்தந்த நாட்டின் தலைவர்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தலைவர்கள்
    மட்டுமே உள்ளனர். இதனால், ஒருவர் சொல்வது மற்ற இஸ்லாமியர்களைக் கட்டுப்படுத்தாது. எங்கோ ஓரிடத்தில் டெல்லி இமாம் பற்றி
    குறிப்பிட்டீர்கள். தமிழக முஸ்லிம்களிடம் கேட்டால், டெல்லி இமாமைப் பற்றி யாரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஆக, ஒரு நாட்டிற்குள்ளேயே
    இஸ்லாமியர்களுக்கென்று தனித்துவம் வாய்ந்த தலைவர்கள் இதுவரையிலும் இல்லை. (இந்தியாவில் விடுதலைப் போராட்ட காலத்திற்குப் பிறகு)
    ஆக இப்பொழுது இருக்கும் தலைவர்களுக்கு தங்களுக்கு கட்டுப்பட்ட மக்களை வழி நடத்துவது மட்டும் தான் முடியுமே தவிர, பின் லேடன் போன்ற
    தீவிர வாதிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவர்கள் கிடையாது. இந்த சமயத்தில், இஸ்லாமிய தலைவர்கள் பின்லேடனின் செயலுக்குப்
    பொறுப்பு ஏற்கவேண்டுமென்றோ, அல்லது அவனுக்கு அறிவுரைகள் கூறியோ அவனைக் கட்டுக்குள் கொண்டு வரவேண்டுமென்றோ எதிர்ப்பார்ப்பது
    தவறானது. இங்கு நீங்கள் ஏதோ expert commentator மாதிரி தானே கேட்கிறார்கள் என்கிறீர்கள் - அப்படி கேட்பதாக இருந்தால், அதற்கு முஸ்லிம்
    தலைவர்கள் மட்டும் இல்லை எல்லோரும் பதில் சொல்லலாம் - சன் டீவியின் டாப் டென் மாதிரி. நீங்கள் எல்லா நிகழ்ச்சிகளையும் பார்க்கிறீர்களா
    என்று தெரியாது. ஒரு முறை பிபிசியில் பாக்கிஸ்தானின் எதிர்கட்சி தலைவரிடம் ஒரு பிபிசி நிருபர் கேட்டார் - நீங்கள் தான் பின்லேடனை ஒளித்து
    வைத்திருக்கிறீர்கள் என்று.

    நீங்கள் எந்தெந்த முறையில் இஸ்லாமியர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்படுகிறது ஊடகங்களால் என்பதைப் பற்றி முழுவதுமாக தெரிந்து
    கொண்டு விடுங்கள் - பின்னர் நான் சொன்னதன் முழு பொருளும் விளங்கும். உங்களுக்கு இத்தகைய செய்திகளும், நிகழ்ச்சிகளும் எட்டவே இல்லை
    என்பதனால், ஊடகங்கள் நியாயமாக நடந்து கொள்கின்றன என்றாகிவிடாது. இதே தான் பிற நாட்டு தலைவர்களுக்கும் - மலேஷியாவின் முன்னாள்
    பிரதமர் முதல் - அரபியாவின் அனைத்து துண்டு துக்கடா நாடுகளுக்கும் இது பொருந்தும்.


  44. நண்பன் said...

    ராமநாதன்,

    உங்களுடைய சில வாதங்களை மேற்கோள் காட்டியும் - இது அதுவல்ல, உனக்குப் புரியவில்லை என்றெல்லாம் பேசுவது
    சரிதானா என்று யோசியுங்கள். நானாக எந்த ஒரு வரிகளையும் கற்பனை செய்து மேற்கோள் காட்டவில்லை.

    உங்களுடைய வார்த்தைகளை நீங்களே மறுப்பது உங்களுடைய விருப்பம். அது குறித்து விவாதிப்பது என் வேலையல்ல.

    // தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.. நண்பனைக் கண்டால் ஓடு என்று சிலர் அறிவுறுத்தினர். அது உங்கள் வாதத்திறமையை நினைத்து என்று
    நம்பியிருந்தேன். இப்போது புரிகிறது ஏனென்று. //

    அடுத்தவர் மனம் புண்படாதவாறு விவாதிக்கிறீர்கள் என்று சொல்லியவரே நீங்கள் தான்.

    இப்பொழுது முன்னுக்குப் பின் முரணாக சொல்வதும் நீங்கள் தான். உங்களுடைய வரிகளைக் கொண்டு தான் உங்களிடம் பேசுகிறேன். நானாக
    எதையும் எழுதிக் கொண்டு வரவில்லை. வாதத் திறமை என்று எதையும் நான் சொல்லவில்லை. அதைப் போல யார் வாசிக்கிறார்கள், யார்
    ஓடுகிறார்கள் என்றும் நான் எவரையும் கேள்வி கேட்டதுமில்லை. அது அவரவர் விருப்பம். நான் சொல்லவிரும்பியதை மட்டும் எப்பொழுதும்
    சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றேன். பிறர் மனம் புண்படுமே என்பதற்காக என் கருத்துகளை நான் கூறக்கூடாது என்று எதுவும் இல்லையே.?

    //
    //முஸ்லிம்களை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கம் ஒன்றை கருத்து சுதந்திரம் என்ற திரைக்குப் பின்னால் இருந்து கொண்டு, செய்து,
    ஒவ்வொரு முஸ்லிமையும் தெருவில் இறங்கி போராட வைத்தது யார்? தீவிரவாதிகளா? //

    இதையே நானும் கேட்டேனே என் பதிவில். போராட வைப்பது தலைவர்கள். ஒரு கார்டூனுக்கு (மற்ற மதத்தவரின் பார்வையில்) இவ்வளவு
    கோபப்படும் ஆயிரக்கணக்கான முஸ்லீம் தலைவர்கள், ஒரு மிகப்பெரிய அரபு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டையே ஒழிப்பேன் என்று
    சொன்னது அவரின் கருத்துச்சுதந்திரம் என்று விட்டுவிட்டார்களே. ஆக தனக்கு வந்தால் தான் வலியும் நோவும்.
    //

    முதலில் - போராட வைப்பது தலைவர்கள். தவறு. இங்கு அரசியல் கட்சிகள் கிடையாது. அமைப்புகள் கிடையாது. இமாம்களுக்கு
    என்ன பேச வேண்டும் என்ற instructions உண்டு. அவர்களாக எதையும் பேசி விட முடியாது. இந்தப் போராட்டம் - வெறும் குறுஞ்செய்திகள் மூலம்,
    மின்னஞ்சல் மூலம் ஒவ்வொரு தனிநபராக தொடர்பு கொள்ளப்பட்டு செய்யப்பட்டது. வெள்ளிக் கிழமை தொழுகை முடிந்ததும், திரண்ட ஜனத்திரள்
    தான் ஊர்வலம் போனது. இது அரபு நாடுகளில். இந்தியா, பாக்கிஸ்தான், இந்தோனேஷியா போன்ற நாடுகளில் மட்டும் தான் அமைப்புகளால்
    இயக்கப்பட்டது. அதுவும் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின் தான்.

    நிற்க, ஈரான் அதிபரை எந்த ஒரு அரபு நாட்டுத் தலைவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடவில்லை. இன்னும் சொல்லப்போனால்,
    இஸ்ரேல் மீது எத்தனை அவநம்பிக்கை உண்டோ, அத்தனை அவநம்பிக்கை - அல்லது அதைவிட அதிகமாக - ஈரான் மீது உண்டு. ஈரானியர்கள்
    அரபிகளா, இல்லையா என்பதிலே உங்களுக்குக் குழப்பம் இருக்கும் பொழுது, அந்த நாடுகளின் அரசியல் பின்னணியைப் பற்றிய தெளிவு உங்களிடம்
    இருக்க இயலாது. ஈரானிய அதிபரின் பேச்சிற்கு அரபு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அவர் பேச்சையொட்டி, பத்திரிக்கைகள் வெளியிட்ட,
    ஹோலோகாஸ்ட் செய்தியை மொழி பெயர்த்து இட்ட பொழுதே, இஸ்ரேல் பற்றிய அவரது பேச்சிற்கு யாருடைய ஆதரவும் கிடையாது என்பதால்
    அவருடைய இஸ்ரேல் ஒழிப்பு பேச்சை நான் வெளியிடவில்லை. அதில் எனக்கும் உடன்பாடு கிடையாது. ஆனால், ஹோலோகாஸ்ட் உண்மையா, பொய்யா
    என விவாதிக்கப்படுவதில் எந்தத் தவறுமில்லை.

    மேலும், முஸ்லிம்கள் ஈரானிய அதிபரின் ஆளுகைக்குட்பட்டவர்கள் இல்லை. ஆகையால், ஈரானிய அதிபர் பேசினார் - அதனால் நாங்கள் பதிலுக்குக்
    கார்ட்டூன் போட்டோம் என்று சொல்ல முடியாது. இந்த கார்ட்டூன் பிரச்சினை வந்த பின் தூதரக மட்டத்தில் புகைய ஆரம்பித்த பொழுது தான், ஈரானிய
    அதிபர் பேசினார் - அப்பொழுதும், இந்த கேலிச்சித்திரங்களைக் குறிப்பிடாமல். இரண்டாவது ஹோலோகாஸ்ட், ஒரு அம்பது வருடத்திற்கு முந்தைய நிகழ்வு -
    அதை சட்டத்தின் மூலம் விவாதிப்பதை ஏன் தடை செய்ய வேண்டும்? பிரிட்டீஷ் இளவரசன் தன் நண்பன் விருந்திற்கு ஒரு நாஜியைப் போல உடையணிந்து
    சென்ற பொழுது - ஒரு வருடத்திற்கு முன் - எத்தனை எதிர்ப்பு கிளம்பியது ஏன்? ஹாரிக்கு எந்த சுதந்திரமும் கிடையாதா? இதை தான் எல்லோரும் கேட்கின்றனர்.

    // ஆனால், உங்களுக்கு அறிமுகமான இஸ்லாமியர்களைப் பிடித்துக் கொள்கிறீர்கள் - அவன் பேசியதைக் கேட்டாயா? இவன் பேசியதைக் கேட்டாயா?
    அதற்கு என்ன சொல்கிறாய்? என்று.
    //

    முதலில் ஒன்று தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஏன் முஸ்லீம்கள் ஊடகங்களால் குறிவைக்கப்படுகிறார்கள் என்று ஆதங்கப்பட்டது தாங்கள்.
    அதற்கான மறுமொழியாகவே, ஏனென்றால் மிதவாதிகள் மவுனம் காக்கிறார்கள் என்றேன்.//

    நன்றாகக் கவனித்துக் கொள்ளுங்கள் - மறுமொழியாக நீங்கள் சொல்கிறீர்கள் - ஏன் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள்? எதற்கு மறுமொழியாக?
    சொல்லுங்கள் - எதற்கு மறுமொழியாக?

    // நான் மவுனம் காக்கிறார்கள் என்று சொன்னது உங்களையோ என்னையோ போன்ற மக்களை அல்ல. தலைவர்களை!
    அவர்களை விடுத்து, என் பக்கத்துவிட்டுக்காரரிடம் போய் பின் லாடன் குண்டு போட்டான், நீயேன் கேள்வி கேட்கவில்லை
    என்று கேட்கிற அளவுக்கு இன்னும் "தெளிவு" பெறவில்லை நான். :)//

    உங்கள் புன்னகைக்கு நன்றி. ஆனால், நீங்கள் மிதவாதிகள் மௌனம் காக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அதாவது மிதவாத தலைவர்களை. அந்த தலைவர்களை
    விடுத்து பக்கத்து வீட்டுக் காரனிடம் - அதாவது என் போன்ற சாமான்யர்களிடம் கேட்கக் கூடாது என்ற ஞானத்தைப் பெற்று விட்டீர்கள் புன்னகையுடன்.

    நான் இப்பொழுது உங்களிடம் வைக்கும் கேள்வி - மிதவாத தலைவர்கள் ஏன் இதற்குப் பதில் சொல்ல வேண்டும்? தீவிரவாதிகள் மிதவாத தலைவர்கள்
    தலைமையில் இயங்குகிறார்களா? இல்லையே? இந்த கேலிச்சித்திர எதிர்ப்புப் போராட்டத்தில், சில இடங்களில் வன்முறைகள் நிகழ்ந்திருக்கிறது.
    அதைப் பற்றி நீங்கள் மிதவாதிகளிடம் கேட்டால் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால், ஒவ்வொரு மிதவாதியும் - அதில் பங்கு பெற்றான். ஒரு
    கட்டத்தில், சிலர் அதீத உணர்ச்சி வயப்படுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டனர். அதனால் வன்முறை நிகழ்ந்தன. அது கண்டிக்கப்படத்தக்க செயல். கடும்
    கண்டனம் எழுதிருக்கிறது. இது பற்றி தனியாக விரிவாக எழுதுகிறேன். நீங்கள் கல்ஃப் நியூஸ் செய்தித் தளத்திற்கு சென்று, வாசகர் கடிதம் பக்கம்
    சென்றால், இந்த கண்டன கடிதங்களைக் காணமுடியும்.

    ஆனால், லேடன் குண்டு போட்டான் - மிதவாத தலைவர்கள் ஏன் மௌனம் காக்கிறார்கள் என்பது எந்த விதத்தில் நியாயம், ராமநாதன்? (இதையும்
    மறுத்துவிட்டு, நீங்கள் வேறு எதையோ பிடித்து தொங்குகிறீர்கள் என்று சொல்லாதீர்கள்)

    நீங்கள் 'மதிப்பிற்குரிய பாக்கிஸ்தானிய உளவாளி' என்ற தலைப்பில், அபுமுஹை வெளியிட்ட ஒரு பதிவைப் படித்திருந்தால் நான் சொல்வதன் முழு
    அர்த்தம் புரிந்திருக்கும்.

    பின்னர் - இந்துக்களைப் பற்றி குறிப்பிட்டீர்கள் - சதுர்வேதி, சங்கராச்சாரியார் என்று. சதுர்வேதியை பத்திரிக்கைகள் போலி சாமியார் என்று தான்
    குறிப்பிட்டனவே தவிர, இந்து போலி சாமியார் என்று குறிப்பிடவில்லை. சங்கராச்சாரியாரை இன்றளவும் அவருடைய பல பட்டங்களையும் இணைத்து
    மரியாதையுடனே அனைத்து பத்திரிக்கைகளும் எழுதி வருகின்றன. இதை நான் கேள்வி கேட்கவில்லை. குற்றம் நிரூபிக்கப்படாத வரைக்கும் -
    அவர்கள் நிராபராதிகளே என்று நடத்தும் பத்திரிக்கைகள் ஏன் முஸ்லிம்களைப் பிடித்ததும் - தீவிர வாதி பிடிபட்டான் - என்று ஆரம்பித்து, ஊரில்
    நடக்கும் அனைத்து குற்றங்களையும் அவன் தலையிலே கட்டி, திட்டித் தீர்க்கின்றன. அவனுடைய குற்றங்களும் நிரூபிக்கப்படட்டுமே?

    பெங்களூர் சம்பவத்தில், எத்தனை பேரை கைது செய்து, மிகத் தீவிரமாக செய்திகள் போட்டு, பின்னர் அப்பாவிகள் என்று தெரிந்ததும் மௌனமாக
    விட்டு விட்டார்களே அதைத் தான் ஏன் என்று கேட்கிறேன்.? இதை நீங்கள் மறுப்பதினால் தான் சொன்னேன் - நீங்கள் முடிவு கட்டி விட்டு வாதிக்கிறீர்கள்
    என்று. அது நீங்களே சொன்னது போல கண்ணாடி அணிந்து பார்ப்பதாக இருக்கட்டும் அல்லது கண்ணே இல்லாது இருக்கட்டும் - ஆனால், அதை
    மறுப்பதன் மூலம் - நீங்களே சொன்னது போல - உங்கள் பத்திரிக்கை வாசிப்பு மிகக் குறைவு தான். அதற்காக - என் மனதினுள் புகுந்து ஆராய்ச்சி
    செய்துவிட்டார் என்றெல்லாம் சொல்வதினால் நீங்கள் என்ன ஆதாயம் அடைந்து விட்டீர்கள் என்று தெரியவில்லை. இந்த சின்ன விஷயத்தைப் புரிந்து
    கொள்ள ஹிப்னாட்டிஸம் எல்லாம் தெரிந்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. தமிழகத்தில், தினமலர் தொடங்கி பல்வேறு நாளிதழ்கள் இதை
    தினமும் செய்து வருகின்றன. இனி, ஆனந்த விகடன், ஜூவி, குமுதம் போன்றவை விட்டு விட்டு, தினசரிகளை தொடர்ந்து வாசித்து வாருங்கள் -
    நான் சொல்வது விளங்கும்.


  45. rv said...

    நண்பன்,
    உங்கள் கேள்விகளுக்கு இந்த வாரயிறுதிக்குள் பதிலளிக்கிறேன். என்னுடைய இன்னொரு பதிவில் கவனம் செலுத்துவதாலெயும், தனிப்பட்ட காரணங்காளையுலேயும்.


    அன்புடன்,
    இராமநாதன்


 

வார்ப்புரு | தமிழாக்கம்