இந்த டிஸ்கவரி சானல்-ல பாத்தீங்கன்னா வாரத்துக்கொருதடவையாவது எகிப்திலுள்ள பிரமிட்களைப் பத்தி காட்டாம இருக்கமாட்டாங்க. அவங்க காட்டறபடி பாத்தா ஏதோ அத்வான பாலைவனத்தில இருக்கற மாதிரி மலைப்பா இருக்கும். ஆனா இது ஊர ஏமாத்தற வேலைன்னு அங்க போய்தான் தெரிஞ்சுகிட்டோம். Giza பிரமிட்கள் எல்லாம் ஏதோ செண்ட்ரல் ஸ்டேஷன் அளவுக்கு இல்லேன்னாலும், டைடல் பார்க் மாதிரி கைரோவிலிருந்து தள்ளி இருக்கு. நாங்க தங்கின மோவன்பிக் ஹோட்டல்லேர்ந்து பத்து நிமிஷம் கார்ல போனா பிரமிட்ஸ். ஸ்பிங்க்ஸ் லேர்ந்து கல்லெறியக்கூடிய இடத்தில இன்னொரு ரெஸ்டாரண்ட். ஆனா நிஜமாவே பிரமிப்பூட்டுகிற விஷயங்கள் இந்த பிரமிட்கள். Giza-ல மூணு முக்கிய பிரமிட்கள் இருக்கு.
1. மெண்காரே (Menkaure)
2. காப்ரே (இதக் கேட்ட உடனே கைரோ கிளம்பும் ஜொள்ளர்களுக்கு நிஜப்பேர ஆங்கிலத்தில சொல்லிடறேன் - Khafre)
3.குஷ்பு..சீ குபு (Khufu).
இதுக்குமேல இதப்பத்தி நான் உளறத விட, நல்லா தெரிஞ்சவங்க எழுதிருக்காங்க இங்க.
ஒலி ஒளிக்காட்சிக்கு அநியாயமா வசூல் பண்ணாலும், பாக்கவேண்டிய விஷய்மிது. எப்படி, ஏன் கட்டினாங்கன்னு விவரமா இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும். ரஷ்ய, ஜெர்மானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனிக்காட்சிகள் உண்டு. அதில எடுத்த படந்தான் இது.
ஒரு உருப்படியான செய்தி: Valley of the Kings - கேள்விப்பட்டிருப்பீங்க. பூமிக்கடியில் பாரோக்களை புதச்சிருக்கிற இடமது. பிரமிட்களைவிட பழமையானவை என்று அங்கு போறதுக்கு முன்னாடி நினச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா விஷயம் என்னன்னா.. பிரமிட்களுக்குள்ள நிறைய பொக்கிஷம் இருக்குன்னு தெரியவர அவற்றை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் கிளம்பிருச்சு. அதுவும் பலமைல் தொலைவிலிருந்தே பிரமிட்களை பாக்கமுடியும்கரதும் இந்த கொள்ளையர்களுக்கு வசதியாப்போய் பல பிரமிட்கள் இந்த மாதிரி கொள்ளையடிக்கப்பட்டதால், பூமிக்குள்ள வெளிய ஒரு sign கூட இல்லாமல் புதைக்க ஆரம்பிச்சாங்களாம்.
சரி கைரோ நகரத்துக்கு போவோம்...
நாங்க போனபோது ஊரே வெறும் புகைமூட்டமா இருந்தது. pollution -னு காரணம் சொன்னாங்க. அப்புறம் அங்க பாக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் கைரோ மியூசியம். இதிலும் விசேஷமாக பிரபல டூட்டன் - கா முன் போன்ற பாரோக்களின் அறைகள் அப்புறம் பழங்காலத்து நகையாபரணங்கள் பிரிவு. நின்னு நிதானமாய் பார்த்து ரசிக்க வேண்டிய அருங்காட்சிய்கம் இது.
அதுக்கப்புறம் பாக்க வேண்டிய இடங்கள்ன்னு சொன்னா சீட்டாடல் (மங்காத்தா மாதிரி ஆட்டமல்ல - The Citadel), Christian Cairo அப்புறம் கான்-அல்-கலீலி (Khan Al-Khalili) பஜார். இந்த பஜார்ல விலையெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனா இந்திய்ன்னு சொன்னா அமிதாப் பச்சனத்தெரியுமான்னு கேட்பாங்க. அதுக்கு உங்க பதில பொறுத்து விலையும் மாறும். நம்மூர் கறிகாய் மார்க்கெட் மாதிரி பேரம் பேசலாம். எதையும் வாங்கற ஐடியா இல்லேன்னாலும், சும்மா பொழுது போறதுக்கு கடக்காரங்கள நல்லா கலாய்ச்சிட்டு அவங்க நம்ம விலைக்கு இறங்கி வரும்போது ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆகி அவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்.
இதுக்கு மேல பாக்குறதுக்கும் இருக்கலாம். ஆனா நாங்க பாத்தது இவ்ளோதான். மோவன்பிக் ஹோட்டலுக்காவே கைரோ ரொம்ப பிடிச்சுபோச்சு.
உருப்படியா ரெண்டாவது செய்தி: ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரே metro ரெயில் நெட்வொர்க் கைரோவில் இருக்கு. (அப்டின்னு கைடு தான் சொன்னாரு)
இன்னொரு விஷயம் கைரோவில பாதிவீடுகளுக்கு மேல் வெளிப்பூச்சு (plaster) பண்ணாம செங்கறகள் தெரிய இருக்கும். அதே மாதிரி வீட்டு மொட்ட மாடியிலும் இரும்பு கம்பிகள் துறுத்துக்கொண்டும், பாரபட் சுவரில்லாம ஏதோ கட்டி முடிக்காத மாதிரி இருக்கும். அதுக்கு காரணம்னு எங்க கைடு பரமாத்மா சொன்னது. பெத்தவங்க கட்டும்போது ground floor கட்டிட்டு விட்டுடுவாங்களாம். அப்புறம் முதப்பிள்ளை முதமாடி, இரண்டாவது இரண்டாவது மாடின்னு ஏத்திக்கிட்டே போவாங்களாம். ஆஹா, இதே டெக்னிக்க நம்ம லாலு கடப்புடிச்சார்னா petronas-யே மிஞ்சிடுவார்னு உடனே தோணிச்சு.
இத்துடன் இன்றைய உலாவரும் ஒளிக்கதிர் முடிவடைகிறது..
சரி படத்த பாத்தீங்களா? அதுல பிரமிட்களோட பிம்பம் கீழ தெரியுதா? அது இன்னான்னு சொல்றவங்களின் 1 பதிவிற்கு இலவசமாக முப்பது கள்ள வோட்டுக்களும், பத்து பின்னூட்டங்களும் குத்தப்படும்.
PS: Blogger seems to continually hold a grudge against me, or against egypt. It promptly erases the post after a couple of hours. On Anand's suggestion, have renamed the post and testing if this works.
Egypt - I
Subscribe to:
Post Comments (Atom)
5 Comments:
ஊருக்குப் போற வழியிலே இந்த சுற்றுலாவா? பேஷ் பேஷ் நல்லா இருக்கு!!!
நம்ம 'விஷ் லிஸ்ட்'லே இந்த பிரமிட் இருக்கு! பாக்கலாம் எப்ப வாய்க்குதுன்னு!!!
கள்ள ஓட்டையும், பின்னூட்டத்தையும் கொஞ்சம் குறைச்சுப் போட்டாலும் போதும்
இந்தப் பதிலுக்கு:-)
அது தண்ணிலே பிரதிபலிக்கரமாதிரிதான் இருக்கு!! அது தண்ணியேதான்!!!!
என்றும் அன்புடன்,
துளசியக்கா
கண்ணாடி போல் தெரிகிறது, பாலைவனமாகையால் தண்ணீராக இருக்க வாய்ப்பில்லைதானே ?
Ramanathan
nice to see your posts back..
Thulasi and Ra.Ka I dont think its water ( I know what it is.. )
Ramanathan can I tell , or you want more feedbacks ?
வணக்கம்
பின்னூட்டங்களுக்கு நன்றி!
இந்தியா வந்து நீண்ட ஹாலிடே போனதால் பதிலளிக்கமுடியவில்லை.
படத்தில் பிம்பம் விழுவது ஒரு மேஜையின் மேல். தண்ணீர் அல்ல.
ரா.சு அவர்களே
முதல்முறையாக வந்திருக்கீங்க. வருக வருக.
துளசியக்கா
இது இப்போ போனதில்ல. 2003 ன்னு நினைக்கிறேன். எகிப்த் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஊர்தான்.
ஆனந்த் அவர்களே
நன்றி. 10 நாள்-ல இத்தன போஸ்ட் பண்ருக்கீங்க உங்க ப்லாக்ல.. படிக்கவே கொஞ்ச நாள் ஆகும் போலிருக்கு.
Welcome back .
Hope you had a great vacation !
yeah. Lot of pics
in .
my pics blog too .
Post a Comment