நீண்ட நாளாய் கையோடு கைகோர்த்து விளையாடியவள் சிறுவயதிலிருந்தே!
என் தோழி! அவளைத் அன்பாய் கொஞ்சாமல் ஒருநாளும் இருந்ததில்லை!
அப்போதும் நான் இராமனாயில்லை! அவளுக்கே மட்டுமாகவும் இல்லை!
காலமோர் சகுனியாகி என்னை அவளிடமிருந்து பிரித்தது!
நான் அவளை மறந்தேன்! நாளும் பொழுதும் வேறுசுகம் கண்டேன்!
குளித்தெழுந்தேன்! அமிழ்ந்தேன்!
இன்று மீண்டு வந்தேன் மீண்டும் வெட்கமில்லாமல்!
அவளருகே! என்னச் சொல்லப்போகிறாளோ
என்று பயந்தபடி உரிமையுடன் செல்லமாய் தட்டினேன்!
எட்டி ஓடுவாள் என்று நினைத்தவள் நகராமல் நின்றாள்!
நின்றிருந்தாலும் பரவாயில்லை! என் காலில் சட்டென விழுந்தாள்!
என் மனம் பதைபதைத்தது! நான் செய்த பாவத்திற்கு
அவள் விழுவதா? நானல்லவா மன்னிப்பு கேட்க வேண்டும்?
பலவாண்டு ஒன்றாய் பழகி, பின் திடுமென தனியாய்
நட்டாற்றில் விட்டு என்வேலை பார்க்க ஓடினேனே!
விழுந்தவள் அங்கேயே கிடந்தாள்! என் கைகளால்
அவளை அள்ளி எடுத்தேன்! என் கண்களில் நீர் ஏனோ வரவில்லை!
அவளின் அழகிய மஞ்சள் நிறம் என்னை மயக்கியது!
அன்றைக்கு எதில் கட்டுண்டு விழுந்தேனோ, அதே மஞ்சள்!
அதே கட்டு! உடற்கட்டு கொஞ்சமும் சீர்குலையாமல்!
அடடா! அடாடாடா! அவள் அழகுருவை வடிவமைத்த பிரம்மாக்களுக்கு
மானசீக நன்றி சொல்லிவிட்டு, மீண்டும் செல்லமாய் தட்டினேன்!
இடைவெளி கடந்தும் காதல் வாழும் என்று நிருபிக்க
இந்த முறை சீறிப்பாய்ந்தாள் நெட்டைத் தாண்டி!
வில்சன் என்னும் என் காதலி!
----
கவிதைங்கறதுக்கு அத்தாட்சியா வரிக்கு வரி ஆச்சரியக்குறி (!) போட்டிருக்கேன். சரிதானப்பா?
158. காலமெல்லாம் காதல் வாழ்க!
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
சீறிப்பாய்ந்த காதலி வில்சன்
எதிராலியின் அசுர தட்டல் பட்டு
அழுது கொண்டே திரும்ப வரும் போது
அதை செல்லமாக திரும்ப தட்டினாரோ இராமனாதன்
இல்லை அசுர தட்டல் கொடுத்து திருப்பி அனுப்பினாரோ :-))
என்னமோ போங்க, எல்லாரும் இந்த மாதிரி எழுத ஆரம்பிச்சிட்டீங்க.. நேத்து தான் அண்ணியின் அணைப்பில் என்று ஒரு பதிவு பார்த்தேன்.
வில்சன்னா என்னங்க? சவரியா?
வில்சன் எப்படி ஐய்யா காதலியாக முடியும்.
யாருக்கும் புரியாத பாபலோட், யோனக்ஸ் அப்படின்னு போட்டா சரி.
"ஙே" என்று விழித்தாள் :-)))))))))
நன்மனம்,
காதலர்களின் நடுவில் ஊடல் சகஜம் தானே.. ஆனாலும் இவ்வளவு டிடெய்ல்ஸ் கேக்கறீங்க. எனக்கே பதில் சொல்ல கூச்சமா இருக்கு போங்க. :))
பாலசந்தர் கணேசன்,
எல்லாரும் இந்த மாதிரி கவித போடறாங்களா? என்ன அநியாயம் நடக்குது இங்க? கொஞ்ச நாள் இந்தப் பக்கம் வராட்டா இப்படியெல்லாமா செய்யறாங்க?
இதுக்கெல்லாம் எக்ஸ்க்ளூசிவ் காப்பிரைட் உள்ள ஏஜெண்டு கிட்டயும்,, சின்னவர் என்னும் கவிப்பேரரசு பவுர்ணமி பாண்டியன் கிட்டயும் பெர்மிஷன் வாங்கிட்டு அப்புறந்தான் இந்த மாதிரி கவித போடணும். இல்லேன்னா கேஸ் போடுவேனு சொல்வாங்க.
வாங்க ஜிரா,
வில்சன்னா யாரா? ஹி ஹி.. வாழ்க வளர்க...
வில்சன் கிடக்குது.. அது யாரு சவரி?
பெருசு,
ஏன், ஷைனி வில்சன் இல்லியா? அந்த மாதிரி வில்சன் கறது பொண்ணோட அப்பா பேரு. பொண்ணு பேர அவங்க பாதுகாப்பு கருதி சொல்லாம விட்டேன்.
அப்பா, எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு... :)
உஷா அக்கா,
நானும் பாத்துகிட்டுருக்கேன். ரொம்ப நாளா இப்படியே எல்லாத்துக்கும் 'ஞே'ன்னே முழிச்சுகிட்டுருக்கீங்க.
அதுனாலதான் முதலவாய்க்குள்ளேலாம் தலைய விட்டுட்டு அப்புறமா முழிக்கறீங்களா?
வருக வருக மீண்டும் வருக.
//
சின்னவர் என்னும் கவிப்பேரரசு பவுர்ணமி பாண்டியன் கிட்டயும் பெர்மிஷன்
//
அடடா . கண்ணைக் கட்டுதே.
பொன்(ண்)னைத் தேடும் உலகில் பவுர்ணமியை நினைவில் வைத்து இருக்கும்
பாசக்கார இரேசுநாதா நீ வாழி. உன் குல(ள)ம் வாழி.
(என்ன racquet வைச்சு இருக்கே ? )
மூத்த வலைஞர் இராமநாதன் அவர்களே,
மீண்டும் வருக! வருக!
யார்ன்னு பார்க்கின்றீர்கள் தானே!
தாங்கள் வலைப்பக்கம் வராத நாட்களில் வலைஉலகில் இணைந்து கொண்டவன் அடியேன்.
எமதுவலைப்பக்கம்
http://harimakesh.blogspot.com/
வரவேண்டிடும்,
அன்பன்
ஹரிஹரன்
d the dreamer,
இவள் அவளாவும் இருக்கலாம். அவள் இவளா இல்லாமலும் இருக்கலாம். :)
குமரன்,
வந்தேன் வந்தேன். வரவேற்பு கமிட்டில உங்கள விட்டா வேற யாரையும் காணலியே... :))
பா(ர்)டு,
எப்படியா இருக்க? ஆளே காணோம் வலைப்பக்கம்? புதுசா கவித ஒண்ணுத்த சீக்கிரம் ரிலீஸ் பண்ணுய்யா...
வில்சன் குட்டிய அடிக்கவா? கையால எப்படி அடிக்கறது... டன்லப் ஒண்ணும் ஸ்லாசெஞ்சர் ஒண்ணும் தான் கைகொடுக்குது. அங்க எப்படி?
ஹரிஹரன்,
வாங்க வாங்க.
ஒரு மாசத்துக்குள்ள மூத்த வலைஞர் ஆக்கி, VRS கொடுத்து வீட்டுக்கு அனுப்பிடுவீங்க போலிருக்கே...:)
உலகம் சுற்றும் வாலிபனா நீங்க? சீக்கிரம் வரேன்.
நன்றி.
ராமனாதன்!
இடைவெளி கடந்தும் காதல் வாழும் என்று நிருபிக்க..//
இந்த வரியில ! காணோம்.. ஒருவேளை அடுத்த வரியையும் சேர்த்து கணக்குல எடுக்கணுமோ..
என்னவோ போங்க..
இங்கல்லாம காதலிய தட்டுனா என்ன நடக்கும்னு தெரியும்லே..
சாரி.. இந்த பதிவுக்கு என்னைய (வயச சொல்றன்) மாதிரி ஆளுங்க பின்னூட்டாம் போட்டிருக்க கூடாதுதான்..
லேசா சபலம்.. அதான்.. மன்னிச்சிருங்க!
சரிஈஈஈஈ.. நெட்டுன்னு என்னமோ சொல்றீங்களே அது.. சரி வேணாம்.. அப்புறம் சென்சார் தலையிட போறாங்க..
மூத்த வலைஞர் இராமநாதன் அவர்களே,//
இங்குட்டு பல்லைக் காட்டுர ஸ்மைலி போட்டுக்கப்பு
கவுஜ?!
உம்மை மாதிரி ஆளுங்களுக்காகத்தான் இந்த பதிவே. போயி பாரும்.
http://vavaasangam.blogspot.com/2006/07/blog-post_115227822686278375.html
ஜோசப் சார்,
எவ்ளோ ஆச்சரியக்குறி மிஸ் ஆகிருச்சோ, அதுக்கு தகுந்தாப்போல பரிசுத்தொகையக் குறைச்சுக்கலாம் தானே? :))
//இங்கல்லாம காதலிய தட்டுனா என்ன நடக்கும்னு தெரியும்லே..//
அதெல்லாம் ஆசையாத் தட்டினா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. அதட்டறா மாதிரி தட்டினா தான் உள்ள புடிச்சு லாடம் கட்டுவாங்க. சரியா? :))
//சாரி.. இந்த பதிவுக்கு என்னைய (வயச சொல்றன்) மாதிரி ஆளுங்க பின்னூட்டாம் போட்டிருக்க கூடாதுதான்..
//
என்ன சார்.. போட்டோல பாக்க இவ்ளோ யூத்தா இருந்துகிட்டு என்ன இப்படியெல்லாம் சந்தேகம் வருது உங்களுக்கு?
//சரிஈஈஈஈ.. நெட்டுன்னு என்னமோ சொல்றீங்களே அது.. சரி வேணாம்..//
அய்யா சாமி, கொஞ்சம் காலைக் காட்டுங்க. இது PG-13 பதிவுங்கோ.
உஷா அக்கா,
//இங்குட்டு பல்லைக் காட்டுர ஸ்மைலி போட்டுக்கப்பு//
பாவம் ஹரிஹரன் ஏதோ வெள்ளந்தியா சொல்லிட்டாரு. அவரையும் ராக் பண்ணி அழவச்சு உளளே/வெளியேனனு நல்லா கும்தலக்கடின்னு குத்தி வீட்டுக்கு அனுப்பறதா வேண்டுதல் எதுனாச்சும் இருக்கா?
கொத்ஸு,
இருந்தாலும் எதிர்க்கட்சிகிட்ட விலைபோயிட்டியேயா. என் ஹார்ட்டே ரோட்ல சிதறுன திருஷ்டி பூசணிக்கா மாதிரி சிதறி, லாரியில அடிபட்டு பிஞ்சு போச்சு. ஒரு வாரிசா வருவீர்னு பார்த்தா எனக்கே எமனா வந்து இருக்கீரே... என்ன கொடுமையா இது???? :((((
அப்படியும் மானரோசம் இல்லாம, அங்க போயி நீர் கிறுக்கின கவிதய வந்து பாருன்னு எனக்கே வந்து சுட்டி தரீரே... என்னத்த சொல்ல... வளர்த்த மனம் பித்து.. வாரிசு மனம் கல்லுன்னு இதத்தான் சொல்லுவாங்களா??
வைத்தியர் டென்னிஸ் வேற ஆடுவீங்களா? மரியா ஷரபோவா ஊருல வேற இருக்கீங்க. அம்மணியை விசாரிச்சதாச் சொல்லுங்க.
கதைய மாத்தாத தம்பி. பாவம் புதுசா வந்தவரையா சொன்னேன்? "மூத்த வலைப்பதிவாளர்"ன்னு சொன்னாரே, அதுக்கு சிரிப்பு வந்தது
:-)))))))))))))))
Post a Comment