பூவே இளைய பூவே!

பூவே இளைய பூவே! வரந்தரும் வசந்தமே!
மடிமீது தேங்கும் தேனே! எனக்குத்தானே!

குழல் வளர்ந்து அலையானதே! இரவுகளின் இழையானதே!
விழியிரண்டு கடலானதே! எனது மனம் படகானதே!
இளம்பளிங்கு நகம் தேய்த்ததே! நிலவு அதில் முகம் பார்த்ததே!
இனிக்கும் தேனே! எனக்குத் தானே!

இளஞ்சிரிப்பு ருசியானது! அது கனிந்து இசையானது!
புயல்மகளின் குரலானது! இருதயத்தில் மழை தூவுது!
இருபுருவம் இரவானது! இருந்தும் என்ன வெயில் காயுது!
இனிக்கும் தேனே! எனக்குத் தானே!


-------------
இந்த ஞாயிறு நாமெல்லாரும் எதிர்பார்த்த
நடால் Vs பெடரர்


தலைவரு பெடரருக்கு ஒரு ஓ இப்பவே சொல்லிக்கறேன். எதிர்த்து பேச நினைக்கற ஆளுங்க இன்னிக்கு அரையிறுதில 3-6, 0-3 க்கு அப்புறம் மேட்ச் பாத்தீங்கதானே?? :P

21 Comments:

  1. சிறில் அலெக்ஸ் said...

    //புயல்மகளின்//

    குயில் மகளின்.

    இந்தப்பாடலின் ரிதம் அருமையாயிருக்கும்.


  2. இலவசக்கொத்தனார் said...

    //இந்த ஞாயிறு நாமெல்லாரும் எதிர்பார்த்த
    நடால் Vs பெடரர்


    தலைவரு பெடரருக்கு ஒரு ஓ இப்பவே சொல்லிக்கறேன். எதிர்த்து பேச நினைக்கற ஆளுங்க இன்னிக்கு அரையிறுதில 3-6, 0-3 க்கு அப்புறம் மேட்ச் பாத்தீங்கதானே?? :P//

    இதுதான் பதிவு. இதுக்கு வெட்டி ஒட்டுன பாட்டு முன்னுரையா? (சரியா படிப்பா. கட் பேஸ்ட்ன்னு சொன்னேன். வெட்டியால் ஒட்டப்பட்டதுன்னு சொல்லலை)

    நடத்துங்கய்யா.


  3. Radha Sriram said...

    ராமனாதன்,

    இப்பொ NBA finals,french open finals அப்ரம் world cup soccer எத பாக்கரது எத விடரது தெரியல.சரி anyway பெடெரெர் க்கு தான் என் வோட்டு.

    சரி இன்த பாட்டு எதுக்கு??

    Radha

    Waiting to see Beckham play tomorrow !!!


  4. மணியன் said...

    என்ன டாக்டர் சார், இன்று நடால் வெற்றியைப் பார்ப்பதா, அலொன்சாவின் பிரிட்டிஷ் ஜி பியை பார்ப்பதா இல்லை ஆரஞ்சின் ஆதிக்கத்தைப் பார்ப்பதா இல்லை நம் திராவிட் கைஃபின் மட்டை போடுதலைப் பார்ப்பதா என்று ஒரே குழப்பம். :((
    //எதிர்த்து பேச நினைக்கற ஆளுங்க இன்னிக்கு அரையிறுதில 3-6, 0-3 க்கு அப்புறம் மேட்ச் பாத்தீங்கதானே?? :P//
    பார்த்தோம், பார்த்தோம் நல்பாண்டியன் மண்டியிட்டதை, நீங்கள் 59 ஆட்ட தொடர் வெற்றியாளனிடம்் இவான் சரணடைந்ததை பார்க்கவில்லையா ?


  5. rv said...

    சிறில்,
    ரொம்ப நல்ல பாட்டு. லின்க் தேடி போட ரொம்ப சோம்பேறித்தனாம இருந்தது, :))


  6. rv said...

    கொத்ஸு,
    நீர் போட்ட பரோட்டா ரெசிபி ஸ்டைல் தானே பாலோ பண்றேன். வேற எதுனாச்சும் செய்யணுமா?? சரியா சொல்லித் தொலையுமய்யா.


  7. rv said...

    இராதா,
    இந்த பாட்டு எதுக்கா?? நம்ம ஏஜெண்ட் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாம போடறாரு. அவர கேட்டீங்களா?? இதுதானே இப்போதைக்கு பஞ்ச் டயலாக்??

    இங்கிலாந்த்.. ஹூம். ஒண்ணுமே சொல்லறதுக்கில்லை. நேத்திக்கு பாரகுவேயோட விளையாடின மாதிரி விளையாடினா சுத்தம். டிரினிடாடும் ஸுவீடனும் ஆடிய மாட்ச் இன்னும் நல்லா இருந்துச்சு.


  8. rv said...

    மணியன்,
    அதானே.. எதப்பாக்குறது எத விடறதுன்னு தெரியல.

    நேத்திக்கு பார்முலா 1 க்கும் நல்ல கூட்டம். நேரத்த வேற மாத்திட்டாங்களே. அலோன்சோவா? இன்னும் 45 நிமிஷம் தான் இருக்கு. பார்ப்போம்.

    லூபிசிச்சோட நடந்த மேட்சும் பார்த்தேன். நடால் ஜெயிச்சாலும் எனக்கு பிரச்சனையில்லை. ஆனா, பெடரர் ஜெயிச்சா இன்னும் சந்தோஷம். மொத்தத்தில் நல்ல மேட்சா இருக்க போகுது. குஸ்னெட்ஸோவா தோத்துட்டாங்களே! எங்க ஊரு ஆளுங்க வந்திருக்கலாம். ஹூம்.

    //திராவிட் கைஃபின் மட்டை போடுதலைப்//
    அதெல்லாம் பாத்து எதுக்குங்க டைம் வேஸ்ட் பண்றீங்க. ஜீரொ டி இத்தாலியா பாருங்க. இன்னும் விறுவிறுப்பா இருக்கும். :)


  9. துளசி கோபால் said...

    இன்னும் 3 நாள்தான் இருக்கு.


  10. ஏஜண்ட் NJ said...

    //நம்ம ஏஜெண்ட் இப்படித்தான் சம்பந்தா சம்பந்தமில்லாம போடறாரு. அவர கேட்டீங்களா??// - Ramanadhan


    வுடுங்க ராம்ஸ்... இங்க கேட்டா என்ன, அங்க கேட்டா என்ன, நாமெல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுனு நெனச்சிருப்பாங்க!
    :-)


    diski: this comment does not convey any message to anyone....!


  11. rv said...

    அக்கா,
    :((


  12. rv said...

    ஏஜெண்டு,
    இதுக்கு எதுக்குய்யா டிஸ்கி? கிலிய கிளப்புறீரே.. :))


  13. G.Ragavan said...

    மிகவும் பிடித்த பாடல். மலேசியாவின் குரலில் மிகவும் ரசித்த பாடல்.

    அது சரி...பதிவோட ரெண்டாவது பாகம் புரியலையே!


  14. நன்மனம் said...

    //துளசி கோபால் said...
    இன்னும் 3 நாள்தான் இருக்கு.//

    // இராமநாதன் said...
    அக்கா,
    :(( //

    Hurray.... I have reached the company of greats.

    I did not understand anything in this blog.... least the above comments.... So i am given to understand that i am fit to join the group of greats:-))


  15. Muthu said...

    ராம்,

    தலைவர் ஃபெடரருக்கு ஆப்பு..
    நடல் மனுசன் மாதிரியா விளையாடுறான்..அப்பப்பா...

    அங்க என்னடான்னா தல சுமேக்கரும் இரண்டாவது எடம்தான். கொடுமையான சண்டே.


  16. rv said...

    ஜிரா,
    பதிவோட ரெண்டாவது பாகம் புரியலையா? எந்த கிரகத்துலேயா இருக்கீரு?? :))

    எப்படியும், இப்ப புரிஞ்சாலும் புரியாட்டியும் கவலையில்லை. ஆனா இன்னும் மூணு வாரத்துக்குள்ள திரும்ப கேள்வி வரும். அப்பவாவது புரியுதா பாருங்க. ;)


  17. rv said...

    நன்மனம்,
    உங்களுக்கும் புரியலையா? வாழ்க. ராகவனார்கூட சேர்ந்து ஆராய்ச்சி செஞ்சு சீக்கிரம் புரிஞ்சுக்கோங்க.

    நீங்க கோட் பண்ணது வேற விஷயம். அது பலருக்கும் புரியாதுன்னு எனக்கு முன்னமேயே தெரியும். சோ, டோண்ட் வர்ரி! :)


  18. rv said...

    முத்து (தமிழினி)
    முத செட் அப்புறம் நாலாவதில் 5-5 பாத்தோன ரொம்ப நம்பிக்கையா இருந்தேன். ஹூம். 2007-க்கு காத்திருப்போம்.

    விம்பிள்டன் வந்தா ஸ்ட்ரெய்ட் செட்ல பெடரர் ஜெயிக்கப்போறாரு. அப்போ சந்தோஷப்பட்டுப்போம்.

    ஷூமாஹர் கோஷ்டியா நீரு? ஹூம்... ஆனா, ரய்க்கோனனுக்கு அல்வா கொடுத்த லாப் unbelievable! மெக்லாரனுக்கு இந்த வருஷமும் கொடுத்துவைக்கல. அலோன்சோ அடுத்த வருஷம் வர வரைக்கும் காத்திருக்க வேண்டியதுதான். :))


  19. பொன்ஸ்~~Poorna said...

    சே.. பின்னூட்டமாவது புரியுதான்னு பார்த்தேன்..
    சுத்தம்..

    நன்மனம், அப்படியே பக்கத்துல ஒரு துண்டு போட்டு எனக்கும் ஒரு சீட் பிடிங்க.. வந்து கிட்டே இருக்கேன்.. கீழ்ப்பாக்கம் தானே??


  20. rv said...

    பொன்ஸு,
    "ஞானபீட©"த்தோட பதிவெல்லாம் புரியுது உங்களுக்கு....

    இது புரியலையா? என்ன போங்கு இது?? :)))


  21. பொன்ஸ்~~Poorna said...

    அதெல்லாம் என்னிக்கு புரிஞ்சிருக்கு... ஏதோ புரிஞ்சா மாதிரி தலையாட்டிட்டா முடிஞ்சுது.. இல்லைன்னா இன்னும் இன்னும் இன்னும் புரிய வைக்க பதிவு போட்டுகிட்டே இருந்தார்னா???!!!

    (அப்பாடா.. ஞான்ஸ் ஊர்ல இல்லை.. இது காதுல விழாது :) )


 

வார்ப்புரு | தமிழாக்கம்