மலைகளின் இளவரசி!

புகைப்படங்கள் எடுக்கப்பட்டது Pillars Rocks View Point மற்றும் Coakers Walk -ல்லிருந்து.


Image hosted by Photobucket.com





Image hosted by Photobucket.com




Image hosted by Photobucket.com

click on images to view full size

பச்சையும் மஞ்சளும்!

கொடைக்கானல் போனபோது தங்கியது JC Residency என்கிற ஹோட்டலில். பேருந்து நிலையத்திலிருந்து கொஞ்சம் தள்ளி, சிவப்பிரியா ஹோட்டலெல்லாம் தாண்டி வில்பட்டி ரோட்டில் Presentation கான்வெண்டிற்கு அருகில் உள்ளது. புதுசா இருப்பதாலோ என்னவோ நல்லாவே இருக்குது. சாப்பாடு தான் கொஞ்சம் சுமார்.

நான் இன்னொரு விஷயம் சொன்னா உங்களுக்கு எல்லாம் சட்டுன்னு அடையாளம் தெரியும். போனவருஷம், மெட்டி ஒலி சீரியல்ல எல்லோரும் கிளம்பி கொடை போனாங்களே? அவங்க இருந்த ஹோட்டல்தான் இது. இந்த தடவை நாங்க கிளம்பின அன்னிக்கு தான் "கோலங்கள்" கூட்டம் வரப்போறதா சொன்னாங்க.

சரி, அத விடுங்க. அங்க எடுத்தது தான் இந்த அழகான பூக்கள்.


Image hosted by Photobucket.com





Image hosted by Photobucket.com

click on images to view full size

பட்டு பட்டு பூச்சி போல...

பட்டு பட்டு பூச்சி போல எத்தனையோ வண்ணம் மின்னும்...
நட்டு வச்சு நான் பறிக்க துடிக்குது அந்த செண்பகம்..

இந்தியாவில் இருப்பதால் டெக்ஸ்ட் பதிவுகள் செய்ய நேரம் பத்தவில்லை. :) அதனால் போன வாரம் போன கொடைக்கானல் பயணத்தின் போது கிளிக்கியவற்றையே பதிவு செய்ய எண்ணம்.

வழக்கமா நான் பூக்களை போட்டோ எடுத்தா ஈக்கள் தான் வந்து உக்காந்துக்கும். இந்த வருஷம் அதிர்ஷ்டவசமா இந்த பச்சப்பூச்சி, ஒரு தேனீ எல்லாம் மாட்டின.


Green Bug - Photobucket.com


Green Bug - Photobucket.com

click on images to view full size

வெள்ளைப்பூக்கள் உலகமெங்கும் மலர்கவே! - புகைப்படம்

சென்ற பதிவின் தொடர்ச்சியாக கொடைக்கானலில் எடுத்த இன்னுமொரு பூவின் புகைப்படம். Bryants Park இல் இருந்தன இந்த வெள்ளைப் பூக்கள். இப்பூக்களின் பின்னணியில் உள்ள background ரொம்ப பிடித்தது.


White Flowers -  Photobucket.com


click on image to view full size

இதுவும் குட்டீயூண்டு பூ தான்!

ஆனந்த் அவர்களின் இந்த பதிவில் உள்ள பூ தான் இதுவும் என்று நினைக்கிறேன். சமீபத்தில் கொடைக்கானலில் உள்ள Bryant's Park-இல் சுட்டது.

 Red Flower - Photobucket.com

click on pic to view full size

Egypt - I

இந்த டிஸ்கவரி சானல்-ல பாத்தீங்கன்னா வாரத்துக்கொருதடவையாவது எகிப்திலுள்ள பிரமிட்களைப் பத்தி காட்டாம இருக்கமாட்டாங்க. அவங்க காட்டறபடி பாத்தா ஏதோ அத்வான பாலைவனத்தில இருக்கற மாதிரி மலைப்பா இருக்கும். ஆனா இது ஊர ஏமாத்தற வேலைன்னு அங்க போய்தான் தெரிஞ்சுகிட்டோம். Giza பிரமிட்கள் எல்லாம் ஏதோ செண்ட்ரல் ஸ்டேஷன் அளவுக்கு இல்லேன்னாலும், டைடல் பார்க் மாதிரி கைரோவிலிருந்து தள்ளி இருக்கு. நாங்க தங்கின மோவன்பிக் ஹோட்டல்லேர்ந்து பத்து நிமிஷம் கார்ல போனா பிரமிட்ஸ். ஸ்பிங்க்ஸ் லேர்ந்து கல்லெறியக்கூடிய இடத்தில இன்னொரு ரெஸ்டாரண்ட். ஆனா நிஜமாவே பிரமிப்பூட்டுகிற விஷயங்கள் இந்த பிரமிட்கள். Giza-ல மூணு முக்கிய பிரமிட்கள் இருக்கு.
1. மெண்காரே (Menkaure)
2. காப்ரே (இதக் கேட்ட உடனே கைரோ கிளம்பும் ஜொள்ளர்களுக்கு நிஜப்பேர ஆங்கிலத்தில சொல்லிடறேன் - Khafre)
3.குஷ்பு..சீ குபு (Khufu).

இதுக்குமேல இதப்பத்தி நான் உளறத விட, நல்லா தெரிஞ்சவங்க எழுதிருக்காங்க இங்க.

ஒலி ஒளிக்காட்சிக்கு அநியாயமா வசூல் பண்ணாலும், பாக்கவேண்டிய விஷய்மிது. எப்படி, ஏன் கட்டினாங்கன்னு விவரமா இண்ட்ரெஸ்டிங்காக இருக்கும். ரஷ்ய, ஜெர்மானிய மற்றும் ஆங்கில மொழிகளில் தனித்தனிக்காட்சிகள் உண்டு. அதில எடுத்த படந்தான் இது.
Image hosted by Photobucket.com

ஒரு உருப்படியான செய்தி: Valley of the Kings - கேள்விப்பட்டிருப்பீங்க. பூமிக்கடியில் பாரோக்களை புதச்சிருக்கிற இடமது. பிரமிட்களைவிட பழமையானவை என்று அங்கு போறதுக்கு முன்னாடி நினச்சிக்கிட்டு இருந்தோம். ஆனா விஷயம் என்னன்னா.. பிரமிட்களுக்குள்ள நிறைய பொக்கிஷம் இருக்குன்னு தெரியவர அவற்றை கொள்ளையடிக்க ஒரு கூட்டம் கிளம்பிருச்சு. அதுவும் பலமைல் தொலைவிலிருந்தே பிரமிட்களை பாக்கமுடியும்கரதும் இந்த கொள்ளையர்களுக்கு வசதியாப்போய் பல பிரமிட்கள் இந்த மாதிரி கொள்ளையடிக்கப்பட்டதால், பூமிக்குள்ள வெளிய ஒரு sign கூட இல்லாமல் புதைக்க ஆரம்பிச்சாங்களாம்.


சரி கைரோ நகரத்துக்கு போவோம்...
நாங்க போனபோது ஊரே வெறும் புகைமூட்டமா இருந்தது. pollution -னு காரணம் சொன்னாங்க. அப்புறம் அங்க பாக்கவேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் கைரோ மியூசியம். இதிலும் விசேஷமாக பிரபல டூட்டன் - கா முன் போன்ற பாரோக்களின் அறைகள் அப்புறம் பழங்காலத்து நகையாபரணங்கள் பிரிவு. நின்னு நிதானமாய் பார்த்து ரசிக்க வேண்டிய அருங்காட்சிய்கம் இது.

அதுக்கப்புறம் பாக்க வேண்டிய இடங்கள்ன்னு சொன்னா சீட்டாடல் (மங்காத்தா மாதிரி ஆட்டமல்ல - The Citadel), Christian Cairo அப்புறம் கான்-அல்-கலீலி (Khan Al-Khalili) பஜார். இந்த பஜார்ல விலையெல்லாம் கொஞ்சம் ஜாஸ்திதான். ஆனா இந்திய்ன்னு சொன்னா அமிதாப் பச்சனத்தெரியுமான்னு கேட்பாங்க. அதுக்கு உங்க பதில பொறுத்து விலையும் மாறும். நம்மூர் கறிகாய் மார்க்கெட் மாதிரி பேரம் பேசலாம். எதையும் வாங்கற ஐடியா இல்லேன்னாலும், சும்மா பொழுது போறதுக்கு கடக்காரங்கள நல்லா கலாய்ச்சிட்டு அவங்க நம்ம விலைக்கு இறங்கி வரும்போது ஏதாவது சொல்லி எஸ்கேப் ஆகி அவங்க வயித்தெரிச்சல கொட்டிக்கலாம்.

இதுக்கு மேல பாக்குறதுக்கும் இருக்கலாம். ஆனா நாங்க பாத்தது இவ்ளோதான். மோவன்பிக் ஹோட்டலுக்காவே கைரோ ரொம்ப பிடிச்சுபோச்சு.

உருப்படியா ரெண்டாவது செய்தி: ஆப்ரிக்கா கண்டத்தில் உள்ள ஒரே metro ரெயில் நெட்வொர்க் கைரோவில் இருக்கு. (அப்டின்னு கைடு தான் சொன்னாரு)

இன்னொரு விஷயம் கைரோவில பாதிவீடுகளுக்கு மேல் வெளிப்பூச்சு (plaster) பண்ணாம செங்கறகள் தெரிய இருக்கும். அதே மாதிரி வீட்டு மொட்ட மாடியிலும் இரும்பு கம்பிகள் துறுத்துக்கொண்டும், பாரபட் சுவரில்லாம ஏதோ கட்டி முடிக்காத மாதிரி இருக்கும். அதுக்கு காரணம்னு எங்க கைடு பரமாத்மா சொன்னது. பெத்தவங்க கட்டும்போது ground floor கட்டிட்டு விட்டுடுவாங்களாம். அப்புறம் முதப்பிள்ளை முதமாடி, இரண்டாவது இரண்டாவது மாடின்னு ஏத்திக்கிட்டே போவாங்களாம். ஆஹா, இதே டெக்னிக்க நம்ம லாலு கடப்புடிச்சார்னா petronas-யே மிஞ்சிடுவார்னு உடனே தோணிச்சு.

இத்துடன் இன்றைய உலாவரும் ஒளிக்கதிர் முடிவடைகிறது..

சரி படத்த பாத்தீங்களா? அதுல பிரமிட்களோட பிம்பம் கீழ தெரியுதா? அது இன்னான்னு சொல்றவங்களின் 1 பதிவிற்கு இலவசமாக முப்பது கள்ள வோட்டுக்களும், பத்து பின்னூட்டங்களும் குத்தப்படும்.


PS: Blogger seems to continually hold a grudge against me, or against egypt. It promptly erases the post after a couple of hours. On Anand's suggestion, have renamed the post and testing if this works.

நவீன மருத்துவத்தின் சிற்பிகள்: 1 - Sir William Osler

பல நூற்றாண்டுகளாய் மருத்துவத்துறை பல்வேறு வடிவங்களில் பலநாடுகளில் இருந்து வந்தாலும், 18, 19 மற்றும் 20-ஆம் நூற்றாண்டுகளில் நவீன மருத்துவமாக அசுர வளர்ச்சியடைந்தது. இன்னூற்றாண்டில் உலகம் பல்வேறு நோய்களை எதிர்த்து வியத்தகு வகையில் போராட முடிகிறது. வளர்ந்த நாடுகளை எடுத்துக் கொண்டால் அமெரிக்காவில் 1901-ல் சராசரி மனித ஆயுட்காலம் - 49. இன்று - 77. நம் இந்தியாவைப் பொறுத்தவரை 1950-களில் 40, இன்று கிட்டத்தட்ட 63. நவீன மருத்துவத்தின் சாதனைக்கு இதுவே ஒரு சான்று. இந்த அபார வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகள் சிலரைப் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்து எழுதுகிறேன்.

நவீன மருத்துவத்தின் தந்தை என்று பலராலும் கருதப்படுபவர் சர் வில்லியம் ஆஸ்லர் (Sir William Osler). மருத்துவக் கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி ஏற்பட்டதில் சர் ஆஸ்லரின் பங்கு மகத்தானது. தியரிக்களைப் போலவே பிராக்டிகல் clinical அனுபவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கல்விமுறையை மாற்றியவர். இன்றைய American Association of Physicians-ஐ தோற்றுவித்ததில் பெரும்பங்கு வகித்தார் ஆஸ்லர்.

Sir William Osler - Photobucket.com

ஆங்கிலேய மிஷனரியான Rev. Featherstone மற்றும் Ellen Osler தம்பதிக்கு ஒன்பதாவது குழந்தையாக Bond Head, Canada ஜூலை 12, 1849-ல் பிறந்தார் ஆஸ்லர். முதலில் தந்தையைப் போலவே மதபோதகராக விருப்பபட்டு டொரொண்டோவில் உள்ள Trinity College-ல் சேர்ந்தார். பின்னர், மனம் மாறி 1868-ல் Toronto Medical School-இல் சேர்ந்தார். அங்கிருந்து பெயர்ந்து 1872-ல் மாண்ட்ரியாலில் உள்ள MacGill University-லிருந்து பட்டம் பெற்றார்.

தான் படித்த பல்கலைக்கழகத்திலேயே 1875-ல் பேராசிரியராகவும் பின்னர் 1884-ல் பிலடெல்பியா பல்கலையில் Chair of Clinical Medicine-ஆக நியமிக்கப்பட்டார். இவற்றிற்கு பின் 1888, பால்டிமோரில் அப்போதுதான் துவங்கப்பட்ட ஜான் ஹாப்கின்ஸ் பல்கலையில் முதற் மருத்துவப்பேராசிரியராக நியமிக்கப் பட்டார் ஆஸ்லர். ஆனால் முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு மாணவர் கூட கிடையாது. பெரும்பாலும் கட்டுரைகளும், புத்தகங்களும் எழுத நேரத்தை பயன்படுத்தினார். 1892-ஆம் ஆண்டில் Grace Gross-ஐ மணம்புரிந்தார். கிடைத்த நேரத்தில் எழுதிய Principles and Practice of Medicine என்றொரு புத்தகத்தை இதே ஆண்டில் வெளியிட்டார். உலகெங்கும் பலராலும் புகழப்பட்ட புத்தகமது.

இங்கேயிருந்த போதுதான் மருத்துவக்கல்வியில் மாணவர்கள் 'அனுபவத்தையும்' கற்பதற்கு வழி செய்தார். முதன்முதலில் மாணவர்கள் வார்ட்களில் நேரடியாக பார்வையிட்டு "chief"-க்கு ரிப்போர்ட் அளித்து, பின்னர் லேப்பில் வெளிக்கொணரப்பட்டவையையும், இந்த நேரடித் தொகுப்புகளையும் ஒருங்கிணைத்து இவையே பிற்கால மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் புதிய பகுதிகளாகவோ, திருத்தங்களாகவோ அளிக்கப்பட்டது. William Welch, Howard Kelly, William Helsted ஆகியோரின் ஒத்துழைப்போடு இவர் இவ்வாறு செயல்படுத்திய மாற்றங்களினால், வெகு விரைவிலேயே ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவக்கல்வியில் உலகிலேயே முதன்மையான் இடத்துக்கு வரமுடிந்தது.

“To study medicine without reading textbooks is like going to sea without charts, but to study medicine without dealing with patients is not going to sea at all.” - ஆஸ்லர்.

இன்னொரு கொசுறு தகவல்: ஆஸ்லரின் புத்தகத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன் தான் அமெரிக்க கோடீஸ்வரர் Rockefeller, நியு யார்க்கில் Rockefeller Institute of Medical Research -ஐ நிறுவினார்.

1906-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலையில் மிகவும் மதிப்புமிக்க Regius Chair of Medicine ஆக நியமிக்கப்பட்டார். ஆக்ஸ்போர்டில் இருந்த நேரத்தை பெரும்பாலும் புத்தகங்கள் எழுதுவதிலும், சேகரிப்பதிலுமே செலவிட்டார். இவ்வளவு புகழ் பெற்றாலும் அவரின் மருத்துவத்தில் ஆராய்ச்சிகளைப் பொறுத்தவரையில் பங்கு சற்று குறைவுதான். 1873-ல் platelets எனப்படும் ரத்த அணுக்களைப் பற்றி விரிவாக ஆராய்ந்தார்.

அவரின் தொழில் வெற்றிக்கு காரணம் நோயாளிகளிடம் அவரின் அணுகுமுறையே என்று பலரும் கருதுவதுண்டு. வசூல் ராஜாவில் கமல் சொல்வாரே.. "என்ன கேஸுங்கீறீங்க, ஏன் இவருக்கு பேர் கிடையாதா?" இதற்கு உதாரணமாக நோயாளிகளை
அக்கறையுடன் பார்த்தவர் ஆஸ்லர்.

டிசம்பர் 19, 1919-ல் நுரையீரல் நோயால் மறைந்தார் ஆஸ்ல்ர். அவரின் விருப்பப்படி 8000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை அவர் படித்த கல்லூரி நூலகத்திற்கு வழங்கினார். இன்றளவும் MacGill University-இல் ஆஸ்லர் நூலகம் என்ற பிரிவு இருக்கிறது.

இவரின் எழுத்துக்கள் Bibiliotheca Oslerina என்ற தொகுப்பாக உள்ளது. அதில் இவரால் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரைகள், புத்தகங்களின் எண்ணிக்கை 3576!

கீழேயுள்ள தளங்களுக்கு நன்றி. மேலதிக விவரங்களுக்கு..
1. whonamedit.com
2. wiki
3. infoplease.com
4. Osler Library

 

வார்ப்புரு | தமிழாக்கம்