பூவே இளைய பூவே! வரந்தரும் வசந்தமே!
மடிமீது தேங்கும் தேனே! எனக்குத்தானே!
குழல் வளர்ந்து அலையானதே! இரவுகளின் இழையானதே!
விழியிரண்டு கடலானதே! எனது மனம் படகானதே!
இளம்பளிங்கு நகம் தேய்த்ததே! நிலவு அதில் முகம் பார்த்ததே!
இனிக்கும் தேனே! எனக்குத் தானே!
இளஞ்சிரிப்பு ருசியானது! அது கனிந்து இசையானது!
புயல்மகளின் குரலானது! இருதயத்தில் மழை தூவுது!
இருபுருவம் இரவானது! இருந்தும் என்ன வெயில் காயுது!
இனிக்கும் தேனே! எனக்குத் தானே!
-------------
இந்த ஞாயிறு நாமெல்லாரும் எதிர்பார்த்த
நடால் Vs பெடரர்
தலைவரு பெடரருக்கு ஒரு ஓ இப்பவே சொல்லிக்கறேன். எதிர்த்து பேச நினைக்கற ஆளுங்க இன்னிக்கு அரையிறுதில 3-6, 0-3 க்கு அப்புறம் மேட்ச் பாத்தீங்கதானே?? :P
பூவே இளைய பூவே!
156. ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா?
கொஞ்ச நாளா பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் இடஒதுக்கீடு பத்தி விவாதங்கள் நடந்துகிட்டு வருது. ஆனா, நடுவுல என் கண்ல பட்டது ரிஸர்வேஷன் டாக்டர்கள்லாம் என்னமோ எமனோட ஏஜெண்ட்கள் மாதிரி அவங்ககிட்ட போகவே சில மக்களெல்லாம் உயிருக்கே பயப்படறாங்க.
சேரும்போது என்னமோ மெரிட்ல வந்தவங்கள்லாம் 300 எடுத்துட்டு வந்தா மாதிரியும், மிச்சவங்கள்லாம் 35 எடுத்துட்டு வந்தா மாதிரியும் நினச்சுகிட்டு இருக்கிறதால வர காழ்ப்புணர்ச்சியிது. உண்மை நிலவரம் என்னான்னா, OC, BC, MBC, SC, STனு வரிசைக்கிரமப்படி 294 - 275 வரைக்கும் தான் இலவச சீட்டே. இது அக்ரெகெட் இல்லியா? 274ங்க்றது 91.4%. எந்த ஊர்ல சாமி 91.4 வாங்கினவங்க மக்கானாங்க? அவன விட அதிகமா மார்க் வாங்கின ஆளுங்கள நான் குறைச்சு சொல்லல. தனிமனிதன்னு பார்த்தா இன்னும் அதிகமான மதிப்பெண் வாங்கின மாணவனுக்கு கிடைக்காம போனது துரதிருஷ்டம் தான். ஆனா, இந்த இடஒதுக்கீடு நம் நாட்டுக்கு அவசியமானது. இதுனால இந்த 6% வித்தியாசத்துல உங்க உயிரே ஊசலாடுத்துன்னு ஒப்பாரி வைக்கிறது நியாயமா?
இதுவெறும் சேர்க்கை நிலவரம் தானே. 91 வாங்கின பையன் நூறு வாங்க மாட்டானா? பன்னிரண்டாம் கிளாஸ் மார்க் வச்சுதான் டாக்டரோட தரத்தை முடிவு பண்ணுவீங்களா? அப்ப அப்புறம் நாலரை வருஷம் உயிரக் குடுத்து படிச்சு, ஒண்ணரை வருஷம் இண்டெர்னா குப்பக்கொட்டினது இதெல்லாம் எந்த தெய்வத்துக்கு ப்ரீத்தி?
மிச்ச கல்லூரிகள விட மருத்துவக் கல்லூரிகளில் பெயிலாகும் கோஷ்டி அதிகம் தான். அது பன்னிரண்டாம் கிளாஸ்ல இவ்வளவு மார்க் எடுத்துட்டு வந்த பசங்கதானே. படிப்போட தன்மை காரணமா இப்படி நடக்கிறது வழக்கம்தான். இது ஒண்ணும் இன்னிக்கு நேத்திக்கா நடக்கறதில்லை. பலவருஷமா நடந்து வரதுதான். உங்க ஊர்ல உங்களுக்கு நல்லா தெரிஞ்ச இந்தியாலேயே படிச்ச பெரிய டாக்டரப் போய் கேட்டுப் பாருங்க. எவ்வளவு வருஷம் படிச்சாங்க, இல்ல அவங்க அளவுக்கே பெரிய ஆளா இருக்கிற ப்ரண்ட்ஸ் எவ்வளவு ஸ்ட்ராங்கா படிச்சிருக்காங்கன்னு கத கதயா சொல்லுவாங்க.
அஞ்சரை வருஷம் படிச்சு முடிச்சு வர்றவங்க எல்லாம் ஜொல்லிக்கறதில்லை. இதுல ரிஸர்வேஷன்ல வந்தவங்க, ஓப்பன்ல வந்தவங்க இதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. தொழிலும் தெரிஞ்சு, கொஞ்சம் அதிர்ஷடமும் இருந்தா எல்லாரும் முன்னுக்கு வருவாங்க. இதுல யார் நல்லா வராங்கன்னு முடிவெடுக்குறது அந்த டாக்டர்கிட்ட போற பேஷண்ட்ஸ் மட்டுமே. அவர் கொடுக்கிற ரிஸல்ட்ஸ் தான் மக்களுக்கு நம்பிக்கை வரதுக்கு ஒரே காரணம். மத்தபடி அவர் பன்னிரண்டாம் வகுப்புல பிஸிக்ஸ்லயும், கெமிஸ்ட்ரிலேயும் 100 வாங்காம 91 தான் வாங்கினார்னு யாரும் கவலைப்படப்போறதில்லை. பிஸிக்ஸ் கெமிஸ்ட்ரி என்ன, மருத்துவப் பாடங்கள்ல கூட அவர் என்ன வாங்கினார்னு உங்களுக்குத் தெரியப்போறதில்லை. அது அவசியமும் இல்ல. வைத்தியம் ஒழுங்கா பாக்கறார், மக்களுக்கு நம்பிக்கை இருக்குன்னா அது ஒண்ணே போதும்.
நீ 2000ல ரிஸர்வேஷன்ல வந்தவன், மருத்துவன்னு பல்கலைக்கழகமே சான்றிதழ் கொடுத்திருந்தாலும் என் உயிருக்கு உன்னால உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னு சொல்வீங்களா? consistent-ஆ negligenceனு எந்த குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மீது புகார்கள் வந்திருக்கா என்ன? அந்த மாதிரி எதுனாச்சும் ஸ்டாடிஸ்டிக்ஸ் முதக்காரியம் கிடைக்குதா?
இன்னொரு விஷயம் எனக்கு புரியவேயில்ல. ரிஸர்வேஷன்ல வந்த ஆளுன்னு எப்படிங்கய்யா முடிவு செய்வீங்க? டாக்டர் நேம் போர்ட பாத்துமட்டுமா?
இந்த கேவலமான வரியை எழுத வேண்டாம்னு தான் பார்த்தேன். ஆனா, எப்படிக் கண்டுபிடிப்பாங்கன்னு சத்தியமா தெரியவேயில்ல அதான் கேட்டுட்டேன். கோச்சுக்காதீங்க.
---
முக்கியக்குறிப்பு: இட ஒதுக்கீட்டினால் தரம் குறைந்து நம் நாட்டின் அசுர வளர்ச்சி பாதிக்கப்படும் என்றெல்லாம் மாக்ரோ படம் பார்த்தாலும், என் எண்ணத்தில், முன்னேறப்போவதென்னவோ வாஸ்தவம் தான். என்ன அப்படி அவசரம்? பாதி ஜனங்களை 'முன்னேற்ற ஏர்பஸ்'ஸில் ஏற்றிக்கொள்ளக்கூட முடியாமல்? மெதுவாகத்தான் போவோமே. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்னு சொல்லி அறுபது சதவிகித கிராமங்களைக் கற்காலத்திலேயே விட்டுவிட்டு நாம் (ஓரளவு நன்றாய் வாழும் மக்கள்) மட்டும் அமெரிக்க பொருளாதாரத்திற்கு நிகராவதில் பயனேதுமில்லை என்பது என் கருத்து.
இட ஒதுக்கீட்டை ஆதரிச்சாலும் அதை அமல்படுத்தும் முறையில் குறிப்பாக creamy layer, அதோடு கூடவே கீழ ஒட்டியிருக்கிற லேயர் பத்தியெல்லாம் எனக்கு தீவிர மாற்றுக்கருத்துகள் உண்டு. ஆனா, இடஓதுக்கீட்டில் இருக்கும் ஓட்டைகளை சரிசெய்ய வழிசொல்லாமல், இடஒதுக்கீட்டையே தப்பு சொல்வது அநியாயம்.
அதப்பத்தி நான் எழுதறத விட, ஏற்கனவே பத்ரி மற்றும் இன்னும் சிலபேர் நல்லாவே எழுதிட்டாங்க. அங்க பின்னூட்டங்களிலும் நிறைய விஷயங்கள் சொல்லிருக்காங்க. அங்க பாத்துக்கங்க. என்னவோ இதப் பத்தி மட்டும் எழுதணும்னு தோணிச்சு. அதான்.
155. 42.18 கிலோ மீட்டர, 375510 க்ளிக்ஸ்
என்னடா இது புதுசா ஏதோ விஜயகாந்த் மாதிரி ஸ்டேடிஸ்டிக்ஸ்லாம் தரேன்னு பயப்படாதீங்க. யாரும் ஓடுனதோ தாண்டுனதோ ஓட்டினதோ இல்ல இது. 42.18 கி.மீட்டர் கறது என் கணினியோட எலிக்குட்டி அது ஓடற தக்கணூண்டு mousepad இடத்துக்குள்ள ஓடினது. 375510 என்பது எலிக்குட்டியோட பட்டன்களை நான் அமுக்கின அளவு. :)) அதுல இடது பட்டன் மட்டும் 361 ஆயிரத்து சொச்சம்.
மவுஸ்ட்ராக்ஸ்னு சொல்லிட்டு சும்மா ஒரு குட்டி ப்ரோக்ராம் சினெட்லேந்து டவுன்லோட் பண்ணேன். அதுல வந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் தான் இது. எனக்கே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்துச்சு. இந்த அளவு க்ளிக்ஸும், தூரமும் அடைய தேவைப்பட்ட காலம் 32 நாட்கள். ஒரு மாசம்னாலும் 42 கி.மீட்டர் டூ டூ மச்சாட்டம் இருக்குல்ல? எனக்கே இந்த கதின்னா, கணினிப்பொட்டியே கதின்னு கிடக்கும் மக்கள்ஸ் எவ்ளோ தூரம் எலிக்குட்டிய பாடா படுத்துவாங்களோ நினச்சு, எலிக்குட்டி பாதுகாப்புக் கழகம் ஆரமிக்கலாம்னு எண்ணம். யாராவது சேந்துக்கறீங்களாப்பா?
cnet.com போய் MouseTracksனு தேடுங்க இல்லேன்னா www.x21B.com

