227. 7 +/- 2... இது ஏழரையல்ல

ஒரு மேட்டர் விஷயமாக கூகிளை தோண்டிக்கொண்டிருந்தபோது, reality 1.0-ல் வேண்டுவது அல்லாமல் மற்றதே கண்ணில் படுவது போல, அகப்பட்டது இந்த chunking. மூளை பிஸியாலஜி அண்ட் அஸ்ஸோசியேட்டட் மெமரி மேட்டரெல்லாம் துருப்பிடிச்சுருந்தபடியால் இன்னும் தேட ஆரம்பிச்சேன். சுவையாகவும் அதே சமயம் சில கடினமான விஷயங்களை குறித்த புரிந்துகொள்ளல்களை அதிகப்படுத்த உதவுவதாகவும் எனக்குப் பட்டது. அதை இந்த உலகத்தோடு பகிர்ந்து கொண்டேயாகவேண்டுமென்ற வெப் 2.0 வெறியுடன் இது...

முதலில் இந்த chunking என்பது என்ன? 1956ஆம் ஆண்டு அமெரிக்க ஆராய்ச்சியாளர் மில்லர் கண்டுபிடித்த வார்த்தைதான் இந்த சங்கிங். அவரது ஆய்வறிக்கை 'The Magical Number Seven, Plus or Minus Two" யில் தான் இந்த 7+/-2 முதலில் பேசப்பட்டது. அது என்ன 7+/-2? மனிதனுடைய short term நினைவுத்திறனினுடைய bandwidth தான் இந்த 7 +/-2.

சராசரியாக ஒரு மனிதனால் ஒரு சமயத்தில் அதிகபட்சமாக ஏழு அல்லது +/-2, அதாவது ஐந்து அல்லது ஒன்பது bits of informationஐ மட்டுமே கிரகிக்கமுடியும். இந்த bottleneck அளவு சிலருக்கு மாறுபடலாம். சிலருக்கு குறைந்து காணப்படலாம். ஆனால் பெரும்பாலானவர்களின் பேண்ட்வித் இவ்வளவுதான். சரி இந்த bits of information, அதாவது chunk என்பது என்ன? digits, images, thoughts, actions or any other piece of information - are grouped together as collections based on similarity. A chunk can then be defined as such "a collection of elements having strong associations with one another, but weak associations with elements within other chunks" - அதாவது ஒத்து இருக்கும் தகவல்களை ஒரு குழுவாக சேகரித்து வைப்பது. இப்படி குழுக்களாக வகைபடுத்தினாலும் அவற்றின் எண்ணிக்கை அளவும் 7+/-2 விதியின்படி ஒன்பது குழுக்களே அதிகபட்ச எண்ணிக்கையாக இருக்கமுடியும். ஒன்பது என்பது எந்நேரமும் சித்திக்கக்கூடியதுமில்லை. சேமிக்கப்படும் தகவலின் complexityக்கு ஏற்ப ஒரு சமயத்தில் கிரகிக்கப்படக்கூடிய அளவு மாறுபடும்.

தற்காலிக நினைவுத் திறன் குறித்து பேசப்பட்டு வந்த இந்த விதி, பின்னர் நிரந்தர நினைவுத்திறனின் கீழும் செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. டெலிபோன் நம்பர்கள், பல இலக்க கடவுச்சொற்கள் போன்றவற்றை நம் மனம் சேமிப்பது இந்த டெக்னிக்கை வைத்துதான் என்றும் நம்பப்படுகிறது. சொல்லப்போனால் mnemonics என்று நாம் பரவலாக பயன்படுத்தும் வழக்கம் இதே அடிப்படையில் இயங்குவதே.

உதாரணத்திற்கு நான் படித்த ஒன்று நினைவுக்கு வருகிறது:

She Likes To Play, Try To Catch Her

மனிதனின் மணிக்கட்டில் இருக்கும் எலும்புகளில்
முதல் வரிசை: Scaphoid, Lunate, Triquetrum, Pisiform
இரண்டாவது வரிசை: Trapezium, Trapezoid, Capitate, Hamate

இங்கே மேற்சொன்ன உதாரணத்தில் catch என்று தொடும் பாகங்கள் (palms and wrists) சம்பந்தத்துடன் கடினமான லத்தீன பெயர்களை நினைவுக்கு கொண்டு வருவது சுலபமாகிறது. இந்த மாதிரி பிரபலமானவை நிறைய உண்டு. அவரவரின் படிக்கும் வழக்கத்திற்கு ஏற்ப சொந்தமாக கட்டமைப்பதோ வழக்கம்.

தியரியே படிச்சுகிட்டிருந்தா போரடிக்குது இல்ல... இதை எப்படி செயலாக்கத்தில் நமக்கு சாதகமாக்கிக்கொள்வது? எழுத்து வடிவில் வழங்கப்படும் எவ்வகையான தகவல்களையும் இந்த 7+/-2 ஐ மனதில் கொண்டு தயாரித்தால், நம்மை படிக்கும் வாசகர்களுக்கு அதை நினைவில் நிறுத்திக்கொள்வது எளிதாக்க முடியும். அடிப்படையாக சில விதிகள்.

* No more than nine bullet points on a slide
* No more than nine bullet points on a bulleted list - classify the information into smaller logically related groups and introduce a subheading
* No more than nine bubbles on a single data flow diagram - consider reducing this further if the functions are complex
* No more than nine classes in an object model module - consider creation of more super-classes or a more granular partitioning
* No more than nine states in a single state transition diagram - consider creation of super-states
* This principle statement is chunked into 7 units of information. No unit has more than 6 thoughts or sub-chunks.

உதாரணத்துடன் இங்கே காணலாம்
------------------------------
அது சும்மா எழுதுனா செய்யற விஷயம். ஆனால் இது போன்று வரிசைக்கிரமமாக வாசகர்களால் சிந்திக்க முடியுமா? மனமெனும் குரங்கு தாவிக்கொண்டேயிருப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் இருக்கே.

ஒரு விஷயத்தை யோசிச்சு செய்யறதுன்னா நடக்குற காரியமாவா இருக்கு? அதுக்கு என்ன செய்யறதுனு யோசிக்கணும்னு சொல்லிகிட்டே தமிழ்மணத்தை ஓப்பன் பண்ணி ஒரு ரெண்டு பதிவ திறந்து வைத்துக்கொண்டு, அப்புறம் திட்டிக்கொண்டு, திரும்ப கூகிளாண்டவரே கதினு விழுந்தேன். கொடுத்தார் ஒரு அருமையான லின்க்கை. நான் சொல்றதை நானே கேக்க மாட்டேனு போங்கு பண்ணிகிட்டிருந்த குரங்குக்குட்டி திரையில் வர்ற அம்புக்குறிகளப் பார்த்தோன சைலண்ட் ஆயிருச்சு. எனக்கே ஆச்சரியம்.

ஏன்னா பொதுவா எவ்வளவு சீரியஸான வாழ்க்கை மேட்டரானாலும் சரி ஜோவியலான வலைப்பூவுலகமானாலும் சரி அஞ்சு நிமிஷம் யோசிப்போம்னு ஆரமிச்சா - முறையே கார்கள், ****, அசின், ****, அரசியல், **** அப்படினு அஞ்சுநிமிஷத்துக்குள்ள அண்டார்டிகா வரைக்கும் தாவிகிட்டு இருக்குமே, இப்ப அதுக்கு என்னாச்சுனு எனக்கே டவுட் வர அளவுக்கு ஆயிருச்சு. அது எப்படினா ஒரு நாலஞ்சு வயசுல குழந்தைங்க உள்ளவங்களுக்கு தெரியும். 'ஹாயா டிவி பாத்துகிட்டே இருப்பாங்க, ஒரு பத்துநிமிஷம் கழிச்சு திடீர்னு யோசனை வரும். குழந்தையோட ரகளை எதுவுமில்லாம என்னடா இவ்ளோ அமைதியாயிருக்கேனு டிவிய mute பண்ணிட்டு முழிப்பாங்களே. அதே பீலிங்தான்.

சரி. ஒரு சின்ன டெஸ்ட். முதல்ல நீங்க நினைக்க வேண்டியது ஏதாவது ஒரு விஷயத்தை பத்தி. என்ன நம்புங்க இதுதான் கஷ்டமான காரியம். அப்புறம் எல்லாமே சுலபமே. அது உங்களோட டூத் பிரஷ்ஷாக இருக்கலாம், அல்லது கோசவோவோட சுதந்திரமா இருக்கலாம், நீங்க காரோட்டறதா இருக்கலாம் அல்லது உலகப் பொருளாதாரமா இருக்கலாம்.

இப்ப நீங்க செய்யவேண்டியதெல்லாம் ஒண்ணுதான். இப்ப ‘ஐஸ்கீரீம்' அப்படினு நினச்சிருந்தீங்கனு வையுங்க. நினச்சிட்டு கீழே படத்துல இருக்குற கறுப்பு பொத்தானை அமுக்கினால் திரையில் அம்புக்குறியீடுகள் வரும். இப்போது நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கும் பொருளின் தொடர்ச்சியாக எந்த திசையில் உங்கள் எண்ண ஓட்டம் இருக்க வேண்டும் என்று குறிக்கவே இந்த குறியீடுகள்.

மேலே குறிக்கும் அம்பு வந்தால் - ஐஸ்க்ரீமுக்கு மேலே போகவேண்டும். அதாவது ஐஸ்க்ரீம் என்பது உணவுவகை, அதோட டிஸ்ட்ரிப்யூஷன், டெமொக்ராபிக்ஸனு எந்த buzzword வேணா இருக்கலாம். ஆனா macro levelஅ இருக்கணும். big pictureனு கூட சொல்லலாம்.

கீழே குறிக்கும் அம்பு வந்தால் - ஐஸ்க்ரீமிகுள்ள போகணும். அதாவது ஐஸ்க்ரீமில் என்னென்ன இருக்கிறது. அவற்றின் தன்மைகள். அந்த மாதிரி. micro. in depth lookனு சொல்வாங்களே அந்த மாதிரி.

பக்கவாட்டில் குறிக்கும் அம்புகள் வந்தால் - ஐஸ்க்ரீமை ஒற்று இருக்கக்கூடிய வேறு பொருட்கள் என்பது மாதிரி போகலாம். lateral ஆக செல்லவேண்டும். metaphors மாதிரி.


ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும். போகப்போக ஒரு விஷயத்தைக் குறித்த உங்கள் புரிதல்கள் எப்படியிருக்குனு உங்களுக்கே புரிய உதவுற ஜாலியான விளையாட்டு.
ரெடியா? கறுப்பு பொத்தானை அமுக்கினால் ஜூட் தான். இதுக்கு time limit எல்லாம் கிடையாது. ஒரு விஷயத்தை குறித்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொண்டு சிந்திக்கலாம். அடுத்த எண்ண ஓட்டத்துக்கான திசையை பெற மீண்டும் கறுப்பு பொத்தானை அழுத்தவும்.

©Manifestation.com

16 Comments:

  1. சேதுக்கரசி said...

    என்னமோ புரிஞ்சமாதிரியும் இருக்கு... புரியாதமாதிரியும்...


  2. இலவசக்கொத்தனார் said...

    இந்தப் பதிவை சங்கிங் முறைப்படி தர வேண்டுகிறேன்.


  3. மங்களூர் சிவா said...

    //
    சேதுக்கரசி said...
    என்னமோ புரிஞ்சமாதிரியும் இருக்கு... புரியாதமாதிரியும்...
    //

    சேம் பிளட்


  4. rv said...

    சேதுக்கரசி,
    //என்னமோ புரிஞ்சமாதிரியும் இருக்கு... புரியாதமாதிரியும்...//

    எப்போதும்போலனு சொல்லாத வரைக்கும் நன்னி!


  5. rv said...

    கொத்ஸு,
    சங்கிங் முறைப்படியா?

    நான் என்ன இலவசமா நடத்துறேன்? பார்ட் ஒன் பார்ட் டூனு ஏழு போஸ்டா இழுக்கறதுக்கு? :)))


  6. rv said...

    மங்களூர் சிவா,
    //சேம் பிளட்//

    :(((

    என்ன இன்னிக்கு அவ்ளோ மோசமாவா வந்திருக்கு? பீட்டர் ப்ராப்ளமா மேட்டர் ப்ராப்ளமா?


  7. பினாத்தல் சுரேஷ் said...

    நல்ல பதிவு ராம்ஸ். எங்க தொழில்லே இது பாலபாடம் :)

    அதாவது 7க்கு மேலே சொல்லக்கூடாதுன்னு இல்லை. முதல்ல ஒரு 7 chunk ஐ தெளிவா சொல்லிட்டு, ரிப்பீட் பண்ணிட்டு, இதை விட்டு வெளியே போறோம்னு சொல்லிட்டு மேலே போகணும்.


  8. பெருசு said...

    //இந்தப் பதிவை சங்கிங் முறைப்படி தர வேண்டுகிறேன்//

    அஃதே
    ரிப்பிட்டேய்


  9. பத்மா அர்விந்த் said...

    This is one way to control your thought process and send it in direction that you want it to continue. I always thought people who teach meditation ( think of a flower, start imaginign its petals, its fragrence etc)use this without realising.
    I usually keep it in three, not 9:)


  10. Unknown said...

    கருப்பு பொத்தான் நல்லா வேலை செய்யுது....


  11. Radha Sriram said...

    இதோட நாலு முறை படிச்சிட்டேன்.ஒரு மாறியா புரிஞ்சுகிட்டேன்னு நினைக்கரேன்.......இந்த மாதிரி வித்யாசமான விஷயத்தை அறிமுகபடுத்தினதுக்கு நன்றி:)


  12. rv said...

    பெனாத்தலார்,
    நீங்க தான் தெரிஞ்ச மேட்டர்னு சொல்லி பால வார்த்திருக்கீங்க.

    //அதாவது 7க்கு மேலே சொல்லக்கூடாதுன்னு இல்லை. முதல்ல ஒரு 7 chunk ஐ தெளிவா சொல்லிட்டு, ரிப்பீட் பண்ணிட்டு,//
    உண்மை... இது அந்த சுட்டியில இன்னும் விளக்கமா சொல்லிருக்காங்க.

    நன்னி.


  13. rv said...
    This comment has been removed by the author.

  14. rv said...

    பெருசு,
    ////இந்தப் பதிவை சங்கிங் முறைப்படி தர வேண்டுகிறேன்//

    அஃதே
    ரிப்பிட்டேய்//

    நல்லது. :))


  15. rv said...

    பத்மா,
    உண்மைதான். தியானமும் இதே போன்றதுதானு நினைக்கிறேன். என்ன அதெல்லாம் செய்ய கொஞ்சம் ஃபோகஸ் வேணும்.

    3 +/-0 = புது மெத்தடாலஜியா? :)

    நன்றி.


  16. rv said...

    பேரரசன்,
    கறுப்பு பொத்தான் வேலைசெய்யுதா..:))

    யாராச்சும் ஒருத்தராவது எங்க தொடங்கி எங்க முடிச்சேனு சொல்லுவாங்கனு பாத்தா... ஊஹும்...


 

வார்ப்புரு | தமிழாக்கம்