220. தொடரில் தனியாய்...

புதுசா ஏதோ புகைப்படத் தொடராமே... அதுக்கு நம்ம கொத்ஸு நான் படம் போடணும்னு சொல்லிருந்தாரு. நமக்கு நாமே சான்ஸ் கிடச்சா விடற கோஷ்டியா நாம?

அதுக்கு முன்னாடி ரூல்ஸ்:
<$quote:baba$>
அதாகப்பட்டது என்ன செய்யவேண்டுமென்றால்...
1. கடந்த வருடத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை இடவேண்டும்.
2. எதுவாக இருந்தாலும் ஒகே. கலையுணர்ச்சி, PIT நுட்ப சிறப்பு, சொந்த ஃபீலிங்ஸ்... சரிதான்.
3. ஏன் அந்தப் படம் ரொம்ப இஷ்டம் என்பதை சொல்ல வேண்டும்.
<$/unquote:baba$>

கைவசம் இருக்கும் படத்தில் இதுதான் தேறிச்சுனு நான் சொன்னாக்க... எப்படியும் உங்கள்ல ஒரு நாலு பேராவது பாவம், இன்னும் நல்லா எடுத்திருக்கான் போலிருக்கு பையன் ஆனா துரதிருஷ்டம் கைவசம் இல்லியேனு பாவப்படுவீங்கன்னு அந்த பிட்டையும் போட்டுக்கறேன்.

இது எடுத்த இடம்: Pavlovsk அப்படிங்கற ஊர். மன்னர்களோட கிராமம்னு ஒரு போஸ்ட் போட்டேனே அந்த ஊர் பக்கத்துல இருக்கறது இது. அரண்மனையெல்லாம் ஜோரா இருந்தாலும், அதோட இருக்குற இந்த காடு தான் (காடுனு சொன்னா பொருள் மாறறா போல இருக்கு. இது பார்க்). நாங்க போன அன்னிக்கு நல்ல மேகமூட்டம் லேசான தூறல்னு நாள் புல்லா சூரியன் வராம டகால்டி கொடுத்திகிட்டிருந்தாரு. ஜில்லுனு நீராகாரத்தோட சுடச்சுட பார்பக்யூ ஐட்டங்கள ஒரு கட்டு கட்டிட்டு அப்படியே அந்த நாள் பூரா காலாற நடந்த சுகம் வாழ்நாளுக்கும் மறக்க முடியாதது. அப்படியொரு அமைதி.





மேலதிக விவரம்:விக்கிபீடியா
படிக்காம படம் மட்டும் பார்க்க இங்க போங்க.
------------------------------------------------------------------------------------
ஒரே படத்தோட முடிச்சா உப்புமா சாப்பிட வந்த உங்களுக்கு நான் பண்ணும் துரோகமில்லியா?

அதுனால அடுத்த படம்.



பார்க்க அழகா இருந்தாலும் இதப்போட வேண்டிய அவசியமென்னனு நீங்க கேக்கறதுக்கு முன்னாடி முன்கதை சுருக்கம்.

இந்த பிள்ளையார் கோயில் generic தெப்பக்குளத்துல நானும் நண்பர்களும் கல்லெல்லாம் எறிஞ்சு விளையாடிகிட்டிருந்தோம். அப்ப அந்தப் பக்கம் வந்த பெரியவர் தம்பிகளா இது என்ன குளம் தெரியுமான்னார். நாமதான் வரலாறுல புலிகளாச்சே... அவரே எங்க வழிசல பார்த்து பாவப்பட்டு் என்ன குளம்னு சொன்னோன எங்களுக்கெல்லாம் ஒருமாதிரி போச்சு.

இது இருக்குற ஊரு திருவையாறு. ஐயாறப்பன் கோயிலுக்கு பின் சந்தில் இருக்கும் ஒரு பிள்ளையார் கோயில் வாசலில் இருக்கு. திருநாவுக்கரசர் இமயமலையை நோக்கி போன போது உடல் தளர்ந்து வழியில் விழுந்தார். அப்போ அந்தப் பக்கமா வந்த ஒரு பெரியவர் இவரப்பார்த்து பரிதாபப்பட்டு ‘நீங்க இமயமலைக்கெல்லாம் இந்த வயசுல போகமுடியாது. அதுக்கு பதிலா பக்கத்தில் இருந்த குளத்தில் முங்கி எழுந்திருங்க'னு சொன்ன உபாயத்தால் அருகிலிருந்த குளத்தில் அப்பர் குதிக்க, அடுத்த நொடி அங்கேயிருந்து நேரா திருவையாத்துல இந்தக்குளத்துல தான் எழுந்தார் அப்பர். அதோட முடிஞ்சா பரவால்லியே...

எழுந்த அப்பருக்கு உமையாளோடு சிவபெருமான் காட்சி கொடுத்த திருக்குளம் இதுதான்.

அப்பேர்ப்பட்ட புண்ணியத்தீர்த்தத்திற்கு என் கைங்கர்யமாக கல் எறிந்தது ... என்ன சொல்றது.. இதெல்லாம் சகஜமப்பானு நினச்சு விட்றவேண்டியதுதானில்ல?

எழுந்து பாடின பதிகம் ஒண்ணும், சம்பந்தமான வீடியோ ஓண்ணும்... என்சாய்..

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே நவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்!

- திருநாவுக்கரசர்


-----------------------
அடுத்து ஆட்டத்துக்கு யாரக்கூப்பிடறது?
1. ஸ்காட்லாந்து போய் காய்ச்சினவரு

2. செப்புப்பட்டயத்துல விளாசுறவரு

3. A Tiger in Africa? :))

32 Comments:

  1. சேதுக்கரசி said...

    தமிழ் வலைப்பூக்களில் பெருக்கெடுக்கும் தொடர் பதிவெல்லாம் படிச்சிட்டிருந்தா மனுசனுக்கு சாப்பிட, தூங்கக்கூட (பாத்ரூம் போகக்கூட) நேரமிருக்காதுங்கறது என் கருத்து. அதனால தொடர் பதிவுகளின் பக்கமெல்லாம் போறதில்ல பொதுவா. சும்மா உங்க பின்னூட்டக் கணக்கைத் துவங்கிவைக்கத்தான் வந்தேன்.


  2. rv said...

    சேதுக்கரசி,
    //பெருக்கெடுக்கும் தொடர் பதிவெல்லாம் படிச்சிட்டிருந்தா //
    :))))

    உண்மைதான்...

    இருந்தாலும் அப்பப்ப பாத்துக்கலாமே..

    புதுவருஷம் முதக் கணக்கு தொடங்கிருக்கீங்க.. மிக்க நன்னி!

    இனிமே எல்லாமே உங்க பேருக்கேத்தா மாதிரி ராஜ வரவேற்பு வரும்னு நினைக்கிறேன்...

    வரலேன்னா தனியாளா நின்னு ஒப்பேத்த வேண்டியது ஒங்க பொறுப்புங்கறதை சொல்லாம சொல்லிக்கிறேன். :P


  3. cheena (சீனா) said...

    வலைப்பூ முழுவதும் தொடர் வண்டிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து போய்க் கொண்டே இருக்கலாம். அதுவும் புகைப் படத் தொடர் - அதிகம் ஈடுபாடு இல்லாத காரணத்தால் ஒதுக்கி விடுவேன். அச்த்தப் போவது யாரு தேவகோட்டை இராமநாதன் னினைவு வந்ததால் இங்கு வந்தேன். உண்மையிலேயே அசந்து விட்டேன். படமும் அருமை. அதைப் பற்றிய பதிவும் அருமை. நன்றாக இருந்தது.
    வாழ்த்துக்கள்


  4. cheena (சீனா) said...

    கருத்துப் பெட்டியின் மேலிருக்கும் வார்த்தைகள் - பொறுப்பற்றவர்களைப் பற்றிய வார்த்தைகள் - தேவைதானா - நீக்குவதைப் பற்றிச் சிந்திக்கலாமே


  5. Geetha Sambasivam said...

    இவ்வளவு வருத்தப் படுவீங்கனு தெரிஞ்சா குறைந்த பட்சம் "மொக்கை"க்காவது கூப்பிட்டிருப்பேனே? நீங்க ரொம்ப "பிசி"யா இருப்பீங்கனு இல்லை நினைச்சேன்! :P போகுது, அடுத்த மொக்கைக்குக் குறிச்சு வச்சுக்கறேன்.

    பி.கு. முதல் படம் பார்த்தாலே மனம் அமைதி அடைகிறது.

    இரண்டாவது படம் அடுத்த முறை திருவையாறு போகும்போது தேடிப் போய்ப் பார்த்துடறேன். கேட்டப்போ யாருக்கும் சரியா சொல்லத் தெரியலை! :(


  6. மணியன் said...

    படங்களும் பாடலும் அருமை. அமைதியான காடு...இல்லையில்லை..பூங்கா மிகவும் பிடித்தது.


  7. Anonymous said...

    After seeing the first picture, planned to comment wow what a location. Then came the second one, reminding us we do have beautiful places in India too.

    You did a good job by blending both locations.

    Thanks
    Arasu


  8. rv said...

    சீனா,
    மிக்க நன்றி.

    அது அப்போது இருந்த கடுப்பில் எழுதியது. அதுக்கு முக்கிய காரணம் ஹாப்லாக் ஸ்பாம் செய்வது ஆட்கள் தான். பாட்கள் அல்ல என்பது என் கணிப்பு. அதனால்தான். இப்போ எடுத்துட்டேன்.


  9. rv said...

    சங்கத்தலைவியே,
    குளம் இருக்குற பிள்ளையார் கோயில் பேர் கரெக்டா கேட்டுச் சொல்றேன் சில நாட்களில்.

    தோராயமா சொன்னா.. மெயின் ரோடுல தேரடி தாண்டி நேரா போனா போலீஸ் ஸ்டேஷன் வருமே.. அதுல இடதுபக்கம் திரும்பினா ஏதோ அக்ரகார ரோடு வரும். அதுக்குள்ள இருக்கு இது.

    நன்னி.


  10. rv said...

    மணியன்,
    //காடு...இல்லையில்லை..பூங்கா மிகவும் பிடித்தது.//
    :))))
    நன்னி.


  11. rv said...

    அரசு,
    ஆமாம்.. நம்மூரின் அழகு ஒரு விதம். மற்ற ஊர்களில் ஒரு விதம்...

    மிக்க நன்றி.


  12. சேதுக்கரசி said...

    என்னது.. இத்தனை பின்னூட்டம் தேறிடுச்சேன்னு தான் பதிவைப் பார்த்தேன்... முதல் படமு சூப்பர்.. ரொம்ப அழகா இருக்கு. கோவில் குளம் படமும் நல்லா இருக்கு, இந்தக் குளத்தின் அருமை பெருமையை அறியத் தந்ததுக்கும் அருமையான தேவாரப்பாடலை அர்த்தத்துடன் கேட்கத்தந்தமைக்கும் "நன்னி" :-)


  13. Boston Bala said...

    முதல் படம் வரைந்த மாதிரி... எப்படிப்பா... இப்படி எல்லாம் எடுக்கறீர்!

    இரண்டாவது படம் ரம்மியம்


  14. மங்களூர் சிவா said...

    முதல் படம் ரொம்ப அருமை கண்னுக்கு குளிர்ச்சியா!!

    கொஞ்சம் பெரிசா போட்டிருக்கலாம்!!


  15. மங்களூர் சிவா said...

    //
    சேதுக்கரசி said...
    சும்மா உங்க பின்னூட்டக் கணக்கைத் துவங்கிவைக்கத்தான் வந்தேன்.
    //
    அவ்வ்வ்வ்வ்வ்
    அம்மினி எங்க பதிவுலயும் உங்க கைங்கர்யாத்தை காட்டறது!!!

    அதாவது பின்னூட்ட கணக்கை துவங்கி வைக்கிறது!!


  16. rv said...

    சேதுக்கரசி,
    போட்டோத் தொடருக்கு மீண்டு(ம்) வந்து வாழ்த்தியதற்கு நன்னி!

    உங்கள் வரவால நானும் (ஸ்டாட்)கவுண்டரும் மகிழ்ச்சியடைகிறோம்.


  17. rv said...

    பாபா,
    :)))))))))

    நன்னி.


  18. rv said...

    மங்களூர் சிவா,
    நன்னி...

    படத்து மேல க்ளிக்கினா புது டேப்பில பெரிசா வருமே?


  19. மங்களூர் சிவா said...

    //
    இராமநாதன் said...
    மங்களூர் சிவா,
    நன்னி...

    படத்து மேல க்ளிக்கினா புது டேப்பில பெரிசா வருமே?

    //
    ஆமாங்க கமெண்ட் போட்டதுக்கப்புறம் கண்டுபிடிச்சிட்டேன் டெஸ்க்டாப் பேக்ரவுண்டா போட்டிருக்கேன் ஜில்லுனு இருக்கு.


  20. கப்பி | Kappi said...

    படங்கள் டாப் டக்கர் :))


  21. சேதுக்கரசி said...

    //அவ்வ்வ்வ்வ்வ்
    அம்மினி எங்க பதிவுலயும் உங்க கைங்கர்யாத்தை காட்டறது!!!//

    ஹலோ மங்களூரார்... இப்பதான் வலைச்சரத்தில் உங்க பதிவைப் பார்த்துட்டு உங்க பதிவையும் கூகுள்ரீடரில் சேர்த்துட்டு உங்க பதிவெல்லாம் ஒரு நோட்டம் விட்டுட்டு இங்கே வந்தா... இப்படி எழுதியிருக்கீங்கன்னு இப்பதான் பார்த்தேன் :-) எனக்கு டெலிபதியில் நம்பிக்கை உண்டு. உங்களைக்கு?


  22. G.Ragavan said...

    படங்கள் சூப்பர். ரஷ்யாவும் சரி. இந்தியாவும் சரி.

    அது சரி... நல்ல தமிழைப் பாட்டாக் கேட்டா...ஏன் இப்பிடிப் பரவசமாகுது!!!


  23. cheena (சீனா) said...

    இராமனாதன், ஒரு ஆலோசனையாகக் கூறியதை உடனடியாக செயல் படுத்தியதற்கு மிக்க நன்றி.


  24. மங்களூர் சிவா said...

    //
    சேதுக்கரசி said...

    எனக்கு டெலிபதியில் நம்பிக்கை உண்டு. உங்களைக்கு?
    //
    எனக்கு நம்பிக்கை இருப்பது ஹோமியோபதி, அலோபதி அதுக்கப்புறம் பக்கத்துவீட்டு 'பாப்பா'வோட அப்பா சபாபதி இவர்களிடம் மட்டுமே
    :-))))))


  25. cheena (சீனா) said...

    சிவா, பக்கத்து வீட்டுப் பாப்பாவோட அப்பா சபாபதி மேல நம்பிக்கை இருக்கா - பேசிப் பாக்கலாமா - சரியா வருதான்னு


  26. rv said...

    கப்பி,
    நன்னி.


  27. rv said...

    ஜிரா,
    நன்னி..

    நம் மொழியில் பாடினால் பரவசம் தான்.. வீடியோ முடிஞ்சோன்ன வர்ற லிஸ்ட்ல இன்னொரு வீடியோ வரும்.. முடிஞ்ச பாருங்க. சங்கீதத்தில் மொழினு தலைப்புல.


  28. rv said...

    சீனா,
    அப்போ இருந்த கோபத்துல போட்டது மறந்தே போச்சு. கோவம் இறங்கினபின் நீங்க சுட்டிக்காட்டினப்புறம் இதுவும் பறந்துபோச்சு.. மேட்டர் அவ்ளோதான்.


  29. rv said...

    மங்களூரார், சேதுக்கரசி

    உங்க நெகோஷியேஷன்ஸ்லாம் வெற்றிகரமா முடிஞ்சுதா?

    இப்ப ரெண்டு பேரும் பைண்டர்ஸ் பீஸா இனிமே என்னோட பதிவுல மொய் வச்சுருங்க. அது போதும்.. சரியா?


  30. மங்களூர் சிவா said...

    //
    cheena (சீனா) said...
    சிவா, பக்கத்து வீட்டுப் பாப்பாவோட அப்பா சபாபதி மேல நம்பிக்கை இருக்கா - பேசிப் பாக்கலாமா - சரியா வருதான்னு

    //
    சீனா சார் அந்த பக்கத்து வீட்டு பாப்பாக்கு ரெண்டு வயசு சார்!!

    எப்பிடியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு
    அவ்வ்வ்வ்வ்


  31. சேதுக்கரசி said...

    மொய் தானே இராமநாதன்? வச்சிருவோம்... பின்ன உங்க பதிவுனால தானே மங்களூர் சிவாவோட பக்கத்து வீட்டுப் பாப்பாவப் பத்தித் தெரியவந்திருக்கு? :-))))


  32. பினாத்தல் சுரேஷ் said...

    டாக்டர்ரு.. அந்த ஏகாந்தமான காடு கண்ணுலேயே நிக்குது.. ஆனா நாம போனாலும் அரை மணிநேரத்துல கிளம்பிடுவோம் :-(


 

வார்ப்புரு | தமிழாக்கம்