200. current affairs பாட்டுக்கு பாட்டு!

இந்த பரபரப்பான நேரத்தில், பாடல்கள் எழுதி வெப்பத்தை தணிக்க பவுர்ணமி பாண்டியன் வராத சூழ்நிலையில், ஏற்கனவே வந்து பிரபலமான ரெண்டு பாட்ட போட்டு ஒப்பேத்தலாம்னு நினைச்சதன் பயனே இப்பதிவு! லிரிக்ஸெல்லாம் கிட்டத்தட்ட சரியாத்தான் இருக்குன்னு நினைக்கிறேன். படிக்கறவங்களும் தோணுற பாட்டா போட்டா, சர்வேசன் மாதிரி இங்க தனியா பாட்டுக்கு பாட்டு ஒண்ணே நடத்திடலாம். ஆரம்பத்திற்கு ரெண்டு பாட்டுலேர்ந்து எந்த அடிய வேணா எடுத்துப் பாடலாம்... ஓகே கால்ஸ் & கய்ஸ்! ஸ்டார்ட் தி மீசிக்!

ஒருவன் ஒருவன் முதலாளி (முத்து)
பாடியது: எஸ்.பி.பி
இசை: ஏ. ஆர். ரஹ்மான்

பல்லவி:
ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!
கணிப்பைப்போட்டவன் கோமாளி பாம்-ஐப்போட்டவன் அறிவாளீ

அநுபல்லவி:
தேர்தலை வெல்ல சேனல்கள் எதற்கு?
பூத்தை பறிக்க செல்போன் எதற்கு?
Sun ஆ Son ஆ போர்க்களம் எதற்கு?
ஆசைதுறந்தால் நீ மந்திரியெனக்கு!

சரணம் 1:
மகனின் மீது தலைவருக்கு ஆசை... பதவி மீது எல்லாருக்கும் ஆசை!
மகன் தான் எப்பவும் ஜெயிக்கிறது! இதை பேரனோ உணர மறுக்கிறது!
கையில் ஒரு சேனல் இருந்தால் கட்சிதான் அதற்கு எஜமானன்!
கழுத்துவரைக்கும் காசுஇருந்தாலும் நான் தான் உனக்கு எஜமானன்!
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிடு! கணிப்பை மாற்றிப் போட்டுவிடு!

சரணம் 2:
வானம் எனக்கு பூமியும் எனக்கு... வரம்புகள் மீறாட்டி வாய்ப்புண்டு உனக்கு!
டிவியும் உனக்கு காசும் உனக்கு, என் ரத்தத்தோடு சண்டைகள் எதற்கு?
ஒதுங்கச்சொல்லுது தலைமையடா! அடங்கி இருப்பது உன் கடமையடா!
சன்னில் மதுரைய பாக்கும்போது ஐயோ ஐயோ எரிகிறதே!
சங்கமப்பொண்ணு பார்க்கும்போது பதவி கேட்டு துளைக்கிறதே!
முத்து எங்கே போவாரு? அட செல்வியும் இனிமே பேசாது!
(or )
பொறுமை உனக்குப் போதாது அட வறுமை எனக்கு வாராது
(இந்த வரி மட்டும் க்ளியரா காதுல விழலை!)

பல்லவி:
ஒருவன் ஒருவன் முதலாளி! உலகில் மற்றவன் தொழிலாளி!
கணிப்பைப்போட்டவன் கோமாளி பாம்-ஐப்போட்டவன் அறிவாளீ
---------------------------
சீச்சீ சீச்சீ..(மஜா)
பாடியது: ஹரிணி, சங்கர் மகாதேவன்

இசை: வித்யாசாகர்

பல்லவி:
தயா: என்ன பழக்கமிது.. சின்ன பிள்ளைப் போல!
முக: பித்து பிடிக்கிறதே! நீ சர்வே போட்டதால!

அநுபல்லவி:
மு.க: வம்பு பண்ணுற வம்பு பண்ணுற! நீ இப்பவே ரொம்ப ரொம்ப வம்பு பண்ணுற!

தயா: டிச்சு பண்ணுற நீ டிச்சு பண்ணுற! சன்ன தாக்கி தேவையில்லாம தப்பு பண்ணுற!

முக: அட என்ன பண்ணுவ இப்ப என்ன பண்ணுவ? உன்ன என்னென்னமோ பண்ணப் போறேன்! என்ன பண்ணுவ!


சரணம் 1:
முக: என்னுடைய ஆசை ஸ்டாலின வைக்க நினைக்க! உன்னுடைய ஆச அத தட்டிவிட நினைக்க! நம்முடைய பாசம் இத்தோட முடிக்க!

தயா: நானோ அங்க சும்மா ஒரமா கிடக்க! உம்மகனோ வந்து வம்பு பண்ணி கெடுக்க! மொத்தத்துல மருதையில் பாம் பல வெடிக்க!

முக: உங்கண்ணன பாத்து கேட்டும் கெஞ்சியும் நான் சொல்ல!

தயா: அவன் வயசு.. கோளாறு.. அவன் சர்வே எடுத்து தொலைக்க..

முக: நீங்க மூக்க நுழைக்க! நான் ஒட்ட அறுக்க! அட மொத்தத்துல தூக்கம்கெட்டு கண்கள்சிவக்க...

பல்லவி:
சீச்சி சீச்சீ...


சரணம் 2:
முக: நள்ளிரவு நேரம் பிடிச்சு போட்ட சீன! திரும்ப திரும்ப போட்டு ஆட்சிக்கு வந்த என்ன! கிளம்பிவிட்ட நீயும் என்னுயிரை தொலைக்க!

தயா: சீனு போட்டு ஆட்சிகொடுத்த சன்ன விட்ட! பாம் போட்டு சீனு விட்ட சன்ன பிடிச்ச! எங்கண்ணன் வருவானே அத்தனையும் கெடுக்க!

முக: அட எதுவும் இனி நடக்கும்! தெரிஞ்சு அடங்கி நீ நடக்க!

தயா: உங்க பெத்தபாசத்தில் நான் சகல பதவியும் துறக்க!

முக: நீ உன்ன பின்னேற்ற! நான் கனிய முன்னேற்ற! இப்போதைக்கு மக்களாட்சி நல்லா நடக்க!

பல்லவி:
சீச்சி சீச்சி!

மு.க: வம்பு பண்ணுற வம்பு பண்ணுற! நீ இப்பவே ரொம்ப ரொம்ப வம்பு பண்ணுற!

தயா: டிச்சு பண்ணுற நீ டிச்சு பண்ணுற! சன்ன தூக்கிவச்சு தேவையில்லாம தப்பு பண்ணுற!

*************************************

பயமறியா தன்மானச் சிங்கம், பாம்-அறியா அஞ்சாநெஞ்சன் பெனாத்தலாருக்கு ஸ்பெஷல் நன்னி!

25 Comments:

  1. நாகை சிவா said...

    அடியே, இது அணுக்குண்டை தூக்கி அக்குள்ல சொருவுற மேட்டரு, நமக்கு இது ஆவாது. என்னய ஆள வுடுங்க


  2. Geetha Sambasivam said...

    நான் வரலை இந்த அழுகுணி ஆட்டத்துக்கு. "ஆப்பு" வக்கறீங்களோன்னு சந்தேகமா இருக்கு! :D


  3. rv said...

    புலியே பதுங்கினா எப்படிப்பா...

    அப்புறம் பாட்டுக்குபாட்டு விளையாட்டு இது.. எதிர்ப்பாட்டு பாடிட்டுத்தான் போகணும்...

    எடுத்துக்கொடுக்கவா?
    (குன்றத்திலே - தெய்வம், கே.வி.மகாதேவன்)

    போயஸிலே அம்மாவுக்குக் கொண்டாட்டம்!
    அங்கே தயாநிதி வந்தா பன்னிருக்கோ திண்டாட்டம்!


  4. ALIF AHAMED said...

    உன் குத்தமா என் குத்தமா
    யாரை நானும் குத்தம் சொல்ல...:)


  5. rv said...

    பெனாத்தலார் மெயிலில் அனுப்பியது...

    **************************
    (பச்சைகிளிகள் தோளோடு, இந்தியன், கே.ஜே.ஜேசுதாஸ்)

    பல்லவி:
    மஞ்சள் துண்டு தோளோடு, ஆட்சிப்பதவி கையோடு

    கூட்டுக்குக் கட்சி பஞ்சம் இல்லை
    எங்கள் பவருக்கு டெல்லிவரை எல்லை


    அனுபல்லவி:
    சின்னஞ்சிறு சர்வே போட்டு கூட்டைக் கலைச்சான்

    அட வம்புதும்பு செய்யாதவன் பாமைத் தூக்கி எறிஞ்சான்

    மாமன்மச்சான் கூட்டத்துக்கு பட்டா எதுக்கு?

    குடும்பப் பாசம் மட்டும் போதும்பெண்ணே! டிவி போனு என்னத்துக்கு?

    சரணம்:
    இங்கே விழா ஆரம்பம், அங்கே வன்முறை ஆரம்பம், நான் இருக்கும்போதே குடுமி பிடிச்சி சண்டை ஆரம்பம்!

    மதுரை வெப்பம் ஆரம்பம், சங்கம் சத்தம் ஆரம்பம், அட சூப்பர் மந்திரி உனக்கோ ஏழரை ஆரம்பம்!

    சர்வே நூறு ஆரம்பம், டாக்டர் வெறுப்பு ஆரம்பம்..

    மகனுக்கு தோலுரிப்பு, சன் டிவியிலோ ஆரம்பம் ஆரம்பம்!


  6. rv said...

    கீதா,
    அழுகுணி ஆட்டமெல்லாம் இல்லீங்கோ.. சும்மா டைம்பாஸு!

    ஆப்புசங்கத்துக்கே தலைவிக்கு ஆப்பு வைக்க முடியுமா???

    ஜோதியில் ஐக்கியமாகவும்!


  7. Anonymous said...

    அடுத்த வீட்டில் தீப்பிடிக்க நினைப்பவன் மனிதனா

    அந்த நேரம் ஓடி வந்து அனைப்பவன் மனிதனா...



    mr.a


  8. ALIF AHAMED said...

    ஜெ : ஆனந்தம் வந்ததடா அழகிரி உன்னால...


  9. நாகை சிவா said...

    மின்னலு

    உன்னை சொல்லி குற்றமில்லை
    என்னை சொல்லி குற்றமில்லை

    காலம் செய்த குற்றமடி, கடவுள் செய்த குற்றமடி....


  10. rv said...

    மின்னுதுமின்னல்,
    டைமிங்கான பாட்டு.. பல்லவி மட்டும் போதுமா???


  11. rv said...

    புலி (சூடான் புலியல்ல),
    மனிதன் படத்து பாட்டு இல்ல இது?

    இதுக்கும் இப்போதைய மேட்டருக்கும் லின்க் என்னன்னு செப்புங்கோ சாரே!


  12. rv said...

    மி.மி,
    பொருத்தமான பாட்டுதான்...

    ஊட்டியில அம்மாவுக்கு கொண்டாட்டந்தேன்!!


  13. rv said...

    பெனாத்தலார்,
    பச்சைக்கிளி தோளோடு கரெக்டா சந்தத்தோடு வந்திருச்சு.. கலக்கல்...

    மாநகரத் தாய்கள் துபாய்க்கு ப்ளைட் டிக்கட் போட்டிருப்பதாக தினமூடி பத்திரிகை செய்திகள் சொல்லுது... :))))


  14. Anonymous said...

    கணிப்பைக் கொண்டுவா-பேப்பரில் போட்டுவை..பெட்ரோல் கொண்டுவா பாமுக்குள் போட்டுவை -- இன்று முதல் எழவு. மக்கள் நிம்மதிக்கு முடிவு.

    நிலவை கொண்டுவா - வாலி


  15. சின்னவன் said...

    அண்ணா
    நீங்க எங்கேயே போயிட்டீங்க ! இது கவிதை. நானும் எழுதறேனே ! அதெல்லாம் ஒரே குப்பை !

    எனக்கு கட்சியும் வேண்டாம் ஒரு கொடியும் வேண்டாம்
    டாங்கு டக்கரு டக்க்ரு டோய் !


  16. rv said...

    வாலியின் தம்பி,
    கலக்குறீங்க போங்க..

    புல்லா டெவலப் பண்ணியே யாரும் பாட்டு போட மாட்டேங்குறீங்க??? :((((


  17. ALIF AHAMED said...

    //
    புல்லா டெவலப் பண்ணியே யாரும் பாட்டு போட மாட்டேங்குறீங்க??? :((((
    ///


    வலைப்பூவின் தலைப்பை பார்க்கவும்..:)


  18. Santhosh said...

    என்னடா மருத்துவரு பாட்டுக்கு பாட்டுக்கு எல்லாம் நடத்துறாறேன்னு நினைச்சேன். :))


  19. துளசி கோபால் said...

    மருத்துவரும் மக்கள்ஸ்ம் ஜாலியா இருக்கீங்கன்னு 'தெரியுது':-))))


    உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,
    அவுங்களைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலம(டா)டி
    கடவுள்............

    அடுத்து வரப்போகும் 200 வது பதிவுக்கு இப்பவே அட்வான்ஸ் வாழ்த்து(க்)கள்.


  20. ENNAR said...

    அன்று சொன்னார் இந்திராகாந்தியையும் சஞ்செய் காந்தியையும்,"பசுவும் கன்றும்" என்று இன்று எப்படிச் சொல்வது மகன் மகள் பெயரன் என்றா? அன்று சொன்னார்
    "காங்கிரஸ் கட்சி என்ன நேரு வீட்டு பரம்பரைச் சொத்தா?" என்று இன்று


  21. rv said...

    மின்னுது மின்னல்,
    //வலைப்பூவின் தலைப்பை பார்க்கவும்..:)//

    இது என்னய்யா உள்குத்து????

    தெரியலவா.. இல்ல கீழ இருக்கிற வேலையற்ற வீணர்களின்...???


  22. rv said...

    சந்தோஷ்,
    நான் துணியவே சரியா அலசத்தெரியாத ஆளு.. இதுல அரசியல அலச முடியுமா.. அதான் மாஸ் மீடியா துணைய நாடிட்டேன்...


  23. rv said...

    அக்கா,
    //மருத்துவரும் மக்கள்ஸ்ம் ஜாலியா இருக்கீங்கன்னு 'தெரியுது':-))))//

    தெரியுதுங்கறது ஏதோ கோட்ஸ் குள்ள போட்டிருக்கீங்களே... அத நினச்சாத்தான் திகிலா கீது...

    வாழ்த்துகளுக்கு ரொம்ப நன்றி அக்கா...

    இருநூறு எப்பவும் முடிஞ்சாச்சு.. ஏகப்பட்ட அச்சுபிச்சு போஸ்ட போட்டுட்டு திரும்ப ட்ராப்டாக்கி வச்சிருக்கேன்..... :))))


  24. rv said...

    யாரும் பங்கெடுத்துக்க ஆர்வம் காட்டுறா மாதிரி தெரியல... :(

    அதுனால பெனாத்தலார் பெருந்தன்மையுடன் தயாநிதி பாடுறா மாதிரி அனுப்பிவச்ச பாட்டு...

    சிங்க நடை போட்டு (படையப்பா)
    எஸ்.பி.பி, ஏ.ஆர். ரஹ்மான்

    -----------------
    பல்லவி:
    சிங்கநடை போட்டு மினிஸ்டரா ஆகு..
    மினிஸ்டரா ஆனா அடிவாரத்தைப் பேரு

    அனுபல்லவி:
    உன் பேரு நிதியப்பா உனக்குண்டு நிதியப்பா..
    உனக்குள்ள ஆசையெல்லாம் கஜானா நிதியப்பா!
    நெஞ்சில் ஒரு சனியப்பா! சர்வே போட்டான் சன் அப்பா! கம்பெடுத்துத் துரத்தறாரு தலவரு கனி-அப்பா

    சரணம்:
    பத்து சேனல் அள்ளித்தரும் சொத்துசுகம் வேணும்..
    பட்டங்களை வாங்கித்தரும் பதவிகள் வேணும்..
    மாலைகள் வரவேணும், மகன்களை முந்தவேணும், தமிழ்த்தாய்நாடு கூட டெல்லி வேணுமே..

    உன் ஒரு ரூபாய்த் திட்டத்துக்கு 70% அள்ளித்தந்தது சன் அல்லவா,
    உன் உடல்பொருள் ஆவியை சன்னுக்கும் அண்ணனுக்கும் தருவது முறையல்லவா?

    ---------------------


  25. rv said...

    சின்னவன்,
    பவுர்ணமி பாண்டியன களத்துல இறக்குவீங்கன்னு ஆசையோட காத்திருந்தா இப்படி ஜகா வாங்குறீங்களே சின்னவரே...

    கட்சியும் கொடியும் வேணாம்னு பாடினவருக்கும் இதுக்கு என்ன சம்பந்தம்? தூக்கினாலும் கட்சிக்காரன் தான்னு இல்ல பாடணும்???


 

வார்ப்புரு | தமிழாக்கம்