155. 42.18 கிலோ மீட்டர, 375510 க்ளிக்ஸ்

என்னடா இது புதுசா ஏதோ விஜயகாந்த் மாதிரி ஸ்டேடிஸ்டிக்ஸ்லாம் தரேன்னு பயப்படாதீங்க. யாரும் ஓடுனதோ தாண்டுனதோ ஓட்டினதோ இல்ல இது. 42.18 கி.மீட்டர் கறது என் கணினியோட எலிக்குட்டி அது ஓடற தக்கணூண்டு mousepad இடத்துக்குள்ள ஓடினது. 375510 என்பது எலிக்குட்டியோட பட்டன்களை நான் அமுக்கின அளவு. :)) அதுல இடது பட்டன் மட்டும் 361 ஆயிரத்து சொச்சம்.

மவுஸ்ட்ராக்ஸ்னு சொல்லிட்டு சும்மா ஒரு குட்டி ப்ரோக்ராம் சினெட்லேந்து டவுன்லோட் பண்ணேன். அதுல வந்த ஸ்டாடிஸ்டிக்ஸ் தான் இது. எனக்கே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்துச்சு. இந்த அளவு க்ளிக்ஸும், தூரமும் அடைய தேவைப்பட்ட காலம் 32 நாட்கள். ஒரு மாசம்னாலும் 42 கி.மீட்டர் டூ டூ மச்சாட்டம் இருக்குல்ல? எனக்கே இந்த கதின்னா, கணினிப்பொட்டியே கதின்னு கிடக்கும் மக்கள்ஸ் எவ்ளோ தூரம் எலிக்குட்டிய பாடா படுத்துவாங்களோ நினச்சு, எலிக்குட்டி பாதுகாப்புக் கழகம் ஆரமிக்கலாம்னு எண்ணம். யாராவது சேந்துக்கறீங்களாப்பா?

cnet.com போய் MouseTracksனு தேடுங்க இல்லேன்னா www.x21B.com

18 Comments:

  1. பெருசு said...

    என்னடா எலி சும்மா ஓடுதேன்னு நெனச்சேன்.

    இதுக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்குதாய்யா


  2. மணியன் said...

    42 கி,மீ மராத்தான் தான் ஓடி மூன்று இலட்சம் பேர் போட்டோ க்ளிக்ஸ் என்று நினைத்தேன். எலிக்குட்டியை விடுங்கள், நம் உள்ளங்கையும் மணிக்கட்டும் என்னாவது, ஏதோ டன்னல் கின்னல் என்பார்களே அது என்ன வியாதிங்க ? அதையும் கூட போட்டிருக்கலாமே.


  3. Unknown said...

    அப்படியே சரியா வேலை செய்யாதப்ப எத்தன தடவ கணினித் தலைலக் தட்டுறோம்னு கண்டுபிடிக்க எதாவது ப்ரோக்ராம் இருந்தா சொல்லுங்க!!! :))

    அன்புடன்,
    அருள்.


  4. வெளிகண்ட நாதர் said...

    //எலிக்குட்டி பாதுகாப்புக் கழகம் ஆரமிக்கலாம்னு எண்ணம். யாராவது சேந்துக்கறீங்களாப்பா?// எப்பலருந்து தமாசு ராமநாதன் ஆயிட்டீங்க!


  5. ஏஜண்ட் NJ said...

    வித்யாசமான முயற்சி அடங்கிய சுய பரிசோதனைப் பதிவு!

    வாழ்த்துக்கள்!!!


  6. குமரன் (Kumaran) said...

    உள்ளேன் ஐயா.


  7. இலவசக்கொத்தனார் said...

    ஏம்பா இராமநாதா,
    அதுல தமிழ்மணத்தில எவ்வளவு தூரம், அலுவலகப் பணிகளில் எவ்வளவு தூரம்ன்னு தெரியுமா? அப்படியெல்லாம் தெரிஞ்சா நாங்களெல்லாம் அப்பீட்டு.


  8. நன்மனம் said...

    புது தகவல் பகிர்ந்ததுக்கு நன்றி.

    //அதுல தமிழ்மணத்தில எவ்வளவு தூரம், அலுவலகப் பணிகளில் எவ்வளவு தூரம்ன்னு தெரியுமா? அப்படியெல்லாம் தெரிஞ்சா நாங்களெல்லாம் அப்பீட்டு.//

    கொத்ஸ், ஆபீஸ்ல கண்டுபிடிக்கறதுக்கு முன்ன உஷாராகுரீங்க போல:-)

    இதுல பின்னூட்டத்துக்கு எவ்வளவு தூரம்னு ஒரு ஸ்பெஷல் கேடகரி வேற தனியா வேணுமே உங்களுக்கு:-)

    (சிரிப்பான் போட்டாச்சு)


  9. Boston Bala said...

    ஓட ஓட விரட்டறீங்க?!


  10. rv said...

    பெரு(சு),
    எலி என்னிக்காச்சும் சும்மா ஓடுமா? எலிக்குட்டியாலதான் எவ்வளவு பிரச்சனை பாருங்க. :))


  11. rv said...

    மணியன்,
    நீங்க சொல்றது carpal tunnel syndrome. கம்பூட்டர்ல தட்டுறதுனால அது வரும்னு நிறைய மக்கள் நினச்சுகிட்டிருக்காங்க. ஆனா, data entryல (ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் அளவுக்கு கணினி தட்டுற கடுமையான வேலை வரைக்கும்) இருக்கற ஆளுகளுக்கும் இதுக்கும் நேரடி சம்பந்தமில்லைனு தான் ஆராய்ச்சிகள் சொல்லுது. வேற சில டிஸார்டர்ஸ் வரலாம். அதப்பத்தி இன்னொரு நாள் நேரம் கிடைக்கும் போது தனிப்பதிவாவே போடறேன்.


  12. rv said...

    அருட்பெருங்கோ,
    கணினித்தலைல தட்டுவீங்களா? இல்ல உங்க தலையில தட்டிக்குவீங்களா? விளக்கமா சொன்னீங்கன்னா தேட வசதியாருக்கும். :))


  13. rv said...

    வெளிகண்டநாதர்,
    எலிக்குட்டி பாதுகாப்பு கழகம் அமைப்பதை நகைச்சுவை என்று எடுத்துக்கொண்ட உங்க பூடகவன்முறைய என்ன சொல்றது?? :))


  14. rv said...

    ஏஜெண்டு,
    வாய்யா.. வானிலை ஆராய்ச்சி கவித நீர் போடுவீரு? நான் எலிக்குட்டி ஆராய்ச்சி செய்யறேன்.

    என்ன நாரதர் புல் பார்முல இறங்கிட்டா மாதிரி இருக்கு? சீக்கிரமே ஏதாவது தயிர்சாதமும் பட்டர் சிக்கனும் மேட்டர எடுத்துவிடும்... :))


  15. rv said...

    குமரன்,
    உங்களோட இதே வேலையாப் போச்சு. ப்ரேக் வேலை செய்யாத வண்டி மாதிரி நிக்காம வெறும்ன பிரஸண்ட் கத்திட்டு ஓடறீங்களே.. :))


  16. rv said...

    கொத்ஸு,
    நான் இருக்கறது பூரா தமிழ்மணத்துலேயே கரதால எனக்கு வித்தியாசமே தெரியலயே. டவுன்லோட் பண்ணி உங்க அமௌண்டையும் கொஞ்சம் எடுத்துப் போடறது. பதிவுக்கு பதிவு முன்னூறு வாங்கறதுக்கு அவ்வளவு சல்லிசுன்னு நினச்சுகிட்டிருக்கற மக்களுக்கும் நீர் படுற கஷ்டம் புரியுமில்ல.. :)


  17. rv said...

    நன்மனம்,
    அதான் நானும் சொல்றேன். பாவம் கொத்ஸு, எவ்வளவு கஷ்டப்பட்டு எலிக்குட்டிய அடிச்சு ஓட்டறாருன்னு நாமும் தெரிஞ்சுக்க வேணாம்?


  18. rv said...

    பாஸ்டன் பாலானாரே,
    என்னக் கண்டாலே பாவம் எலிக்குட்டி இப்படி ஓடுது. இதுல நானும் எலிக்குட்டிய புடிச்சு ஒழுங்கா ஓடுதானுல்லாம் சோதனை போட்டா இன்னும் எவ்வளபு பயங்கரமா இருக்கும் பாருங்க.

    ஆனாலும் ஒருத்தரும் எலிக்குட்டிங்க பாதுகாப்பு கழகத்துல சேர முன்வரமாட்டேங்கறாங்களே. ஸ்பீஷியல் டிஸ்க்ரிமினேஷனா இருக்குப்பா. :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்