கொம்பா முளைச்சிருக்கு? ver 2.0!

இது சுஹாசினி பற்றிய பதிவல்ல. பின்னூட்டங்களில் சிலரின் கருத்துகளை (குறிப்பாய் ஷ்ரேயா) பார்த்தபின் முழுக்க ஆராயாமல் இந்த கொம்பா முளைச்சிருக்கு பதிவை இட்டிருப்பேனோ என்று சந்தேகம் வந்ததால் மீள்பதிவு. பதிவில் மாற்றம் எதுவும் செய்யவில்லை. பின்னூட்ட கருத்துகளை பற்றி இன்னும் சிலரின் கருத்துகளை அறியும் ஆவலால் மீள்பதிவு செய்கிறேன். நன்றி.

---------

ஆஸ்திரேலிய-சிங்கப்பூர் பிரச்சனை. ஆஸ்திரேலிய குடிமகனான (வியட்நாம் அகதி வழி) ங்யென் வான் டூவான் இன்று காலை தூக்கிலிடப்பட்டார் என்று எல்லாருக்கும் தெரிந்திருக்கும். பல வருடங்களாக நடந்து வரும் இந்த வழக்கில், கடந்த மூன்று வாரங்களில் நடந்தது சரியான காமெடி.

இந்தத்தண்டனை ரத்து செய்யப்பட வேண்டும், இவரை ஆஸ்திரேலியாவிற்கு extradite செய்யவேண்டும், சிங்கப்பூரின் காட்டுமிராண்டித்தனம், சிங்கப்பூரை புறக்கணி, sanctions போடு என்றெல்லாம் கடந்த வாரங்களாக ஒலித்துக்கொண்டிருந்த ஆஸியின் பிரதமரின் உட்பட குரல்களை சற்றும் சிங்கப்பூர் சட்டை செய்யாததால், நேற்றைக்கு புது காமெடி நடந்திருக்கிறது. அதாவது இவர் இறக்கும் நேரத்தில் இவரின் ஆன்மா சாந்தியடைய ஒரு நிமிட நாடுதோறும் அமைதி காக்கப்போகிறார்களாம். இது இன்று நடந்ததா இல்லையா என்று இன்னும் செய்திகள் கிடைக்கவில்லை. ஆஸியில் உள்ளவர்கள் தான் சொல்லவேண்டும்.

சரி, அப்படியென்ன இவர் சத்தியாகிரக தியாகம் செய்து இந்தத்தண்டனை பெற்றார் என்று இன்றுதான் விழித்துக்கொண்டோருக்காக: ஆஸிக்கு வரும் வழியில் ட்ரான்ஸிட்டில் சிங்கப்பூர் விமானநிலையத்தில் போதை மருந்துகள் வைத்திருந்தற்காக பிடிபட்டார். இருபத்தி ஆறாயிரம் ஊசிகளுக்கு போதுமான அளவு போதை மருந்துகள் இருந்தது தெரியவந்தது. சிங்கப்பூரில் போதைபொருட்களை கடத்துவோருக்கு தூக்குதண்டனை என்பது தெரிந்தே தான் இந்த புண்ணியாத்மா செய்துள்ளார். அப்படி இருக்க என்ன கரிசனம்? பாலி பாம்பர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்க வலியுறுத்தியது இதே ஜான் ஹோவர்ட் அரசுதானே? இப்போதுமட்டும் தூக்குத்தண்டனை கசக்கிறது.

ஆஸ்திரேலியாவின் தன் குடிமகன்களை வெளிநாடுகள் தண்டிக்கவே கூடாது, ஆனால் தங்கள் நாட்டில் வேண்டியதை செய்துகொள்வோம் என்ற பாலிஸி நெடுநாளாகவே நாற்றமடிக்கிறது. இந்தோனேஷியாவில் ஆஸி முஸ்லிம் மாடல், அதற்கு முன்னர் இன்னொரு போதை கடத்திய பெண் என்று எல்லோரும் என்னவோ நாட்டுக்காக உயிரைக்கொடுத்தவர் ரேஞ்சுக்கு ஏற்றிவிட்டு பொறுப்பில்லாமல் ஆஸி மீடியாவும், அரசும் அலட்டிக்கொள்கின்றன.

தூக்குத்தண்டனைக்கு நான் ஆதரவாளனல்ல. அதற்கு பதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் உள்ளதைப் போல ஒரு 200 ஆண்டுகளுக்கு உள்ளே போட்டுவிடுவது இல்லை இன்னும் கொடுமையான குற்றங்களுக்கு இஸ்ரேலில் உள்ளதைப் போல solitary confinement போன்றவை பயன்படுத்தலாம். இதெல்லாம் வாதத்திற்கு ஒத்துவந்தாலும், சிங்கப்பூர் என்னும் sovereign நாட்டின் சட்டவிதிகளை விமர்சிக்க ஆஸ்திரேலியாவிற்கு என்ன உரிமை இருக்கிறது? ஏன், ஆயிரமாவது தூக்குதண்டனை நிறைவேற்றப்போகும் அமெரிக்காவை கண்டிக்கவேண்டியதுதானே? செய்யாது. இதில் பல ஆஸி குரல்கள் வேடிக்கையானவை. சிங்கப்பூர் காட்டுமிராண்டி ஊராம். ஆஸியில் இவர்கள் எப்படி குடியேறினார்கள் என்று அதற்குள்ளா மறந்துபோய்விட்டது. அடுத்த ஊரில் உள்ள தண்டனையை தெரிந்தே அந்த ஊரில் தவறு செய்தபின், ஆஸிக்காரனை நீ எப்படி தண்டிக்கலாம் என்ற வெட்டிப்பேச்சு எதற்கு?

இதில் ஒருபுறம், இதுவே வெள்ளை ஆஸியாயிருந்தால், அவரை இந்த அரசு எப்படியாவது மீட்டிருக்கும் என்று சந்தர்ப்பவாத குரல்வேறு.

----
ஆனால் இந்த குழப்பத்தில் ஒரு ஆறுதலான விஷயம். நேர்மையான நீதிபதிகளுக்கு உதாரணமாய் ஒருவர்.

அண்ணனின் கடன் பிரச்சனையே தீர்க்கவே வான் டுவான் போதைப்பொருள் கடத்தி மாட்டி தூக்குத்தண்டனையும் பெற்றாகிவிட்டார். ஆனால், அண்ணனின் மேலுள்ள 1998 பழைய வழக்கு ஒன்றை இன்று தள்ளுபடி செய்திருக்கிறார் நீதிபதி. படிக்க வேண்டிய சுட்டிஇது



The Age

IHT

Advertiser News

--
'மழை' ஷ்ரேயாவின் பதிவு

44 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    இராமநாதன். எனக்கு இந்த செய்தியைப் பற்றி ரொம்ப தெரியாது. நீங்க எழுதியுள்ளதை பார்த்து ஒரு + குத்திவிட்டேன்.


  2. ரங்கா - Ranga said...

    இராமனாதன்,
    உங்கள் கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். இது போன்ற ஒரு செய்தியை ஸ்ரீகாந்த் மீனாட்சியும் எழுதியிருக்கிறார். இதைவிடக் கோமாளித்தனமான விஷயம் அமெரிக்க நீதிமன்றம் 'மற்ற நாடுகளில் உள்ளவர்களை, அவர்களுக்கெதிரான வழக்கு அமெரிக்காவில் இருந்தால், கடத்திக் கொண்டு வருவது நியாயம்தான்' என்று தீர்ப்பெழுதியிருப்பதுதான்!

    ரங்கா.


  3. ரங்கா - Ranga said...

    ஸ்ரீகாந்த் மீனாட்சியின் செய்தி இங்கே.


  4. சிங். செயகுமார். said...

    சிங்கபூர் எம் ஆர் டி ஸ்டேஷனில சாதாரனம மத்தியான சாப்பாடு பொட்டலத்த தவற விட்டுட்டு போய்ட்டாரு ஒரு சீனர் .அத தேடி கண்டு பிடிச்சி அதுக்கு என்ன தன்டனை தெரியுமா? 100000 வெள்ளி அபராதம், 10வருஷம் ஜெயில்! ஒரு மாதத்திலேயே தீர்ப்பு சொல்லிட்டாங்க!
    அப்போ ஹெராயினுக்கு எத மாதிரி தண்டனை இருக்கும்!


  5. ஈழநாதன்(Eelanathan) said...

    ஒரு தகவலுக்காக மட்டும்
    இந்த இளைஞர் போதைப்பொருள் கடத்தியது சிங்கப்பூருக்குள் அல்ல கம்போடியாவிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு போதைப்பொருள்(400 கிராம்) கடத்தியபோது இடைத்தங்கலாக சிங்கப்பூர் விமான நிலையம் வந்த போது பிடிபட்டார்


  6. dvetrivel said...

    ஆஸ்திரேலியாவை ஒருபுறம் தள்ளிவிட்டு பார்த்தால், தூக்கு தண்டனை என்பதே எந்த நாட்டிலும் இருக்கக் கூடாது என்ற கருத்துடையவன் நான். இறக்கும் வரை சிறையில் இடலாமே?


  7. டிபிஆர்.ஜோசப் said...

    ராமனாதன், இத பத்தி ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு செய்தி வந்ததே. அதாவது அவருடைய மரண தண்டனையை நிறைவேத்துறதுக்கு முன் குற்றவாளி தன் தாயையும் தன் சகோதரனையும் தொடவேண்டும் என்ற அவருடைய இறுதி ஆசையை நிறைவேற்றவேண்டுமென்று ஆசி பிரதமரே சிங்கை அதிபரை கேட்டுக்கொண்டாராம். அதாவது சிறையில் பார்வையாளர்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இடையில் கண்ணாடி தடுப்பு இருக்குமாம். ஆசி பிரதமரின் தலையீட்ட்டால் அதை விலக்கிவிட்டு இவரை தன் தாயையும் சகோதரனையும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முன் தொடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டதாம். நானும் செய்தியை முழுவதும் படிக்காமல் ஒரு நிமிடம் சிங்கையின் மேல் கோபப்பட்டேன். அப்புறம்தான் தெரிந்தது அவன் ஒரு போதை பொருள் கடத்தல்வாதியென்று. சீ என்றாகிவிட்டது. ஆசி பிரதமரின் Sense of Priorityல் என்னவோ கோளாறு.


  8. அன்பு said...

    இப்போதான் உங்க பதிவைப்பார்த்தேன் நன்றி. ஷ்ரேயா-வும் இந்த விடயம் ட்தொடர்பாக எழுதியிருக்கிறார்...
    நன்றி..


  9. துளசி கோபால் said...

    கடுமையான தண்டனை இருக்கறது தெரிஞ்சும் செய்யற இவுங்களுடைய முரட்டு தைரியத்துக்கு என்ன காரணம்?

    போனவன் போயாச்சு. அதை நினைச்சு அந்தக் குடும்பம் இனியும் வாழணுமே.

    ஆமாம். என்ன ரொம்ப நாள் பதிவு ஒண்ணும் போடலை? பிஸியோ?


  10. வசந்தன்(Vasanthan) said...

    தொலைக்காட்சிகளில், தேவாலய ஆராதனைகள், மெழுகுவர்த்தி கொளுத்தி அஞ்சலி என்று காட்சிகள் காட்டினார்கள். எவ்வளவுதூரம் மக்களனைவராலும் கடைப்பிடிக்கப்பட்டதென்பது கேள்விக்குறி. ஏனெனில் மெல்பேர்ண் வழமைபோலவே அந்த நேரத்தில் இருந்தது.

    இந்தோனேசியாவில் மொடல் அழகியின் விடுதலையும் பெரியதொரு வெற்றியாகக் காண்பிக்கப்பட்டது.


  11. rv said...

    குமரன்,
    பதிவு செய்து கிடப்பதே என் பலன்னு இருக்கீங்க. குத்துக்கு நன்றி. திருப்பி விட்டத சீரியஸா எடுத்துக்காதீங்க. :)

    ரங்கா,
    // 'மற்ற நாடுகளில் உள்ளவர்களை, அவர்களுக்கெதிரான வழக்கு அமெரிக்காவில் இருந்தால், கடத்திக் கொண்டு வருவது நியாயம்தான்' //
    இது என்ன கூத்து? எனக்கு தெரியலையே.. ஸ்ரீகாந்தின் சுட்டிக்கு நன்றி.


  12. rv said...

    சிங்.செயகுமார்,
    // 100000 வெள்ளி அபராதம், 10வருஷம் ஜெயில்! //
    கொஞ்சம் டூ மச்சாத்தான் போறாங்களோ? :) இவ்வளவு சுத்தமா, பாதுகாப்பா எல்லாம் இப்படி மிரட்டி உருட்டிதான் இருக்கோ?

    ஈழநாதன்,
    தகவலுக்கு நன்றி. ட்ரான்ஸிட்டில் மாட்டினாலும், சிங்கப்பூருக்கு அவர் கொண்டு வந்த போதைபொருட்களால் பாதிப்பு இல்லையென்றும் சில கருத்துகளை பார்த்தேன். ஆனால் எனக்கு அதில் உடன்பாடில்லை.


  13. rv said...

    ஆல்தோட்டபூபதி,
    உங்கள் நிலையே தான் என்னுதும். மேலும் தண்டனை என்பது திருத்துவதற்காகவும் இருக்கவேண்டும் என்ற கொஞ்சம் ரோமாண்டிக் பார்வையும் உண்டு. :)

    ஜோசஃப் சார்,
    //ஆசி பிரதமரின் Sense of Priorityல் என்னவோ கோளாறு.
    //
    இதில் மட்டுமில்லை. பல சமயங்களிலும் ஹோவர்டுக்கு இருக்கிறது. :)


  14. rv said...

    அன்பு,
    மழையின் பதிவை நேற்று காலையிலேயே பார்த்துவிட்டேன். அதற்கு எழுதுவதாக இருந்த பின்னூட்டம் ரொம்ப நீளமாகிப் போனதால் தனிப்பதிவு. மழையை குறிப்பிட மறந்துவிட்டேன்..

    நன்றி

    துளசியக்கா,
    //கடுமையான தண்டனை இருக்கறது தெரிஞ்சும் செய்யற இவுங்களுடைய முரட்டு தைரியத்துக்கு என்ன காரணம்?//
    வறுமைதான். என்ன இருந்து என்ன.. நீங்க சொல்ற மாதிரி குடும்பம் தான் பாவம்.


  15. rv said...

    வசந்தன்,
    //இந்தோனேசியாவில் மொடல் அழகியின் விடுதலையும் பெரியதொரு வெற்றியாகக் காண்பிக்கப்பட்டது.//
    அதுவும் ஒரு தமாஷ். கோர்டில் எப்டி இருந்த அக்கா, வெளிய வந்ததும் எப்டி ஆயிட்டாங்க இல்ல? :))

    ஆஸியில் நிலவரம் என்னவென்று அறியத்தந்ததற்கு நன்றி. மீடியாவிற்கு தான் அவல் வழக்கம்போல. slow news week போல. அதான் புகுந்து விளையாடிவிட்டார்கள்.


  16. தாணு said...

    சுகாசினிக்கு கொம்பு முளைத்தது பற்றிய நக்கல் பதிவோன்னு நேத்து படிக்கலை


  17. ரங்கா - Ranga said...

    இராமநாதன்,
    பதிலாக ஒரு
    பதிவே
    போட்டாச்சு!
    http://pranganathan.blogspot.com/2005/12/blog-post_03.html


  18. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    நண்பனின் பின்னூட்டத்திற்கு என் பதில்:(முழுவதும் இங்கே.)

    // //அதே போல தவறுகள் செய்தாலும் தங்களைத் தப்புவிக்க தங்கள் நாடு உதவும் என்ற தவறான எண்ணமும் அவர்களுக்கு இருக்கிறது.//

    அதே. அதுதான் இன்னொரு நாட்டுக்குப் போய் அந்நாட்டுச் சட்டதிட்டங்களை abuse பண்ணலாமென எண்ண வைக்கிறது. எந்த நாடென்றாலும் தனது இறைமையைப் பாதுகாக்க, ஒழுங்கை நிலைநட்டத்தான் சட்டம் வைத்திருக்கிறது என்பது பற்றிப் பலரும் சிந்திப்பதில்லை. இங்கே பரவலான கருத்தும் அப்படித்தானிருக்கிறது. இந்த எண்ணந்தானே சிங்கப்பூருடனான வர்த்தகத் தொடர்புகளைத் துண்டிக்கச் சொல்லிக் கேட்கத் தூண்டியது?...

    வான் ஙுவெனும் சரி, ஷப்பெல் கோர்பியும் சரி, மிஷெல் லெஸ்லியும் சரி.. "அவுஸ்திரேலியர்கள்" என்றுதான் பொது மக்களால் பார்க்கப்பட்டார்கள்; அவர்கள் செய்தது பின்தள்ளப்பட்டது. ஒரு அவுஸ்திரேலியரை எப்படி இன்னொரு நாடு தண்டிக்கலாமென்பதே அவர்கள் சிந்தனை. ஒரு அவுஸ்திரேலியர் போய் எப்படி இன்னொரு நாட்டுச் சட்டத்துக்குப் புறம்பாக செயற்படலாம், அந்நாட்டுச் சட்டத்தை மீறலாம் என்பது பற்றி யோசிப்பதில்லை.//

    ஆராதனை, candle vigil எல்லாம் by Amnesty International. மரணதண்டனைக்கு எதிராக. ஏதோ அப்பாவியை தூக்கில் போடுகிற ரேஞ்சுக்கு இங்கே கதைத்தார்கள். அதுதான் சிரிப்பும், வேதனையும் தந்தது. மரண தண்டனையில் எனக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் அவன் செய்தது தவறுதானே?

    ஜோண் ஹவார்டின் "sense" of Priority பற்றி ஒன்றும் சொல்வதற்கு இல்லைங்கோ!! :O)


  19. kirukan said...

    I thought its about Suhasini and didnt read yesterday.

    ;-(

    The demand of Australia is too much. that too for a drug smuggler.. fighting as if he is national hero.

    fully agree with ur view.. including long term jail sentence instead of capital punishment.


  20. அன்பு said...

    சுகாசினிக்கு கொம்பு முளைத்தது பற்றிய நக்கல் பதிவோன்னு நேத்து படிக்கலை
    # posted by thanu : 7:59 PM, December 03, 200


    தாணு சொன்னதுதான்... நானும் முதல்ல இந்தப்பதிவைப்பார்த்துட்டு பார்க்காம போன காரணம்:)

    அது கிடக்கட்டும். நம்ப பிரதமர் உங்கூருக்கு வந்திருக்காங்க... ஒரு சிறப்பு கவரேஜ் செய்யுங்கள்.. நன்றி.


  21. rv said...

    //சுகாசினிக்கு கொம்பு முளைத்தது பற்றிய நக்கல் பதிவோன்னு //
    அடடா, சுஹாசினிதான் இன்ஸ்பிரேஷன். அவங்க கேட்ட கேள்வி இந்த விஷயத்திற்கு ரொம்பவே பொருத்தமாய் இருப்பதாய் தோன்றியதால் அதையே தலைப்பாய் கொடுத்துவிட்டேன். என்னடான்னா, நிறைய பேரு டைட்டில் பாத்துட்டே ஓடிட்டாங்க போலிருக்கு.

    ரங்கநாதன்,
    உங்க பதிவைப் பார்த்தேன். தெளிவாய் எழுதியிருக்கீங்க.


  22. rv said...

    மழை,
    //அதே. அதுதான் இன்னொரு நாட்டுக்குப் போய் அந்நாட்டுச் சட்டதிட்டங்களை abuse பண்ணலாமென எண்ண வைக்கிறது. //
    இது உண்மை. ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் ஒரு catch-22 சிக்கல் இருப்பது உங்களின் மற்றும் நண்பனின் பதிவில் வந்த பின்னூட்டங்களிலிருந்து புரிந்துகொண்டேன்.

    ஆஃப்கானிஸ்தான், இராக் மற்றும் சீனா போன்ற நாடுகளில் political prisoners போன்ற வகை கைதிகளுக்கு இதைவிடக் கொடுரமான தண்டனைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றிற்கும் இவை 'அரங்கேற்றும்' தண்டனைகளுக்கும் சிங்கப்பூருக்கு நாம் கொடுக்கும் sovereignty -ஐ கொடுக்கத் தயாராக உள்ளோமா? இந்தக் கேள்வி ரெண்டு நாளாக என்னைப் படுத்தி எடுத்துக்கொண்டிருக்கிறது. :(

    கிறுக்கன்,
    நன்றி


  23. rv said...

    அன்பு,
    நீங்களும் சுஹாசினி பதிவுன்னு ஏமாந்திட்டீங்களா? :(

    நம்ம பிரதமர் பல பெருசுகள் படைசூழ வந்திருக்கிறார். என்ன நடக்கிறதென்று பார்க்கவேண்டும்.


  24. அன்பு said...

    நீங்களும் சுஹாசினி பதிவுன்னு ஏமாந்திட்டீங்களா? :(

    அதை ஏமாற்றம் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளாதீர்கள். அவைகளைப் புறக்கணிக்கிறோம்!

    நம்ம பிரதமர் பல பெருசுகள் படைசூழ வந்திருக்கிறார். என்ன நடக்கிறதென்று பார்க்கவேண்டும்.

    பாருங்க, படிங்க கண்டிப்பா எழுதுங்க நன்றி.


  25. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    //இது உண்மை. ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் ஒரு catch-22 சிக்கல் இருப்பது உங்களின் மற்றும் நண்பனின் பதிவில் வந்த பின்னூட்டங்களிலிருந்து புரிந்துகொண்டேன்//

    don't understand Car.. pls explain. :O(


  26. rv said...

    அன்பு,
    புறக்கணிக்கிறீங்கன்னா.. நீங்க சுஹாசினி சொன்னத ஒத்துக்கிறீங்க. சுஹாசினி சொன்னது சரின்னு சொன்னா, குஷ்பு சொன்னதையும் ஒத்துக்கிறீங்க. அப்டின்னா குஷ்பு டமில் கலாச்சாரத்துக்கு எதிரா சொன்னதுல உங்களுக்கு உடன்பாடு. டமில் நாட்டில் இல்லாம சிங்கப்பூர்ல இருந்துகிட்டு...

    ஹி ஹி.. எப்படி நீங்க கருத்து சொல்லாமலேயே அனலைஸ் பண்ணிட்டேன் பாத்தீங்களா? :)))


  27. rv said...

    மழை,
    நான் சொல்ல வந்தது என்னன்னா, பொதுவா சீனா மற்றும் இன்னும் சில ஊர்கள்ல தங்கள் கொள்கைகளின் படி அவங்க ஊர்க்காரங்களுக்கு தண்டனை கொடுக்கறாங்க இல்லியா? political, rebel, innocents போன்றவர்களுக்கு. அந்த மாதிரி செய்யறத நாம மனித உரிமை மீறல்னு சொல்றோமே.

    சிங்கப்பூர் சட்ட அமைப்பு கொடுத்த தண்டனை அதோட sovereigntyனு சொல்ற சமயத்தில, இந்த மாதிரி மத/கொள்கை ரீதியாய் சட்ட அமைப்புகளின் படி, நம்மை போன்ற வேற்றுநாட்டவர் பார்வையில் கொடூரம் என்று படக்கூடிய, தண்டனைகளைப் பற்றி என்ன சொல்வது? ரொம்ப குழப்பறேனோ?


  28. G.Ragavan said...

    நானும் கூட ஏதோ ஒரு பதிவென்று நினைத்திருந்தேன். உள்ளே இப்படியொரு விஷயம்.

    எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒவ்வொரு நாட்டுச் சட்டமும் ஒவ்வொரு வகை. ஆண்டவந்தான் எல்லாரையும் காப்பாற்ற வேண்டும்.


  29. rv said...

    நன்றி இராகவன்.

    // ஒவ்வொரு நாட்டுச் சட்டமும் ஒவ்வொரு வகை.//

    இதில் தான் பெரிய இடியாப்பச் சிக்கலே! :))


  30. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    நீங்க குழப்பல.. என்ன சொல்ல வர்றீங்க என்று விளங்குது.

    எனக்கிருக்கிற விளக்கத்தின் படி என் 2 சதம்: நீங்க சொல்ற அரசியல், புரட்சி(அதாவது மாற்றுக் கருத்து) எல்லாமே மனிதருக்குரிய அடிப்படை உரிமை. அதாவது தன் சொந்தக்கருத்தை வெளியிடுதல்.அந்த "கருத்துச் சொல்லுதல்" அரசாங்கத்தின் "சொல்லக்கூடிய கருத்துக்கள்" பட்டியலில் இல்லாவிட்டால், சட்டத்தை மீறினதாகச் சொல்லித் தண்டிக்கிறார்கள்.

    ஆனால், பாருங்கள்..வான் ஙுவெனைப் போல தண்டிக்கப்படுகிறவர்கள் செய்வது ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வந்து (அல்லது தனது நாட்டிலேயே) அங்கே சட்டதிட்டங்களை மீறுவது. Even if they are executing their right to choose what they do, what they are really doing is (further!?)ruining society. Hence, it's not wrong to punish these people. அதனால் இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை "மனித உரிமை மீறல்" என்று வகைப் படுத்தப்படுவதில்லையென்று நினைக்கிறேன்.

    (Having said that, I do have a question to ask.. மரண தண்டனை ஒரு மனித உரிமை மீறல்தானே?)


  31. rv said...

    ஷ்ரேயா,
    //ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு வந்து (அல்லது தனது நாட்டிலேயே) அங்கே சட்டதிட்டங்களை மீறுவது.//
    இதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை.

    //what they are really doing is (further!?)ruining society//
    என் குழப்பம் என்னவென்றால் உதாரணத்திற்கு ஒரு சீனர் அரசை எதிர்த்து புரட்சி செய்தால், அதை சீனா அங்கு நிலவும் சட்டப்படி தண்டிக்கிறது. அது சர்வாதிகரமான அரசால் இயற்றப்பட்ட சுதந்திரத்தை பறிக்கும் சட்டமானாலும், அவர்களின் சட்டப்படி அவ்வாறு புரட்சியாளர்கள் are ruining the society. அந்த மாதிரி நேரத்தில், நம்மைப் போல வெளிநாடுகளுக்கு அதை விமர்சனம் செய்யவோ, அல்லது தண்டனையை குறைக்கச் சொல்லவோ இல்லை தப்பித்துவந்தோர்க்கு asylum கொடுக்கவோ உரிமை இருக்கிறதா? ஏனென்றால், at the end of the day, China is also a sovereign nation. இல்லையா?

    மரண தண்டனை என்னைப் பொறுத்தவரை சில நேரங்களில் ஒத்துக்கொள்ளக்கூடியதே. emotional or situational நிலையினால் குற்றம் புரிபவர்கள் மற்றும் indoctrination-ஆல் குற்றம் புரிபவர்கள் என்று மேலோட்டமாக பிரிக்கலாம் என்று நினைக்கிறேன். நான் பயன்படுத்தும் இந்த knife சரியாக பிரிக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் இதைத்தவிர வேறெப்படி வகுப்பது என்றும் தெரியவில்லை. இரண்டாவது வகையினர், நூற்றுக்கணக்கில் சம்பந்தப்படாதவரைக் கூட கொன்று குவிக்கும் தீவிரவாதிகள். அவர்களுக்கு மரண தண்டனை கொடுப்பதில் எனக்கு ஆட்சேபணையில்லை. But, as always, this can be misused as well. Must give it some more thought. :))


  32. rv said...
    This comment has been removed by a blog administrator.

  33. rv said...

    Speaking of China, Falun Gong's persecution comes to mind. While China had every right to pursue its 'detractors' by its own definition, there was a worldwide outcry against members of FG being harassed and prosecuted.

    The whole Human Rights Abuse business becomes murky here. Since shudnt we hand the same 'sovereign nation' immunity that we just accorded to Singapore. I dont see how we can justify this (i wrote my post in a bit of haste I suppose) while continuing to deplore other regimes. :((


  34. ramachandranusha(உஷா) said...

    //நீங்களும் சுஹாசினி பதிவுன்னு ஏமாந்திட்டீங்களா? :(//


    அட தெய்வமே, நானும் இந்த "கொம்பை" பார்த்துவிட்டு, எகிறி குதித்துப் போய் விட்டேன் :-)


  35. rv said...

    உஷா அக்கா,
    முன்னாடி நிறைய பேர் உங்கள மாதிரி ஓடிப்போய்ட்டாங்க... அது இருக்கட்டும்

    பேசிண்டிருக்கற விஷயத்த பத்தி ஒண்ணுமே சொல்லாம எஸ்கேப் ஆயிட்டீங்க? :(


  36. வெளிகண்ட நாதர் said...

    அப்பாடா, எவ்வளவு நாளாச்சு?, சரி கடைசில தலைப்புக்கும், கதைக்கும் சம்பந்தம் இல்லன்னு போட வேண்டியதுதானே!


  37. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    பொதுவில செய்யப்படும் எதையும் விமர்சிக்கலாந்தானே? தப்பி வந்து தஞ்சம் புகுந்தா அடைக்கலம் கொடுபடும் என்றுதான் நினைக்கிறேன். ஆனால், என்ன அடிப்படையில் என்று தெரியவில்லை. யாராவது சட்ட வல்லுனர்கள்தான் சொல்லணும்.

    //மரண தண்டனை என்னைப் பொறுத்தவரை சில நேரங்களில் ஒத்துக்கொள்ளக்கூடியதே//

    மூளைச் சலவை செய்யப்பட்டு, சம்பந்தப்படாதவரும் இறக்கும் வண்ணம் தாக்குவோருக்கு மரணதண்டனையா அல்லது ஆயுள்தண்டனையா அந்த ஆள் போதிக்கப்பட்டிருப்பதிலிருந்து வெளிவந்து (un/de-brainwash?) திருந்த வாய்ப்பளிக்கும்? திருந்தாவிட்டாலும், செய்கை பற்றிச் சிந்திக்க வைக்கும்? எல்லாருமே eye for an eye என்றால், எங்கே போய் முடியும்?

    --Falon Gongம் சீனாவும் பற்றிய உங்கள் பின்னூட்டத்திற்கு>>

    இது தனி மனித (அரச?) பார்வையில் இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். Falon Gong கடைப்பிடித்தவர்கள் பிழை செய்யவில்லை என்று உலகம் சொன்ன வேளையில் சீனா அதை அப்படிப் பார்க்கவில்லை. வெவ்வேறான கோணத்திலான பார்வைகள், வேறுவேறு பரிமாணங்களில் காட்டும். சிங்கப்பூருக்கு வான் ஙுவென் விதயத்தில் சொன்ன மாதிரி சீனாவுக்கும் Falon Gong விதயத்தில் சொல்லலாம் – ஆனால் அது objective பார்வையின் ஒரு கோணம் மட்டுமே. இன்னொரு கோணத்தில் பார்க்கையில் மனித உரிமை மீறலாய்த் தெரியும். ஆக, ஒரே விதயம், இரண்டு கோணங்களில் பார்க்கப்படும் போது, சீனா, ஒன்றில் ஒரு soverign nation அல்லது மனித உரிமையை மீறும் நாடு. it's all in the perception (As with everything else)


  38. மதுமிதா said...

    இராமநாதன்
    எய்தவனை விட்டு அம்பை நோகுதல் தான் நம்ம நடைமுறைல இருக்கு.
    இங்கயும் அதுதான் நிகழ்ந்திருக்கு.

    மறைமுகமா தூண்டுகிறவனை கண்டுபிடிக்கணும் முதல்ல.
    இல்லைன்னா இப்படி பலியாடுகள்
    மாட்டிக்க,அரசுகள் சட்ட விவாதம் செய்ய,அறிவுஜீவிகள்
    (நாம இந்த கேட்டகரில சேருவோமா என்ன)விவாதம் செய்ய
    மெல்ல மறந்து,மறுபடியும் வேறு வடிவில தலைதூக்கும் விஷயம் இது.


  39. தாணு said...

    மதுமிதாவின் கூற்றுதான் சரி.எய்தவன் எங்கேயோ ஏ.சி. ரூமில் உட்கார்ந்திருக்க இதுபோல் மாட்டுபவர்கள்பாடுதான் கஷ்டம்.


  40. aathirai said...

    சவுதியில் ஒரு இந்தியரின் கண்ணை பிடுங்க போகிறார்கள்.
    அப்படி பிடுங்க வேண்டமென்று இந்தியா ப்ரெஷர் கொடுக்கிறது.
    இந்த பதிவு, பின்னூட்டங்கள் எல்லாம் அவருக்கும் பொருந்தும்தானே!


  41. rv said...

    வெளிகண்டநாதர், சோழநாட்டான்

    மிக்க நன்றி

    ஆதிரை,
    அவருக்கும் பொருந்தும். இந்த சிக்கலுக்கு தீர்வென்ன என்பதுதான் பிரச்சனையே! :) அதாவது oppressive vs democratic regimes என்கிற டிவிஷனை பயன்படுத்தமுடியுமா என்பதுதான்..


  42. rv said...

    மழை,
    //எல்லாருமே eye for an eye என்றால், எங்கே போய் முடியும்?
    //
    இது உண்மைதான். ஆனால், ஜனநாயக நாடுகளுக்கு தீவிர தண்டனைகள் அளிப்பதை தவிர வேறு வழி கிடையாது. அந்தக் கோணத்திலும் பார்க்கவேண்டுமில்லியா? உதாரணத்திற்கு இந்தியா போன்ற ஒரு பல distinct peoples உடைய நாட்டில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தீவிரவாத வன்முறை தீவிரமாக அடக்கப்படவில்லையெனில் அது மற்ற பிரிவினருக்கும் பரவ நிறைய வாய்ப்பிருக்கின்றது என்றே நினைக்கிறேன்.

    ஸ்பாட்டிலேயே சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்கர் மற்றும் சற்று காலத்திற்கு முன் லண்டனில் நடந்த போலிஸ் துப்பாக்கி சூடு போன்றவை மனித உரிமை மீறல் என்று சொன்னாலும், trigger-nervous ஆக இருக்கும் நாடுகளில் தவிர்க்க முடியாததொன்றாகும். இதுவே சட்டப்படி அளிக்கப்படும் தண்டனைகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். பழங்காலத்தில் இருந்த பொதுவில் தூக்கிலிடுவது போன்ற ஒரு token தண்டனை மாதிரி.

    //it's all in the perception (As with everything else)
    //
    i agree. நாம் எந்த சார்பிலிருந்து பேசுகிறோம் என்பதைப் பொறுத்தே நம் நிலைப்பாடும் மாறுபடுகின்றது.


  43. rv said...

    மதுமிதா, அத்தை
    //எய்தவனை விட்டு அம்பை நோகுதல் //

    அம்பையும் நொந்துதான் ஆக வேண்டும் என்பது என் கருத்து. இந்த மாதிரி தண்டனைகளுக்கு பிறகு இம்மாதிரி mules ஒருமுறைக்கு இரண்டுமுறைக்கு யோசிக்க சாத்தியம் இருக்கிறது.

    அதே சமயத்தில், தண்டனைகள் தீவிரமாக இருக்கிற நாட்டிற்கு கடத்தவேண்டுமென்றால் முதலைகள் தரும் சன்மானமும் தக்கபடி உயரும். அந்த அதிகப் பணம் இன்னும் நிறைய ங்யென் வான் களை உருவாக்கலாம்.

    //அறிவுஜீவிகள்
    (நாம இந்த கேட்டகரில சேருவோமா என்ன//
    :)))

    //மெல்ல மறந்து,மறுபடியும் வேறு வடிவில தலைதூக்கும் விஷயம் இது//
    'ஹோட்டல் ருவாண்டா'வில் வரும் வசனம் நினைவுக்கு வருகிறது.

    --
    ஒரு வெள்ளைக்கார TV cameraman ருவான்டாவில் நடந்த இனப்படுகொலையை வீடியோ பதிவு செய்வதை அறிந்து, ஹீரோ பால் இந்த வீடியோவைப் பார்த்தாவது உலகம் உதவிக்கு வரும் என்பார். அதற்கு அந்த காமிராமேன் கூறும் பதில் நம்மையெல்லாம் கூனிக்குறுகச் செய்துவிடும். "u Know what will they do when they see this? They will say, "Oh My God, Thats Horrible!" and then go back to their dinner". வாழ்நாளில் மறக்கமுடியாத வசனம் இது.
    --
    'இன்றைக்கு மெல்லக் கிடைத்த அவல்' என்ற நிலையிலிருந்தே இந்தப் பிரச்சனைகளை பற்றி நாமெல்லாம் நினைப்பது. என்னத்த சொல்றது?


  44. rv said...

    :)


 

வார்ப்புரு | தமிழாக்கம்