மெட்டி ஒலி பார்க்காததால் தற்கொலை!

சினிமாவிலும், அரசியலிலும் மட்டுமே இருந்து வந்தது இந்த கொடுமை. இப்போ டி.வி க்குமா? உயிர் என்பது ஏதோ ஒரு சாதாரண disposable பொருள் மாதிரி கருதி தூக்கியெறிந்து விடுகிறார்களே.

மெட்டி ஒலி யின் இறுதிக் காட்சியை தாத்தா பார்க்க அனுமதிக்காததால் திருச்சியைச் சேர்ந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். கொடுமை. சுட்டி

உயிர் என்பதன் மதிப்பு என்ன என்ற புரிதல் இல்லை. விலை மதிக்கமுடியாத உயிரை நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் கொடுத்தால்கூட ஒரு பயன் இருக்கும். அதை விடுத்து மெட்டி ஒலிக்காக கொடுத்ததில் நாலு நாட்கள் ஊடகங்களில் பெயர் அறியப் படுவது தவிர வேறு பயனுமுண்டா? 18 தான் வயதாகிறது அந்தப் பெண்ணுக்கு. தாத்தா பாட்டி என்று மட்டுமே குறிப்பிடப்படுகின்றது. அவளின் தாய் தந்தையைப் பற்றி எதுவும் இல்லை. இந்த முதிர்ந்த வயதிலும் இந்தப் பெண்ணை வளர்த்து வந்திருக்கின்றனர் என்பதையெல்லாம் கருதாமல் சுயநலத்தோடு நடந்து கொண்டுள்ளார் இந்தப் பெண். இதில் அவரை மட்டும் குற்றஞ்சொல்லி பயனில்லை. வயதும் ஒரு காரணம்.

இந்த பருவத்திற்கே உரிய பிரச்சனைகள் எல்லோரும் சந்திப்பதுதான். சுதந்திரம் இல்லை என்ற எண்ணம், காதலில் தோல்வி, peer pressure, படிப்பில் தோல்வி என்று பல விஷயங்கள் ஒரு வகை reactive depression-ஐ உருவாக்கி இந்த மாதிரி அப்பாவி உயிர்களை பலி வாங்குகின்றன. இது என்ன பெரிய விஷயம் என்று நாம் ஒதுக்கித்தள்ளும் பிரச்சனைகள் அவர்களுக்குள் சூறாவளியையே உண்டு பண்ணும் என்பதற்கு இது ஒரு சான்று. இதைத் தடுப்பதில் பெற்றோரின், பள்ளிகளின் மற்றும் அக்குழந்தை வாழும் சமூகத்தின் பொறுப்புகள் நிறைய. இந்த வயதினரிடம் சரியான முறையில் ஆலோசனைகள் மட்டும் சொன்னால் போதாது, அவர்களின் எண்ண்ங்கள் தற்கொலைப் பக்கம் செல்லாமல் இருக்க activitiesஇல் ஈடுபடுத்துவது போன்றவையும் அடங்கும். இந்த மாதிரி டிப்ரெஷன் உள்ள குழந்தைகளிடம், தற்கொலை எண்ணம் தோன்றியிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள்: வீட்டுக்கு தெரிந்தோ தெரியாமலோ மதுப்பழக்கம், சிறுவயதிலிருந்தே பொக்கிஷமாகத் பாதுகாத்து வந்த பொருட்களை திடுமென விட்டு விடுவது அல்லது பிடித்தவருக்கு கொடுப்பது, சகஜமாக இருந்த குழந்தை திடுமென introspect-ஆக மாறி பேச்சு வார்த்தைகளை மற்றவரிடம் குறைத்தல் போன்றவை. இவை இந்த டிப்ரஷன் இல்லாத நிலையிலும் இருக்கலாம். ஆனால் எதற்கும் பெற்றோர்கள், மிக நெருங்கிய உறவினர்கள் பதவிசாக பேசிப்பார்க்க வேண்டும். இந்தப் புரிதலில்லாப் பெற்றோர்களே இத்தகைய தற்கொலைகளுக்கு அடிகோல்வதிலும் பங்குள்ளது.

நான் சொன்னதத்தான் கேட்க வேண்டும் என்று சொல்லாமல், ஏன் என்று எடுத்துச் சொல்வதற்கு நேரமாகாது. அதைச் சொன்னால் அப்போது ஒத்துக்கொள்ளாவிட்டாலும், அதிலுள்ள நியாயம் புரிய வாய்ப்பு உண்டு. அப்படி இல்லாமல் நான் சொன்னா கேட்டுத்தான் ஆகனும்னு சொன்னா, அந்த வயதிற்கே உரிய rebel spirit தலைவிரித்தாடும். அவர்களின் தன்மையைப் பொறுத்து நீங்கள் சொன்னதை செய்தாலும் செய்யாவிட்டாலும், அடிமனதில் தனது தனி மனித சுதந்திரம் மறுக்கப்படுகின்றது என்ற எண்ணமே உருவாகும். பெற்றோர்கள் பதின்ம வயதினரை குழந்தைகளாகவே பாவிக்கின்றனர். அது அவர்களின் அன்பின் காரணமாக. இதனால் சில பிள்ளைகள் குறித்த முடிவுகளை தன்னிச்சையாகவே எடுக்கின்றனர். ஆனால் பதின்ம வயதினரோ, தங்களை young adults ஆக கருதுகின்றனர். அதனால் ஒரு பெரியவருக்கு கிடைக்க வேண்டிய மரியாதையும் சுதந்திரமும் தனக்கும் வேண்டும் என்று எதிர்ப்பார்க்கின்றனர். இந்த இரு பிரிவினரின் புரிதலில் கெடுதல் இல்லை. ஆனால் நேராக மோதிக்கொள்ளும் போது ஒரு சாரார் காயமடையத்தான் செய்கின்றனர்.

"This too shall pass" என்பதை புரியாத வயதில் உள்ளோரை இந்த முடிவுக்கு தள்ளுவதில், இது போன்ற விஷயங்களுக்காக உயிரை மாய்த்துக்கொள்வது என்னவோ சுதந்திரத்துக்காக உயிரைக் கொடுத்தது போல் பெரிது படுத்தும் சினிமா, பத்திரிகைகள் போன்றவற்றிற்கும் பங்குள்ளது.

பெற்றோர்கள் தங்களின் இறந்த பிள்ளைகளுக்கு ஈமக்கிரியைகள் செய்வது போல் வாழ்க்கையில் ஒரு கொடுமை இருக்க முடியுமா? வயதான தாத்தா பாட்டிகளினால் இதை எப்படி தாங்கி கொள்ள முடியும்? எனக்கு அந்தப் பெண்ணை குறித்து பரிதாபம் கொஞ்சம். ஆனால் நான் மிகவும் பரிதாபப்படுவது அந்த வயதான தம்பதியினரைப் பற்றித்தான்.

உலகின் பல நாடுகள், விவரிக்க முடியாத வலி, terminal stage நோய்கள் என்று மருத்துவத்தாலேயே கைவிடப்பட்ட பல ஆண்டுகளாக 24 மணி நேரமும் அவதிப்படும் நோயாளிகளுக்குக்கூட அவர்களின் சொந்த விருப்பின் பேரில்கூட கருணைக்கொலை செய்வதை தடுக்கின்றன. இந்த medical euthanasia ரொம்பவும் சர்ச்சைக்குள்ளானது. இதில் நிபுணர்களாகிய மருத்துவர்களுக்குகூட, சரி இந்த உயிர் இனி வாழாது, இதன் பிணியையாவது அதன் விருப்பத்தின் படி போக்கலாம் என்பதற்கு உரிமை கிடையாது.

மற்றவர்க்கு எப்படியோ? பிள்ளைகள் பிறக்காதா என்றும் இன்னும் கொஞ்ச நாளாவது உயிரோடு இருக்க முடியாதா என்றும் தினந்தோறும் அரச மரத்தையும் பிள்ளையாரையும் சுற்றுபவர்களுக்கே உயிரின் அருமை புரியும்.

7 Comments:

  1. ஜெயந்தி சங்கர் (Jayanthi Sankar) said...

    how stupid ! engE pOkiROm naam ippadip patta iLaiyarkaLai uruvaakkum samuukaththil,..


  2. rv said...

    ஜெயந்தி சங்கர்,
    உங்கள் பின்னுட்டத்துக்கு நன்றி..

    நிஜமாகவே நீங்கள் சொல்வது போல் இந்த சமூகம் எங்கு போய்க்கொண்டிருக்கிறது என்று கவலையாக இருக்கிறது..

    இராமநாதன்


  3. Anand V said...

    என்னயா இந்த மெட்டி ஒலி ? நான் தமிழ் டிவி பார்த்து 5,6 வருடம் ஆகிவிட்டது.
    இந்த மெட்டி ஒலி பத்தி ஜனங்க பக்கம் பக்கமா எழுதி தள்ளறாஙக ...
    யாரோ ஒரு நடிகை தற்கொலை
    பண்ணிகிட்டதுக்கா 3,4 பசஙக விஷம் குடிச்சதுதான், இதை படிச்ச ஞாபகம் வருது.


  4. rv said...

    ஆனந்த் அவர்களே
    Blasphemy! தமிழராய் இருந்து கொண்டு மெட்டி ஒலி-னா என்னன்னு தெரிலேங்கறீங்களே? தமிழ்நாட்டில் பல கணவர்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொண்ட மெகாத்தொடர். இராத்திரி 930-10 விளம்பரங்களுக்கு நடுவே அப்பப்ப காண்பிப்பாங்க.

    வீட்டுக்கார அம்மாவ கேட்டுப்பாருங்க...
    :)


    மத்தபடி தலைவருங்க அடிச்சிக்கிட்டா, ஸ்டார் படம் ஊத்திகினான்னு தீக்குளி, பஸ்ஸோட கொளுத்தரதுன்னு இருந்தவங்க, இப்போ டிவி சீரியலுக்காகவெல்லாம் தற்கொலை பண்ணிக்கிறது ரொம்ப கொடுமை.
    என்று திருந்தப் போகிறதோ நம் தமிழ்நாடு, ஆண்டவனுக்கே வெளிச்சம்!


  5. Anonymous said...

    டேய் பாப்ப்பார நாயே மெட்டி ஒலி ஒலிபரப்பாகும் நேரம் 9-9.30pm


  6. Anand V said...

    உங்க போட்டோ பதிவுல கமெண்ட் கொடுக்க முடியலை. அதனால் இதில ...
    olympus C5060 ஆ use பண்ணறிஙக நீங்க ?
    எப்படி இருக்கு அந்த கேமிரா ?


  7. rv said...

    அனானிமஸ் அவர்களே
    ஒளிபரப்பு நேரம் தப்பாச் சொல்லிட்டேன். மன்னிச்சுடுங்க. அதுக்கு ஏன் இவ்வளவு கோபம்?

    ஆனந்த் அவர்களே
    ப்ளாக்கர் செய்த குழப்பத்தால் அந்த புகைப்பட பதிவு சுத்தமாக மறைந்து விட்டது. மீள் பதிவு செய்கிறேன்.

    நன்றி


 

வார்ப்புரு | தமிழாக்கம்