இது ஒரு கோடைக்காலம்!!! - ஹாட் பதிவு

ஹும்ம்.. 6 மாசத்துக்கு மேல் தொடர்ந்து இருந்த பனிக்காலம் முடிந்து கோடைக்காலம் வந்து 1 மாதத்திற்கு மேலாகி விட்டது. பனிக்காலத்தில் தெருவில் walk போவதே அபூர்வம். வேலைக்கு போனோமா, திரும்ப வீட்டுக்குள்ள ஓடிவந்து ஹீட்டர தட்டி விட்டோமானே நேரம் போய்டும். அதுவும் வெளியே கிளம்பரத்துக்கு முன்னே ஏதோ போருக்கு ஆயத்தமாறதப் போல, ஒரு long john, அதுக்கு மேல டீ ஷர்ட், அதுக்கும் மேல ஒரு முழுக்கை சட்டை அப்புறம் கடைசியா நிலாவுக்கு போறதுக்கே பயன்படுத்தக்கூடிய தடிமன்ல ஒரு பெரிய ஜாக்கெட் இப்படி இதயெல்லாம் போட்டு கழட்டுறதுக்கே அரைமணி நேரம் ஆகும்..

இப்போ கோடை வந்தாச்சு. வெயில் பிச்சு கொளுத்துது. டி-ஷர்ட், ஒரு அர-ட்ரவுசர், நம்மூர் செருப்பு (இந்த ஷூ வக் கண்டுபிடிச்சவன அன்னியன் தான் கவனிக்கனும்) என்று ஜாலியா சாயங்காலத்துல கிளம்பி ஒரு பெரிய ரவுண்டு அடிச்சிட்டு வர முடியுது. அதுவும் இராத்திரி 12 மணி வரைக்கும் நல்ல வெளிச்சம் இருக்கறதால் கவலையே யில்ல..

தெருவுல கொஞ்ச நேரம் காலாற நடந்தா.. அடாடாடா..காணும் காட்சிகளே தனிசுகந்தான்... முழுச்சட்டை, பாதிச்சட்டை மற்றும் சட்ட 'மாதிரி', இதிலே ஸி-த்ரு, not so ஸி-த்ரு என்று வரைட்டிகள்... இதுல எத்தன கலர் எத்தன டிசைன். நினச்சுப் பார்த்தாலே தல சுத்தும். இதுக்கு மேல.. சாரி.. கீழ.. பேண்ட்.. இதுகளயும் மேலே சொன்னா மாதிரி முழுசு, அரை அப்புறம் ரொம்பவே குறைன்னு வகைப்படுத்தலாம். இதிலேயேம் ஸீ-த்ருக்கள் உண்டு. பேண்ட், ட்ரவுசர் அப்புறம் ஸ்கர்ட் அப்புறம் இதிலேல்லாம் சேர்க்கவே முடியாத கவுன் வகைகளையும் பாக்கலாம். இப்படி மேலேயும் கலர் காம்பினேஷன் பாத்தா காணக்கண்கோடி வேண்டும்னு தான் தோணும். இதத்தவிர கண்ணப் பறிக்கும் வண்ணங்களில் கைப்பை.. ஷூ, செருப்பு, சாண்டல்ஸ்..இதெல்லாம் ஒண்ணா ரெண்டா, ஆயிரக்கணக்கிலில்ல இருக்கு. பாக்க பாக்க திகட்டாம இன்னும் பாத்துகிட்டே இருக்கலாம் போல இருக்கும்..

என்னதான் சொல்லுங்க.. விண்டோ ஷாப்பிங்க் பண்ற சுகமே தனிதான்! :)

11 Comments:

  1. Chez said...

    ஹூம் ரஷ்யால கோடைக்காலம் ஆரம்பிச்சுடுச்சு! இங்க ஆஸ்திரேலியால இன்னும் குளிர் வெடவெடக்குதே!!!.. இந்தியா மாதிரி நடுவுல இருக்கறவங்க தான் சுகமா இருக்காங்க! :-)


  2. rv said...

    magnus astrum அவர்களே
    பின்னூட்டத்திற்கு நன்றி

    வருஷத்துல முக்காவாசி நாட்கள் வெறும் snow பார்த்தே போரடிச்சு போயிருக்கிறதனால, ஒரு 4 மாசம் சூரியன பாக்கும்போது தலகால் புரியமாட்டேங்குது.

    ஆஸ்திரேலியாவில என்ன அவ்வளவு குளிரா? எவ்ளோ வரைக்கும் 0-க்கு கீழ போகுது அங்கே?

    நியுஸிலாந்தில் இருந்து துளசியக்காவும் இந்த குளிர்காலம் பத்தி எழுதிருக்காங்க, பாத்தீங்களா?. அது இங்க...

    இந்தியால வெயில் பிச்சு உதறுதுன்னு கேள்விப்பட்டேன். நாளன்னிக்கு ஊருக்கு போறேன். பாக்கலாம்..


  3. dvetrivel said...

    உங்கள் கருத்து மிக்க சரி....
    ஊங்களை போலவே கண்டு கண்டு கண் சோர்ந்தவன் நான்.
    தங்களது Profile பார்த்து தாங்கள் McLaren விசிறி என கருதுகிறேன். நான் Ferrari விசிறி. எனவே நமது வளை உறவு சூடக தொடரும் என எதிர்பார்கிறேன்.


  4. துளசி கோபால் said...

    கோடைகாலம் அப்புறம் 'ஊருக்குப் போறேன்'
    இது ரெண்டும் சேர்ந்து இங்கே ஒரு 'பொறாமை'யைக் கிளப்பிவிட்டு இருக்கு:-))))

    இங்கே இப்பத்தான் குளிர் ஆரம்பிச்சு இருக்கு. இன்னும் செப்டம்பர் ஆகணும் கொஞ்சமாவது வெய்யில் காய!!!!

    நல்லபடியா ஊருக்குப் போயிட்டுவாங்க!!!

    நல்லாத்தான் 'கலர்'பார்த்திருக்கீங்க:-)))))

    ஆமாம், ஜஸ்ட் விண்டோ ஷாப்பிங் தானா? ஊருக்குக் கொண்டு போக 'ஸீ த்ரூ'ஒண்ணும் வாங்கலையா?

    என்றும் அன்புடன்,
    அக்கா


  5. rv said...

    dilip அவர்களே
    ஆமாம்..மெக்லாரன் விசிறி.. சொல்லப்போனா மாண்டோயா எவ்விடமோ, நானும் அவ்விடம் :-)

    துளசியக்கா..
    ஏதோ என்னால முடிஞ்சது.. உங்க வயித்தெரிச்சலை கிளப்பறேன்..
    கலரெல்லாம் பாக்கல.. நான் நிஜமாவே விண்டோ ஷாப்பிங் பத்திதான் எழுதினேன். ;-) இப்பல்லாம் சென்னையே இந்த ரேஞ்ச்லதான் இருக்குனு கேள்விப்பட்டென்..இன்னும் ஒரு நாள் இருக்கு.. ஹூம்ம்...


  6. `மழை` ஷ்ரேயா(Shreya) said...
    This comment has been removed by a blog administrator.

  7. `மழை` ஷ்ரேயா(Shreya) said...

    என்னது ஒஸ்ரேலியாவில எவ்வளவுக்கு 0 க்கு கீழேயா? என்ன நட்ட நடு வின்டர்ல பாவமே என்று ஒரு சில இடங்களில் -5 வரை இறங்கும். அவ்வளவுதான்.மற்ற இடங்களெல்லாம் என்னதான் குளிரென்றாலும் -1, -2 தாண்டவே தாண்டாது. அநேகமாக + தான்!! :o)

    ரஷ்யாவிலிருக்கும் என் தோழியும் நானும் ஆளையாள் மாறி வெறுப்பேத்திக் கொள்வோம்...இப்போ அவவின் முறை! ஹ்ம்! :o(


  8. dvetrivel said...

    நண்பர் ராமநாதன் அவர்களே, தாங்கள் தமிழில் வளைபதிவு செய்ய என்ன மென்பொருளை உபயோகிக்கிறீர்கள்? நான் http://www.jaffnalibrary.com/tools/Unicode.htm வளைதளத்திற்கு சென்று எழுதி அதை செய்து பதிவு செய்கிறேன். அப்படி செய்யும் பொழுது எனது எழுதுக்கள் Internet Explorer-ல் நன்றாக தெரிகிறது ஆனால் Firefox-ல் நன்றாக தெரியவில்லை. உங்கள் வளைபதிவு இரண்டிலும் நன்றாக உள்ளது. உதவி செய்யுங்கள்


  9. rv said...

    ஷ்ரேயா aka shreya அவர்களே
    பின்னூட்டத்திற்கு நன்றி... -5-ஞ்சே குளிருன்னு வருத்தப்பட்டுகிறாங்களா?? இது நல்ல டமாசு! இங்க நான் முதமுதலா வந்த வருஷம் ஒரு நாள் எத்தன டிகிரின்னு தெரியாம ஊரச் சுத்தப்போனோம். கைகாலெல்லாம் விறச்சு போச்சு. அன்னிக்கு, அதிகமில்ல.. -33*C தான். இப்போல்லாம் அவ்ளோ கீழே போறதில்ல. அதிகப்படியா -20.. . Global Warming-கோ என்னவோ!

    Dear Dilip
    I am not sure this is the way but this works fine for me. First in Windows ->Rgnl Language settings - I Chose "Install files for complex scripts" (for this u must have WinXP CD). Then i Downloaded the e-kalappai software from tamil.net. But the page shows 404 error now. Maybe others in the thamizmanam forum will be able to help out with this. Unfortunately, googling 'ekalappai' didnt produce any active links for downloading this nice piece of software. i will try to find a link on net, else will send by mail.

    Upon starting the program a "K" icon will appear on your system tray. Depressing ALT+2 sets the keyboard to Tamil. All you have to do then is open notepad, set the font to any Unicode font ( I use Arial Unicode or Lucida Sans Unicode) and u should be able to type in tamil. Hope this helps.. ( am typing this in english for obvious technical reasons :) )
    Regards


  10. Anand V said...

    Ramanathan,
    I am not able to comment on pyramid post.

    I think that is Nile,,
    ( or your hotel swimming pool :) )

    Anand


  11. dvetrivel said...

    THANK YOU FOR THE HELP ON TAMIL BLOG


 

வார்ப்புரு | தமிழாக்கம்