217. Wii+Mii=We-Me

மகளிர் மட்டும் படத்துல சிவாஜி சொல்ற - dreadful மிட்-லைப் டெபனிஷன் டயலாக்கான 'டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்'னு எங்க முப்பது வயசுக்குள்ளயே சொல்ல வச்சுருவாங்களோனு அப்பப்ப பயமுறுத்துற மாதிரி விஷயங்கள் சிலது. நிறைய கண்ல பட்டாலும், விநோதமானதே நம்ம கண்ல படும்கறதால இதோ. இதையே ஒரு தொடரா போட்டு ஒப்பேத்துவோமில்ல. அன்லிமிடட் சப்ளை.

இன்னிய மேட்டர் குடும்பத்துள் கசமுசா...

வழக்கமான கதை. ஒரு அழகான குட்டி குடும்பம். ஆத்துக்காரர இராக் போய் டார்கெட் ப்ராக்டிஸ் பண்ணிட்டு வானு புஷ் அண்ணாச்சி அனுப்பி வச்சுருக்காரு. போன ஆத்துக்காரர் திரும்ப வர ஒரு வருஷம் ஆயிடறது. ஒரு வருஷ பணி முடியறதுக்கு முன்னாடி கொஞ்ச கொஞ்சமா இராக்லேர்ந்து தன்னோட பெர்ஸனல் ஐடம்ஸ்லாம் ஊருக்கு அனுப்பி வைக்கறாரு. திரும்ப வந்த ஆத்துக்காரருக்கு பயங்கர ஷாக். தன் அன்பு மனைவியுடன் யாரோ ஒரு மர்மக்காதலன் விளையாடிருக்கான்னு அவருக்கு தெரியவருது. இதக் காரணமா வச்சு மனைவிய கொளுத்தாம, ரீஜண்டான முறையில விவாகரத்து கோரியிருக்காரு.

இதுல என்ன புதுசு அப்படிங்கறீங்களா? புருஷன் எப்படி மனைவிக்கு காதலன் இருந்தான்னு கண்டுபிடிச்சாங்கறது தான்.

இந்த Wii னு ஒரு வஸ்து இருக்கு. இளவயசுப்பசங்க யாருனாச்சும் கிட்டக்க இருந்தா கேட்டுபாருங்க. அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். என்ன கிறிஸ்துமஸ் ஷாப்பிங் நேரத்துல கேட்கப்போய் அவங்களுக்கு வாங்கிக்கொடுக்கத்தான் கேக்கறீங்கனு நிறையவே அளந்துவிடுவாங்க. (இப்பல்லாம் கிறிஸ்துமஸ்/புது வருஷத்துக்கு இது வேணும்னு நேரடியா கேக்கறதோட இல்லாம, பெரிய ஆளுங்க வேற வந்து ரெகமெண்ட் பண்றாங்க. விவரம் இங்கே.)

ஆகமொத்தம் இந்த வீ ங்கறது ஒரு ப்ளேஸ்டேஷன் மாதிரி விளையாட்டு சாதனம். புரட்சிகரமானதுன்னா மிகையில்ல. குடும்பத்தோட விளையாட ஏத்தது. அது எப்படி குடும்பத்துல கலகம் செஞ்சுது?

புருஷன் நாட்டுக்கு திரும்பின உடனே அவனோட நண்பர்களும் அக்கம்பக்கத்தவர்களும் மனைவியப் பத்தி கொஞ்சம் விவகாரமா சொல்லிருக்காங்க. ஆனா அண்ணாச்சி நம்பல. மனைவிய கேட்டால் அவ இல்லவே இல்லேன்னு சாதிச்சிருக்கா. பாவம், அண்ணாச்சி நொந்து போயி ஒரு நாள் ஆசையாசையா தன்னோட Wii அ ஆன் செஞ்சு தன்னோட பேவரிட் கேமான பவுலிங்கை ஆரமிச்சுருக்காரு. அங்கன சிக்கிருச்சு பட்சி.

விஷயம் என்னன்னா அந்த கேம்-குள்ள ஆத்துக்காரர், அவரோட நண்பர்கள், மனைவி தவிர ஒரு புதிய profile (Miiனு பேரு இதுக்கு) இருந்திருக்கு. பளிச்னு ப்ளாஷ். இந்தாளு கூட ஒரு சின்ன fling இருந்துச்சு ஆனா அது முடிஞ்சு போன மேட்டர்னு மனைவி சொல்லிருந்தது நியாபகத்துக்கு வந்துருக்கு. ஏன் வந்துச்சுன்னா இந்த மீ ஒர் டிஜிடல் 'அவதார்'. அக்டோபர் மாசம் கலகம் பண்ணின அதே பாதகனோட அச்சு அசல் மாதிரி இருந்திருக்கு இந்த அவதார். புருஷன் சுதாரிச்சுகிட்டு உடனே மீ ஓட ஆன்லைன் ஃபாரம்களில் தேடவே அழகா அவரோட மனைவியும் அந்த அவதாரும் எந்தெந்த நாளைக்கு என்னென்ன விளையாட்டு (Wii console-ல மட்டுமே) விளையாடினாங்கனு புட்டு புட்டு வச்சுருந்திருக்காங்க அந்த ஃபாரம்களில்.

இப்படி அசைக்கமுடியாத ஆதாரம் கொடுத்தோன்ன மனைவி என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம முழி முழின்னு முழிச்சிருக்காங்க. லேட்டஸ்ட் நியுஸ் விவாகரத்துக்கு போயிருக்கு கேஸ். சாட்சி சொல்ல Wii வருமான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

முழு விவரம் இங்கே

என்னத்த சொல்ல, டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்!

PS: எனக்கென்னவோ அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து வீ விளையாடின நாட்கள விட்டுட்டு விளையாடாத நாட்களப் பத்தி விசாரிக்க ஆரமிச்சா இன்னும் relevant details வரும்னு தோணுது! :)

18 Comments:

  1. பினாத்தல் சுரேஷ் said...

    'டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் சோ மச்' - இதை ஒத்துக்கறதுக்குக்கூட பயமா இருக்கேப்பா! மிட்-லைப் னு கலவரப்படுத்தறே!

    சரி, இந்தக் கதைக்கும் (சுவாரஸ்யமாவே இருந்தாலும்) டெக்னாலஜிக்கும் என்ன சம்மந்தம்? அந்த லூஸு குடாக்கு கையிலே கிடைச்ச கேமையெல்லாம் விளையாடிப்பாத்த தப்பினால்தானே மாட்டினான்!


  2. இலவசக்கொத்தனார் said...

    பெனாத்தல், உம்ம பதிலில் இருந்தே தெரியுது. இதில் என்ன டெக்னாலஜி இருக்குன்னு உமக்குத் தெரியலையா?


  3. துளசி கோபால் said...

    டெக்னாலஜி இருக்கட்டும் ஒரு பக்கம்.
    இப்போதைய என் கவலை.....
    மகளிர் மட்டும் படத்தில் சிவாஜியா?

    ??????????????????????????????


  4. G.Ragavan said...

    விக்கிரமாதித்தன் கதைல வரும்...செய்யத்தெரியாம செஞ்சி மாட்டிக்கிட்டான்னு....வந்தவன்...வந்தத விட்டுட்டு வெளையாண்டிருக்கானே...இவனை என்ன்னன்னு சொல்ல!!!! தீர்ப்பு மனைவிக்குத்தான் சாதகம். ரெண்டு பேரு ரெண்டு விளையாட்டு விளையாடிருக்காங்க. அவ்வளவுதான நிரூபிக்க முடியும். மித்ததெல்லாம்? ;)


  5. குழலி / Kuzhali said...

    //வந்தவன்...வந்தத விட்டுட்டு வெளையாண்டிருக்கானே...இவனை என்ன்னன்னு சொல்ல!!!!
    //
    அதானே , நான் சொல்ல நினைத்தேன், ஜிரா அதுக்கு முன்னாலயே சொல்லிட்டார் :-)


  6. rv said...

    பெனாத்தலார்,
    //சரி, இந்தக் கதைக்கும் (சுவாரஸ்யமாவே இருந்தாலும்) டெக்னாலஜிக்கும் என்ன சம்மந்தம்? அந்த லூஸு குடாக்கு கையிலே கிடைச்ச கேமையெல்லாம் விளையாடிப்பாத்த தப்பினால்தானே மாட்டினான்!//
    என்னய்யா சொல்றீரு? ஒண்ணுமே புரியல..

    இந்த வயசானவங்களே இப்படித்தான்னு சொல்ல வச்சுருவீர் போலிருக்கே...


  7. rv said...

    கொத்ஸு,
    அதானே.. நீரே கேளும் நியாயத்த...

    புரிஞ்சு கேக்கறாரா தெரியாம கேக்கறாரானே புரியாம நானே நொந்துருக்கேன்.


  8. rv said...

    அக்கா,
    இது நீங்க நினைக்கிற சமீபத்திய சிவாஜியோ நேத்தைய சிவாஜியோ அல்ல.

    இவரு காமெடியன். 'அண்ணே, நீங்க எங்கீயோ போயிட்டீங்க' தெரியுமா? அவரே தான்.


  9. நாகை சிவா said...

    நமக்கு வந்தது மூனு டவுட்.

    ஒன்ன துளசி கேட்டுட்டாங்க... நீங்க சொன்ன பதிலையும் படிச்சேன். அவர் பெயர் சிவாஜியா???????

    அடுத்ததை ஜி.ரா. கேட்டுட்டார். சுத்த கபோதியா இருப்பான் போல இருக்கே? கடமையில் தானே கவனமாக இருக்க வேண்டும்.

    இது ரொம்ப முக்கியமான டவுட்... உங்க Header Caption ... ஏன் இப்படி எல்லாம்?????


  10. பினாத்தல் சுரேஷ் said...

    நாகை சிவா,

    இதே டவுட் எனக்கு கொஞ்சம் மாறி வந்தது..
    ஏன் இப்படி எல்லாம் இல்லை..

    எப்படி இப்படி எல்லாம்?


  11. ILA (a) இளா said...

    சே இந்தக் கருமம் புடிச்ச logs என்னென்ன வேலை பண்ணுது பாருங்க.

    //என்னத்த சொல்ல, டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் வெரி மச்!//
    டூ மச்


  12. Geetha Sambasivam said...

    டெக்னாலஜி இருக்கட்டும் ஒரு பக்கம்.
    இப்போதைய என் கவலை.....
    மகளிர் மட்டும் படத்தில் சிவாஜியா?

    ??????????????????????????????

    எனக்கும் இதான் தோணிச்சு, பதில் சொல்லிட்டீங்க, வரேன், ரொம்ப நல்ல பதிவு!!!! :P


  13. rv said...

    ஜிரா,
    //வந்தவன்...வந்தத விட்டுட்டு வெளையாண்டிருக்கானே...இவனை என்ன்னன்னு சொல்ல!!!! //

    அப்பாடா..ரொம்ப நாளைக்கப்புறம் நான் எழுதுனது புரிஞ்சு பின்னூட்டம் போட்டுருக்கீரு..

    காதல் குளிர் எழுதுற அநுபவமா? :)


  14. rv said...

    குழலி,
    :)

    ஜிரா இப்பல்லாம் ரொம்ப ஷார்ப்பா இருக்காரு.


  15. rv said...

    புலி,
    1. ஆமா.. அந்த நடிகர் பேரு சிவாஜிதான்னு நினைக்கிறேன்.

    2. //கடமையில் தானே கவனமாக இருக்க வேண்டும்.//
    ஒண்ணும் சொல்றதுக்கில்லை.

    3. //ஏன் இப்படி எல்லாம்?????//
    சொந்த சரக்கில்லைய்யா.. அதான் தத்துவார்த்தமா இருக்கு. அப்படி இருந்தாலாவது கொஞ்சம் எதுனாச்சும் நவீன பட்டம் கிடைக்குமான்னு பார்க்கத்தான்.


  16. rv said...

    பெனாத்தலார்,
    //எப்படி இப்படி எல்லாம்?//

    இது நீங்க கேக்கக்கூடிய கேள்வியா? உம்ம சிஷ்யனுக்கு வேற என்ன வரும் பின்ன?


  17. rv said...

    இளா,
    ஆமா.. டெக்னாலஜி முன்னேற்றத்தால இப்படியும் சிக்கல்ஸ்.

    ஏற்கனவே கால் பண்ணினேன் லைன் கிடைக்கலேன்னு சொல்ல முடியாம போச்சு. :((((


  18. rv said...

    கீதாக்கா,
    நன்னி.

    //மகளிர் மட்டும் படத்தில் சிவாஜியா?//
    இவர் ஒரு நல்ல காமெடி சைட்கிக். இப்ப ஏனோ அவ்ளோவா நடிக்கறதில்லை.

    மைக்கேல் மதனா, அபூர்வ சகோதரர்கள், மை டியர் மார்த்தாண்டனு நிறைய படத்துல குட்டி குட்டி ரோல்ல நடிச்சிருக்கார். அன்பே சிவம் படத்துல் தெலுகு ஸ்டேஷன் மாஸ்டரா வருவாரே.. இப்பவாவது நியாபகத்துக்கு வருதா?

    இந்தாங்க IMDB சுட்டி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்