192. இருதிருவருளர் உதித்தனர்... உலகம் உய்ய!

இந்த நாள் உன் காலண்டர்ல குறிச்சு வச்சுக்கொள்! ஏன்னா இன்னிக்கு வாழ்க்கைல மறக்கமுடியாத நாள்! உன் விதியவே மாத்திப்போட்ட நாள்!

என்னென்னவோ செஞ்சுகிட்டிருக்கற நாம இன்னிக்கு.. இப்போ... டுடே கூடி கும்மியடிக்க இருப்பது எதுக்காக???

1. வலையுலக ஆன்மிக செம்மல் குமரன் இன்று திருவருளால் பூமியில் அவதரித்த நாள்!

2. பினாத்தலார் என்னும் இளங்(கிழச்)சிங்கம் பொறந்து உனக்கும் உங்க அப்பத்தாவுக்கும் தேதி குறித்த நாள்!

'நான் மனிதன்! நீ மிருகம்'னு கடவுளே பிறப்பில் பிரிச்ச நாள்!


இவ்விருவரும் பமகவின் இருபெரும் சொத்துக்கள்...ஆழ்கடல் காணா முத்துக்கள்...சேந்தனைச் சேரும் பக்தாக்கள்... சர்ரெனப் பாயும் தோட்டாக்கள்...மலையும் முழுங்கும் போக்தாக்கள்...தொடுவோரை பதம்பார்க்கும் கூர்முட்கள்.. வாள்வாளெனும் கொடுவாட்கள்.. மொத்தத்தில் எங்கள் படுவாக்கள்..எதிர்த்தவர் மேலெல்லாம் பத்துகள்....!

இவர்களை வாழ்த்த காய்ந்த காக்காக்கள் வேண்டாம்.. சோர்ந்த சோதாக்கள் வேண்டாம். வெறும் பனைமரக் கள் போதும். வாருங்கள்! வாழ்த்துவோம்!!

191. டேய்ய்ய்ய்ய்... யார்ரா நீயி?????

டேய்ய்ய்...யார்ரா நீயி? எங்கேர்ந்துடா வந்தே? ஏன்டா இப்படி பிரச்ன பண்ற இப்போ?

கில்லர்மோ கான்யாஸ்

உனக்கு இன்னாதான்டா வேணும்????

அய்யோ இப்டி டார்ச்சர் பண்றானே!

டேய் விட்டுர்றா..... தலைவர் ரொம்ப நல்லவர்டா!

190. இராம இராம!

இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம இராம!

ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய இராம!


இராமநாமமே துதிமனமே! க்ஷேமமுறவே தினமே! சீதா ராமநாமமே துதிமனமே!
இங்கே கேட்கலாம்.


பாலகிருஷ்ண சாஸ்திரிகளின் ஹரிகதை கேட்டாச்சு இல்லியா? கேக்கலேன்னா முதல்ல அத டவுன்லோட் பண்ணி கேளுங்க!

http://www.sangeethapriya.org/Downloads/tsb/tsb.html

நியமங்கள் வேண்டாம். தானதர்மங்கள் வேண்டாம். கர்மாக்கள் வேண்டாம். அவன் பேரைப் பாடுவதே போதுமானதுன்னு சொல்லிதான் திவ்யநாமமும் பஜனையும்னு சொல்லி ஈஸியா விட்டுட்டு போயிருக்காங்க.


அண்டங்களெல்லாம் தன் உடலின் ஒரு தூசிக்குக்கூட ஒப்பிலாத அப்பன் தன் அளப்பெரும் கருணையால் தாங்கிவந்த இராம வடிவத்தை நினைப்போரின், அவனைப் பற்றி பேசுவோரின் நெஞ்சமெல்லாம் நிறைந்து நிற்பான் அனுமன். ஆஞ்சநேயனை அதனால் தனியே வழிபடவே வேண்டாம்.



எல்லாமே ரெண்டு ரெண்டாத் தெரியுதுங்க!!

இன்னைக்கு தமிழ்நாட்டுல புதுசா வெளி வர படங்க ரெண்டு நாள் ஓடினாலே வெற்றிகரமான ரெண்டாவது நாள் அப்படின்னு போஸ்டர் போட்டுக்கும் போது, ரெண்டாவது வருஷம் தொடர்ந்து மொக்கைப் பதிவுகளாப் போட்டு தள்ளிக் கொண்டிருக்கும் நம்ம டாக்டர் இராமநாதனுக்கு வாழ்த்துக்கள்!

ரெண்டு
வருஷ நிறைவை சும்மா ஒரே ஒரு மொக்கைப் பதிவைப் போட்டு கொண்டாடினாப் போதுமா, அட்லீஸ்ட் ரெண்டு மொக்கைப் பதிவாவது போட வேண்டாமா அப்படின்னு கேட்ட நம்மளையே எழுதச் சொல்லிட்டாரு. இதைத்தான்யா நம்மாளுங்க சொ.செ.சூ வைச்சுக்கறது அப்படின்னு சொல்லறாங்க. சரி வாக்கு குடுத்துட்டோமேன்னு ரெண்டு வார்த்தை எழுதலாமுன்னு நினைச்சா அதுக்கே ரெண்டு நாள் ஆயிடுச்சு போங்க. சரி எழுதறதை எழுதியாச்சு, நீங்களும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை படிச்சிட்டு, செய்ய வேண்டியதைச் செஞ்சுட்டுப் போங்க!

இந்த ரெண்டு அப்படிங்கிற நம்பர் இருக்கே. அது ரொம்ப கலக்கலான நம்பருங்க. நான் சொன்னா நம்பிக்கை இல்லைன்னா நம்ம முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கிட்ட கேட்டுப் பாருங்க. ஒரு நம்பர் டூவுக்கு உண்டான அருமை பெருமை எல்லாம் அவர் சொல்லுவாரு. அவரு கிடைக்கலைன்னா பெர்மனெண்ட் நம்பர் டூ பேராசிரியரைக்கூடக் கேட்கலாம். ஆனா இப்போ அவங்க ரெண்டு பேரும் இல்லாததுனால நானே சொல்லறேன்.

இந்த 2 என்ற வடிவம் எப்படி வந்தது தெரியுமா? முற்கால இந்தியர்கள் இரண்டு என்பதை = என இரு சமக்கோடுகள் கொண்டு எழுதினார்களாம். (விக்கிபீடியா இந்திய பிராமணர்கள் என எழுதி இருக்காங்க. நாந்தான் சேஃபா இந்தியர்கள் அப்படின்னு மாத்திட்டேன். ஏற்கனவே நமக்கு பல பட்டப் பெயர்கள். அந்த பயம்தான்). இன்னைக்கும் சைனாவிலும் ஜப்பானிலும் இரண்டை இப்படித்தான் எழுதறாங்களாம். இதையே கொஞ்சம் மாத்தி ரோமேனியர்கள் || இப்படி ரெண்டு போட்டாங்க. (யாருடா அது, விவேக் எப்படி ரெண்டு போடுவாருன்னு கேட்கறது? சரியான ரெட்டை வால் ரங்குடுவா இருப்பான் போல இருக்கே!) இந்த இரண்டு கோடுகள் எப்படி 2 ஆச்சுன்னு விக்கிப்பீடியாவில் பாருங்க.

பல சமுதாயங்களில் கடவுளின் படைப்புகள் அனைத்துமே இரண்டு விதமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். சீனர்கள் ஆகட்டும், யூதர்கள் ஆகட்டும் இந்த 'இரண்டு' கருத்தில் மிக நம்பிக்கை கொண்டவர்கள். நம்மவர்களை எடுத்துக் கொண்டாலும் ஆண் - பெண், சொர்க்கம் - நரகம், தேவர் - அசுரர், சைவம் - வைணவம், தென்கலை - வடகலை, ஆரியம் - திராவிடம், சில அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டணி இல்லையென்றால் அந்தக் கூட்டணி என பல இடங்களில் இந்த இரண்டு விதங்களை நாம் பார்க்கின்றோம்.

இரண்டு
என்ற எண்ணின் கணித சம்பந்தப்பட்ட விஷயங்கள் நிறையா இருக்கு. அது பத்தி பேசற அளவு நமக்கு சரக்கில்லை. அந்த விக்கி பக்கத்துல இருக்கு பாத்துக்குங்க. தமிழில்தான் வேணுமுன்னா சொல்லுங்க, நம்ம ரெட்டை மண்டை (அம்புட்டும் மூளை!) பெனாத்தலாரைக் கேட்க வேண்டியதுதான்.

விக்கியார் மேலும் சொல்லறாரு

  • சைனாக்காரங்களுக்கு இந்த 2 ரொம்ப ராசியாம். அதனால அவங்க ஊரில் சாமானுக்கு பேரு வெச்சா இரட்டைப் பாம்பு, இரட்டைப் புலி இப்படிப் பேரு வரா மாதிரிதான் வைப்பாங்களாம்.
  • பின்லாந்தில் சுதந்திர தினத்தன்று இரண்டு மெழுகுவர்த்தி ஏத்தி வைப்பாங்களாம். ஒன்று இரண்டாகப் பிரிந்ததை நினைவுபடுத்துவதற்காகத்தான் இப்படி.
  • அப்புறம் நம்ம நோவா வந்து மிருகங்களைக் காப்பாத்த ரெண்டு ரெண்டாத்தானே தன் படகுல ஏத்துனாரு.
சரி சரி, இராமநாதன் பதிவு ஆரம்பிச்சு ரெண்டு வருஷமாச்சு. அதுக்காக இப்படி ரெண்டு ரெண்டுன்னு ஏன் என் உயிரை எடுக்கிற, இதுக்குப் பின்னாடி வேற எதோ மேட்டர் இருக்கு அதைச் சொல்லலைன்னா உன்னோட டூ அப்படின்னு நினைக்கறீங்களா? ஒரு முக்கியமான மேட்டர் இருக்குங்க.

நம்ம வலையுலகின் மிகப் பெரும் கட்சியான ப.ம.க.வில் அண்ணன் இராமநாதன் தாங்க நம்பர் டூ!!

187. May Your Soul Rest in Peace, Oh Dear Tamil


இந்தத் வருத்தமான நேரத்தில் அன்னாரின் பெருமைகளையும், அவளின் புதல்வர்களின் பண்பாட்டையும் நினைத்து பெருமிதம் கொள்ளும் விதமாக, ஒருநிமிடம் மவுனம் காத்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தானை செய்வோம்!

Mei Uw Rust van de Ziel in Vrede!

Mai votre repos d'âme dans la paix !

Mai Ihr Seele Rest im Frieden!

Maggio il vostro resto di anima nella pace!

Май ваши остальные души в мире!

1. கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம்

2. ஆறு வித்தியாசங்கள் கண்டுபிடிக்கவும் - இராதா ஸ்ரீராம்

SUPPORT UNICEF for free!!

186. கவிதை மொழிபெயர்ப்பு முயற்சி!

ஆங்கிலத்திலிருந்து பலகவிதைகள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதுபோலவே திருவள்ளவர் தொடங்கி பலர் எழுதிய இலக்கியங்கள் ஆங்கிலத்திற்கும் இன்னபிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்த மொழிபெயர்ப்பை நாமும் கொஞ்சம் முயற்சி செய்து பார்த்தால் என்ன என்ற ஆர்வம் பிறந்ததன் விளைவே இந்தப் 'படைப்பு'!


Moulded Jaggery Sugarcane! Oh! 5'O Clock Bud!
Like a knife you usuppufy me!
Slided down the scalp, crouched in the center, u swallow me crushingly!

I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?

Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?

Lets rent a cotton mattress for (a? :)) ) living,
in broad daylight we shall catch a round moon!
Dont show film, Dont open shop, Dont increase weight!

I saw (your) neck that resembled a slide; I skidded and fell head over my heels!
(I) Was searching for something, crashed onto something else, lost myself someplace else!
with (your) Eyes grazing Without Shame, my saree seems stuck inescapably
I close something, I open something else, (am) kirangufying automatically!
To see (your) ankles that resemble small fish; my eyes fight among themselves and prowl!
Caught in those hairpin bends, my heart slowly melts!

I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?

You make me look in all the wrong places; You make me speak nonsensical words!
Will it decrease if i take little, why be miserly?
You do put up a fine act like a chevalier! But U do have a duplicate key in your hands!
"Come, peacock put a feather" u always nag me!
Dont Have much desires my love, Just hundred chidren enough!
For all those to study together we need a separate school!

Moulded Jaggery Sugarcane! Oh! 5'O Clock Bud!
Like a knife you usuppufy me!
Slided down the scalp, crouched in the center, u swallow me crushingly!

I will take you to the Touring Talkies, Will you come?
Instead of the movie, I shall watch you...Will that be ok?
Place the bed properly after consulting Vaasthu
Two children will then be born, is it ok?

கவிதையின் சுவை கெடாமல் தரமுயற்சித்திருக்கிறேன் என்றே நினைக்கிறேன். மொழிபெயர்ப்பில் அதுதானே முக்கியம்?

 

வார்ப்புரு | தமிழாக்கம்