153. வி.ஐ.பி வேட்பாளர் பட்டியல் - சொத்துவிவரங்கள்

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பமகவின் வேட்பாளர் பட்டியல், சொத்துவிவரங்கள், சில கொள்கை விளக்கங்களையும், வாக்குறுதிகளையும் மீண்டும் ஒருமுறை பதிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இருக்கும் ஐவரை வைத்து தமிழகமெங்கும் 494 தொகுதிகளில் வெற்றிபெற போவதாக பீலா விடும் சங்கங்களுக்கு ஒரு கேள்வி. முதலில் அத்தனை தொகுதிகளிலும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய நிதிவசதி இருக்கிறதா? சங்கப் 'போர்வால்' என சுயமுழக்கமிடும் மதிப்புமிகு பொன்ஸ் அவர்களின் கூற்றுப்படி வ.வா.சவின் மொத்த கையிருப்பு 4 ரூபாய் 45 காசுகள். அதிலும் இரண்டு ரூபாய் எங்கள் இணையில்லாத் தலைவரிடம் அவர்களின் தல ஹேண்ட்சைல்ட் டீ குடிக்கவென கைமாற்றாக வாங்கியது.

வெறும் தமிழகத்தில் கூட சொந்தமாக நிற்கவே (குவார்ட்டராய நம நம!) முடியாதவர்கள், முச்சந்தி கூட்டணியான ஒன்றை முப்பெரும் கூட்டணி என்று பிலிம் காட்டிவருகிறார்கள். இனி பமகவின் கூட்டணிக் கட்சிகள் உலகெங்குமுள்ள தொகுதிகளில்

அமெரிக்கா - ஆளுங்கட்சியான கழுதைப் பார்ட்டி புஷ்ஷுடன் சேர்ந்து தீவிரவாதத்தை சுதந்திரமாக்க கூட்டணி
ஜெர்மனி - ஆஞ்செலாவுடன் சேர்ந்த கில்பான்ஸ் கூட்டணி
ரஷ்யா - பூடினுடனான அடக்குமுறைக் கூட்டணி
மத்தியகிழக்கு - அரேபிய சுல்தான்களுடனான ஜனநாயக முற்போக்கு கூட்டணி
பிரான்சு - யு.எம்.பி யுடனான கோஷ்டிப்பூசல் கூட்டணி
இத்தாலி - ப்ரோடியுடன் தகிடுதத்த கூட்டணி
ஆஸ்திரியா - யோர்க் ஹைதருடன் மிதவாதக் கூட்டணி
பிரிட்டன் - ப்ளேருடனான தோற்றுக்கொண்டிருக்கும் கூட்டணி
சீனா - ஹு ஜிண்டாவுடன் மனித உரிமைக் கூட்டணி
தென் கொரியா - ஹுண்டாய் சேர்மன் ஆரம்பித்துள்ள கட்சியுடன் லஞ்சமொழிப்பு கூட்டணி
வடகொரியா - அணுகுண்டுக் கூட்டணி
ஸ்பெயின் - எடாவுடன் அமைதிக் கூட்டணி
போர்ர்சுகல் - என்ன கட்சி, யார் பிரதமர் தெரியாக் கூட்டணி
ஜிம்பாப்வே - முகாபேயுடனான நிலஆக்கிரமிப்பு கூட்டணி
இரான் - அஹமதினஜாதுடன் தீவிரவாதத்தை எதிர்த்துக் கூட்டணி
ISS - அமெரிக்க, ரஷ்ய, ஜப்பானிய நாடுகளுடன் கூட்டணி

ஏனைய தொகுதிகளில் பமக தனித்துப் போட்டியிட்டு அறுதிப்பெரும்பான்மை பெறும் என்று லைசன் - பொய்சன் கருத்துகணிப்புகள் தெரிவித்தவண்ணம் உள்ளன.

இனி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் நிற்கும் தொகுதிகள் மற்றும் சொத்து விவரங்கள்!
1. வட அமெரிக்கா (மேற்கு), சிலுக்குவார்ப்பட்டி - தலைவர் முகமூடி
2. வட அமெரிக்கா (தென்கிழக்கு), திருநெல்வேலி - இலவசக்கொத்தனார்
2. வட அமெரிக்கா (மத்திய), மதுரை - ஆன்மிகச் செம்மல் குமரனார்
3. மத்திய கிழக்கு, வடசென்னை - பெனாத்தலார்
4. வட அமெரிக்கா (வடகிழக்கு), சங்கரன்கோவில் - கௌசிகனார்
5. மெக்ஸிகோ, காஞ்சிபுரம் - பார்ட் சின்னவன்
6. போடி, பூனா, திருப்பரங்குன்றம், க்றைஸ்ட்சர்ச் - பின்னூட்ட நாயகி துளசியக்கா
7. பெஙகளூர் (தென் கர்நாடகா), தூத்துக்குடி - சொல்லின் செல்வர் இராகவனார்
8. வடகர்நாடகா - வெண்பா வித்தகர் ஜீவா
9. ஆஸ்திரேலியா, ஆண்டிப்பட்டி - ஜெயஸ்ரீ
10. தென்கிழக்கு ஆசியா, தென்சென்னை - தேன் துளி
11. மத்திய ஆசியா, செங்கல்பட்டு - ஆனந்த்
12. கிழக்கு ஐரோப்பா, தஞ்சாவூர் - அடியேன்
13. மேற்கு ஐரோப்பா, திருச்சி - உஷா அக்கா
14. மஹாராஷ்ட்ரா - மஹாமோசம் ஹரிஹரனார்
15. சந்திர மண்டலம் - சுவாமி குஜிலி
16. ஸ்விட்ஸர்லாந்து, ஸ்கேண்டினேவியா - ஜலஜாஸ்ரீ
17. தாம்பரம், திண்டிவனம்(ரிஸர்வ்ட்) - பொன்ஸ்
18. நாகர்கோவில், கன்னியாகுமரி (ரிஸர்வ்ட்) - தேவ்
19. இதர இந்தியா (மால்கேட் சேர்ந்து ரிஸர்வ்ட்) - கைப்புள்ள
20. தென் அமெரிக்கா (ரிஸர்வ்ட்) - பெரு(சு)
21. நாமக்கல் (ரிஸர்வ்ட்) - சிபி
22. மேற்கூறிய தொகுதிகள் அல்லாமல் வேறு எதுவேண்டுமானாலும் (ரிஸர்வ்ட்) - ஜொள்ளுப்பாண்டி (சென்னையிலிருந்து நாயுடு ஹால், குவின்/ஸ்டெல்லா மேரிஸ் மற்றும் அனைத்து பஸ்-ஸ்டாப்புகளையும் பிரித்து தனித்தொகுதியாகவும் வழங்க ஐடியா இருக்கிறது!)

இனி சில சொத்துவிவரங்கள்
தலைவர் முகமூடி
மொத்த மதிப்பு: 10 ரூபாய் 25 காசு
அசையா சொத்துகள்: ப்ளோரிடா, கலிபோர்னியா பழத்தோட்டங்கள்,
வாகனங்கள்: கார் சொந்தமாக கிடையாது (2 லியர் ஜெட்கள்: பறக்கும் வாகனங்கள் அதனால் அவை கணக்கில் வராது)
நகை மதிப்பு: 2 ரூ. இரண்டு தங்கமூலாம் பூசிய முகமூடிகள்
1 ரூ வங்கிக்கடன்

ஆன்மிக செம்மல் குமரனார்
மொத்த மதிப்பு: 9 ரூ 99 காசு
அசையா சொத்துகள்: இருபது ப்ளாக்குகள், 10 நாமக்கட்டிகள் :)
வாகனம்: ஒரு ஒத்தமாட்டுவண்டி
நகைமதிப்பு: விலைமதிக்கமுடியா புன்னகையிருக்க பொன்னகை கிடையாது.

ஆன்மிக செம்மல் இராகவனார்
மொத்த மதிப்பு: 9ரூ 85 காசு
அசையா சொத்துகள்: மூன்று அக்மார்க் ருத்திராட்சங்கள், பெங்களூர்
நகை மதிப்பு: இரண்டு வடபழனி முருகன் கோயில் டாலர்கள்
வாகனங்கள்: ஒரு மயிலார்

பின்னூட்ட நாயகி துளசியக்கா
மொத்த மதிப்பு: 15 ரூ 10 காசு
அசையா சொத்துகள்: குடும்பச்சொத்தான பின்னூட்ட புதையல், சவுத் ஐலண்ட், பாவப்பட்ட கோபால் மாமா :)
நகை மதிப்பு: 10 ரூபாய்: ஒரிஜினல் திருவிழா நேரத்து மதுரை மீனாட்சி நகை செட்
வாகனங்கள்/அசையும் சொத்துகள்: நாலு யானை, அஞ்சு பூனைகள்

சுவாமிஜி குஜிலியானந்தா
மொத்த மதிப்பு: 8 ரூ 30 காசு
சொத்துவிவரம்: ஆயிரம் ஏக்கர் ஸ்விஸ்ஸாபுரத்தில் புறம்போக்கு ஆசிரமம், ஜலஜாஸ்ரீ
நகைமதிப்பு: கோர்ட்டில் வழக்கு நடப்பதால் மதிப்பு சரியாகத் தெரியவில்லை
வாகனங்கள்: நோ கமெண்ட்ஸ்! :))

தேர்தல் வாக்குறுதிகள் நாளை வெளியாகும். தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் நாள் வரை உலகக்கட்சியென்ற காரணத்தினால் நாங்கள் பிரச்சாரம் செய்யலாம் என்று சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறோம்.

3 Comments:

  1. துளசி கோபால் said...

    ராம்ஸ்,

    சொத்து விவரம் கரெக்ட்டா இல்லையேப்பா. யானையிலே ஒண்ணு குறையுதே. அப்புறம் மறைச்சுட்டோமுன்னு எதிரிகள் சொல்லிறப்போறாங்க.

    பி.கு. மாமா நேத்துதான் உங்களைப் பத்தி விசாரித்தார்.


  2. Udhayakumar said...

    ஆன்மிக செம்மல் இராகவனார் சென்னையில் இருப்பதால் அவர் சார்பாக 70வது வட்டத்தை சேர்ந்த உதயகுமார் பெங்களூரில் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்ற சுற்றறிக்கை அனைத்து தளங்களிலும் கூடிய விரைவில் வெளியிடப்படும். கீழ்ப்பாக்கத்திலயான்னு வ வா ச தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டால் சமாளிப்பது எப்படி என அடுத்த பமகவின் பொதுக் குழுவில் தீர்மானிக்கப்படுமா என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்பதை தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என நடுநிலையான அரசியல் நோக்கர்கள் கருதுவதான் இப்போதைய நிலை. மண் டிவி க்காக கருப்பன். (அப்பப்பா... எப்படித்தான் முற்றுப் புள்ளி வைக்காம பேசறாங்களோ? எழுதறக்கே கண்ணை கட்டுதே...)


  3. ஜொள்ளுப்பாண்டி said...

    மருத்துவர் சின்ன அய்யா !:))

    சந்தோசமா?? ஏன் இப்படி சின்னப்பிள்ளத்தனமா அறிக்கைய விட்டுத் தள்ளிகிட்டே இருக்கீங்க? நாந்தேன் சங்கத்திலே பெஞ்ச தொடச்சுவச்சு நீங்க வரிவீகன்னு காத்துகிட்டு இருக்கம்லே !! இன்னும் எத்தினி நாளைக்கிதான் பல்செட்டு பார்டிக கூடெல்லாம் ஒக்காந்து சீப்படப் போறீங்களோ !! உங்க ஆளுக யாராச்சும் உங்களுக்கு தோள் கொடுத்தாங்களா?

    சீமச்சரக்கு சங்கத்து பிரிஜ்ஜிலே பாட்டில் பாட்டிலா இருக்கு.பந்திக்கு நேரமாச்சு சீக்கிரம் வந்து ஐக்கியமாகுங்கப்பு :))

    நீரு இருக்க வேண்டிய இடம் இது இல்லை சின்ன அய்யா !! இன்னும் ரெண்டே நாள்தான் இருக்கு சொல்லிபிட்டேன் !!


 

வார்ப்புரு | தமிழாக்கம்