நேத்து இராத்திரி.. யம்மா.. தூக்கம் போச்சுதே

நேத்து இராத்திரி பல யுகங்களுக்கு பிறகு, டிஸ்கோவிற்கு வந்தே ஆக வேண்டுமென்ற நண்பனின் வற்புறுத்தலின் பேரில் (நிஜமா, நம்புங்க.. இத்தனை வருஷத்துல் முழுசா ஏழெட்டு தடவை போயிருந்தாலே ஜாஸ்தி), இரவு ஒன்பதரைக்கெல்லாம் கிளம்பியாச்சு. க்ளப் பேரு ரோஸ்ஸி (Rossi). இந்த ஊர்ல டிஸ்கோனா நூத்துக்கணக்கில இருக்கு. அதனால எது சரியா (அதாவது பாட்டெல்லாம்) நமக்கு தோதுபட்டுவரும்னு கண்டுபிடிக்கறதுக்கு நாளாகும். நம்ம பிரண்டு, வாரந்தோறும் போகும் டிஸ்க் ப்ரோங்கறதால, ரோஸ்ஸி தான் போறோம்னு முடிவு பண்ணியாச்சு.

அது என்ன ஒன்பதரைக்கெல்லாம் டிஸ்கோ போவீங்களான்னா.. பின்ன.. வியாழன்தோறும் அந்த கிளப்புல லேடீஸ் நைட். பெண்களுக்கு அனுமதி இலவசம். அதுவும் தவிர அவங்களுக்குன்னு பிரத்தியேகமா free flowing Champagne. அதனால பொண்ணுங்க கூட்டம் அலைமோதும். அவிங்க கூட்டம் ஜாஸ்தியாயிருக்குமுன்னா வாலிப வயோதிக அன்பர்கள் கூட்டத்துக்கு பஞ்சமிருக்குமா என்ன? நிக்க இடமில்லாத அளவுக்கு கூட்டம் இருக்கும். பத்தரை மணிக்கு மேல தான் டிஸ்கோ உண்மையிலெயே சூடு பிடிக்கும். நடக்கிற தூரம்தான்கறதால பதினஞ்சே நிமிஷத்திலே போய் சேர்ந்தாச்சு. குளிரும் அவ்வளவு இல்லை. வாசல்ல மெட்டல் டிடெக்டர் சோதனையெல்லாம் வச்சு நல்லாவே பந்தா காட்டறாங்க. தலைக்கு நூத்தியைம்பது ரூபிள் அழுதோம்.

உள்ளே நாங்க போனபோது இன்னும் கூட்டம் வந்திருக்கவில்லை. ஏற்கனவே ரெண்டு நண்பிகள் (இந்த நண்பிகள்-கற சொல சரியானதா?) துண்டு போட்டு தோதான இடம் பிடிச்சு வச்சுருந்தாங்க. அது ஏன் தோதான இடம்கறதுல கொஞ்சம் விவகாரம் இருக்கு. அது பின்னாடி. ஷாம்பெயின் ஃப்ரியா ஓடிச்சா, எல்லா பொண்ணுங்களும் ரொம்ப ஓவர் பிரண்ட்லியாவே சுத்திகிட்டிருந்தாங்க. சரி, ஏற்கனவே ஒரு ஹாட் பதிவு போட்டுருக்கேன். இங்க இருக்க நிலை எப்படின்னு, அதப்பாத்தீங்கனா, நீங்களா யூகிச்சுக்கலாம். முதல்ல, வந்தோன்ன, இத்தன நாள் கழிச்சு வந்தியேடா கண்ணான்னு ஷாம்பெயின். நமக்கு அது பிரச்சனையில்லை. ஆனா, அதுக்கப்புறம் நொடிக்கொரு தரம் கிளம்பற ஸ்டீம் எஞ்சின் தான் பிரச்சனை.

எல்லாருக்கும் கைல ஆறாவதா ஒரு வெள்ளை விரல் முளைச்சா மாதிரி அது கையவிட்டு கீழ இறக்குவேனான்னு ஊதி ஊதி தள்ளுறாங்க. அவங்க பாடு அவங்களுக்கு. நம்ம பாடு நமக்கு. அதான் சாப்பாடு. சுக்லாம்பரதரம் சொல்லி பிரஞ்சு (ஃப்ரீடம்) ஃப்ரை. கொஞ்ச நேரம் அரட்டை. அப்படியே பார்த்தா மணி பத்தரை ஆச்சு. இனிமே வரதெல்லாம் கொஞ்சம் ஏ மேட்டர். தயவு செஞ்சு வேண்டாதவங்க அடுத்த ரெண்டு பத்திய ஸ்கிப் செஞ்சுடுங்க. படிச்சுட்டு என்னைய திட்டக்கூடாது. நடந்ததச் சொல்றேன்.

ஏன் வாகான இடம் பிடிச்சு வச்சுருந்தாங்கன்னா.. எங்க டேபிளுக்கு நேர் எதிர்த்தாப்போல தான் ஸ்ட்ரிப்-டீஸ் டேபிள். ஆனா, நேத்திக்கு லேடீஸ் நைட்கறதால, பெரிய பெரிய எருமை சைஸுல ஆம்பிளைங்கதான் வந்து ஆடிக்கிட்டுருந்தாங்க. அவங்க ஆடறதோட விட்டா பரவாயில்லியே. கூட்டத்திலே இருந்து சாதாரண சில பொண்ணுங்கள்லாம் டேபிள் மேல ஏறி அவங்களுக்கு போட்டி குத்தாட்டம் போட்டாங்க. ஓவ்வொரு பதினஞ்சு நிமிஷத்துக்கும் இது நடக்கும். மொத்த டான்ஸ் ஹாலுமே டேபிள சுத்தி நின்னு ரகளை பண்ணினாங்க. சரி, நமக்கு அடுத்தது என்னன்னு மெனுவப் பார்த்தா காளானுடன் வறுத்த உருளைக்கிழங்கு. சே. தமிழ்ல சொல்றச்சே ஏதோ மாதிரி இருக்கே. Roasted Potatoes with Mushrooms. இப்படியாக பன்னிரண்டரை வரை ஓட்டியாச்சு. இன்னும் டான்ஸ் ப்ளோர் பக்கமே போகலியே, உக்காந்து தின்னுகிட்டே இருக்கியேன்னெல்லாம் கேள்வி கேட்கக்கூடாது.

பன்னிரண்டரைலேர்ந்து பெண்கள் ஸ்ட்ரிப்டீஸ். என்ன இருந்தாலும் ப்ரொபஷனலா செய்யும்போது ஒரு அழகு. கூரையிலிருந்து கீழே பரவும் கம்பியில் சர்க்கஸ், குரங்கு வித்தை, தலைகீழா சுத்தறதுன்னு நிறைய விளையாட்டு. இதுக்கும் சுத்தி சரி கூட்டம். இதுக்கு நடுவுல, இரண்டு ஆளுக ஆர்வப்பட்டு, பொண்ணு ஆடிக்கிட்டிருக்கும்போதே அதே மேடையில் ஏற, எங்கேர்ந்து வந்தாங்கன்னே தெரியல.. நாலு பெரிய செக்யூரிட்டி வந்து ரெண்டு பேரயும் அலாக்கா தூக்கிக் கொண்டு வெளியில கடாசிட்டாங்க. பதினஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் இது. இப்படியே ரெண்டரை வரை நல்லா பொழுதுபோச்சு.

அடுத்த ரவுண்டு என்ன.. இங்க க்ரென்கின்னு பேரு. கார்லிக் பிரட் மாதிரியே.. ஆனா டார்க் பிரட்டை வச்சு பண்ணி நீள நீள பீஸ்களா வெட்டிக் கொடுப்பாங்க. சூப்பரா இருக்கும். அதோட விட்டிருந்தா பரவாயில்லியே. நம்ம பிரண்டு நீ ஆப்ஸிந்த் (Absinthe) டேஸ்ட் பண்ணியிருக்கியான்னு கேட்டான். நமக்குத்தான் டேஸ்ட் பண்றதுல இதுவரைக்கும் பிரச்சனையே இருந்ததில்லையே. அதோட இன்னிவரைக்கும் அமெரிக்காவுல அப்ஸிந்த் விக்கறதுக்கு தடை. ஐரோப்பாவில் கூட இப்பத்தான் சில வருஷங்களுக்கு முன்னாடி திரும்ப விக்க அனுமதி கொடுத்திருக்காங்கன்னும் பயங்கர பில்டப் கொடுத்தோன, அப்படி என்னதான் மேட்டர்னு பாக்கணும்னு சபலம் வருமா வராதா?

சரின்னு ஆர்டர் செஞ்சோம். சர்வரம்மாவும் ரெண்டு க்ளாஸ்ல எலுமிச்சை ஜூஸ். ரெண்டு க்ளாசுல ஆப்ஸிந்தும் எடுத்துகிட்டு வந்தாங்க. ஆனா, அதுக்கப்புறம் ஒரு கேள்வி கேட்டாங்க பாருங்க. "நீங்களே பத்தவச்சுபிங்களா, இல்லை நான் பத்த வக்கட்டுமா?" இது என்னடா, எதைப் பத்தவைக்கறதுன்னு நான் நம்ம connoisseur பிரண்டு பக்கம் திரும்பினா, நானும் இதுவரைக்கும் குடிச்சதில்லைன்னு ஹிந்தியில வழிஞ்சான். "நீங்களே பத்தவையுங்க" கேட்டதும் "யார் பர்ஸ்ட்". நேரா நண்பன் பக்கம் கைகாட்டினேன். பேப்பர் நாப்கின்ல ஸ்ட்ராவால ஓட்டை போட்டுவச்சுகிட்டு, அடுத்து லைட்டர் ஒண்ண எடுத்து க்ளாசுக்குள்ள இருந்த அப்ஸிந்த பத்த வச்சாங்க. நல்ல நீலமா அழகா எரிஞ்சுது. அது எரிஞ்சு முடிக்கறதுக்குள்ள எலுமிச்சை ஜூஸில் கொட்டிவிட்டு, காலி அப்ஸிந்த் க்ளாஸ பேப்பர் நாப்கின் மேல கவுத்துவச்சாங்க. சரி, இப்ப என்ன செய்யணும்னு அப்பாவியா அவங்கள நாங்க பார்த்து வழிஞ்சதும், நானே சொல்லித்தாரேன் சொல்லிக்கொடுத்தாங்க. அதாவது, ஸ்ட்ரா வழியா காலி ஆப்ஸிந்த் க்ளாஸ்குள்ளேர்ந்து புகைய நல்லா உள்ள இழுத்து, முழுங்காம வாயிலியே வச்சுருந்து, படக்குன்னு ஒன் ஷாட்ல அப்ஸிந்த் எலிமிச்சை கலவையை காலி பண்ணனுமாம். பண்ணோம். சரியான காரம். புகையோட கலந்த வித்தியாசமான எலுமிச்சை ஜூஸ். அதுக்கப்புறம் என்ன, ஒரு அரைமணிக்கு கிர் கிர் தான். நல்லவேளை, இதுவரைக்கும் நல்லா சாப்பிட்டிருந்தேனோ பொழைச்சேன். இத்தனைக்கும் வெறும் நாற்பது மில்லி தான். அதுக்கே ஆளத் தூக்கி அடிச்சுடுச்சு. நம்மூர்ல என்ன நிலவரம்னு தெரியல.

சரி, இதுக்கு மேல ரிஸ்க் எடுக்கக்கூடாதுன்னுட்டு கொஞ்சமா கொஞ்சம் ஆடுகளம் (டான்ஸ் ப்ளோர்தான்) பக்கம் போய் "Who Likes To Move it Move It?" க்கு "We Like To" ன்னு பிரஸண்ட் மார்க் கொடுத்துட்டு வந்து பார்த்தா மணி நாலேகால். சமையா தூக்கம் சொக்குது. முந்தின நாள் வழக்கம் போல் வேலைநாள்கறதால சாயங்காலம் வந்து ஒரு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கமுடிஞ்சது. டேபிள்ல ஒரு பத்து நிமிஷம் தூங்கியிருப்பேன். ஒரு பெரிய உருவம் வந்து உலுக்கி, தூங்கறாதா இருந்தா வீட்டுக்கு கிளம்பு ராசான்னு மிரட்டிட்டுப் போச்சு. கூட வந்த நண்பிகள் மெட்ரோ 545க்கு திறக்கற வரைக்கும் இருந்துட்டு போகணும்னு சொன்னதுனால, முழிச்சிகிட்டிருக்கறது எப்படி. அடுத்த ரவுண்டு சாப்பாடுதான். திரும்ப காளான், உருளைக்கிழங்கு, தெம்பூட்ட சூப்னு அடிச்சு முடிச்சா அஞ்சு ஆச்சு. பத்து நிமிஷம் கழிச்சு "Who Let the Dogs out" ஆரம்பமாச்சு. ரீமிக்ஸ் போல. ஒரு பத்து பதினஞ்சு நிமிஷம் ஓடிச்சு. அதுலேயே எல்லாரும் களைச்சு போயாச்சு. இதுக்குள்ள டிஸ்கோவும் காலியாக ஆரம்பிச்சாச்சு. சரி, நாமளும் நடையக் கட்டுவோம்னு தூக்கக்கலக்கத்தோடயே வீட்டுக்கு வந்தா ஆறுமணி. ஒரு மணிநேரம் தூங்கினா, வேலைக்கு ஆகாது (போகாது!)ன்னு தூக்கத்துக்கு பை. இனிமேயென்ன ரெண்டு நாளைக்கு தூக்கந்தான்.

-----
உங்கள் எல்லோருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

46 Comments:

  1. குமரன் (Kumaran) said...

    எப்படியோ நல்லா பொங்கல் வச்சா சரி. ஆடுங்க ஆடுங்க. ஆடுற வயசு தானே? என்ன பாக்குறீங்க. பொகையுதான்னா? அதெல்லாம் ஒன்னும் கிடையாது.

    உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.


  2. ஏஜண்ட் NJ said...

    ஹும்..
    தலைப்ப பாத்துட்டு ஓடோடி வந்தா ஏமாத்திப்புட்டீரே!!
    :-(

    ------

    உம்ம பட்டை 'sick'ஆ கெடக்குது ஓய், கவனியும்; செக் பாக்ஸ் நாலு அஞ்சு தெரியுது!! அதுல லிங்க்ஸ் ஒர்க் பண்ணல!!!

    -----

    அப்புறம், இந்த sidebar-ல வெச்சிருக்கீறே Blogrolling list, அதுல என்னோட பதிவு என்ன ஓய் நவம்பர்-9 அப்டேட் செஞ்சதா காட்டுது! ரொம்பத் தப்பு ஓய்!!
    -----

    பொங்கல் வாழ்த்துக்கள்!!

    :-)))))


  3. டிபிஆர்.ஜோசப் said...

    நம்ம ஊர் பாங் சாப்டுறிக்கீங்களா இராமனாதன்?

    லஸ்சில கலந்து அடிச்சா ஜிவ்வுன்னு ஏறி இறங்குவனான்னு நாள் முழுசும் படுத்தும்..

    அதெல்லாம் அப்ப்ப்ப்ப்போ. இப்பல்லாம் ரொம்ப நல்ல பிள்ளை. வயசாயிருசில்ல.. அதுதான்.

    அது சரி. பொங்கல் வாழ்த்து சொல்ற பதிவா இது? ரஷ்யன் ஸ்டைலா?

    பொங்கலோ பொங்கல்...


  4. ENNAR said...

    அனுபவி ராஜா அனுபவி காற்றடிக்கும்போதே துற்றிக்கொள்


  5. SnackDragon said...

    கலக்கலான பதிவு இராமநாதன். :-)


  6. பழூர் கார்த்தி said...

    பதிவு எல்லாம் நல்லாத்தேன் இருக்கு ராமநாதன்.. நல்லா வாழ்வுதான்யா, இங்கனதேன் பாம்பேல டான்ஸ் பாரையெல்லாம் மூடிட்டாங்கே :-)

    *****

    பொங்கல் வாழ்த்துகள் !!!


  7. rv said...

    ஆடும் வயசு எங்களுக்கு குமரா குமரா, நீங்க ஆடித்தீத்த ஆளுதானே பொதுவா பொதுவா-ன்னு பாடலாமா?

    பொகையுதா பொகையுதான்னு கேட்டே அப்பன் குதிருக்குள்ள இல்லேன்னு காட்டிக்கிரீங்களே!


  8. rv said...

    ஏஜெண்ட்,
    அந்த மேட்டரெல்லாம் நான் எழுத முடியுமா? அதுவும் நீர் இருக்கறச்சே?

    //உம்ம பட்டை 'sick'ஆ கெடக்குது ஓய், கவனியும்; செக் பாக்ஸ் நாலு அஞ்சு தெரியுது!! அதுல லிங்க்ஸ் ஒர்க் பண்ணல!!!/
    அப்ஸிந்த் எழுதுனோன கொஞ்சம் ஸ்டெடியாயிடுச்சுன்னு நினைக்கிறேன். நந்தவனத்துல சரியா வகைப்படுத்தப்பட்டிருக்கிறது இந்தப்பதிவு. இங்க என்னடான்னா, வகைப்படுத்தப்படாதவைன்னு படுத்துது.

    //இந்த sidebar-ல வெச்சிருக்கீறே Blogrolling list, அதுல என்னோட பதிவு என்ன ஓய் நவம்பர்-9 அப்டேட் செஞ்சதா காட்டுது!//
    அது எப்படி ஏஜெண்டு உமக்கு மட்டும்? மிச்சவங்களுக்கெல்லாம் சரியாத்தானே காட்டுது! ப்ளாக்ரோலிங் உங்க பேர இருட்டடிப்பு செய்யுதுன்னு கேஸ் போட்டிரலாமா?


  9. சன்னாசி said...

    இந்தமாதிரி தனித்தனியாக பற்றவைத்து அடித்ததில்லை; ஆனால் absinthe liquor என்றே இங்கே அமெரிக்காவிலும் குடித்ததுண்டு - குடிக்கக் கிடைக்கிறது. இதுதான் பொங்கல் spirit - கலக்குங்கள்!! தீபாவளி பொங்கல் புதுவருடம் என்று வீட்டில் இல்லாத எப்போதுமே 'அஞ்சால் அலுப்பு மருந்து'டன் கொண்டாடியது ஒரு காலம் ;-).


  10. rv said...

    ஜோசஃப் சார்,
    நானெல்லாம் வெறும் டேஸ்ட் பார்ட்டி. ஷாம்பெயினே ரொம்ப அரிது. நீங்க என்னடான்னா பி.ஹெச்.டியே பண்ணியிருப்பீங்களாட்டம் தெரியுது.

    பாங் ட்ரை பண்ணதில்லை. இந்தியாலேர்ந்துன்னா மெக்டவல்ஸ், கிங்பிஷர் அப்புறம் ஓல்ட் மங்க். இதுகள மட்டுந்தான் டேஸ்ட் பண்ணிருக்கேன்.


  11. rv said...

    நன்றி என்னார் மற்றும் கார்த்திக்ராமாஸ்


    சோம்பேறி பையன்,
    //இங்கனதேன் பாம்பேல டான்ஸ் பாரையெல்லாம் மூடிட்டாங்கே :-)
    //
    உங்க ஆதங்கம் புரியுது. நம்ம பிரண்டும் மும்பைதான். பையன் நாளன்னிக்கு கிளம்பி ரெண்டு மாசம் ஊருக்குப் போறான். அதான் வறண்ட பாலைவனத்துக்கு முன்னாடி ஒரு எனர்ஜி பூஸ்ட் மாதிரி போயேத்தீரணும்னு கண்டிஷன்.

    நான் நேத்திக்கு அங்க எடுத்த சில போட்டோக்கள போடலாம்னு நினைச்சேன். அப்புறம் நம்ம இமேஜ் ரொம்ப ரிப்பேராகிடும்னு விட்டுட்டேன்! :)


  12. rv said...

    சன்னாசி,
    பொங்கல் ஸ்பிரிட்டே தான். நல்லா பொங்கிட்டோம்ல.

    //தீபாவளி பொங்கல் புதுவருடம் என்று வீட்டில் இல்லாத எப்போதுமே 'அஞ்சால் அலுப்பு மருந்து'டன் கொண்டாடியது ஒரு காலம் //
    அ.அ.ம வச்சு என்னங்க செய்வீங்க? சொல்லித்தந்தா புண்ணியமா போகும். :)


  13. Karthik Jayanth said...

    ராம நாதன் சொல்லுர ஆப்சிந்தெ(Absinthe) சரக்கு இங இருக்கு ர ட்ர்ய் மர்டினி (Dry Martini)மாதிரி இருக்கு. a close matching.

    Pongal Greetings to u.


  14. Anand V said...

    // நேத்திக்கு அங்க எடுத்த சில போட்டோக்கள போடலாம்னு நினைச்சேன். அப்புறம் நம்ம இமேஜ் ரொம்ப ரிப்பேராகிடும்னு விட்டுட்டேன்! :)
    //

    அப்ப தனி மயிலிலாவது அனுப்பு ராசா

    பொங்கள் வாழ்த்துக்கள்


  15. குமரன் (Kumaran) said...

    //அப்புறம் நம்ம இமேஜ் ரொம்ப ரிப்பேராகிடும்னு விட்டுட்டேன்! :)
    //

    இப்ப மட்டும் என்ன வாழுதாம்? :-)

    //பொங்கள் வாழ்த்துக்கள் //

    அது.


  16. G.Ragavan said...

    இராமநாதன்...என்னாச்சு ஒங்களுக்கு...இப்பிடிப் பட்ட பதிவெல்லாம் போடலாமா? என்னையப் போல ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பசங்களையும் (கடந்த ஒரு வருஷமா) கெடுத்துருவீங்க போல இருக்கே.

    சரி. என்னோட அனுபவத்த சொல்றேன். பெல்ஜியம்ல நடந்தது. மூனு பேர் ஆபீசுல இருந்த போயிருந்தோம். ஒருத்தன் தண்ணிப் பழக்கமே இல்லாதவன். (இப்பப் போடோ போடுன்னு போடுறான்.) இன்னொருத்தன் பீர்மேகம். டின் டின்னா குடிப்பான். ஹாட்னா ஓடியே போயிருவான். நம்மளோ ழொம்ப ழேரம் ஷ்டெடியா இருக்குற ஆளு. நெஜமாத்தாங்க. பீர்மேகப் பையனுக்கு ஜின் கத்துக்குடுக்க ஒரு பிளான். அவனும் உக்காந்து தொடங்குனான். சீக்கிரத்துலயே ஆள் டமால் ஆகி அவனோட ஃபிளாட்டுக்குப் போயிட்டேன்.

    தனியா இருக்கேன். ஆனா என்னோட ரெஞ்சுல கால்பாகம் கூட அடிக்கலை. இருக்குற ஜின்னை மிராண்டாவோட கூட்டணி அமைச்சு அரசாங்கம் நடத்திக்கிட்டு இருந்தேன். பாருங்க. திடீர்னு கூட்டணி ஒடஞ்சிருச்சு. அதான் மிராண்டா தீந்து போச்சு. அந்த ராத்திரீல அந்தக் குளிருல வெளிய போனா கற்பு கூட மிஞ்சாதுன்னு தெரியும். பிரிஜ்ஜ தொறந்தா உள்ள ஒரு வாரத்து கிரேப் ஜூஸ் என்னைப் பாத்து சிரிச்சது.

    அதையும் ஜின்னையும் கலக். ரெண்டும் சேந்து தொண்டைக்குள்ள களக். கொஞ்ச நேரத்துக்கு கலக்+களக். பாட்டில் என்னவோ காலியாப் போச்சு. ஆனா அதுவே காலைல எந்திரிச்சப்பதான் தெரியும். ஹி ஹி.

    எனக்கு ரொம்பப் பிடிச்சது Irish Cream. ரொம்பக் காஸ்ட்லி. ஆனா எனக்கு ரொம்பப் பிடிக்கும். என்னோட சிஸ் வாங்கிக் குடுத்தனுப்புவா. வீட்டுலயும் என்னோட டிரிங்க்ஸ் பழக்கம் தெரியும். ஒவ்வொரு நாளும் தூங்குறதுக்கு முன்னாடி லேசா ஒரு பெக் Irish Cream சாப்பிட்டதெல்லாம் இன்னும் நல்லா நெனவிருக்கு.

    இப்ப அதெல்லாம் ஒன்னுமே இல்லீங்க. ஒரு வருசத்துக்கும் மேலயே ஆச்சு. இனிமேல் திரும்பத் தொடங்குற வாய்ப்பும் இல்லவே இல்லை. இப்பக் கூட அப்ப வாங்குன பிராண்டி பாட்டில் வீட்டு பிரிஜ்ஜுல இருக்கு. ஆனா நான் தொடல. கால் பாட்டில் Irish Cream கூட பிரண்டுக்குக் கொடுத்துட்டேன்.

    அதுனாலதான் சொல்றேன். இந்த மாதிரியெல்லாம் பதிவு போட்டா எப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி? ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப தப்பு.

    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    (அந்த போட்டோவ நமக்கும் அனுப்புங்க. மயிலார் கிட்ட கொடுத்தா கொத்திக்கிட்டு வந்து குடுத்துருவாரு)


  17. ramachandranusha(உஷா) said...

    :-))))))))))))))))))))))))))))))))


  18. சன்னாசி said...

    அ.அ.ம என்றது alcoholக்கான ஒரு செல்லப்பெயர்; அவ்வளவே. மற்றபடி, சமீபத்தில் பெயர் தந்த சுவாரஸ்யத்துக்காக முயற்சித்ததெனில் ஒன்று இங்கே ;-). பெயர் என்னமோ பெத்த பெயர், ஆனால் ரிசல்ட் சரியில்லை (ordain பண்ணிக்கூட)


  19. குமரன் (Kumaran) said...

    அடப் பாவிங்களா. எவனும் என்னை மாதிரி நல்லவனா இல்லியா இந்த உலகத்துல? நானெல்லாம் 'ச்சின்னப் பையனா' இருக்கிறப்ப மொதத் தடவ அமெரிக்கா வர்றப்ப ஏதோ ஒரு நப்பாசையில ப்ளைட்டுல பீர் கேன் வாங்கி முழுசும் குடிக்க முடியாமத் திருப்பிக் குடுத்த ஆளு. இங்க என்னடான்னா ஐரிஷ் க்ரீமாம். அ.அ.மவாம். தமிழ் எழுத்துல எல்லாத்தையும் சொல்றாங்க. இந்தப் பக்கமே இனிமே வரக்கூடாதுப்பா. நம்மளையும் கெடுத்துறுவானுக.


  20. rv said...

    கார்த்திக் ஜெயந்த்,
    எனக்குத் தெரிஞ்சதெல்லாம் பியான்கோ மார்டினி அஸ்தி தான். இந்த டரை மார்டினி பத்தித் தெரியாது.

    ஆனந்த்,
    உங்களுக்கும் பொங்கள் வாழ்த்துகள். கள் பற்றாக்குறையோ? என்னைய மாதிரி இன்னசெண்ட் சின்ன பசங்ககிட்ட கேக்குறீங்களே!


  21. rv said...

    குமரன்,
    ஆத்துக்காரம்மாவும் ப்ளாக்குகள படிப்பாங்களோ? ரொம்பவே எச்சரிக்கையாக பின்னூட்டமிடறீங்களே??? :P

    ஐரிஷ் க்ரீம்னா என்னென்னு தெரியாதுன்னு டகால்டி வேலையெல்லாம் இங்கே செல்லுபடியாகாது,, :)

    //நம்மளையும் கெடுத்துறுவானுக//
    No Comments... :)


  22. rv said...

    இராகவன்,
    ஒரு வாரத்தைய பழைய க்ரேப் ஜூஸா? அதுல தான் பிரச்சனை. ஜின்னைப் பொருத்தவரை இங்க நான் டேஸ்ட் பண்ணவரைக்கும் Bristoll's மற்றும் Gordon's நன்றாகவே இருந்தன.

    கூட்டணின்னாலே எல்லா ஊர்லேயும் பிரச்சனைதானே.

    Baileys எனக்கும் மிகவும் பிடிக்கும். ஆல்கஹால் என்றே சொல்ல முடியாதபடி காஃபி மில்க் ஷேக் போலல்லவா இருக்கும்!


  23. rv said...
    This comment has been removed by a blog administrator.

  24. rv said...

    சன்னாசி,
    நீங்க கொடுத்த சுட்டி பார்த்தேன். அதன் பெயர் கொஞ்சம் டூ மச் என்றாலும் அதே காம்போவை நானும் முன்னர் ட்ரை பண்ணிருக்கேன்,

    அதேபோல வோட்கா வித் பால்! என்னுடைய ஃபேவரிட்களில் ஒன்று,


  25. குமரன் (Kumaran) said...
    This comment has been removed by a blog administrator.

  26. குமரன் (Kumaran) said...

    சேச்சே உண்மையச் சொன்னா யாரு நம்புறா? காலம் கலிகாலம். எல்லாரும் அ***** இருக்கிறப்ப நாம மட்டும் துணியோட நின்னா?ன்னு சொல்லுவாங்களே அது மாதிரி ஆகிப் போச்சு. எங்க வீட்டம்மா வலைப்பதிவுகள் படிப்பாங்க. ஆனா இந்த கன்றாவியெல்லாம் படிப்பாங்களான்னு தெரியல. வீட்டுக்குப் போயி தான் கேக்கணும்.

    தப்பித் தவறி எங்க வீட்டுப் பக்கம் வந்துராதீங்க (வலைப் பதிவைச் சொல்லலை. அங்கே எப்பவுமே வெல்கம் தான்). எங்க வீட்டுல டூப்ளிகேட் பீர் கூட கிடையாது. அதாங்க ரூட் பியர்ன்னு சொல்றாங்களே அது தான். கோக், ஸ்பிரைட் கூட எப்பவாவது தான் வாங்குறது.

    பால் மணம் மாறா பாலகன். என்னை கெடுத்துறாதீங்க. சொல்லிப்புட்டேன்.


  27. rv said...

    குமரன்,
    தேவைக்கு அதிகமா டென்சன் ஆவதாத் தெரியுது!

    என் பிரிட்ஜில் எப்பவும் பியர் இருக்கும். வருவோரை உபசரிக்க.

    பால் மணம் மாறா பாலகன்னு எல்லாம் எதுக்கு பில்ட் அப். இந்தியன் ஏர்லைன்ஸில் பியர் அடித்த மூஞ்சிக்கு????

    தப்பா எடுத்துக்காதீங்க.. :))


  28. துளசி கோபால் said...

    வீட்டுலே அப்பா அம்மா இந்த ப்ளொக்கை படிக்கமாட்டாங்கன்ற தைரியமா?
    ஆனா 'அக்கா' படிச்சுட்டேனே!

    சரி போட்டும். ச்சின்ன வயசு. அனுபவி ராசா அனுபவி.

    பொங்கல் வாழ்த்துக்கள்.

    ( மடியா இருக்கச்சே, இந்தப் பதிவைப் படிக்கும்படி ஆச்சே!)


  29. rv said...

    அக்கா,
    //வீட்டுலே அப்பா அம்மா இந்த ப்ளொக்கை படிக்கமாட்டாங்கன்ற தைரியமா?
    ஆனா 'அக்கா' படிச்சுட்டேனே!//
    நீங்க படிப்பீங்கன்னுதானே நிறைய சென்ஸார்டு பண்ணிருக்கேன்.

    இந்தச் சின்ன வயசில அனுபவிக்காமல் வேறொப்போது அனுபவிப்பது!???
    அது!!!!!

    //( மடியா இருக்கச்சே, இந்தப் பதிவைப் படிக்கும்படி ஆச்சே!)
    //
    இன்னொரு தடவை குளிச்சா இந்தப் பதிவ படிச்ச விழுப்பு போச்சு இல்லியா?


  30. குமரன் (Kumaran) said...

    அது இண்டியன் ஏர்லைன்ஸ் இல்லை ராம்ஸ். ஏர் இண்டியா. :-)

    எங்க வீட்டுக்கு வந்தா பால் மட்டும் தான் கிடைக்கும். காபி கூட கிடைக்காது. அதத்தான் பால் மணம் மாறாத பாலகன்னு சொன்னேன். இப்ப புரியுதா ஏன் எங்க வீட்டுப் பக்கம் வராதீங்கன்னு சொன்னேன்னு.

    சரி. சரி. வர்றதா இருந்தா ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொல்லிடுங்க. பீர் வாங்கி வைக்கிறேன். :-)


  31. குமரன் (Kumaran) said...

    எப்படியோ 30 பின்னூட்டம் ஆயாச்சு. வாழ்த்துகள்.


  32. சன்னாசி said...

    //அதேபோல வோட்கா வித் பால்! என்னுடைய ஃபேவரிட்களில் ஒன்று,//

    அதன் பெயர் இங்கே கூட Caucasian அல்லது White Russian. நமக்குப் பிடித்ததும் வோட்காவே. French Kamikazee ஒரு டிஃபால்ட் ஐட்டம். வோட்கா வாழ்க!!


  33. சன்னாசி said...
    This comment has been removed by a blog administrator.

  34. G.Ragavan said...

    // அடப் பாவிங்களா. எவனும் என்னை மாதிரி நல்லவனா இல்லியா இந்த உலகத்துல? நானெல்லாம் 'ச்சின்னப் பையனா' இருக்கிறப்ப மொதத் தடவ அமெரிக்கா வர்றப்ப ஏதோ ஒரு நப்பாசையில ப்ளைட்டுல பீர் கேன் வாங்கி முழுசும் குடிக்க முடியாமத் திருப்பிக் குடுத்த ஆளு. இங்க என்னடான்னா ஐரிஷ் க்ரீமாம். அ.அ.மவாம். தமிழ் எழுத்துல எல்லாத்தையும் சொல்றாங்க. இந்தப் பக்கமே இனிமே வரக்கூடாதுப்பா. நம்மளையும் கெடுத்துறுவானுக. //

    குமரன் பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லனும். உண்மையச் சொன்னாலும் உறுத்தாமச் சொல்லனும். என்னைப் பாருங்க. இராமநாதனைப் பாருங்க. சன்னாசியைப் பாருங்க. எல்லாரையும் பாருங்க. களவும் கற்று மறக்கனுங்க.


  35. rnatesan said...

    பொங்கல் வாழ்த்துக்கள்!!


  36. மணியன் said...

    தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்.


  37. G.Ragavan said...

    // வீட்டுலே அப்பா அம்மா இந்த ப்ளொக்கை படிக்கமாட்டாங்கன்ற தைரியமா?
    ஆனா 'அக்கா' படிச்சுட்டேனே! //

    நல்லவேள டீச்சர் இந்தப் பதிவை மட்டும் படிச்சிருக்கீங்க. என்னோட பின்னூட்டத்தப் படிக்கலை. அப்பாடி தப்பிச்சேன்

    // சரி போட்டும். ச்சின்ன வயசு. அனுபவி ராசா அனுபவி. //
    அப்பிடிச் சொல்லுங்க டீச்சர். இந்தப் பொடிப் பசங்களே இப்படித்தான். நம்ம அளவுக்கு மெச்சூரிட்டி கெடையாது.

    // பொங்கல் வாழ்த்துக்கள். //
    உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் டீச்சர்.

    ( மடியா இருக்கச்சே, இந்தப் பதிவைப் படிக்கும்படி ஆச்சே!) //


  38. குமரன் (Kumaran) said...

    சரி. எப்படியும் இராகவனும் இராமநாதனும் நம்பப் போறதில்லைன்னு முடிவு பண்ணிட்டீங்க. அப்புறம் நான் என்ன சொல்றது? செய்றது? :-)

    நான் பொய் சொல்லலை. அதனால பொருந்தச் சொல்ல வேண்டிய கவலை இல்லை. உண்மைய உறுத்துற மாதிரி சொல்லிட்டேனோ? அப்படி என்றால் மன்னிக்கவும். நானும் ஒத்துக்கறேன். உண்மைச் சொன்னாலும் உறுத்தாமச் சொல்லணும். :-)

    களவும் கற்று மறன்னு சொல்லியிருக்காங்க தான். ஆனா நாம இருக்கிற நிலைமையில கற்று மறக்கற மாதிரியா இருக்கு. எதையும் கற்று நிலைக்கிற மாதிரியில்ல இருக்கு. அதற்கு கற்றுக் கொள்ளாமலேயே இருக்கலாம் இல்லையா? :-)

    எல்லா இடத்துலயும் தவறாம ஸ்மைலி போட்டுட்டேன். மேலே ஸ்மைலி போடாததால உறுத்தலா இருந்துச்சோ என்று நினைவு தான். ஸ்மைலி போடாததாலே நான் சிரித்துக் கொண்டே எழுதுகிறேனா சீரியஸா டென்சன் ஆகி எழுதுறேனான்னு தெரியலை இல்லை. அதனாலும் இங்க ஸ்மைலி போட்டுட்டேன். :-) :-) :-) மேலே எங்க எங்க ஸ்மைலி இல்லையோ அங்க எல்லாம் தயவு செய்து போட்டுக்கோங. :-) :-) :-) :-) :-) :-) :-) :-)


  39. குமரன் (Kumaran) said...

    அப்புறம்...இராமநாதன், வீட்டுக்கு வர்றப்ப நீங்களே வாங்க. உங்க Profileல இருக்கிற ரஷ்யாகாரரை அனுப்பாதீங்க. சரியா? :-)


  40. G.Ragavan said...

    // எல்லா இடத்துலயும் தவறாம ஸ்மைலி போட்டுட்டேன். மேலே ஸ்மைலி போடாததால உறுத்தலா இருந்துச்சோ என்று நினைவு தான். ஸ்மைலி போடாததாலே நான் சிரித்துக் கொண்டே எழுதுகிறேனா சீரியஸா டென்சன் ஆகி எழுதுறேனான்னு தெரியலை இல்லை. அதனாலும் இங்க ஸ்மைலி போட்டுட்டேன். :-) :-) :-) மேலே எங்க எங்க ஸ்மைலி இல்லையோ அங்க எல்லாம் தயவு செய்து போட்டுக்கோங //

    ஐயோ குமரன், நான் கிண்டலுக்குக்காக மட்டுமே அப்படிச் சொன்னேன். நீங்க சொல்றத நம்புறேன். நம்புறேன். நம்புறேன். (இங்க ஸ்மைலி போடனுமா? கூடாதா?)


  41. பத்மா அர்விந்த் said...

    இராமனாதன்
    பதிவு மட்டுமே "கலக்கல்" அப்படின்னு பார்த்தா ஸ்மைலிலே பல கலக்கல். வோட்கா வித் பால்? பாலுடன் குடிக்கிற ஒரே சோமபானம் கலுவா என்றல்லவா நினைத்தேன். உங்கள் பதிவை படித்தாலே ஒரு ப்ளடிமேரி வேண்டும் போல இருக்கிறது:)
    பொங்கல்(ள்) வாழ்த்துகள்


  42. rv said...

    சன்னாசி,
    // White Russian//
    இப்படி நிஜமாவே காக்டெயில் இருக்கா? அது எனக்குத் தெரியாது. ஒரு நாள் பசங்க வச்சிருந்த ஆரஞ்சு ஜூஸ் தீர்ந்துப்போச்சுன்னு என்கிட்டேர்ந்து பால் வாங்கி மிக்ஸ் பண்ணி கண்டினியு பண்ணாங்க. அப்பதான் முததடவையா கேள்விப்பட்டேன்.

    குமரன்,
    எல்லாமே வெறும் தமாஷ்தாங்க. ஸ்மைலி போடாமலேயே அது எனக்கு புரிஞ்சுடுச்சு.


  43. rv said...

    ஆர். நடேசன், மணியன்,

    நன்றி.


    தேன் துளி,
    //குடிக்கிற ஒரே சோமபானம் கலுவா என்றல்லவா நினைத்தேன்//
    கலுவான்னா என்ன?

    ப்ளடிமேரி தானே.. அதுவும் நல்லாத்தான் இருக்கும். என் பெயரைச் சொல்லி சாப்பிடுங்க. :))


  44. நவீன் ப்ரகாஷ் said...

    நல்லா பொங்குறீங்க ராமநாதன் ! ஊத்துங்க ! கவுத்துங்க ! கலக்குங்க !


  45. rv said...

    நவீன் பிரகாஷ்,
    மிக்க நன்றி. நீங்களும் நல்லா பொங்கி கலக்கினீங்களா?


  46. பத்மா அர்விந்த் said...

    Ramanathan:
    It is a coffee based liquoer and drink it with mil, vennila and Vodka. Here is the info:alcoholreviews.com/SPIRITS/kahlua.shtml


 

வார்ப்புரு | தமிழாக்கம்