வெட்டவெளி தன்னில் - பாடல் பற்றி? - repost

வெட்டவெளி தன்னில் மெய்யென்றிருப்பார்க்கு பட்டயம் எதுக்கடி

மாங்காய்ப் பாலும் உண்டு மலைமேல் இருப்போர்க்கு தேங்காய்ப் பால் (உதம்பாய்?) எதுக்கடி


செந்தாமரைப் போல திரியும் மெய்ஞானிக்கு கைத்தாளம் எதுக்கடி

தாவாரம் இல்லை தனல்போல்(?) வீடில்லை (உதம்பாய்?) தேவாரம் எதுக்கடி

------
இந்தப் பாடலை சமீபத்தில் தான் முதன்முதலில் விஜய் சிவா பாடக்கேட்டேன். கேட்பதற்கு மிகவும் இனிமையாக இருந்தது. ஆனால் யார் இயற்றியது என்று தெரியவில்லை. பொருளும் சரியாக விளங்கவில்லை. கேட்பதை அப்படியே எழுதியுள்ளதால், வரிகள் தப்பாகவும் இருக்கலாம். googleஇல் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை. தெரிந்தோர் விளக்கமுடியுமா? நன்றி.

3 Comments:

  1. rv said...

    சுட்டிக்கு மிக்க நன்றி மஞ்சுளா...
    பாடல் வரிகள் சற்று தவறாக எழுதிவிட்டேன்..

    ஆனால், இந்த குதம்பை சித்தர் என்ன சொல்ல வருகிறார் என்று எனக்கு புரியவேயில்லை.. :((


  2. erode soms said...

    அன்பர் அவர்களே !மிக்க மகிழ்ச்சி
    குதம்பைச்சித்தர் அருளிய பாடல் பற்றி
    எனக்கு தெரிந்தவரை விளக்கியுள்ளேன் .வாருங்களேன்
    இப்புதியவன் வலைப்பக்கம் ...


  3. rv said...

    சித்தன்,
    நன்றி

    உங்கள் பதிவைப் பார்த்து விட்டேன்.


 

வார்ப்புரு | தமிழாக்கம்