யப்போ! திருநெல்வேலி டவுண், டி.கல்லுப்பட்டி - repost

இங்க யாராவது திருநெல்வேலி டவுண், டி. கல்லுப்பட்டி -காரங்க இருக்கீங்களா??? என்னோட கு. போ. கதையிலேயே கேட்டிருந்தேன். ஆனா என்னுடைய வாழ்க்கையின் லட்சியப் பயணத்தொடரை பலரும் லட்சியம் பண்ணதாகவே தெரியவில்லை. அதனால் தனிப்பதிவு போட்டே கேட்கறேன்.. திருநெல்வேலிக்காரங்க யாராவது இருந்தா இதுக்கு தயவு செஞ்சு பதில் சொல்லுங்க. எனக்கு மண்ட குடையுது. அது ஏம்பா உங்க town-க்கு ரெண்டு சுழி 'னா' போடாம மூணு சுழி பெரிய "ண" போடறீங்க????

அதே மாதிரி மதுரைக்கு அந்தப்பக்கம் பாத்தீங்கன்னா வழி நெடுக 'டி. கல்லுப்பட்டி', 'வீ. ரெட்டிப்பட்டி'ன்னு வரிசையா ஊர் பேருகள எல்லாம் இனிஷியலோட எழுதிவச்சுருக்காங்க. அதுக்கும் என்ன காரணம்னு யாருக்காவது தெரியுமா? சும்மாங்காட்டி ஒரு நாவல்டியா இருக்கட்டும், இல்லாட்டி எந்த வேலையத்தபய நம்மூர பத்தியெல்லாம் பதிவுப் போடப்போறான்னு எழுதி வச்சுருக்காங்களா? இல்ல வேற ஏதேனும் தத்துவமெல்லாம் உள்ளாற இருக்குதா?

பி.கு: அதானே, என்னடா இரண்டு மூணு வாரமா ப்ளாக்கர் பிரச்சனை பண்ணாம இருக்கேன்னு பார்த்தேன்,, இன்னிக்கு ஆரம்பித்துவிட்டது. இந்த பதிவை தானாக அழித்து விட்டது.. அதான் மீள்பதிவு.

17 Comments:

  1. rv said...

    test


  2. Unknown said...

    டி(T).கல்லுப்பட்டி ==> திருமங்கலம் (Thirumangalam) கல்லுப்பட்டி
    இது போல நிறைய இருக்கு.


  3. kirukan said...

    The initial refers to the Taluk that village belongs to..
    For eg. W.Pudupatti means
    Watrap Pudupatti...

    There are so many pudupattis in TN.. But this is our Pudupatti.

    People in KanyaKumari district always write Mani as Mony...
    NesaMani == NesaMony..


  4. துளசி கோபால் said...

    அந்த இனிஷியல் அந்தந்த தாலுக்காவைக் குறிக்கறதுதான்.

    கல்லுப்பட்டிக்கும் புதுப்பட்டிக்கும் கணக்கே கிடையாதுல்லே!

    ஆத்தூர்னு சொன்னாலும் மதுரை ஆத்தூர், சேலம் ஆத்தூர், செங்கல்பட்டு ஆத்தூர்னு பலது இருக்கேப்பா!

    கன்யாகுமாரி 'மோனி' கொஞ்சம் மலையாளம் கலந்துட்டதாலே! தொட்டடுத்துக் கேரளா வந்துருதேப்பா.


  5. Ganesh Gopalasubramanian said...

    ராம்ஸ்

    // அதான் மீள்பதிவு. //
    விடாமுயற்சின்னு சொல்லுங்க

    துளசி சொல்ற மாதிரி அந்த இனிஷியல் அந்தந்த தாலுக்காவைக் குறிக்கறதுதான்.


  6. ROSAVASANTH said...

    //திருநெல்வேலிக்காரங்க யாராவது இருந்தா இதுக்கு தயவு செஞ்சு பதில் சொல்லுங்க. //

    நான் திருநெல்வேலிதான்.

    //எனக்கு மண்ட குடையுது. அது ஏம்பா உங்க town-க்கு ரெண்டு சுழி 'னா' போடாம மூணு சுழி பெரிய "ண" போடறீங்க????

    அது திருநெல்வேலி பாஷை என்பதை தவிர வேறு பதில் எனக்கு தெரியவில்லை.


  7. முகமூடி said...

    // இந்த பதிவை தானாக அழித்து விட்டது.. // காரணம் தலைப்பில் உள்ள சொற்குற்றம்.. யப்போ! என்று சொல்கிறீர்கள். தெக்கத்தி பாஷையில யப்பே! என்றுதான் இருக்க வேண்டும் (யாத்தே! சந்தேகமிருந்தா வைரமுத்துவ கேட்டுக்கப்பேய்)


  8. தாணு said...

    திருநெல்வேலியில் தமிழ்தான் கொஞ்சும்,தங்க்ழீஷ் கொஞ்சம் தடுமாறத்தான் செய்யும். தி-லி ஜங்; தி-லி டவுண், சொல்லும்போது சுகமாக இருக்குதா இல்லையா?


  9. G.Ragavan said...

    திருநெல்வேலி என்னுடைய நண்பனுடைய ஊர். அதிலும் டவுண்.

    அது முதலில் யாரோ டவுண்ணு எழுதிப் பழகி அப்படியே வழிவழியா வந்திருக்கனும். நாகருகோயில் பக்கமெல்லாம் றாபர்ட்-தான் ராபர்ட் இல்லை.

    எல்லாம் தமிழ்தாங்க. இங்கிலீசுப் பேர தமிழில் எழுதும் போது அப்படியிப்படிதான் இருக்கும். கொஞ்சம் பொறுத்துக்கிருங்க.


  10. G.Ragavan said...

    உண்மைதான் தாணு, திருநவேலி சங்சன்னு கொச்சையா நாலு பேரு சொன்னாலும் ஒரு சொகந்தான். அப்படியே சாந்தி ஸ்வீட்ஸ்ல கூட்டத்துல இடி பட்டு பொட்டலம் அல்வா வாங்கித் தின்னாலும் சொகந்தான்.


  11. மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

    Ramanathan,

    VaNakkam!

    could you please drop me aline at

    mathygrps at gmail dot com.

    thanks.

    -Mathy


  12. rv said...

    கல்வெட்டு, பாண்டி, kirukan, துளசியக்கா, ரோசாவசந்த், G.ராகவன், கோ.கணேஷ், முகமூடி, தாணு மற்றும் மதி கந்தசாமி,

    உங்கள் எல்லோருக்கும் நன்றி.

    ஆகமொத்தம் இனிஷியல் தாலுகாவைக் குறிக்கிறது.

    டவுண்-னு சும்மாங்காட்டி எழுதிருக்காங்க.

    ஒருவழியா குழப்பம் தீர்ந்தது.

    பாண்டி,
    //பதிவோட title ஒரு பர்லாங் தூரத்துக்கு இருந்தா ப்லாக்கர் கபளீகரம் பண்ணிருவார்//
    :) பதிவின் தலைப்பு நீளமாக இருப்பது தான் பிரச்சனையா? இதைவிட நீளமான தலைப்புகள் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
    ஆங்கில சொல் ஒன்றை தலைப்பில் சேர்த்தால் பிரச்சனை வராது என்பது என் ஊகம். முன்னர் ஒருமுறை இதேமாதிரி பிரச்சனை வந்தபோது ஆனந்தின் அறிவுரை கூறியபடி comment box ஓப்பன் பண்ணேன். இந்தமுறை அதுவும் இந்த தடவை கைகொடுக்கவில்லை.

    தாணு, G.ராகவன்
    //உண்மைதான் தாணு, திருநவேலி சங்சன்னு கொச்சையா நாலு பேரு சொன்னாலும் ஒரு சொகந்தான்.//
    ஒவ்வொரு ஊர் தமிழ் ஒரு அழகுதான். குறிப்பாக திருநெல்வேலி, கோவைத் தமிழ் கேட்பது தனி சுகம்.

    மதி கந்தசாமி,
    மெயில் அனுப்பியாச்சு.


  13. சன்னாசி said...

    T.கல்லுப்பட்டி என்பது "தேரூர் கல்லுப்பட்டி" என்பதன் சுருக்கம்.


  14. rv said...

    மாண்ட்ரீஸர்,

    தேன்குறிச்சி, திருமங்கலம்னு பாண்டி சொல்லிருந்தாரு. நீங்க புதுசா தேரூர்னு லிஸ்ட்ல சேர்த்திருக்கீங்க.

    தமிழ்நாட்டுல இன்னும் எத்தனை கல்லுப்பட்டி இருக்குன்னு தெரில :)


  15. rv said...

    நவன் பகவதி,

    பொதுவாகவே அவங்கவங்க ஊர்லேயே இருக்கற விஷயம் அடுத்த ஊர்க்காரன் சொல்லித்தான் தெரியுது பாத்தீங்களா???? :)))

    இருந்தாலும் எப்படி இதை மிஸ் பண்ணினீங்கன்னு எனக்கு ஆச்சரியமா இருக்கு.

    அப்புறம்...உங்க ஊர் கோயில் கோவிந்தர் படம் வலையில் எங்காவது கிடைக்குதா? நான் தேடிப்பார்த்தவரை அகப்படவில்லை. உங்களுக்கு தெரிந்தால் சுட்டி கொடுங்களேன், ப்ளீஸ்.

    நன்றி


  16. Geetha Sambasivam said...

    இ.கொ.வை நேரடியாக் கேட்டிருக்கலாம். இந்த வலை உலகிலேயே திருநெல்வேலிக் காரங்க தானே ஆட்சி :P செய்யறாங்க! லிஸ்ட் வேணுமா?


  17. இலவசக்கொத்தனார் said...

    கீதாம்மா ஒரு லிஸ்ட் எடுங்க. இந்த மருத, கோவைக்காரங்க மாதிரி நாமும் ஒரு நெல்லை பிளாக் ஆரம்பிக்கலாம். :))


 

வார்ப்புரு | தமிழாக்கம்