டாக்டர்..... நீங்க நல்லவரா? கெட்டவரா? - repost - 2

தாணு அவர்களின் பதிவை பார்த்தபின் நான் பலநாட்களுக்கு முன்னர் எழுதிய இரு பதிவுகளை மறுபதிவு செய்யலாம் என்று தோன்றியது. அந்த வரிசையில் இது இரண்டாவது பதிவு.
--------------

கோழியால் முட்டை வந்ததா என்பது மாதிரியான கேள்வி - இன்று மருத்துவர்களை services விற்கும் vendor-களாக மக்கள் பார்ப்பதனால் மருத்துவர்களும் business-ஆக தம் தொழிலை கருதுகிறார்களா இல்லை இதனால் அது வந்ததா?


இப்போதும் கிராமங்களிலிருந்து வரும் மக்கள், குடும்ப மருத்துவரை, தம் குடும்பத்தினராகவே கருதுவதை பார்க்கிறோம். ஆனால் அங்கேயும்சுகாதார மையங்கள் ஒழுங்காக இயங்குகின்றனவா என்பது பல இடங்களில் சந்தேகமென்று நினைக்கிறேன். இதைப்பற்றி எனக்கு அவ்வளவு பரிச்சயமில்லாத்தால் தெரிந்தோர் கூறினால் நன்று. ஆனால் நமக்கு பழக்கப்பட்ட நகர்ப்புறங்களில், நான் பார்த்தவரையில். ஒரு டிவி வாங்கினோம். அதற்காக கடைக்காரனை என்ன கட்டிக்கொள்கிறோமா? அதே போல ஒரு மருத்துவ நிபுணர் நம்மை குணப்படுத்துகிறார் என்றால் சும்மா ஒன்னும் செய்யலியே. பணம் கொடுத்துத்தானே அவரோட service-ஐ வாங்குகிறோம் என்ற மனப்பான்மை பெருகிவருகிறது.


நமக்கு ஒரு குறிப்பிட்ட சமூகத்தைப் பற்றி கெட்ட எண்ணம் தோன்றிவிட்டால். ஏன், அச்சமூகத்தைச் சேர்ந்த பத்துப்பேரைக் கூட நமக்கு தெரியாமல் இருக்கும். ஆனால், ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதை, wrong context-இல் எடுத்துக்கொண்டு சர்வசாதாரணமாக generalize பண்ணுவது நம் பழக்கமாகிவிட்டது. அரசியல் என்றாலே சாக்கடை. இஸ்லாமியர்கள் என்றாலே தீவிரவாதிகள். இதெல்லாம் இந்த அறிவற்ற generalization வரும் inference-கள் என்று சொல்லலாம். இதுபோல் தனியார் மருத்துவர்கள் காசு புடுங்க காத்துக்கொண்டிருக்கிறார்கள். மருத்துவமனைகள் எல்லாம் பில்-ஏற்றி ஹார்ட் அட்டாக் கொடுக்கும் என்பதும். இவை நகைச்சுவைக்காக சொல்வதெனில் பரவாயில்லை. அல்லது ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் நடப்பதை எடுத்துச் சொல்லலாம். ஆனால் generalize செய்வதால் பிரச்சனை.


ஒரு உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு ரத்த அழுத்தம் என்று வைத்துகொள்வோம். ரத்த அழுத்தத்திற்கு 2 ரூபாய்க்கும் மாத்திரை எழுதலாம். 100 ரூபாய்க்கும் எழுதலாம். இதில் மருத்துவருக்கும் dilemma இருக்கும். உங்களின் நிலையைப் (status) பொறுத்தே மருந்து கொடுக்க வேண்டும். அதேசமயம் அது நோய்க்கான தீர்வாகவும் இருக்க வேண்டும். 100Rs க்கு எழுதுகிறார் என்று வைத்துக்கொள்வோம். நான் சொன்ன 2 ரூபாய், 100 ரூபாய் மாத்திரைகள் இரண்டுமே ரத்த அழுத்தத்தைக் கட்டுபடுத்துபவைதானே. இவர் ஏன் 100 Rs க்கு எழுதுகிறார் என்ற கேள்வி நியாயமாக எழக்கூடிய ஓன்று. அதற்கு பதில் - ரிசல்ட் ஒன்றானாலும், உங்களின் உடலிற்கேற்ப, conditions-களுக்கேற்ப எது தேவையோ அதைத்தான் எழுதமுடியும். ஆனால், யோசிக்காமல் மக்கள் உடனே கூறுவது, "doctor-க்கு மருந்து கடைலேர்ந்து கமிஷன் போது போல"-னு சர்வ சாதாரணமாக இகழ்வர். நீங்கள் போகும் மருத்துவர் தெரியாத்தனமாக சைடு பிஸினஸாக
மருந்துகடை வைத்திருந்தாரென்றால் இன்னும் மோசம். "கடை ஆரம்மிச்சாலும் ஆரம்மிச்சார், இப்டி எழுதி தள்ளிகினே போறாரே" என்று டயலாக் வரும். இதில் நல்லது செஞ்சாலும் கெட்ட பேர்தான்.

அதுக்காக மருத்துவர்கள் எல்லோரும் தேவையானவற்றையே எழுதுவார்கள் என்ற நம்பிக்கையும் வைக்காதீர்கள். நான் யாருக்கு சப்போர்ட்-னு உங்களுக்கு சந்தேகம் வந்தாலும் பரவாயில்ல. சொல்ல வந்தத சொல்லிடறேன். சும்மா கமிஷன் வாங்கிண்டு கன்னாபின்னானு எழுதும் டாக்டர்களும் பலர் உள்ளார்கள். உங்களுக்கு எழுதப்படும் ஒவ்வொரு மருந்தும் மாத்திரையும் என்னது, எதற்க்காக கொடுக்கப்படுகின்றது, இது இல்லையென்றால் வேறென்ன சாப்பிடலாம் என்பவற்றை எல்லாம் விவரமாக மருத்துவரைக் கேளுங்கள். படித்தவர்கள் கூட சிவப்பு கலர் capsule, மஞ்ச கலர் மாத்திரை என்ற நிலையிலேயே நம்மூரில் இருக்கிறார்கள். இப்பல்லாம் மருத்துவமனைகளிலேயே நோயாளிக்கென ஒரு folder போட்டு விடுகிறார்கள். அதிலேயே மருந்துசீட்டின் கூடவே இந்த விவரங்கள் பின் பண்ணி வைத்துகொள்ளுங்கள். தனியாக ஒரு பேப்பரில் எழுதி உங்க ப்ளட் க்ருப் கூடவே இந்த விவரங்களையும் எழுதி பர்ஸ்-ல வெச்சுக்கறதும் நல்லது. இத்துடன் இன்று ஒரு தகவல் முடிவடைகிறது.


இப்பல்லாம் ரத்த பரிசோதனைக்கூடம் , ஸ்கேன் சென்டர் ஏன் மருத்துவமனைகள் கூட ஒரு நோயாளிக்கு இவ்வளவு என்று
கொட்டிக்கொடுப்பதும் நடக்கிறது. இதைத்தவிர, மருந்து கம்பெனிகள் கொடுப்பது தனி. சும்மா ஏனோதானோனு எழுதினிங்கனால்லாம் வெறும் நோட்பாட், பென் ஸ்டாண்ட் காலெண்டர் தான். ஆனா, கிட்டத்தட்ட அவங்க சொன்ன டார்கெட் தொட்டுட்டீங்கன்னா ஏசி, பிரிட்ஜில் ஆரம்பிக்கும். எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனி எங்க ஊர்லேயே Honda City கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு. உனக்கு எப்படிடா தெரியும்னு நீங்க கேட்கலாம். இதெல்லாம் தெரிஞ்சுதானே மருத்துவம் படிக்கணும்னே முடிவு பண்ணேன்! :)

14 Comments:

  1. பரணீ said...

    அப்ப நல்லா படிங்க... :-)

    Race பாத்தீங்களா ?
    உங்க ஆளு என்ன இந்த சொதப்பு சொதப்புறார்.


  2. rv said...
    This comment has been removed by a blog administrator.

  3. துளசி கோபால் said...

    தம்பி,

    உங்க ரெண்டு பதிவுகளையும் (டாக்டர்ஸ்)படித்தேன். ரொம்பச் சரி.

    அம்மா அரசாங்க மருத்துவமனையிலே மருத்துவராக இருந்தப்பவும் இதே கதைதான். எப்பங்கறீங்க?ஒரு அம்பது வருசத்துக்கு முந்தியிருந்தே!

    கிராமத்துலே இருந்து வர்ற நோயாளிங்களுக்கு இலவச மருந்து ஸ்டாக் இல்லாததாலே
    ( அவுங்ககிட்டே காசும் இருக்காது, கடையிலே போய் ப்ரைவேட்டா வாங்க) வெறும் வைட்டமின் மாத்திரைகளையெல்லாம் மருந்துன்னு சொல்லிக் கொடுப்பாங்க. நம்பிக்கையோட அவுங்க அதை முழுங்கறதாலே பாதி நோய்தானாவே அப்பவே குணமாயிரும்.

    எங்க கிளாஸ் முழுசுக்கும் 'ப்ளாட்டிங் பேப்பர்( அட்டை) சப்ளை நாந்தான் அந்தக் காலத்துலே.

    மருந்துக்கம்பெனி பிரதிநிதிகள் கொண்டுவந்து ஆஸ்பத்திரியிலே தருவாங்க இதெல்லாம்.

    இங்க் ஊத்துற பேனாவாச்சே.


  4. rv said...

    பரணீ
    எங்க தலைவருக்கு நேரம் சரியில்லேங்கறது கரெக்டா தான் இருக்கு பாருங்க. பிஸ்ஸோனியாவுக்கு இப்போ பைன் போட்டிருக்காங்க. யாருக்கு வேணும்? mcLaren 1-2 போச்சே..

    sato தலையில் MS ஒரு தட்டு தட்டினாரே பார்த்தீங்களா? அவங்களுக்குள்ளே என்ன பேசியிருப்பாங்கன்னு தெரியல! :)


  5. rv said...

    துளசியக்கா
    அப்பேலேர்ந்து இந்த நிலமங்ககிறது வருத்தமளிக்கிறது.

    நம் அறியா மக்கள் ஊசி போடு போடு என்று பிடுங்குவார்கள். அவர்களை திருப்திபடுத்துவதற்காக H2O ஊசின்னு எழுதிக்கொடுத்திருக்கிறதா என் தந்தையும் சொல்லியிருக்கிறார். அவர்களுக்கும் அந்த ஊசி போட்டவுடன் புது தெம்பு வந்துவிடும்.
    power of suggestion-இன் நிதர்சன எடுத்துக்காட்டு இது.

    //மருந்துக்கம்பெனி பிரதிநிதிகள் கொண்டுவந்து ஆஸ்பத்திரியிலே தருவாங்க இதெல்லாம்.

    இங்க் ஊத்துற பேனாவாச்சே//

    புரியலையே...


  6. துளசி கோபால் said...

    தம்பி,
    அப்பெல்லாம் இந்த 'பால் பாயிண்ட்'பேனா வரலை. தண்ணியா இங்க் ஒண்ணு பாட்டிலில்
    கிடைக்கும். 'ஐரிஸ் இங்க்'ன்னு பேரு! அப்புறம் இங்க் பேனான்னா ஃபவுண்டென் பென்.
    அதுலே நிப் ன்னு உலோகத்துலே இருக்கும். நிப்பை ஒட்டியே நாக்கு'ன்னு ஒண்ணு இருக்கும்.
    அதுக்குக் கீழே திருகுனா பேனாவுலே இங்க் ஊத்தறதுக்கு
    இடம் இருக்கும். அதுலே இங்க் நிறைச்சுக்கணும். இந்தத் திருகு இருக்கு பாருங்க, எப்பவுமே 'டைட்'டா
    இருக்காது. கொஞ்சநாளுலே அந்த மரை லூசாயிரும்.அதுவழியா இங்க ஒழுகிரும்.
    கைநாட்டு வைக்கிற ஆளுங்க கையிலே இங்க் தடவுனமாதிரி கையிலே கட்டைவிரல் & ஆள்காட்டிவிரல்
    ரெண்டும் நீலமா இங்க கறை பிடிச்சுக் கிடக்கும் பலபேருக்கு.( கழியற பேனா?)

    இதுலே சிலசமயம், பேனாவே இங்க் கக்கும். ப்ளாபா இங்க் பேப்பரிலே மொத்தையா வுழுந்துரும் சிலப்ப.
    அந்த இங்கை ஒத்தியெடுக்கறதுக்கு ப்ளாட்டிங் பேப்பர் வேணுமில்லையா? அப்பத்தான் இந்த 'ஸீன்'லே நான்
    வரேன்!

    மெட்.ரெப் இருக்காங்க பாருங்க, அவுங்க மருந்துப் பேர் விளம்பரம் ஒருபக்கமும்,அடுத்தபக்கம் ப்ளாட்டிங்
    பேப்பர் இருக்கறதுமான அட்டை (நம்ம 'செக் தாள்' சைஸ்லே இருக்கும்)களை டாக்டருங்களுக்குத் தருவாங்க.
    ஆஸ்பத்திரியிலே பேனா வேற மாதிரி. மசி( இங்க்)கூடு வச்சு, ஒரு தொட்டு எழுதுற குவைல் பேனா இருக்கும்.
    அதுலே இங்க் கொட்டுனா ஒத்தித்துடைக்கறதுக்கு இது உபயோகப்படும். அதைத்தான் நான் அள்ளீக்கிட்டுப் போய்
    வகுப்பு முழுசுக்கும் வழங்கும் வள்ளலா இருந்தேன்.

    இப்பப் புரிஞ்சதா? ( அப்பாட்டே கேளுங்க, ஞாபகம் இருக்கா?ன்னு)


  7. Karthikeyan said...

    //* இதைத்தவிர, மருந்து கம்பெனிகள் கொடுப்பது தனி. சும்மா ஏனோதானோனு எழுதினிங்கனால்லாம் வெறும் நோட்பாட், பென் ஸ்டாண்ட் காலெண்டர் தான். ஆனா, கிட்டத்தட்ட அவங்க சொன்ன டார்கெட் தொட்டுட்டீங்கன்னா ஏசி, பிரிட்ஜில் ஆரம்பிக்கும். எனக்கு தெரிஞ்சு ஒரு கம்பெனி எங்க ஊர்லேயே Hஒன்ட Cஇட்ய் கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு*//

    தலைவரே எனக்கு ஒரு சந்தேகம், எனனை மாதிரி மருந்து அதிகமா வாங்குற ஆளுக்கு எதுவும் தருவாங்களா?


  8. Ganesh Gopalasubramanian said...

    // Honda City கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு. உனக்கு எப்படிடா தெரியும்னு நீங்க கேட்கலாம். இதெல்லாம் தெரிஞ்சுதானே மருத்துவம் படிக்கணும்னே முடிவு பண்ணேன்! :) //
    ராம்ஸ் !! மருத்துவம் படிக்கறீங்களா !!! வாழ்த்துக்கள்.

    //Honda City கொடுத்திருக்கிறது மூணு பேருக்கு//
    ஆமா மருத்துவம் காஸ்ட்லி படிப்பாச்சே. உயிர் போகிற (வாங்கிற) விசயமாச்சே.

    ஆனா பாருங்க நல்லவங்களும் இருக்கத்தான் செய்றாங்க. எங்க ஊர்ல ஒரு டாக்டர் ரொம்ப நாளா டூவீலர்ல தான் போறாரு. எனக்கு தெரிஞ்சு நல்ல பேரு தான். (கைராசியான டாக்டர்). ரொம்ப கம்மியாத்தான் ஃபீஸ் வாங்குவார். பேரு பழனியப்பன்.
    அதனால தானோ என்னவோ நிறைய பேருக்கு கடவுளாகவும் நிறைய பேருக்கு ஆண்டியாகவும் தெரியறார்.:-)


  9. rv said...

    //தலைவரே எனக்கு ஒரு சந்தேகம், எனனை மாதிரி மருந்து அதிகமா வாங்குற ஆளுக்கு எதுவும் தருவாங்களா? //

    தருவோமே! பில்லு தருவோம், பிரஷர் தருவோம், இந்த மாதிரி நிறைய ஐட்டம் ஸ்டாக் வெச்சிருக்கோம்... ;)

    go.ganesh,
    படிச்சவங்கள நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க. கெட்டது பண்றவங்க மட்டுமே எல்லா துறை மாதிரியும் கண்ல மாட்றாங்க.

    இதுல மக்களையும் சொல்லனும். வயித்துவலினா உடனே புடி ஒரு gastro surgeon-ன. வாங்கு அவர் opinion-ன்ன-ன்னு பறக்கும் கூட்டம் இப்பல்லாம் ஜாஸ்தி.

    //அதனால தானோ என்னவோ நிறைய பேருக்கு கடவுளாகவும் நிறைய பேருக்கு ஆண்டியாகவும் தெரியறார்.:-) //
    இது சூப்பர்


  10. rv said...

    துளசியக்கா,
    பவுண்டேன் பென் ரொம்ப தொல்லை. நீங்க சொல்ற மாதிரி சட்டையிலும் கையிலும் எப்பவும் இங்க். விதவிதமான பேனா பத்தி பதில் சொன்னீங்க..அதுக்கு நன்றி..

    ஆனா, பாவம்க்கா நீங்க. ரொம்ப வெள்ளந்தியா, எழுதற ஆர்வத்தில இப்படி உங்க வயச சொல்லிபுட்டீங்களே??

    //மசி( இங்க்)கூடு வச்சு, ஒரு தொட்டு எழுதுற குவைல் பேனா இருக்கும்.
    அதுலே இங்க் கொட்டுனா ஒத்தித்துடைக்கறதுக்கு இது உபயோகப்படும்.//

    சங்க காலத்தவரா இல்ல தொல்காப்பியர் க்ளாஸ்மேட்டா-ன்னும் சொல்லிபுட்டா மேட்டர் ஒவர். :)))))


  11. பரணீ said...

    //sato தலையில் MS ஒரு தட்டு தட்டினாரே பார்த்தீங்களா? அவங்களுக்குள்ளே என்ன பேசியிருப்பாங்கன்னு தெரியல! :)//

    இன்னும் காருக்குள்ளே உக்காந்துட்டு என்னாடா பண்ணறே... இறங்கி வாடா - :-)அப்படின்னு சொலீருப்பர் MS... மனுசன் செம கடுப்பு ஆயிட்டாரு.. அது நடந்த சில நிமிடங்களில் RTL டிவியின் பேட்டியில் அவரு என்னமோ ஜெர்மன் மொழியில் புலம்பி கிட்டு இருந்தாரு.


  12. rv said...

    ஆமா பரணீ
    காரு வேறே சுமாராத்தான் ஓடுது. MS-ஸோட போடியம் சான்ஸ்-ஐ அநியாயமா sato கெடுத்தது கொடுமை. ஆனா, அதுவாவது ரெண்டு பேருமே பாயிண்ட்ஸுக்காக சண்ட போட்டோம். ஆனா மோதிகிட்டோம்ன்னு சொல்லி சமாதானப் படுத்திக்கலாம்.

    ஆனா, எங்க தலைவர் என்னத்த சொல்லி ஆறுதல் பட்டுப்பார் சொல்லுங்க? ஒரு லாப் பின்னாடி இருக்கிறவனுக்கெல்லாம், இவர் முதலிடத்தில் இருந்தால் மூக்கில வேர்க்குது! வேண்டுதல் மாதிரி தேமேன்னு ஓட்டிக்கிட்டு இருக்கற இவர் மேல, லைன் கட்டி வரிசையா வந்து முட்டிட்டு போய்டுரானுங்க பாவிப்பசங்க. இதுதான் காலக்கொடுமை!


  13. NambikkaiRAMA said...

    ராமநாதன் உங்க பதுவி சிறப்பா இருந்தது.

    இப்பவெல்லாம் பெரும்பான்மையான டாக்டர்ஸ் பல்ஸ் பிடிச்சி பார்க்காம பர்ஸ் பிடிச்சு பார்க்கிறவங்களாகத்தான் இருக்கிறாங்க.

    சிலர் மட்டுமே! சேவை குணத்தோடு இருக்கிறார்கள்.

    அந்த சிலரை இந்த சமுதாயம் அடையாளம் கண்டு பாராட்டுவதின் மூலம். மற்றவர்கள் மாறக்கூடும்.

    தாங்கள் எப்படி? நல்ல டாக்டராகத்தான் இருப்பீர்கள்.வாழ்த்துக்கள்.


  14. rv said...

    positiverama,
    நன்றி.


 

வார்ப்புரு | தமிழாக்கம்