எதிர்கால வல்லரசா இந்தியா?

இன்பத்தேன் வந்து பாயுதே காதினிலே - என்று பாடத் தோன்றுகிறது இதைக் கேட்கையில், இல்லையா?


சமீபத்தில் பிரான்ஸில் நடந்த "referendum" தான் கடந்த வாரங்களாக பிபிசியின் முக்கிய செய்தி. இதில் எத்தனை ஆய்வாளர்கள், வல்லுனர்கள் தினமும் வந்து கருத்து மேல் கருத்து கொடுத்து கொண்டிருந்தனர். நமக்கே தலைசுற்றும்போது, பிரான்ஸ் நாட்டவர் நிலை பாவம். இருந்தாலும் "non" என்று 10% வித்தியாசத்தில் தைரியமாக உரக்கமாக சொல்லிவிட்டனர். "oui" போடச்சொன்ன சிராக் தன் பிரதமரை தோற்றதற்கு பிரயாசித்தமாக பலி வாங்கி de Villepin-க்கு பதவியை கொடுத்து விட்டார். (தனிப்பட்ட முறையில், ஐரோப்பாவின் தலைசிறந்த அரசியலவாதிகளில் ஒருவர் இந்த de Villepin என்பது என் கருத்து. ஜெர்மனியின் ஷ்ரோடரும், பிஷரும் கூட இந்த என்னுடைய லிஸ்டில் இருக்கின்றனர்.)

எப்படியோ இன்று நெதர்லாண்டினரும் அனேகமாக இந்த புதிய EU constitution-க்கு சங்கு ஊதிவிட்டனர் என்றே கொள்ளலாம். மிச்ச 16 நாடுகள் ஒத்துப்போனாலும் இது நடைமுறைக்கு வருமா என்பது சந்தேகமாகி விட்டது. இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்று நினைப்போர்க்கு. "Oui" ஆதரவாளர்கள் முன்வைத்த முக்கிய வாதங்களில் ஒன்று. அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு மட்டும் பதிலாகாமல் நாளைய வல்லரசுகளான சீனாவையும் இந்தியாவையும் எதிர்கொள்ள இந்த புதிய அரசியலமைப்பு கட்டாயம் அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதே. ஒரு நிமிடம் நிற்க. முந்தைய வரியை மீண்டும் வாசியுங்கள். புல்லரிக்க வில்லை? இந்த ஆதரவாளர்கள் ஒன்றும் சாமானியப்பட்டவர்களல்ல. ஜாக் சிராக்கில் தொடங்கி ஷ்ரோடர் போன்ற முக்கிய அரசியல்வாதிகள் மட்டுமில்லாமல் பல ஐரோப்பிய think tank-களின் (இவற்றிற்கு தமிழில் என்ன கூறுவது?) உறுப்பினர்கள், பொருளாதார நிபுணர்கள் ஆகியோர். இவர்கள் நிஜமாகவே இந்தியா நாளை வல்லரசாகும் என்று பயப்படுகிறார்களா? என்று ஆச்சரியப்பட்டுப்போனேன்.

இந்தியா வல்லரசாகும் என்று பி.ஜே.பி வாயாலேயே கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவ்வளவு நம்பிக்கையில்லை அதில். ஆனால் இப்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. EU-வின் வலிமைமிக்க நாடுகளில் உள்ளோரே நம்மைப் பற்றி இப்படி யோசிக்கிறார்களா என்ற பிரமிப்பு. இது வெள்ளைக்காரன் நினைப்பதால் approval syndrome இல்லை.

இதற்கு ஒரு சாம்பிள் இங்கே. full article

"Imagine how these dolts will feel as the real competition comes clamping down. Retain the French lifestyle? Come on! India and China will have you working 70 hour weeks just to produce enough decent bread for their armies of programmers, engineers and scientists. You'll watch as the world goes screaming by, laughing and flipping you the finger. I mean even worse than they do today. Wake up and smell your minimum wage existence! The end is near."

என்ன சொல்லத்தோன்றுகிறது - "WOW"


சரி, ஏதோ ஒரு சில வாட்டி சொல்லிவிட்டனர் விடுவொம் என்று நினைத்தேன். இங்கு ரஷ்யாவிலும் நம்மை ரொம்பவே serious-ஆக எடுத்துக்கொள்கின்றனர் என்பதற்கு ஒரு அடையாளமாக நேற்றைய Moscow Times பேப்பரில் இன்னொரு விஷயம் பார்த்தேன். இதில் ரஷ்யாவில் IT industry-ஐ முன்னேற்றுவதற்கு வழிகள் என்னவென்று ஒரு கட்டுரை.
அதில் இந்தியாவை பின்பற்றுவதே சரியான வழியென்று ரஷ்ய IT அமைச்சர் கூறியுள்ளார். அந்த கட்டுரையிலிருந்து ஒரு பத்தி.

"Just look at what India has accomplished. It has become the world's software, IT and outsourcing leader. Virtually Overnight, it has taken the majority of what analyst DataMonitor recently predicted will be a $163 billion market place globally - and thats just outsourcing. In software exports, India sold $12.8 billion in 2003-04, and this sector employed more than 770,000 people."

என்ன சொல்லத்தோன்றுகிறது - இன்னுமொரு "WOW"

இது வெளிநாட்டவரின் பார்வை. நம் நாட்டினரிடத்தே என்ன கருத்துகள் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாயிருப்பதால் பதிவு செய்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் இந்தியா உலகின் ஒரு மாபெரும் சக்தியாவது
நடக்கத்தான் போகிறது. அது ஐரோப்பியரும் மற்றோரும் பயப்படும் விதத்தில்
அவ்வளவு விரைவாக 10-20 ஆண்டுகளுக்குள் நடக்குமென்று தோன்றவில்லை. ஆசையிருந்தாலும் நடைமுறையில் சாத்தியமில்லையென்றே தோன்றுகிறது. சீனா ஓரளவிற்கு அந்நிலையை அடைந்து விட்டது. ஆனால் தனி மனித சுதந்திரத்தை தியாகம் செய்து உலகளவில் வலிமையான நிலையை எய்துவதில் எனக்கு உடன்பாடில்லை. தேவர் மகனில் சிவாஜி சொல்லுவது போல் "அம்ம பயன் மெதுவாத்தான் வர்வான், மெதுவாத்தான் வர்வான்" என்றே எனக்கு படுகின்றது.
இன்னொரு விஷயம், என் கண்ணில் படும் வரை லல்லு, ராமதாஸ், திருமா, ஜெஜெ, மு.க போன்றோரே காட்சி தெரிகின்றனர். இவர்கள் இருக்கும்வரை நம்மை உருப்படவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதளவுமில்லை.

உங்கள் கருத்துகளை அறிய ஆவல்.

5 Comments:

  1. Thangamani said...

    //இன்னொரு விஷயம், என் கண்ணில் படும் வரை லல்லு, ராமதாஸ், திருமா, ஜெஜெ, மு.க போன்றோரே காட்சி தெரிகின்றனர். இவர்கள் இருக்கும்வரை நம்மை உருப்படவிடுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு சிறிதளவுமில்லை//

    நீங்கள் குறிப்பிடும் சாப்ட்வேர் தொழில் வளர்ச்சியடைந்த தென் மானிலங்களில் காங்கிரஸ்/கம்யூனிஸ்டுகள்/பி.ஜெ.பி ஆளாத மாநிலக்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களே அதிகம். மேலும் இந்தக் கருணாநிதியும் ஜெயும் (எம்.ஜி.ஆரும்)தான் தமிழ்நாட்டை 30 வருடங்களுக்கு மேலாக ஆண்டு வருகின்றனர். இதைவிட சிறப்பாக முன்னேறியுள்ள மாநிலங்கள் எதிலாவாது நீங்கள் வாழ்ந்துகொண்டு இப்படி நீங்கள் இந்த அரசியல்வாதிகளைப் பார்த்து வெட்கப்படலாம்; வேதனைப் படலாம். இது போன்ற சோ-தனமான கமெண்டுகள் மேலோட்டமான கேலிக்கு பயன்படலாம், நடைமுறையில், புள்ளிவிவரங்களுடன் பேசும்போது வெளுத்து விடுகின்றன.

    மற்றபடி விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல இவர்கள். ஆனால் ஊழல் என்றால் இந்தியாவின் சகல கட்சிகளும், அமைப்புகளும் செய்வதுதான். சீனாவிலும் உண்டு.

    இந்த மாதிரியான கமெண்டுகள், மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொண்குடம் என்ற பார்வை கொண்டவைதான். அல்லது தினமலர், சோ போன்ற பார்ப்பனீயக் கூட்டங்களின் வெகு மக்கள் பங்களிப்புக்கு எதிரான மேல் சாதிய ஆளுமைக்கு அடிவருடும் கூட்டத்தினரின் மனப்புகைச்சல் என்றும் சொல்லலாம்.


  2. Badri Seshadri said...

    இராமநாதன்: இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி பிரமிக்க வைப்பது. கடந்த பத்து வருடங்களாக இதை மிகவும் அருகிலிருந்தே கவனித்து வருகிறேன்.

    தகவல் தொழில்நுட்பமே அரசியல் ஈடுபாடுகள் எதுவும் இல்லாமல் வளர்ந்ததுதான். பெரிதானதும்தான் அரசியல்வாதிகள், மந்திரிகள் உள்ளே புகுந்து ஏற்கெனவே உள்ள சில "கெட்டது"களை மாத்திரம் விலக்கினர். இப்பொழுதுதான் pro-active ஆக சில "நல்லது"களைச் செய்ய முற்படுகின்றனர்.

    ஆனால் இந்தியாவில் ஏகப்பட்ட பிரச்னைகளும் உள்ளன. உதாரணமாக அடிப்படைக் கட்டமைப்புகள் - சாலைகள், நகர வசதிகள் இந்தியாவில் குறைவு. கிராமங்களில் வருமானம் குறைந்துகொண்டே வருகிறது. இதனால் பெருமளவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. இத்துடன் மொழி, இனச் சண்டைகள் அதிகமாவதற்கான சாத்தியங்கள் உள்ளன.

    சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களை விட அதிகமாக முன்னேறுகின்றன. முன்னேற்றம் சமச்சீராக வேண்டும். இல்லாவிட்டால் முன்னேறிய தென் மாநிலங்கள் பாதிக்கப்படும். உதாரணமாக பாராளுமன்ற இடங்களை மறுபரிசீலனை செய்யும்போது உத்தரப் பிரதேசத்துக்கும் பீஹாருக்கும் இன்னமும் சில இடங்கள் கிடைக்கும். ஏற்கெனவே அதிகமான அவர்களது மக்கள் தொகை இன்னமும் அதிகமாகக் கட்டுக்கடங்காமல் போகின்றனது.

    பொதுவாழ்வில் ஊழல் நிச்சயமாக அதிகமாகி உள்ளது. மக்களும் ஊழல், ஏமாற்றுதல் ஆகியவற்றை ஏற்றுக்கொண்டு இதிலிருந்து விடுதலை பெறுவது முடியாது என்ற cynical எண்ணத்தில் உள்ளார்கள்.

    Entrepreneurship - இன்னமும் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் சீனாவை விட உயர்ந்துதான் இருக்கிறோம் இதில். புதுசு புதுசாக சிறுதொழில்கள் உருவாக்கப்பட்டு வந்தாலும் அதில் முதலீடு செய்ய என்று உருப்படியான வென்ச்சர் கேபிடல் நிறுவனங்கள் இந்தியாவில் படு குறைவு, அல்லது இல்லவே இல்லை. இதனால் இந்தியாவின் முழுமையான சக்தி வெளிப்படுவதில்லை.

    இவையெல்லாம் வரும் வருடங்களில் மாறும் என எதிர்பார்க்கிறேன். இந்தியா வல்லரசு ஆகுமா என்ற கேள்விக்கு... நிச்சயமாக பிற நாடுகள் பொருட்படுத்தியே தீரவேண்டும் என்ற நிலையில் இருக்கும், ஆனால் நல்லரசாக இருந்தால் நல்லது!


  3. rv said...

    திரு. பத்ரி, திரு. nt mani உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

    இதிலேயும் பார்ப்பனீயம் பற்றி கமெண்டா? இவர்கள் பேரையெல்லாம் குறிப்பிட்டதற்கு காரணம் முதலில் சொல்லி விடுகிறேன். சாப்ட்வேர் துறைக்கு இவர்கள் திரு. பத்ரி கூறியது போல் பெரிதாக முதலில் ஊக்குவிக்கவில்லை. அதன் potential உணர்ந்த பின்னர் ஆரம்பித்திருக்கின்றனர். நம் தமிழகம் பல மாநிலங்களைக் காட்டிலும் முன்னால்தான் இருக்கிறது. நம்மை பீஹாருடனும், உ.பி யுடனும் ஒப்பிட்டுக் கொண்டு திருப்தி அடைவதாயிருந்தால் பிரச்சனையேயில்லை. நாம் குறைந்த பட்சம் 3-5 ஆண்டுகள் முன்னாலிருப்பதாய் சந்தோஷப்பட்டு கொள்ளலாம். ஆனால் அதுவல்ல விஷயம். கர்நாடகமும், மஹாராஷ்ட்ராவுமே நமக்கு பின்னாலிருந்தால் கூட மேலும் முன்னேறுவதற்கு வழி என்னவென்று தேடுவதுதான் புத்திசாலித்தனம். அதை விடுத்து சும்மாயிருந்தால் முயல், ஆமை கதையாக வெகு நாளாகாது.

    இதில் ஏன் இந்த தலைவர்கள் பற்றி என்றால்.. இவர்கள் செய்யும் கீழ்தரமான அரசியலும், இவர்களால் பரந்துவிட்ட ஊழலும், லஞ்சமும் தான். இது இவர்களுக்கு மட்டுமில்லை. நேரு தொடங்கி நம் நாட்டில் இப்படித்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் தற்காலத்தில் இருக்கும் இவர்களும் ஊழலிலே பெயர் வாங்கும் அளவிற்கு நிர்வாகத்தில் வாங்கவில்லை. தொலைநோக்கோடு நம்நாட்டிற்கு என்ன தேவை என்பதல்ல இவர்கள் கவலை. பேரர்களும், பிள்ளைகளும், தோழிகளும், தத்துப்பிள்ளைகளூம் என்று கவலைப்படுவதற்கல்லவா நேரம் சரியாக போய்விடுகின்றது. சீனாவில் ஊழல் இருப்பதற்காகவெல்லாம் நான் அழ முடியாது. நம்நாட்டைப் பற்றி மட்டுமே பிரச்சனை. நான் பொதுவாக இந்தியாவைப் பற்றி ஆரம்பித்தது தமிழகத்தின் பக்கம் மட்டும் மாறிவிட்டது.

    பெங்களுரிலும், ஹைதராபாத்திலும் முளைத்துள்ள அளவிற்கு தமிழகத்தில் IT வளர்ந்துள்ளதா என்ன? இத்தனைக்கும் பன்னாட்டு விமானநிலையம், துறைமுகம் என்றெல்லாம் conventional industries-களுக்கு எல்லா நன்மைகளுமிருந்தும் ஏன் பயப்படுகின்றனர்? சரி.. IT-இல் இதெல்லாமே தேவையில்லை. பெங்களுரின் சீதோஷ்ண நிலை சென்னையை விட நன்றாக இருப்பதுதான் பல நிறுவனங்கள் அந்நகரத்தைத் தேர்வு செய்யக் காரணமா? இந்த வாதம் ஹைதராபாத்திற்கு ஒத்துவராதே?

    சாதி சாதி என்று மட்டும் சொல்லி, எதை எடுத்தாலும் இந்த ப்ளாக்கிலும் கூட அதுவே வரவைத்திருப்பது ஒன்றே இவர்கள் சாதனை. வெறும் சில நகரங்களுக்கு செல்வம் வந்துவிட்டது என்று பீற்றிக்கொள்வதில் பலனில்லை. அடிப்படைக் கல்வியறிவும், அடிப்படை வசதிகளும் அமைத்துத்தர வேண்டியதில் மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு முக்கிய பங்கு இருக்கவேண்டும். ஆனால் இருப்பதாகத்தெரியவில்லையே. அதனால்தான் குறிப்பிட்டேன். எந்தவொரு கட்சியையும் பற்றி தனிப்பட்ட தாக்குதலில்லை. எல்லா மாநிலக்கட்சிகளும் மோசமானவர்கள் என்று சொல்லி நம்மூரில் மோசமானவர்களுக்கு discount தரும் மனநிலை புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாய் இருக்கிறது.


  4. குழலி / Kuzhali said...

    //பெங்களுரின் சீதோஷ்ண நிலை சென்னையை விட நன்றாக இருப்பதுதான் பல நிறுவனங்கள் அந்நகரத்தைத் தேர்வு செய்யக் காரணமா? இந்த வாதம் ஹைதராபாத்திற்கு ஒத்துவராதே?
    //
    ஹைதராபாத் கதையே வேறு அங்கே எல்லோரும் நினைப்பது போல் சென்னையைவிட தகவல் தொழில்நுட்பத்துறை நிறுவனங்கள் அதிகமில்லை, நான் அங்கே சில காலம் பணிபுரிந்ததால் உண்மை நிலவரம் தெரியும், பேரு பெத்த பேரு ஏமி லேது தான் ஹைதராபாத் விடயம்.

    //எல்லா மாநிலக்கட்சிகளும் மோசமானவர்கள் என்று சொல்லி நம்மூரில் மோசமானவர்களுக்கு discount தரும் மனநிலை புரிந்துகொள்ள கொஞ்சம் கடினமாய் இருக்கிறது//

    சரியா சொன்னீங்க அப்போ தேசியகட்சிகள்??


  5. குழலி / Kuzhali said...

    ஹி ஹி ஒரு விளம்பரம் செய்யலாம் என்று வந்தேன், வல்லரசு பற்றிய எனது கருத்தை இந்த சுட்டியிலே படியுங்களேன்
    2020ல் நாம் வல்லரசு


 

வார்ப்புரு | தமிழாக்கம்