பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!

இந்தமாதிரி இப்போ பேசினா கேனையன்னுதான் பட்டம் கிடைக்கும்னு நினைக்கிறேன். இருந்தாலும்ஆழமான அர்த்தங்கள் கொண்ட பாடலிது. மனித இனத்திற்கும் மற்ற உயிரினங்களுக்கும் இருக்கும்பெரிய வித்தியாசமே இந்தமாதிரி பகைவர்களையும் மன்னிக்கும் கருணையென்பது என் கருத்து. வள்ளுவப்பெருமான்சொன்ன இதே "அவர் நாண நன்னயஞ்செய்து விடல்" என்னும் குணம் இப்போது கொஞ்சம் குறைந்துவிட்டதாகவே தோன்றுகிறது.அவன் அன்னிக்கு இதச் சொன்னானே.. போனவருஷம் இப்படி செய்தானே என்று மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டு எப்போது அவனைகவுக்கலாம்னே எல்லாரும், நான் உள்பட, அலைகிறோம். விவேக் சொல்றமாதிரி நமக்கெல்லாம் ஆயிரம் புத்தர்களும், பாரதிகளும் வந்தாலும்
போதாது!


பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! - பாரதியார்


புகை நடுவினில் தீயிருப்பதை பூமியில் கண்டோமே!
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்!பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!


சிப்பியிலே நல்லமுத்து விளைந்திடும் செய்தியறியாயோ?
குப்பையிலே மலர்க்கொஞ்சும் குறுக்கத்திக்கொடி வளராதோ?பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!


வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ?
தாழ்வைப் பிறர்க்கெண்ண தானழிவானென்ற சாத்திரம் கேளாயோ?
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே!


உண்ணவரும் புலி தன்னையும் அன்போடு சிந்தையில் போற்றிடுவாய்!
அன்னை பராசக்தி அவ்வுருவாயினும் அவளைக் கும்பிடுவாய்!
பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே! பகைவனுக்கருள்வாய்!

0 Comments:

 

வார்ப்புரு | தமிழாக்கம்