ஹிந்தியா? தமிழா?

சிறிது நாட்களுக்கு முன் இந்த விவாதம் எனக்கும் என் மஹராஷ்ட்ரிய நண்பருக்கும் நிகழ்ந்தது. அவரின் கேள்வி: அதன் கிட்டத்தட்ட சரியான தமிழாக்கம்.

"தமிழர்கள் ஏன் தங்களை மற்ற இந்திய மாநிலங்களைப் போல் கருதாமல், இன்னும் தாய்மொழி பற்றி மட்டுமே பெருமிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தியைக் கற்றுக்கொள்வது ஒன்றும் தமிழ் மொழிக்கு நேரடியாக தீங்கு விளைவிக்கக்கூடியதன்று. அந்நிய மொழியான ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகக் கற்றுக்கொள்ளுவதற்கு காட்டும் ஆர்வத்தை ஏன் இந்தி கற்றுக்கொள்வதற்கு காட்ட மறுக்கிறீர்கள்? மராட்டியையும் ஆங்கிலத்தையும் கற்கும் அதே தறுவாயில் ஹிந்தியையும் கற்கிறோம் நாங்கள். இது வடநாட்டிலுள்ள பல மாநிலங்களுக்கும் பொருந்தும்.

ஏன் ஆந்திர, கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தோர் இத்தகைய மொழிவெறி என்றே மிகைப்படுத்திக் கூறக்கூடியப் பற்றைக் காட்டுவதில்லை? மொழி என்பது முற்காலத்தில் எப்படியோ! ஆனால் இன்றைய நிலையில் மொழியின் அடையாளம் பலர் புரிந்து கொள்வது ஒன்றே மிக அவசியமாகிறது. இதில் ஹிந்தியை கற்றுக்கொண்டால் என்ன பாவம்? இந்நாட்டில் பலராலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஹிந்தியின் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கவேண்டியதில்லை. இப்போதைக்கு தேவைப்படும் மொழி என்றளவில் கற்கலாமே. அதிலென்ன தவறு?

சரித்திரத்தின் வழி பார்த்தால் சம்ஸ்கிருதம், தமிழ், ஹிப்ரூ, லாத்தீன் தவிர வேரேதெயுமே கற்பது பயனற்றது. இன்னும் சொல்லப்போனால், கற்காலத்து மனிதர்கள் ஒலி வழியே மொழியின்றி பேசிக்கொண்டனர். அவ்வாறெனில் அம்மொழியே சிறந்ததென்று கூறமுடியுமா? 2000 வருடங்களுக்கு முன் தமிழில் தொல்க்காப்பியம் உருவானதென்று கூறுவது இந்தியர்களெல்லாம் பெருமை அடையச் செய்யும் விஷயம். அப்பேர்ப்பட்ட மொழி இன்றளவினும் பேசப்படும் மொழியாக இருப்பது இன்னமும் பெருமையளிக்கிறது. ஆனால், ஒரே கூண்டுக்குள் பறக்கும் பறவையாக இன்னமும் ஏன் பறந்து கொண்டிருக்கிறீர்கள்? அரசியல் மட்டுமே இவ்விஷயத்தில் காரணமா?

தமிழ்நாட்டில் மட்டுமே இன்றும் ஹிந்தியென்று சொன்னால் பூகம்பமே ஏற்படுகின்றது. அரசியல் மட்டும் காரணமில்லையெனில் தமிழ் மட்டுமே உலகில் சிறந்த மொழியென்ற நினைப்பும் அதிலுண்டா? மொழியென்பது வெறும் communication device தானே. முன்னர் BASIC பயின்றோர் C பயின்றனர். இப்போது C++ பயில்கின்றனர். இவ்வாறு பயிலும் போது BASIC ஓ C-ஓ இப்போதைக்கு உபயோகமில்லாவிடினும், அவை பயனற்றதென்று எவரும் கூறுவதில்லை. அது போலவே மொழியும். அவ்வாறிருக்கையில் தமிழ், ஹிந்தி பற்றி மட்டுமேன் இவ்வளவு சர்ச்சை?"

இதைப் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன??

8 Comments:

  1. Sri Rangan said...

    தம்பி இராமநாதன் வணக்கம்!
    மொழிகுறித்தான தஙகள் புரிதலில் சில தவறு இருக்கிறது.கிந்தியை வெறும் தொடர்பாடலுக்கான ஊடகமாக எடுத்துக்கொள்வது உங்களின் நியாயமாக இருக்கும்.அதை அவ்வகையிற் பயிலும் சூழலுக்கத்தாம் அவை பொருந்தும்.ஆனால் பல்லினங்களுக்கிடையிலுள்ள பொருளியல் நலன்கள் தத்தமது பொருளியற்றளத்தை மொழிவழி தக்க வைக்கும் முயற்சியாக மாற்று மொழிகளுக்கான எதிர் நிலையைத் தோற்றுவிப்பதும்,அதுவே ஒரு பகுதி மக்களை சிறிதுசிறிதாக உட்செரித்து இறுதியில் குறிப்பிட்ட மொழி வாழ்வை அழித்து தமது நலனை அடைதலும் சமூகத்தில் பல சிக்கல்களை உருவாக்கியுள்ளன.தமிழகத்துக்கும் -தமிழுக்கும் மற்றைய இந்திய மானிலங்களுக்குமிடையிலான வித்தியாசம் தமிழகம் என்றுமே மொழிவழி பற்பல தியாகங்களைச்செய்த தியாக பூமியாகும்.அடுத்து மொழி வெறும் தொடாபாடல் ஊடகமில்லை.அது ஒரு மனித உடலை -உளத்தை தீர்மானகரமான தளத்தில் உறுதிப் படுத்துகிறது.ஒரு மொழியைப் பயிலும் மாணவர் வெறும் சொற்களை மட்டும் பயில்வதில்லை.கூடவே அந்த மொழிவழி வாழும் மக்கள்தம் பண்பாட்டு-வாழ்வாதாரங்களையும் கூடவே கற்கிறார்.உதாரணமாகத் தமிழருக்கு குங்குமம் என்பது வெறும் கலர் தரும் ஓரு தூள் அல்ல.அதுவே ஆங்கிலேயருக்கோ அல்ல பிரஞ்சியருக்கோ வெறும் சிவப்பு நிறப் பொருள்.அதுள் நமக்கு அர்த்தம் தரும் வாழ்வியற்பண்பு உண்டு.எனவே மொழிகுறித்தான மதிப்பீடுகளுக்கு மொழியியலாளர்களின்( Kriteva,Saussure,Pierce,Barthes,) நூல்களைப் படியுங்கள் அப்போது மொழிவழி வாழ்வு என்னவென்று புரிய ஆரம்பிக்கும்.
    நேசத்துடன்
    ப.வி.ஸ்ரீரங்கன்

  2. Sri Rangan said...

    3:35 PM, April 02, 2005

  3. Anonymous said...

    Ahaaa,Ohooo!Good.Tamil and your Hindi,Hiiiii,hiiiii.

  4. Thangamani said...

    இது பற்றிய பல விவாதங்கள் முன்னும் நடந்து ரோசாவசந்த், சங்கரபாண்டி, சுந்த்ரமூர்த்தி போன்றோர் வலைப்பதிவில் பல நல்ல கருத்துக்கள், விவாதங்கள் உள்ளன. தாஸின் பதிவுகளில் பின்னூட்டமாகக் கூட இவர்களின் கருத்துக்கள் இருக்கின்றன. அவை இங்கு கருதத்தக்கன.

    மொழி பற்றிய போராட்டம் அடிப்படையில் அதிகாரத்தைப் பற்றியது என்பதையும், நாம் ஒரு கூட்டமைப்பில் இருக்கிரோம் என்பதையும் மொழியுரிமை விசயங்களில் கவனத்தில் கொள்ளவேண்டுமேயல்லாது, வெறுமே யாரும் எந்த மொழியையும் முன்னிருத்திபோரட முடியாது.
    நன்றி!

  5. Anonymous said...

    ஹிந்தி தெரியாம தமிழர்ங்க மட்டுந்தான் இருக்காங்க இந்தியால்ல இது ஏன் மத்த மாநிலத்தில பன்றத தமிழ் நாட்டுல பணண முடியல இது மாற வேண்டும்

  6. rv said...

    உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி.

    இந்த தமிழ்மணத்திற்கு தாமதமாக வந்ததனால் முன்னர் நடந்த விவாதங்கள் தெரிய வாய்ப்பில்லை. நீங்கள் சொன்ன வலைப்பூக்களைக் கண்டிப்பாக தேடிப்பார்க்கிறேன்.

    தலைப்பு தப்பா கொடுத்திட்டேன்னு இப்போதான் புரியுது. ஹிந்தியும் தமிழும் னு இருந்திருக்கணும். எந்த ஒரு மொழியும் மற்றதை விட சிறந்ததென்றோ, தாழ்ந்ததென்றோ கூறுவது சரியில்லை என்பதே நான் சொல்ல நினைப்பது. இதில் தமிழ் கற்கும் அதே வேளையில் ஹிந்தியையும் கற்கலாமே. இதில் நாம் நம் திராவிட சகோதரர்கள் என்றழைக்கும் ஆந்திரம், கர்நாடகம் உட்பட வேறெல்லா மாநிலங்களிலும் இதுதானே நடந்து வருகிறது.இல்லியா?
    ஆங்கிலம் வந்தும், சம்ஸ்கிருதம் வந்தும் அழியாது, தன் கலாச்சாரம் மாறாமல் இருக்கும் தமிழுக்கு ஹிந்தியால் மட்டும் தீங்கு வருமென்று ஏன் நினைக்கிறோம்?

    இந்த பிரச்சனைக்கு முடிவேயில்லையென்ற போதும், நம்மைப் (தமிழர்களை) பற்றி மட்டுமே ஏன் இந்த அபிப்பிராயம்? இது இன்னும் interesting-ஆன கேள்வி-னு நினைக்கிறேன்

  7. Anonymous said...

    //இந்நாட்டில் பலராலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஹிந்தியின் ரிஷிமூலம் நதிமூலம் பார்க்கவேண்டியதில்லை .இப்போதைக்கு தேவைப்படும் மொழி என்றளவில் கற்கலாமே. அதிலென்ன தவறு?//

    ஆங்கிலம் இருக்கப்ப இந்தி தேவைப்படுதுன்னு யார் சொன்னது?

  8. -L-L-D-a-s-u said...

    Ramanathan ..

    Check this

    http://lldasu.blogspot.com/2005/02/blog-post_28.html

வார்ப்புரு | தமிழாக்கம்